சம்பவம் - நான் இப்படி ஒரு Convo இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. நான் ஊருக்கு போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் போக OlA auto book பண்ணியிருந்தேன். ஆட்டோ டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு போன் பண்ணாரு நான் போன கட் பண்ணிட்டு அவர் ஆட்டோல ஏறுனே. இந்த பக்கமா போகலாமா சார்
போகலாம் வழி இருக்கு ஆனா ஒரு நாய் இருக்கும் அது தான் எனக்கு பயம்ன்னு சொன்னே. அவர் ஆட்டோ உள்ள வராது சார்ன்னு சொன்னார் இல்ல அண்ணா சொல்ல முடியாது அது தாவிடும்னு சொல்லிட்டே போனோம் நல்ல நேரம் நாய் இல்ல. Contonment station second platformன்னு சொன்னே ஒண்ணும் பிரச்சினை
இல்ல வழிதெரியும்னு சொல்லிட்டு போயிட்டே இருந்தது அடுத்த இரண்டாவது நிமிஷம் நீங்க இந்துவா முஸ்லிமான்னு கேள்வி வந்தது அந்த ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு தெரிஞ்சு என் லைஃப்ல இது முதல் தடவை நான் சந்திச்ச கேள்வி ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு சொல்ல விரும்பவில்லை ஏன்
கேக்குறிங்கன்னு கேட்டேன். நம்ம மனசு தான் முடிவு பண்ணிடுமே அவங்கள ஓலால கம்ப்ளைன்ட் பண்ணனும் அப்படி இப்படின்னு அது எல்லாம் எனக்கும் தோணுச்சு. நான் அவர்கிட்ட திரும்ப ஏன்னு கேக்குறதுக்குள்ள டிரைவரே என் பேர சொல்லி நீங்க இந்து தானேன்னு சொன்னாரு. நான் இல்ல மனுஷன் சொல்லுங்க
எதுக்காக இத்தனை தடவ அதை கேக்குறிங்கன்னு ஒண்ணு இல்ல சார் இந்த ஹீஜாப் விஷயம் வந்ததுல இருந்து இந்த முஸ்லிம் பசங்க வேணும்னே வந்து இடிக்கிற மாதிரி வராங்க சார்ன்னு சொன்னாப்ல. நான் இருந்துட்டு அவன் ரோட்ல தான் போறான் நீங்களும் போறிங்க ஒரு செகன்ட் உங்க ஆட்டோ கிராஸ் ஆகுது அதுக்குள்ள அவன
முஸ்லிம்ன்னு நீங்க ஹிந்துன்னு தெரிஞ்சு அவன் உங்கள இடிக்க வந்தான்னு சொல்றீங்க. ஆக்ஸ்வலி நானும் தான் பார்த்தேன். அவன் உங்கள இடிக்க வரல அவன் வேகமா வந்ததுல உங்க மேல மோத பார்த்தான் அப்படியே கட் பண்ணி போயிட்டான். இப்படி வேகமா போறது முஸ்லிம் மட்டுமில்ல இந்த ஏரியால ஹீந்துவும் பண்றாங்க
அப்படின்னு சொன்னே. நீங்க நினைச்சது வெறும் உங்க மனசுல தோணுற விஷயம் தான். இப்படி ஒரு பிரச்சினை நடக்குறதால நமக்கு அவங்களால பிரச்சினை வரும்னு மத்தப்படி வேற எதுவும் இல்லைன்னு சொன்ன. உடனே அந்த ஆள் என்ன சமாதானம் பண்ற மாதிரி பேச முயற்சி பண்ணாரு. உண்மை தான் சார். ஒரு டைம்ல முஸ்லீம்ல
மட்டும் தான் திருட்டு பசங்க இருந்தாங்க இப்போ ஹீந்துலையும் இருக்காங்கன்னு சொன்னாப்ல. நான் சிரிச்சிட்டு திருட்டு பசங்க அவங்க இரண்டு பேரும் இல்ல உங்கள இப்படி யோசிக்க வச்சானே அவன் தான் திருட்டு பையன். சிம்பிளா ஒரு கேள்வி கேக்குறேன் உங்க கிட்ட ஒரு ஜவுளி கடை இருக்கு அதுக்கு ஆள்
