குயிஸ்லிங் (n. Quisling, v. to quisle)

ஆங்கிலத்தில் இப்படி ஒரு சொல் இருக்கிறது. எதிரியுடன் கை கோர்த்துக் கொண்டு தன் நாட்டுக்கு எதிராகத், தன் சொந்த மக்களின் நலனுக்கு, விருப்பத்திற்கு எதிராகச் செயல்படுபவர், முக்கியமாக எதிரியின் ஆதிக்கத்தின் கீழ், அதிகாரமில்லாத, அடிவருடும், ஒரு
பொம்மை அரசை நடத்துபவர் என்பது அதன் பொருள்.

இது உண்மையில் வாழ்ந்த ஒரு மனிதரின் பெயரைக் கொண்டு உருவான சொல் (எபோனிம் eponym).

விட்குன் குயிஸ்லிங் நார்வே நாட்டில் மக்கள் செல்வாக்கில்லாத கட்சியை நடத்தி வந்தவர்; இனவெறி கொடுங்கோலன் இட்லர் பிற நாடுகளைக் கைப்பற்ற தொடங்கியதும்
இட்லர் படைகளை வரவழைத்து நார்வேயைக் கைப்பற்றி, இட்லரிடம், காலில் விழுந்து கெஞ்சிக் கூத்தாடி, நார்வேயில், நியமிக்கப்பட்ட ஜெர்மானிய ஆளுநருடன் அதிகாரத்தைப் பகிர்ந்து கொண்டு, அவருக்கடியில் நார்வேயின் பொம்மை பிரதமராக 1942 முதல் 1945 வரை இருந்தவர்.
இட்லரின் நாசிக் கட்சியினரின் எல்லா இனவெறிக் கொடுமை, படுகொலைகளுக்கும் ஆதரவாகச் செயல்பட்டுக் கொடுத்த காசுக்கு மேல் கூவியவர்.

நார்வேயிலும் வெளி நாடுகளிலும் அவர் மேலிருந்த வெறுப்பில் அவர் பெயரான 'குயிஸ்லிங்' என்பதே ஆங்கிலத்திலும் பல மேற்கத்திய மொழிகளிலும் அவரைப் போன்று
எதிரியிடம் காட்டிக் கொடுத்து பொம்மை ஆட்சி செய்பவர்களைக் குறிக்கும் ஒரு சொல்லாகியது.

தமிழில் குயிஸ்லிங்கிற்கு இணையான ஒரு சொல் இல்லையே எனும் குறையைப் போக்க வந்திருக்கும் சொல் தான் 'எடப்பாடி' என்பதை நீட்டுக்கு எதிரான அனைத்துக் கட்சி கூட்டத்தை இன்று புறக்கணித்துத்,
தமிழர் ஒற்றுமையைக் குலைத்து மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தியிருக்கிறார்கள்.

பி.கு: இட்லர் வீழ்ச்சிக்குப் பிறகு 1945ல் சரணடைந்த குயிஸ்லிங், நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை கொடுக்கப்பட்டது சோகமான வரலாறு.

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Karthick Ramasamy

Karthick Ramasamy Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @karthickmr

Dec 21, 2021
நான் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்க்கிறேன், நன்றாக இருக்கிறேன். இதற்கும் திமுகவிற்கும் என்ன சம்மந்தம்? இதற்கும் கலைஞருக்கும் என்ன சம்மந்தம்?

எங்கள் ஊர் தம்பிகள் சிலரின் கேள்வி இது.
அவர்களுக்கான பதில்.

உங்கள் வீட்டில், சித்தப்பா, பெரியப்பா வீடுகளில் 1967களுக்கு முன்பு எத்தனை பேர் எட்டாம் வகுப்பு தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று விசாரித்துப்பார், அப்படி தேர்ச்சியடைந்திருந்தால், எத்தனை பேர் பதினோறாம் வகுப்பு(அன்றைய SSLC) தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று
யோசித்துப் பார்க்கவும். அதையும் மீறி எத்தனை பேர் PUC தேர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கவும்.

