"அண்ணா, என்னை காண உங்கள் பொற்பாதம் நோக நடந்தே வந்தீர்களா? அவை எந்தளவுக்கு வலிக்கும்.. சரி சரி, நான் வெந்நீர் போட்டுத் தருகிறேன். நீராடுங்கள் தங்களின் உடல் களைப்பு நீங்கும் நடந்த கால்களுக்கும் இதமாக இருக்கும்" என்றாள்.
கண்ணனும் சிரித்து கொண்டே தலையாட்டினார்.
திரௌபதையின் வேண்டுதலை ஏற்று பீமன் தன் பலத்தையெல்லாம் காட்டி ஒரு பெரிய கொப்பறையை வெந்நீர் போட தூக்கி வந்தான். வந்தவன் அருகே ஓடிய ஆற்றில் கொப்பறையை ஒரே அழுத்தாக அழுத்தி தண்ணீர் எடுத்தான்.
மூன்று பெரிய பாறைகளை உருட்டி வந்தான அதையே அடுப்பாக்கி கொப்பறையைத் தூக்கி வைத்தான். ஒரு காய்ந்து போன மரத்தையே ஒடித்து வந்து தீப்பற்ற வைத்தான்.
தீ ஜூவாலை விட்டு எரிந்தது. ஆனாலும் மதியமாகியும் கொப்பறை தண்ணீர் துளிகூட சுடவில்லை.
திரௌபதி கண்கலங்கியவாறே "அண்ணா, என்ன சோதனையோ தெரியவில்லை. ஏனோ கொப்பறையின் நீர் துளிக்கூட கொதிக்கவில்லை.. மாறாக ரொம்பவும் குளிர்ந்திருக்கிறது" என்றாள்.
கண்ணன் பாஞ்சாலியின் பக்கத்தில் இருந்த பீமனிடம் "பீமா, அந்த கொப்பரை தண்ணீரை கீழே கொட்டு" என்றார்
பீமனும் கண்ணன் ஆணைக்கிணங்கி நீர் நிறைந்த கொப்பறையை கீழே கவிழ்க்க,
கொப்பறையின் உள்ளிருந்து ஒரு குட்டி தவளை தாவி ஓடியது.
கண்ணன் பாஞ்சாலியிடம் "தாயே தீ ஜுவாலை கொழுந்து விட்டு எரிந்தும் அந்த நீர் குளிர்ச்சியாக இருக்க காரணம் இதுதான்.
அந்த தவளை சுடுநீரில் சிக்கி மாண்டு விடாமல் இருக்க என்னை பிரார்த்தித்துகொண்டே இருந்தது.
பிரார்த்தனையை ஏற்று அதைக் காப்பாற்றவே கொப்பறை நீரை குளிர்ச்சியாக இருக்க செய்தேன். இப்போது புரிகிறதா ஏன் கொப்பறை நீர் கொதிக்கவில்லை என".
ஒரு குட்டி தவளையின் சரணாகதி பிரார்த்தனை கூட எனக்கு எவ்வளவு பெரியதென்று பார்த்தாயா? என்றார்.
திரௌபதிக்கு நெஞ்சில் சுரீரென உரைத்தது. ஆஹா, பகவான் கண்ணனிடம் நான் கொண்ட என் பக்தியே உயர்ந்ததென நினைத்தேனே,
இப்போது இந்த தவளையின் பக்தி அல்லவா உயர்ந்ததாக காண்பித்து விட்டான்.
ஒரு தவளை கண்ணன் மீது கொண்ட பக்தியின் காரணமாக கொழுந்து விட்டு எரிந்த தீயிலிருந்து உயிர் பிழைத்து ஓடுகிறது, அதன் பக்தியை மிஞ்சி என் பக்தி எப்படி உயர்ந்ததாக முடியும் என்று எண்ணி கண்ணீர் வடித்தாள்.
பகவான் ஒருவரின் உள்ளத்தின் பக்தியை தான் பார்க்கிறானே தவிர அவன் அணியும் பஞ்சகச்சத்தையோ துவாதச புண்டரத்தையோ அத்யாபக கோஷ்டியில் மற்றவர்களை விட சப்தமாக சேவிப்பதையோ
இல்லத்தில் மூன்று மணி நேரம் திருவாராதனம் செய்வதையோ அவன் படைக்கும் பட்டு பீதாம்பரத்தையோ அக்கார அடிசலையோ ஜீரான்னத்தையோ அவன் நமக்கு எவ்வளவு அழகாக அலங்காரங்கள் திருமஞ்சனம் கண்டருள செய்வித்தான் என எதையும் பார்ப்பதில்லை
அந்த நேரங்களில் அவன் உள்ளத்தில் தன் மீது பக்தி எவ்வாறு உள்ளது என்பதை மட்டுமே தான் பார்ப்பார்.
அதே நேரம் நான் பகவானுக்கு அதை செய்தேன் நான் மட்டும் இல்லையென்றால் என்ற கர்வமும் கூடாது.
பக்திக்கு துளி கூட கர்வமும் கூடாது என்பது புரிகிறதல்லவா.
யாருடைய பக்தியையும் ஆடைகளை பார்த்தோ உருவத்தை பார்த்தோ ஊர்த்தவ புண்டரங்களைப் பார்த்தோ வேதங்களை சேவிக்கும் சப்தத்தை வைத்தோ சமர்ப்பிக்கும் உடைகளை பட்சணங்களை உணவுகளை பார்த்தோ எடைபோடுவதில்லை அவன் பார்ப்பது உள்ளத்தில் அவன் மீது நமக்கு உள்ள பக்தியை மட்டுமே.
பக்தியில் ஆராதனையில் நீங்கள் செய்வதுதான் உயர்ந்தது மற்றவர்கள் செய்வது தாழ்ந்தது என எண்ணாதீர்கள்.