வேணும் உடனடியா ஒரு முஸ்லிம் பையன் உங்கக்கிட்ட வேலை கேட்டு வந்தா நீங்க வேலை தருவீங்களா. அவர் கொடுக்க மாட்டேன் சார்ன்னு சொன்னாப்ல அவ்வளவு தான் இப்போ அந்த பையனுக்கு வேலையில்ல அந்த பையனுக்கு சொந்தம் யாராவது பெரிய ஆளா இருந்தா அவங்கள வச்சி ஏதாவது ஒரு நாட்ல போய் செட்டில் ஆகிடுவான்
இப்படி எங்கையுமே வேலை கிடைக்காத பையன் என்ன பண்ணுவான். அவனுக்கும் பசிக்குமே அவன் திருடத்தான் செய்வான். அதே மாதிரி தான் இந்து பையனும். ஒரு இந்து பையனுக்கு வேலை கொடுக்க கூடாதுன்னு சொல்ற முஸ்லீமும். முஸ்லீமுக்கு வேலை கொடுக்க கூடாதுன்னு சொல்ற ஹீந்துவும் தான் இதுல திருடங்க
சொல்லப்போனா உங்கள இப்படி யோசிக்க வச்சானே அவன் தான் திருடன். சரியா சொன்னீங்க சார்ன்னு சொன்னார். எனக்கு அந்த ஆள் என்ன எதிர்த்து பேச முடியாம சரின்னு சொன்னதா தான் தோணுச்சு. ஆனா அவர் அடுத்த கேள்வி கேப்பாருன்னு நினைக்கல சார் எல்லாரும் சம மனிதர்கள் சார். யாரும் ஏத்தம்
இறக்கம் இல்ல. இந்த வேறுபாடே இல்லாம ஆக்கனும்னா ஒரே வழி இட ஒதிக்கீட ஒழிக்கனும் சார்ன்னு சொன்னார். நான் சிரிச்சிட்டே அண்ணா நீங்க சொல்ற மாதிரி அதை ஒழிச்சா உங்க புள்ளைங்களுக்கும் தான் கஷ்டம்ன்னு சொன்னே. என்ன சொல்றீங்க புரியல. எத்தனை SC ST கோடிஷ்வரனா இருக்கான் அவன்
புள்ளைங்களுக்கு எதுக்கு இட ஒதிக்கீடுன்னு கேட்டாப்ல. நான் இருந்துக்கிட்டு. உங்களால வருஷம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்ன்னு கேட்டேன். ஒரு இரண்டு மூனு லட்சம்ன்னு சொன்னாரு. வருஷமெல்லாம் ஓட்டுனா உங்களுக்கு கிடைக்கப்போறது அவ்வளவு தான். ஆனா இன்னொரு அரிய வகை ஏழைகள் இருக்காங்க தெரியுமா
அவங்களுக்கு 10% இட ஒதுக்கீடு இருக்குன்னு சொன்னே. யார் சார் அவங்கன்னு கேட்டாப்ல. சொல்றேன் கேளுங்க வருஷத்துக்கு எட்டு லட்சம் சம்பாதிக்கிறவன் புள்ளை ஏழையாம் அவனுக்கு 10% இட ஒதுக்கீடு தரளாம்ன்னு சட்டம் இருக்கு. அது யார் சார்ன்னு கேட்டாப்ல அது தான் நீங்க சாமி சாமின்னு
கூப்பிடுறிங்களே அந்த அய்யர் அய்யங்கார்ன்னு சொன்னே. அந்த ஆள் அவங்க எப்பவுமே பெரிய ஆளுங்க சார்ன்னு சொன்னாப்ல. நான் உடனே அதான்னா உங்கள விட எப்பவும் பெருசா இருக்குற அவங்கள விட்டுட்டு ஏதோ மூணு குடும்பம் இப்போ முன்னேறியிருக்குற SC ST பார்த்து கோபப்படுற பார்த்தியான்னா
அதான் அவங்க உங்கக்கிட்ட விதைச்ச ஜாதிங்கிற பாகுப்பாடு. இன்னைக்கு உன்ன ஹீந்துன்னு சொல்லி ஒண்ணா வான்னு கூப்பிடுவான் அப்புறம் அந்த முஸ்லீம் எல்லாத்தையும் ஒழிச்சதுக்கு அப்புறம் ஏ சூத்திர பயலே வெளியே போடான்னு சொல்லுவான். அவனுக்கு நீயும் ஒண்ணு தான் SC STயும் ஒண்ணு தான்னு சொன்னே.