எனது அப்பா SSLCயில் மூன்றாவது முறைதான் தேர்ச்சியடைய முடிந்தது. எனது சித்தப்பா PUCயில் தோல்வியடைந்த பிறகு அவரால் அடுத்து படிக்க முடியவில்லை.
Read 10 tweets
Dec 21, 2021
யார் நமக்கு நன்மையைச் செய்தார்களோ எது நமக்கு நன்மையை விளைவித்ததோ அதையே கெட்டதாக காட்டுவது சங்கிகளின் வித்தைகளில் ஒன்று.

குடிசைமாற்று வாரியத்தை அந்த மக்களுக்கு எதிரானமாக கட்டமைத்தார்கள்.

தந்தை பெரியார் சமத்துவபுரங்களை பட்டியலின மக்களுக்கு எதிரானதாக கட்டமைத்தார்கள்.
அதுபோன்றதொரு போலி கட்டமைப்புதான் வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை இழிவானதாக கட்டமைத்திருக்கிறார்கள் சங்கிகளின் தம்பிகள்.

90களுக்கு முன்புவரை எங்கள் கிராமத்தில் பரவலாக கூரை வீடுகளை பார்க்க முடியும். பெரும்பாலோர் பள்ளிக்கல்வியோடு படிப்பை நிறுத்தியவர்கள்.
பலர் இரண்டு அல்லது மூன்று ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருந்த சிறு விவசாயிகள். நீர்வளம் இல்லாத,மண் வளமும் இல்லாத அந்த நிலங்களில் விவசாயம் செய்வது வரவிற்கும் செலவிற்குமே பொதுமானதாக இருக்கும். எங்கள் பகுதிகளில் தொழில் வளர்ச்சியும் இல்லை.
Read 10 tweets
Dec 4, 2021
வரலாற்றில் இதுவரை கிடைத்த ஆதராங்களின் படி முதன் முதலில் எழுத்து முறையை உருவாக்கியவர்கள் சுமேரியர்கள். சுமார் 8000 வருடங்களுக்கு முன்பே அதை உருவாக்கியிருந்தாலும் ஆரம்பத்தில் அதை வரி வசூல் கணக்குகளை எழுத பயன்படுத்தும் கணித குறியீட்டு மொழியாக மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
அந்த சுமேரிய எழுத்து வரி வடிவத்தை இப்பொழுது க்யூனிஃபார்ம் என்று அழைக்கிறார்கள்.

5000 வருடங்களுக்கு முன்பு இந்த வரிவடிவத்தை வாக்கியங்கள் எழுதவும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டார்கள்.
பாபிலோனிய அரசன் ஹமுராபியின் சட்டங்கள் இன்று நமக்கு தெரியக் காரணம் இந்த வரிவடிவத்தை ஆங்கிலேய அதிகாரி ஒருவர் எப்படி படிக்க வேண்டும் என்று கண்டறிந்த பின்பு தான்.

