இன்று #மாசிமகம். ஆசார்யர் மணக்கால் நம்பி திருவவதார தினம். இவரின் இயற்பெயர் ஸ்ரீ ராமமிஶ்ரர். லால்குடி அருகில் உள்ள மணக்கால் என்ற கிராமத்தில் அவதரித்தார். வைணவ ஸம்பிரதாயத்தில் மணக்கால் நம்பி என்ற திருநாமத்திலேயே அழைக்கப்படுகிறார். அவர் நித்ய சூரிகளில் குமுதா என்பவரின் திருவவதாரம்.
'லக்ஷ்மிநாத சமாரம்பாம் நாதயாமுன மத்யமாம்அஸ்மாதாசார்ய பர்யந்தாம் வந்தே குரு பரம்பராம்!'
லக்ஷ்மி நாத சமாரம்பாம் என குருபரம்பரையின் முதல் ஆச்சார்யரான மகாவிஷ்ணு, பின் மகாலட்சுமி, விஸ்வக்சேனர், நம்மாழ்வார், அடுத்து 'நாலாயிர திவ்யப்ரபந்தத்தை' தொகுத்து, ஸ்ரீவைஷ்ணவர்கள் அனைவரும் பயன்
பெறும்படி அரிய செயலை செய்த மகான் நாதமுனிகளை நடுவாகக் கொள்கிறோம். அதற்குப் பிறகு உய்யக்கொண்டார். அதன் பின் #மணக்கால்_நம்பி. அவருக்கு அடுத்து ஆளவந்தார் இந்த குரு பரம்பரையில் வருகிறார். மணக்கால் நம்பி அவருடைய ஆசார்யரான உய்யக்கொண்டாருடன் வாழ்ந்து அவருக்கு 12 வருடம் கைங்கர்யம்
செய்தார். அந்த சமயத்தில் உய்யக்கொண்டருடைய தர்ம பத்தினி பரமபதித்து விட்டார். அதனால் மணக்கால் நம்பி அவருடைய ஆசார்யன் திருமாளிகை மற்றும் அவருடய குழந்தைகளை நன்கு கவனித்து வந்தார். ஒருமுறை அவருடைய ஆசார்யனின் திருக்குமாரத்திகள் காவேரியிலிருந்து திரும்பி வரும்பொழுது வழியில் சேற்று நீர்
ஒரு பெரிய குட்டை போல் இருக்க அதைக் கடக்க அவர்கள் தயங்கினார்கள். அப்பொழுது நம்பி சேற்றில் படுத்து, அவர் மேல் அந்த குழந்தைகளை நடக்க சொல்லி அந்த சேற்றை கடக்க வைத்தார். இதை கேட்டவுடன் உய்யக்கொண்டார் மிகவும் மகிழ்ந்து அவருடைய திருவடித் தாமரைகளால், நம்பியினுடைய திருமுடியை அலங்கரித்தார்
உடனே உய்யக்கொண்டர் நம்பிக்கு என்ன வேண்டும் என்று கேட்க, தன் ஆசார்யருக்கு கைங்கர்யம் பண்ணுவதே தனக்கு விருப்பம் என்று கூறினார். உடனே உய்யக்கொண்டர் நம்பிக்கு என்ன வேண்டும் என்று கேட்க, தன் ஆசார்யருக்கு கைங்கர்யம் பண்ணுவதே தனக்கு விருப்பம் என்று கூறினார். இதைக் கேட்ட உய்யக்கொண்டார்,
தன் சிஷ்யனுடைய நடத்தையையும், விருப்பத்தையும் கண்டு மிகவும் மகிழ்ந்து, உடனே மீண்டும் ஒரு முறை த்வய மஹாமந்த்ரோபதேசம் செய்தார் (தனது சிஷ்யர்களுடைய கைங்கர்யத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தால், அவர்களுக்கு த்வய மஹாமந்த்ரோபதேசம் செய்வது என்பது பூர்வாசாரியர்களுடைய பழக்கமாக இருந்தது).
