#கனவு - நல்ல தூக்கம் அதுவும் 3 மணிக்கு எழுந்திரிச்சு உச்சா போயிட்டு வந்து அறை மணி நேரம் டுவிட்டர் பார்த்துட்டு தூங்குனா சொல்லவா வேணும். அப்படி ஒரு தூக்கம். தூக்கத்துல ஒரு கனவு என் ஐடிக்கு புளூ டிக் கிடைச்சிருக்கு. அதாவது என் போன்ல நைட் மோட்ல இருக்குறதால அது வெள்ளைக்கலர்ல தெரியுது
ஏ. பகவான் என்ன இது கொடுமைன்னு dark mode மாத்தி வெள்ளையா வச்சி பாக்குறேன் அப்பவும் புளூ டிக் தெரியுது. சரின்னு லாக் ஆஃப் ஆன் பண்ணி பாக்குறேன் அப்பவும் காட்டுது. சரின்னு என் பொண்டாட்டிக்கிட்ட பெருமையா போய் சொல்றேன். என் வீட்டம்மா பத்தாயிரம் ஃபாலோயர்ஸ் வச்சிருந்த பழைய ஐடிக்கே
ஒண்ணும் தரக்கானோம். இதுல ஒளிஞ்சி வாழ்றேன்னு என்ன ஏமாத்திட்டு திரியுற இதுலையா தரப்போறாங்கன்னு கேக்குறா. அவக்கிட்ட காட்டுனா அவ ஏதாவது டெக்னிகல் errorஅ இருக்கும். கொஞ்ச நேரத்தில போயிடும்ன்னு சொல்றா. உனக்கு எப்பவுமே இப்படித்தான் வயித்தெறிச்சல் பிடிச்சவன்னு சொன்ன உடனே
அவ ஏதோ அசிங்கமா திட்டுறா. ஆனா அத விட சத்தமா இன்னொரு சத்தம் கேக்குது. மடிவாளா இறங்குறவங்க இறங்கிக்கோங்க அடுத்து பஸ்ஸீ ஜெய் நகர், பானஸ்வாடி தான் நிக்கும்ன்னு கேக்குது. எதே ஜெய்நகரா. நான் சாந்திநகர்ல இறங்குனுமேடா. கண்ண தொறடா கருமம் பிடிச்சவனேன்னு மூளை சொல்லுது.
புளூ டிக் போயிடும்டான்னு கனவு சொல்லுது. ஆத்தாடி புளூ டிக்குக்கு ஆசைப்பட்டா அப்புறம் 300₹ ஆட்டோ சார்ஜ் அழுகனும்னு மண்டையில தோணுச்சு. உடனே கண்ண தொறந்து பார்த்தா மடிவாளால இருந்து வண்டி மூவ் ஆகுது. பேக்க தூக்கிட்டு போய் டிரைவர்ட கேட்க்கிறேன் சார் சாந்தி நகர் போகுமான்னு
அதான் லாஸ்ட் ஸ்டாப் தம்பி உக்காருன்னு சொல்றான். அப்புறம் ஏன் பானஸ்வாடின்னு கத்துனிங்கன்ன கேட்டா. ஏன்டா நான் பஸ்ஸீக்குள்ள அறை மணி நேரமா இறங்க சொல்லி கத்துறேன் ஒருத்தன் வரல நீ பக்கத்து பஸ்ஸீல கத்துற சத்தத்தை கேட்டா எழுந்து வரேன்னு அசிங்கபடுத்துறான்.
இந்த கூந்தல் பேர் சொல்றது அந்த ஃபங்ஷன் மட்டும் இல்ல எந்த ஊர் ஃபங்ஷன் போனாலும் அங்க எழுதுற மொய் நோட்டுல பத்திரிக்கையில போடத்தான் செய்வான். அதுவே சொன்னவனோட பையன் ஸ்கூல் சர்டிபிகேட் இல்லாட்டி அவனோட ஆதார் கார்டு வாங்கிப்பாரு வெறும் பேர் மட்டும் தான் இருக்கு.
இன்னும் தன் சொந்தங்கள் கூடுற இடத்துல அதை சொல்றத பெருமையா நினைக்கிறாங்க அவ்வளவு தான். அதுவும் காலப்போக்குல மாறிடும் என் கல்யாண பத்திரைக்கை.யில எங்க தாத்தா பேர் பின்னாடி ஜாதி இருக்கு. எங்க அப்பா பேர் பின்னாடி இல்ல. என் பேர்க்கு பின்னாடி இல்ல. ஏன்னா அந்த பேர சொல்லி
கூப்பிடுற பழக்கத்தை எங்க தாத்தா காலத்தோட முடிஞ்சதுன்னு அர்த்தம். அடுத்த படிச்ச தலைமுறை எங்கப்பா அவர் அதை விட்டுட்டாரு. நானும் விட்டுட்டேன் இப்படி அடுத்தடுத்து படிச்ச தலைமுறை வரப்போ அதை விட்டுட்டுவாங்க.அவன் சொல்ற Surname voter id aadhar I'd ல இருக்குறது.மொய் புக்ல இருக்குறது இல்ல
சம்பவம் - நான் இப்படி ஒரு Convo இன்னைக்கு நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல. நான் ஊருக்கு போறதுக்காக ரயில்வே ஸ்டேஷன் போக OlA auto book பண்ணியிருந்தேன். ஆட்டோ டிரைவர் வீட்டு பக்கத்துல வந்துட்டு போன் பண்ணாரு நான் போன கட் பண்ணிட்டு அவர் ஆட்டோல ஏறுனே. இந்த பக்கமா போகலாமா சார்
போகலாம் வழி இருக்கு ஆனா ஒரு நாய் இருக்கும் அது தான் எனக்கு பயம்ன்னு சொன்னே. அவர் ஆட்டோ உள்ள வராது சார்ன்னு சொன்னார் இல்ல அண்ணா சொல்ல முடியாது அது தாவிடும்னு சொல்லிட்டே போனோம் நல்ல நேரம் நாய் இல்ல. Contonment station second platformன்னு சொன்னே ஒண்ணும் பிரச்சினை
இல்ல வழிதெரியும்னு சொல்லிட்டு போயிட்டே இருந்தது அடுத்த இரண்டாவது நிமிஷம் நீங்க இந்துவா முஸ்லிமான்னு கேள்வி வந்தது அந்த ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு தெரிஞ்சு என் லைஃப்ல இது முதல் தடவை நான் சந்திச்ச கேள்வி ஒரு ஆட்டோ டிரைவர் கிட்ட இருந்து. எனக்கு சொல்ல விரும்பவில்லை ஏன்