ஆண்டாள் சொன்னது போல் பகவானை வாயினால் பாடி அவனை நம் மனத்தினால் எப்போதும் சிந்தித்தால் தவளைக்கருள் செய்தது போல் நம்மையும் நம் துன்பங்கள் அனைத்திலிருந்தும் காப்பதோடு மட்டுமல்லாமல் அவன் பாதங்களையே நாமும் சரணடையும் படி செய்துவிடுவான்.
பக்தியில் நாம் ஒருவருக்கொருவர் பாரபட்சம் குறைகள் காணாமல் காட்டாமல் அனைவரையும் ஒன்றாக பாவிப்போம், பணிவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
🇮🇳🙏🇮🇳
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கார்த்திகை திருவிழா, மார்கழியில் திருவாதிரை திருவிழா, தைப்பூச திருவிழா, மாசி சிவராத்திரி விழா மற்றும் பங்குனி உத்திரம் ஆகிய நாட்களில் இந்தக் கோயிலில் திருவிழா நடைபெறுகிறது.
சிவன், பிரம்மா, திருமால் என்று மும்மூர்த்திகளுக்கும் ஒரே கோவிலாக ஈரோடு மாவட்டத்தில் அமைந்து இருக்கும் புண்ணியஸ்தலம் கொடுமுடி.
ஈரோட்டில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கொடுமுடி.
🙏🇮🇳1
பிரம்மன் இந்த தலத்துக்கு வந்து வழிபட்டதால் பிரம்மபுரி என்றும், திருமால் பூஜித்ததால் அரிகரபுரம் என்றும், கருடன் பூஜித்து தேவலோகம் சென்று அமுதம் கொண்டு வந்ததால் அமுதபுரி என்றும் இந்த தலத்துக்கு இன்னும் பல பெயர்கள் உள்ளன.
🙏🇮🇳2
திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய 3 பேராலும் பாடப்பட்ட தலம் என்பது மிகவும் சிறக்குரியதாகும்.
மலையின் முடியே இங்கு சிவலிங்கமாக காட்சி அளிப்பதால் கொடுமுடி என்று அழைக்கப்படுகிறது.
தல விருட்சம்
புன்னை, சதுரகள்ளி, மகிழம், குருந்த மரம்
🙏🇮🇳1
தீர்த்தம்
கோவிலுக்கு உள்ளே 22 தீர்த்தங்களும், கோவிலுக்கு வெளியே 22 தீர்த்தங்கள்.
பாடல் வகை
தேவாரம்
பாடியவர்கள்
சம்பந்தர், அப்பர்
🙏🇮🇳2
*தலவரலாறு*
இலங்கைப் போரில் ராவணனைக் கொன்ற பிறகு, சீதையை சிறைமீட்டு ராமபிரான் அழைத்துவருகிறார்.
ராமேஸ்வரம் தலம் வந்த பிறகு, ராவணனைக் கொன்றதால் ஏற்பட்ட தோஷம் விலக சிவபெருமானை வழிபடத் தீர்மானித்து, அனுமனை சிவலிங்கம் கொண்டு வருமாறு காசிக்கு அனுப்புகிறார்.
திருவண்ணாமலை - திண்டிவனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிரதான ஊர் செஞ்சி. இங்கிருந்து வடக்கே 5 கி.மீ. தொலைவில் உள்ளது ‘செல்லப் பிராட்டி’ என்னும் கிராமம். இக்கிராமத்தில்தான், குடிகொண்டு அருள் பாலித்துவருகிறாள் அருள்மிகு லலிதா செல்வாம்பிகை. 🙏🇮🇳1
இந்த அன்னையின் மூலவர் வடிவத்துக்கு உருவம் இல்லை. முற்றிலும் வித்தியாசமான மூலவர் விக்கிரகம் இது. வேறெங்கும் காணமுடியாதது.
🙏🇮🇳2
மூலவராகப் போற்றி வணங்கப்படும் இந்த ‘லலிதா செல்வாம்பிகைக்கு’ உருவமே இல்லை. செவ்வக வடிவத்தில் உயரமான ஒரு கருங்கல் தான் மூலவராகக் காட்சி தரும் இந்த அன்னை நான்கடி உயரம், இரண்டடி அகலம், நான்கு அங்குல தடிமனுடன் காணப்படும் ஒரு கற்பலகைதான் அன்னை லலிதா செல்வாம்பிகை.
ஒரு காட்டில் வேடன் ஒருவன் பச்சைக்கிளிகளைப் பிடிக்கும் நோக்கத்துடன் ஒரு மரத்தடியில் வலை விரித்து அதில் தானியங்களைத் தூவினான். அவன் எதிர்பார்த்தப்படியே கிளிகள் பறந்து வந்து வலையில் சிக்கின. வேடன் சிக்கிய பறவைகளைப் பிடிக்கச் சென்றான்.
அப்போது முனிவர் ஒருவர் வந்தார். வலையில் சிக்கியிருந்த கிளிகளைப் பார்த்ததும், அவர் கருணையுடன் வேடனே! இவற்றைக் கொல்லாதே! என்று கேட்டுக் கொண்டார். வேடன், சுவாமி! இன்று எனக்கு இக்கிளிகளே உணவு இவற்றுக்குப் பதிலாக வேறு ஏதாவது தந்தால், இவற்றை விட்டுவிடுகிறேன்! என்றான்.
முனிவர், என்னிடம் சிறிது உணவு உள்ளது. அதை நான் உனக்குத் தருகிறேன். இந்தக் கிளிகளை விட்டுவிடு! என்றார். உணவைப் பெற்றுக் கொண்ட வேடன் கிளிகளை விடுவிக்கச் சென்றான்.