உய்யக்கொண்டார் பரமபதிக்கும் பொழுது, மணக்கால் நம்பியை தர்ஶன ப்ரவர்தகராக நியமித்து, (சம்பிரதாயத்தைப் பாதுகாத்துப் பரப்புபவர்) ஈஶ்வர முனியினுடைய திருக்குமரரை அடுத்த தலைவராக நியமிக்குமாறு கட்டளையிட்டார். ஈஶ்வர முனி யமுனைத்துறைவரை பெற்று எடுக்க, நம்பி அவருக்கு பஞ்ச ஸம்ஸ்காரத்தில்
முதன்மையான தாப ஸம்ஸ்காரம் செய்து வைக்கிறார். யமுனைத்துறைவர் (ஆளவந்தார்) மிகவும் அறிவுத்திறம் வாய்ந்தவராக இருந்தார். அவர் ராஜாவாக இருந்தமையால் தனது உண்மை நிலையை மறந்து ராஜ்ய நிர்வாகத்திலேயே இருந்தார். மணக்கால் நம்பி, ஆளவந்தாரை சந்திக்கச் செல்லும்பொழுதெல்லாம் காவலர்கள் அவரை உள்ளே
அனுமதிக்கவில்லை. மணக்கால் நம்பி ஆளவந்தரை திருத்த வேண்டும் என்று நினைத்து, அவர் தினமும் தூதுவளைக் கீரையை அரண்மணையில் உள்ள திருமடப்பள்ளியில் கைங்கர்யம் செய்பவரிடம் கொடுத்து வந்தார். ஆளவந்தாருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நம்பி திடீரென்று ஒரு நாள் கீரை கொடுப்பதை நிறுத்திவிட்டார்
ஆளவந்தர் தன் வேலையாட்களிடம் ஏன் கீரை இல்லை என்று கேட்க, ஒரு வயதான ஸ்ரீவைஷ்ணவர் தினமும் கொடுத்து வந்தார், இப்பொழுது அவர் கொடுப்பதை நிறுத்தி விட்டார் என்று கூறினார்கள். பிறகு மணக்கால் நம்பியை அழைத்து வந்து, ஆளவந்தார் அவருக்கு ஒரு இருக்கையை கொடுத்து ஏதேனும் செல்வம் வேண்டுமா என்று
கேட்டார். அதற்கு மணக்கால் நம்பி “நாதமுனிகள் கொடுத்த உண்மையான செல்வம் (ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ) என்னிடம் உள்ளது, அதை கொடுக்கத்தான் வந்தோம்” என்று கூறினார். இதைக் கேட்ட ஆளவந்தார், அவரது காவலர்களிடம் நம்பி எப்பொழுது வந்தாலும் உள்ளே அனுப்புமாறு கூறினார். மணக்கால் நம்பி பகவத் கீதையின் அனைத்து
விசேஷ அர்த்தங்களையும் ஆளவந்தாருக்கு கற்றுக்கொடுத்தார். அதை கேட்டதும் ஆளவந்தார் கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைமைக்கு மாறினார். ஆளவந்தார் கீதையின் ஸாரமான பொருளை விளக்குமாறு கேட்க, நம்பி சரம ஸ்லோகார்த்தத்தை அவருக்கு விரிவாக உபதேசித்தார். பிறகு ஆளவந்தரை திருவரங்கத்திற்கு அழைத்துச் சென்று
பெரிய பெருமாளை சேவிக்க வைத்தார். பெரிய பெருமாளுடைய அழகைக் கண்டு மெய்மறந்து, ஆளவந்தார் உலகப் பற்று அனைத்தையும் விட்டார். இதன்மூலம் மணக்கால் நம்பி நாதமுனிகளுடைய ஆசையை நிறைவேற்றினார். எப்பொழுதும் நாதமுனிகளை தியானித்துக்கொண்டு ஆளவந்தாரை சம்பிரதாயத்தை பாதுகாத்து பரப்புமாறு கட்டளை
இட்டார். அத்தோடு ஆளவந்தாரை அடுத்த தர்ஶன ப்ரவர்த்தகரைத் தேர்ந்தெடுத்து நியமிக்குமாறு கட்டளையிட்டார். இதை நினைத்துக்கொண்டு மிகவும் மகிழ்ச்சியுடன் பரமபதம் சென்றார். ஆளவந்தார் எம்பெருமானாரை கடாக்ஷித்து அடுத்த தர்ஶனப்ரவர்த்தகராக நியமித்தார்.