அவர் உண்மை தான் சார். ஏதோ ஒரு வகையில நாம ஒருத்தர் இன்னொருத்தர சார்ந்து தான் வாழ்றோம். அதுல ஏதாவது ஒண்ண வெட்டி சாச்சிட்டா நமக்கு தான் கஷ்டம்ன்னு சொல்லிட்டு.உங்க BC கோட்டாவுக்கும் ரிஷர்வேஷன் இருக்குன்னான்னு சொல்லிட்டு ஸ்டேஷன் வாசல்ல இறங்குனே. அவரு நீவு சென்னாங்க மாத்தடிரி சார்
Thanksன்னு சொல்லிட்டு 93₹ பில்லுக்கு 100₹ வாங்கிட்டு போயிட்டாப்ல. கடைசியில நான் தான் அவுட்டா.. @bharath_kiddo@iam_DrAjju
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கனவு - நல்ல தூக்கம் அதுவும் 3 மணிக்கு எழுந்திரிச்சு உச்சா போயிட்டு வந்து அறை மணி நேரம் டுவிட்டர் பார்த்துட்டு தூங்குனா சொல்லவா வேணும். அப்படி ஒரு தூக்கம். தூக்கத்துல ஒரு கனவு என் ஐடிக்கு புளூ டிக் கிடைச்சிருக்கு. அதாவது என் போன்ல நைட் மோட்ல இருக்குறதால அது வெள்ளைக்கலர்ல தெரியுது
ஏ. பகவான் என்ன இது கொடுமைன்னு dark mode மாத்தி வெள்ளையா வச்சி பாக்குறேன் அப்பவும் புளூ டிக் தெரியுது. சரின்னு லாக் ஆஃப் ஆன் பண்ணி பாக்குறேன் அப்பவும் காட்டுது. சரின்னு என் பொண்டாட்டிக்கிட்ட பெருமையா போய் சொல்றேன். என் வீட்டம்மா பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வச்சிருந்த பழைய ஐடிக்கே
ஒண்ணும் தரக்கானோம். இதுல ஒளிஞ்சி வாழ்றேன்னு என்ன ஏமாத்திட்டு திரியுற இதுலையா தரப்போறாங்கன்னு கேக்குறா. அவக்கிட்ட காட்டுனா அவ ஏதாவது டெக்னிகல் errorஅ இருக்கும். கொஞ்ச நேரத்தில போயிடும்ன்னு சொல்றா. உனக்கு எப்பவுமே இப்படித்தான் வயித்தெறிச்சல் பிடிச்சவன்னு சொன்ன உடனே
இந்த கூந்தல் பேர் சொல்றது அந்த ஃபங்ஷன் மட்டும் இல்ல எந்த ஊர் ஃபங்ஷன் போனாலும் அங்க எழுதுற மொய் நோட்டுல பத்திரிக்கையில போடத்தான் செய்வான். அதுவே சொன்னவனோட பையன் ஸ்கூல் சர்டிபிகேட் இல்லாட்டி அவனோட ஆதார் கார்டு வாங்கிப்பாரு வெறும் பேர் மட்டும் தான் இருக்கு.
இன்னும் தன் சொந்தங்கள் கூடுற இடத்துல அதை சொல்றத பெருமையா நினைக்கிறாங்க அவ்வளவு தான். அதுவும் காலப்போக்குல மாறிடும் என் கல்யாண பத்திரைக்கை.யில எங்க தாத்தா பேர் பின்னாடி ஜாதி இருக்கு. எங்க அப்பா பேர் பின்னாடி இல்ல. என் பேர்க்கு பின்னாடி இல்ல. ஏன்னா அந்த பேர சொல்லி
கூப்பிடுற பழக்கத்தை எங்க தாத்தா காலத்தோட முடிஞ்சதுன்னு அர்த்தம். அடுத்த படிச்ச தலைமுறை எங்கப்பா அவர் அதை விட்டுட்டாரு. நானும் விட்டுட்டேன் இப்படி அடுத்தடுத்து படிச்ச தலைமுறை வரப்போ அதை விட்டுட்டுவாங்க.அவன் சொல்ற Surname voter id aadhar I'd ல இருக்குறது.மொய் புக்ல இருக்குறது இல்ல