தல விருட்சம்
புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
🙏🇮🇳1
தீர்த்தம்
கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்.
பாடல் வகை
தேவாரம்
பாடியவர்கள்
சம்பந்தர், அப்பர்
🙏🇮🇳2
*தலவரலாறு*
இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார்.
ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.
🙏🇮🇳3
சிவலிங்கப் பிரதிஷ்டைக்கு குறிப்பிட்டிருந்த நேரத்துக்குள் அனுமன் திரும்பி வராததால், கடற்கரையில் உள்ள மணலால் சீதை ஒரு சிவலிங்கம் உருவாக்கித் தந்தாள்.
ராமபிரான் அந்த சிவலிங்கத்தை குறித்த நேரத்தில் பிரதிஷ்டை செய்து தனது பூஜையை முடித்தார்.
🙏🇮🇳4
காலம் கடந்து வந்த அனுமன், தான் வருவதற்குள் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டதைக் கண்டு கோபமுற்று, தனது வாலால் ராமபிரான் பிரதிஷ்டை செய்த லிங்கத்தைப் பெயர்த்து எடுக்க முயன்று தோல்வியுற்று நின்றார்.
🙏🇮🇳5
அனுமனை ராமன் சமாதானப்படுத்தி, அனுமன் கொண்டுவந்த லிங்கத்தை முதலில் பிரதிஷ்டை செய்த லிங்கத்துக்கு அருகில் பிரதிஷ்டை செய்தார்.
மேலும், அனுமன் கொண்டுவந்த லிங்கத்துக்கே முதல் பூஜை நடைபெற வேண்டும் என்றும் கட்டளையிட்டார்.
🙏🇮🇳6
அனுமன் கொண்டு வந்த சிவலிங்கம், ராமலிங்கத்துக்கு வடக்குப்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
அனுமன் கொண்டுவந்த லிங்கம் காசி விஸ்வநாதர் எனப்படுகிறது.
🙏🇮🇳7
இத்திருக்கோயிலில் அமைந்திருக்கும் சிவலிங்கம் மணலால் வடிவமைக்கப்பட்டது அல்ல, அப்படி செய்திருந்தால் அபிஷேகத்தின் போது அதை கரைந்திருக்கும் என்று ஒரு கூட்டத்தினர் வாதம் செய்தனர்.
🙏🇮🇳8
அதைக் கேட்ட இங்கு வீற்றிருக்கும் அன்னை பர்வத வர்த்தினியின் தீவிர பக்தரான பாஸ்கர ராயர் என்பவர் தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய உப்பினால் ஒரு லிங்கத்தை வடிவமைத்து அதற்கு அபிஷேகம் செய்தார்.
ஆனால் சிவலிங்கம் கரையவில்லை. இதைக் கண்ட அனைவரும் வாயடைத்துப் போயினர்.
🙏🇮🇳9
சாதாரண பக்தனான தன்னால் செய்யப்பட்ட உப்பு லிங்கமே கரையாத போது, அன்னை சீதா தேவியால் மணலில் வடிவமைக்கப்பட்ட சிவலிங்கம் கரையாதது ஒன்றும் அதிசயமில்லை என நிரூபித்தார்.
இன்றளவும் அந்த உப்பு லிங்கத்தை ராமநாதர் சன்னதிக்கு பின்புறம் உள்ளது.
🙏🇮🇳10
குழந்தை பாக்கியம் இல்லாத சுந்தரபாண்டியன் என்னும் மன்னன், பெருமாளின் தீவிர பக்தராக விளங்கினான். அவனது குறையைத் தீர்க்க தன் மனைவி மகாலட்சுமியையே அவரது மகளாக அவதரிக்கும்படி செய்தார் பெருமாள்.
🙏🇮🇳11
அவள் மணப்பருவம் அடைந்தபோது, பெருமாள் ஒரு இளைஞனின் வடிவில் வந்து அவளிடம் வம்பிழுத்தார்.
மன்னன் அந்த இளைஞனை சிறையில் அடைத்து, சங்கிலியால் காலைக் கட்டிப்போட்டான்.
🙏🇮🇳12
பக்தனின் பக்திக்கு கட்டுப்பட்ட பெருமாள், அவ்வாறு சங்கிலியால் கட்டுவதற்கு இடமளித்தார். அன்றிரவில் இளைஞனாக வந்து சிறையில் அடைபட்டிருப்பது தானே என்று மன்னனுக்கு உணர்த்தவே, இருவருக்கும் திருமணம் செய்விக்கப்பட்டது.