மணக்கால் நம்பியின் வாழி திருநாமம்:
தேசமுய்யக் கொண்டவர் தாள் சென்னிவைப்போன் வாழியே
தென்னரங்கர் சீரருளைச் சேர்ந்திருப்போன் வாழியே
தாசரதி திருநாமம் தழைக்கவந்தோன் வாழியே
தமிழ் நாதமுனியுகப்பைத் தாபித்தான் வாழியே
நேசமுடனாரியனை நியமித்தான் வாழியே
நீள் நிலத்தில் பதின்மர் கலை நிறுத்தினான் வாழியே
மாசிமகம் தனில் விளங்க
#இராம_நாமத்தின்_மகிமை#சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார், அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு
சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக இனிமேல் ரங்கநாதரின் துணிகளை நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் இராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல்
அரங்கனின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, இராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். இராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் இராமானுஜரிடம், சுவாமி நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு இராமானுஜர் அவனை
#வேப்பஞ்சேரி#லட்சுமிநாராயணர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது லட்சுமி நாராயணர் திருக்கோவில். இக்கோயிலில் உள்ள தசாவதார கிருஷ்ணர் வரப்பிரசாதியாக திகழ்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில்
இக்கோயில
கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம்
ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும் என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத்
தொடங்கினர். கோவிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர், விஜயரைத
ஒரு சமயம் சிஷ்யர் ஒருவர் தன் குருவிடம், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா என்றார். குருவும், “ஆஹா
அளக்கலாமே. ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். சிஷ்யனும் கொண்டு வந்தான். “இந்த பேப்பரில், என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் மனைவி, என் புத்திரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் உடை என்று, உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு
பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில், என் பெருமாள் என்று எழுதிக்கொள்” என்றார். சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு, என் மனைவி, என் புத்ரன் என்று ஆரம்பித்து, என் பெருமாள் என்று எழுதி முடித்தார்.
அடுத்து என்ன செய்வது என்று சிஷ்யன் கேட்டார். ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து,
வெள்ளிக்கிழமை #மகாலக்ஷ்மி_துதி
மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!
- குறு முனி அகத்தியர்
பொருள்: அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும்
மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!
சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்
கிராமத்தில் முகாம். விவசாய வேலை செய்யும் ஒரு பெண்மணி தரிசனத்துக்கு வந்தாள். பெரியவா எதிரில் கையை கூப்பிக்கொண்டு நின்றாள்.
"என்ன வேலை பண்றே?"
"வயல் வேலைக்கு போறேனங்க. ஆறு பசங்க. மாமியா என்கிட்ட இருக்கு. காலையிலே சோறாக்கி வெச்சிட்டு போயிடுவேன். இருட்டினப்புறம்தான் வீட்டுக்கு
வருவேன். நான் எப்படி சாமியை கும்பிடறது? கோயிலுக்கு போறது? உடம்பும் களைச்சுப் போவுது. சாமி கும்பிடவே நேரமில்லே"
பெரியவாளின் திருக்கண்கள் கருணையால் நிரம்பியிருந்தன.
"சாமி கும்பிடனும்னு நினைக்கிறையே, அதுவே சாமி கும்பிட்ட மாதிரிதான்!
காலையிலே சூரிய உதயம் ஆனவுடன், கிழக்கே சூரியனை
பார்த்து ஒரு கும்பிடு போடு. சாயங்காலம் விளக்கு வச்சவுடனே மேற்கு திக்கு பார்த்து ஒரு கும்பிடு போடு. நீ கர்மயோகி. ஒரு விநாடி நேரம் தெய்வத்தை நினைச்சாலே போறும் - சகல புண்யமும் கிடைச்சிடும்"
பெண்மணி கண்களை துடைத்து கொண்டாள். "சூரியனை கும்பிடு - சகல புண்ணியமும் கிடைச்சிடும்!" என்ன