ஒரு காட்டில் வேடன் ஒருவன் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தப்படியே கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கின. வேடன் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான்.
அப்போது முனிவர் ஒருவர் வந்தார். வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், அவர் கருணையுடன் வேடனே! இவற்றைக் கொல்லாதே! என்று கேட்டுக் கொண்டார். வேடன், சுவாமி! இன்று எனக்கு இக்கிளிகளே உணவு இவற்றுக்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால், இவற்றை விட்டுவிடுகிறேன்! என்றான்.
முனிவர், என்னிடம் சிறிது உணவு உள்ளது. அதை நான் உனக்குத் தருகிறேன். இந்தக் கிளிகளை விட்டுவிடு! என்றார். உணவைப் பெற்றுக் கொண்ட வேடன் கிளிகளை விடுவிக்கச் சென்றான்.
அப்போது முனிவர், கிளிகளே! இவன் வேடன். வேடன் வந்து வலை வரிப்பான். தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து, அவனது வலையில் சிக்காதீர்கள்! என்றார். இப்படிக் கூறிவிட்டு முனிவர் சென்றார். வேடனும் கிளிகளை விடுவித்துவிட்டுச் சென்றான்.
ஒரு வாரம் கடந்தது. வேடன் மீண்டும் கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன். வலையுடன் அதே மரத்தின் அருகில் வந்தான்.
வேடனைப் பார்த்ததும் எல்லாக் கிளிகளும் ஒன்று சேர்ந்து, கிளிகளே! இவன் வேடன். வேடன் வந்து வலை விரிப்பான். தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்காதீர்கள்! என்று கூறின.
வேடன் கிளிகள் கூறியதைக் கேட்டதும், இந்தக் கிளிகள் முன்பு நடந்ததை இன்னும் மறக்கவில்லை! இங்கு நான் வலை விரித்தாலும், இவை என் வலையில் சிக்காது! எனவே இங்கு வலை விரிப்பதால் பயனில்லை! என எண்ணி வேறு இடம் தேடிச் சென்றான்.
ஒரு மாதம் கடந்தது. மீண்டும் கிளிகள் இருந்த அதே மரத்தின் அருகில் வேடன் வந்தான். இப்போதும் கிளிகள் வேடனை நோக்கி, கிளிகளே! இவன் வேடன், வேடன் வந்து வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து அவனது வலையில் சிக்காதீர்கள்! என்று கூறின.
வேடன் முன்பு நடந்ததை இந்தக் கிளிகள் இன்னும் நினைவில் வைத்திருக்கின்றவே! என வியந்து வேறு இடம் சென்றான்.
என்றாலும் அவன் இன்று எனக்கு வேட்டையாடுவதற்கு எந்த மிருகமும் பறவையும் கிடைக்கவில்லை. சரி! இந்தக் கிளிகள் சிக்காவிட்டாலும் வேறு ஏதேனும் பறவைகள் என் வலையில் சிக்கலாம்! என்று நினைத்து வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான்.
இப்படி வேடன் செய்ததை அங்கிருந்த கிளிகள் பார்த்துக் கொண்டிருந்தன. வேடன் தானியம் தூவியதும் கிளிகளெல்லாம் ஒன்றாக, கிளிகளே! இவன் வேடன், வேடன் வந்து வலை விரிப்பான், தானியங்களைத் தூவுவான். நீங்கள் பறந்து வந்து, அவனது வலையில் சிக்காதீர்கள்!
என்று கூறியபடியே பறந்து வந்து, வேடனின் வலையில் சிக்கிக்கொண்டன!
அப்போதுதான் வேடனுக்கு, இவை சொன்னதைச் சொல்லும் கிளிகள்! முனிவர் கூறியதை அப்படியே கூறுகின்றன. அவர் கூறியதன் அர்த்தம் இக்கிளிகளுக்குப் புரியவில்லை! என்பது புரிந்தது.
இதுபோன்று தான் மக்களுள் பலரும் நல்ல விஷயங்களை நிறைய கேட்கவும், படிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அவற்றைத் தங்கள் வாழ்க்கையில் பின்பற்றிப் பயனடைவதில்லை.
🇮🇳🙏
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தல விருட்சம்
புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
🙏🇮🇳1
தீர்த்தம்
கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்.
பாடல் வகை
தேவாரம்
பாடியவர்கள்
சம்பந்தர், அப்பர்
🙏🇮🇳2
*தலவரலாறு*
இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார்.
ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.
திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான ஊர் செஞ்சி. இங்கிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது ‘செல்லப் பிராட்டி’ என்னும் கிராமம். இக்கிராமத்தில்தான், குடிகொண்டு அருள் பாலித்துவருகிறாள் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை. 🙏🇮🇳1
இந்த அன்னையின் மூலவர் வடிவத்துக்கு உருவம் இல்லை. முற்றிலும் வித்தியாசமான மூலவர் விக்கிரகம் இது. வேறெங்கும் காணமுடியாதது.
🙏🇮🇳2
மூலவராகப் போற்றி வணங்கப்படும் இந்த ‘லலிதா செல்வாம்பிகைக்கு’ உருவமே இல்லை. செவ்வக வடிவத்தில் உயரமான ஒரு கருங்கல் தான் மூலவராகக் காட்சி தரும் இந்த அன்னை நான்கடி உயரம், இரண்டடி அகலம், நான்கு அங்குல தடிமனுடன் காணப்படும் ஒரு கற்பலகைதான் அன்னை லலிதா செல்வாம்பிகை.
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.
🙏🇮🇳2
தல வரலாறு
தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.
இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது.
சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.