🙏🇮🇳13
இளைஞராக வந்த சுவாமி, இங்கு சேதுமாதவராக அருளுகிறார். அவரது காலில் சங்கிலி கட்டப்பட்டிருக்கிறது.
தீர்த்த யாத்திரை செல்பவர்கள் இவரது சன்னதி முன்பு, கடல் மணலில் லிங்கம் பிடித்து வைத்து தங்கள் கோரிக்கைகளைச் சொல்கிறார்கள்.
🙏🇮🇳14
ஆலய அமைப்பு
ராமேஸ்வரம் திருக்கோவில் சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒரு பெரிய கோவிலாகும்.
865 அடி நீளமும் 657 அடி அகலமும் உடைய ராமேஸ்வரம் கோவிலில் நான்கு புறமும் கோபுர வாயில்கள் உள்ளன. அதில் கிழக்கு கோபுரமே மிகவும் உயரமானது.
🙏🇮🇳15
ஒன்பது நிலைகளுடன் காட்சியளிக்கிறது கோபுரம். அதனை அடுத்து கொடிமரம் மற்றும் வேலைபாடுமிக்க சுதையினாலான பெரிய நந்தி உள்ளது.
🙏🇮🇳16
இந்த நந்தி 23 அடி நீளம், 12 அடி அகலம், 17 அடி உயரம் கொண்டது.
ராமலிங்கம், காசி விஸ்வநாதர் பர்வதவர்த்தினி, விசாலாட்சி, நடராஜர் ஆகியோருக்கு தனித்தனி விமானங்கள் அமைந்திருக்கின்றன.
🙏🇮🇳17
சுவாமியின் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இச்சந்நிதியில் சீதாதேவியால் உருவாக்கப்பட்டு ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ராமலிங்கர், சிவலிங்கத் திருமேனியுடன் காட்சி அளிக்கிறார்.
இந்த சிவலிங்கத் திருமேனியில் அனுமனின் வால் பட்ட தழும்பை இன்றும் காணலாம்.
🙏🇮🇳18
சுவாமி சந்நிதிக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் சந்நிதி அமைந்துள்ளது. இதுவே அனுமன் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட சிவலிங்கமாகும்.
மூலவர் கருவறையின் முன்மண்டபத்தில் ராமன், சீதை, லட்சுமணன் ஆகியோருடைய திருஉருவங்கள் உள்ளன.
🙏🇮🇳19
இவர்களுக்கு எதிரே தெற்கு நோக்கியபடி தனியே ஒரு ஆஞ்சநேயரும் எழுந்தருளியுள்ளார்.
அம்பிகை பர்வதவர்த்தினியின் சந்நிதி, இராமநாதரின் வலப்பக்கம் அமைந்திருக்கிறது. அம்பிகை, கோவிலின் வடமேற்கு மூலையில் பள்ளிகொண்ட பெருமாள் ஆகாயத்தை நோக்கியபடி கிடந்த திருக்கோலத்தில் சேவை சாதிக்கிறார்.🙏🇮🇳20
தென்மேற்கு மூலையில் சந்தானகணபதியின் சந்நிதி அமைந்திருக்கிறது.
ஆலயத்தின் வெளிப் பிராகாரத்தில் வடகிழக்கு மூலையில் நடராஜர் சந்நிதி அமைந்துள்ளது.
ராமநாதர் சந்நிதிக்கு பின்புறம் இரண்டாவது மற்றும் மூன்றாவது பிராகாரங்களுக்கிடையே சேதுமாதவர் சந்நிதி அமைந்துள்ளது.
🙏🇮🇳21
கோவிலின் முதல் பிரகாரத்தில் 144 விக்கிரகங்களும், இரண்டாம் பிரகாரத்தில் 17 விக்கிரகங்களும் பூஜைக்காக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
இவை தவிர கோவிலில் உள்ள 381 விக்கிரகங்களுக்கும் நாள் தோறும் பூஜை நடத்தப்படுகிறது.
🙏🇮🇳22
அமைவிடம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் தீவில் உள்ளது இத்திருத்தலம் பேருந்து, தொடர்வண்டி வசதி உள்ளது.
இவ்வாலயம் தினமும் காலை 4 மணி முதல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் திறந்திருக்கும்.
🙏🇮🇳23
சிறப்பு
சிவன் சன்னதியில் பெருமாளுக்குரிய தீர்த்தம் பிரசாதமாக தரப்படும் ஆலயம்.
பிதுர் காரியங்களைச் செய்யச் சிறந்த தலம்.
சிவபெருமான் ஜோதி ரூபமாக காட்சியளிக்கும் 12 தலங்களில் ஒன்று.