சரி விசயத்திற்கு வருவோம். ஹராப்பா, மொஹஞ்சதாரோ நாகரிகமும் சுமேரிய நாகரிகமும் சம காலத்தில் இருந்தன. இரண்டிற்கும் வர்த்தக
Read 7 tweets
Dec 2, 2021
மன்னர்களிடம் வரியில்லா மானிய நிலங்களைப் பெற்று உழைக்காமல் உட்கார்ந்து தின்றுவிட்டு, வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு சென்னையில் இருந்தால்தான் வளர்ச்சி் என்று தங்கள் முன்னோர்களுக்கு இலவசமாக கிடைத்த நிலங்களை விற்றுவிட்டு சென்னையின் மையப்பகுதிகளில் குடியேறும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்க
வில்லை. அப்படி குடியேறியவர்களின் தலைமுறை இன்று அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உயர் பொறுப்புகளில் இருக்கிறார்கள். நாங்கள் இப்பொழுதுதான் முதல் தலைமுறையில் படித்து வெளியில் வருகிறோம். பெற்றோர் உதவியில்லாமல் பரம்பரை சொத்துக்களின் பலமில்லாமல் சொந்த உழைப்பில் புறநகர் பகுதிகளில்
அடுக்குமாடி வீடுகளை மட்டும்தான் வாங்க முடியும். மாநகரங்களில் தனி வீடு வாங்க கோடிகள் தேவைப்படும். அதிவும் மையப் பகுதிகளில் கனவு கூட காண முடியாது. மாநகரத்து கல்வி, வேலைவாய்ப்புகள் நம் குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பதை குற்றமாக பார்க்க வைத்துவிட்டார்கள் போலி
Read 5 tweets
Dec 2, 2021
திராவிடக் கொள்கைகளின் அடிப்படை நமது சுயமரியாதை,சமூகநீதி, கல்வி, வேலைவாய்ப்பு போன்றவைதான். நூறாண்டுகளாக நம் தலைவர்கள் இவற்றிற்குதான் தங்கள் வாழ்நாள் உழைப்பைக்கொடுத்தார்கள். நம்ம தலைவர்களின் கவனத்தை இவற்றில் இருந்து திசைதிருப்பத்தான் காவிகள் தொடர்ந்து முயற்சிக்கிறார்கள். இனியும்
ஈழத்தை வைத்து திசைதிருப்ப முடியாது. ஆகையால் பூமாதேவியை கையில் எடுத்திருக்கிறார்கள். சுற்றுச்சூழல் பிரச்சனை என்பது உலகளாவிய பிரச்சனை. வளர்ந்த நாடுகளின் அளவிற்கு மீறிய சுரண்டலால் ஏற்பட்டது. அதை அவர்களால்தான் சரி செய்யமுடியும். கடந்த 30 வருடங்கள் முன்பு வரை நம்மில் பெரும்பாலோர்
கூரை வீடுகளில்தான் வாழ்ந்தோம். இன்றுவரை பெரும்பாலோரிடம் நான்கு சக்கர வாகனங்கள் கிடையாது. தமிழர்கள் சிக்கனமானவர்கள். நம் உருவாக்கும் impact என்பது ஒப்பீட்டளவில் மிகவும் குறைவு. இவர்கள் இவற்றை நம்முடைய ஆகப்பெரிய பிரச்சனையாக பேசுவதன் நோக்கம், நம் தலைவர்களை அடிப்படை
Read 4 tweets
Dec 2, 2021
நான் திமுகவின் அடிமட்டத் தொண்டன் என்பது கேவலமாம். மே 17 தம்பிகள் கிண்டல் செய்கிறார்கள். அவர்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். உலகின் எந்த மூலையிலும், எந்த மேடையிலும் நான் அறிஞர் அண்ணாவின் வழிவந்த திமுகவின் தொண்டன் என்பதை பெருமையாக எந்த பயமும் இல்லாமல் சொல்ல முடியும்.
உங்களால் தமிழ்நாட்டில் கூட தான் மே 17 இயக்கத்தின் உறுப்பினர் என்று முகத்தை காட்டிச் சொல்ல முடியவில்லை. முதலில் அது பதிவுகூட செய்யப்படாத அமைப்பு. RSS ஐ போல அதன் நிர்வாகிகள் யார் என்று கூட வெளியில் சொல்லாத அமைப்பு. இன்றுவரை தனது கொள்கை என்னவென்று கூட சொல்லாத ஏமாற்று அமைப்பு.
உங்களால் உங்கள் தலைவர் யார் என்றுகூட வெளிப்படையாக சொல்ல முடியாது. மக்களாட்சியின் மீது நம்பிக்கையிருக்கிறதா என்று கேட்டால் உளற ஆரம்பிக்கிறீர்கள். இதுவரை சுதந்தி்ர இந்தியாவை ஆண்ட மாநில முதலமைச்சர்களில் சிறந்தவர்களை பட்டியலிட முடியுமா என்றால் தப்பித்துச் செல்வீர்கள்.
Read 5 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

:(