உலகிலேயே மிக நீளமான மிகப்பெரிய பிரகாரம் உள்ள தலம்.
சக்தி பீடங்களில் இது சேதுபீடம்.
🙏🇮🇳24
பதஞ்சலி முனிவர் முக்தி பெற்ற தலம்.
சகல பாவங்களையும் போக்குகின்ற தலம்.
மூலஸ்தானத்தில் ஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த ஸ்படிக லிங்கம் உள்ளது. தினமும் காலை 5 மணிக்கு இந்த லிங்கத்திற்கு பாலபிஷேகம் செய்கின்றனர்.
திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான ஊர் செஞ்சி. இங்கிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது ‘செல்லப் பிராட்டி’ என்னும் கிராமம். இக்கிராமத்தில்தான், குடிகொண்டு அருள் பாலித்துவருகிறாள் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை. 🙏🇮🇳1
இந்த அன்னையின் மூலவர் வடிவத்துக்கு உருவம் இல்லை. முற்றிலும் வித்தியாசமான மூலவர் விக்கிரகம் இது. வேறெங்கும் காணமுடியாதது.
🙏🇮🇳2
மூலவராகப் போற்றி வணங்கப்படும் இந்த ‘லலிதா செல்வாம்பிகைக்கு’ உருவமே இல்லை. செவ்வக வடிவத்தில் உயரமான ஒரு கருங்கல் தான் மூலவராகக் காட்சி தரும் இந்த அன்னை நான்கடி உயரம், இரண்டடி அகலம், நான்கு அங்குல தடிமனுடன் காணப்படும் ஒரு கற்பலகைதான் அன்னை லலிதா செல்வாம்பிகை.
ஒரு காட்டில் வேடன் ஒருவன் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தப்படியே கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கின. வேடன் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான்.
அப்போது முனிவர் ஒருவர் வந்தார். வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், அவர் கருணையுடன் வேடனே! இவற்றைக் கொல்லாதே! என்று கேட்டுக் கொண்டார். வேடன், சுவாமி! இன்று எனக்கு இக்கிளிகளே உணவு இவற்றுக்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால், இவற்றை விட்டுவிடுகிறேன்! என்றான்.
முனிவர், என்னிடம் சிறிது உணவு உள்ளது. அதை நான் உனக்குத் தருகிறேன். இந்தக் கிளிகளை விட்டுவிடு! என்றார். உணவைப் பெற்றுக் கொண்ட வேடன் கிளிகளை விடுவிக்கச் சென்றான்.
திருச்சி - தஞ்சாவூர் சாலையில் திருச்சியில் இருந்து சுமார் 11 கி.மி. தொலைவில் திருவெறும்பூர் சிவஸ்தலம் உள்ளது. திருச்சி - தஞ்சாவூர் ரயில் மார்க்கத்தில் திருவெறும்பூர் ரயில் நிலையம் இருக்கிறது.
🙏🇮🇳2
தல வரலாறு
தற்போது மக்கள் வழக்கில் 'திருவெறும்பூர் ' என்றும் 'திருவரம்பூர் ' என்றும் வழங்குகிறது.
இந்திரனும் தேவர்களும் எறும்பு வடிவங்கொண்டு வழிபட்ட தலமாதலின் இத்தலம் இப்பெயர் பெற்றது.
ஒருவருக்கு தேதி குறித்துவிட்டால், அந்த தேதியில் உயிரை எமன் எடுத்துவிடுவார் என்று சொல்லுவார்கள்.
அப்படி ஒரு சிற்பிக்கு தேதி குறித்துவிட்டார் எமன். அந்த தேதி பற்றி சிற்பிக்கும் எப்படியோ தெரியவந்துவிட்டது.
சிற்பிக்கு இறக்க விருப்பமில்லை. எமன் ஒருமுறைதான் பாசக்கயிற்றை வீசுவார். அதில் தவறிவிட்டால், மீண்டும் வீசி உயிரைப் பறிக்கும் அதிகாரம் எமனுக்கு இல்லை என்பதும் சிற்பிக்கு தெரியும்.
அதனைப் பயன்படுத்திக்கொள்ள ஒரு யுக்தி செய்தார்.
தன் திறமை எல்லாம் காட்டி தன்னைப்போலவே அச்சு அசலாக இரண்டு சிலைகள் செய்தார். எமன் வரும் நேரம் அவற்றை தரையில் சாய்த்து படுக்கவைத்துவிட்டு, நடுவில் தானும் படுத்து கண்ணை மூடிக்கொண்டுவிட்டார்.