#இராம_நாமத்தின்_மகிமை#சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்
எல்லாம் ஒரே கூட்டமாக அமர்ந்து கொண்டும் ஒன்றிரண்டு சுற்றியபடியும் இருந்தன.
மஹாஞானியின் வாக்கிலிருந்து வெளிப்பட்ட இராம மந்திர இசை ஓசையில் ஆற்றின் சலசலப்பும் மரங்களின் இலைகள் அசைகின்ற ஓசையும் அடங்கிப் போய்விட்டன. அதுவரை சிவாஜி அப்படிப்பட்ட இசையைக் கேட்டதே இல்லை. அவர் தாம் ஒரு மன்னர்
என்பதையே மறந்தார். அங்கிருந்த ஒரு மரத்தின் நிழலில் அப்படியே அமர்ந்து தன்னிலை மறந்தார். ஒப்பற்ற அந்த சீலரையே தம் மானசீக குருவாகவும் ஏற்கத் தொடங்கி விட்டார் சிவாஜி. ஒரு நாள் அந்த மஹா ஞானி தனிமையில் இருந்தார். சிவாஜிக்கு மகிழ்ச்சி தாளவில்லை. அவர் உடனே ஞானியை நெருங்கி அவரது
திருவடிகளில் விழுந்து வணங்கினார். குருநாதா! அடியேனுக்கு ஞான உபதேசம் செய்யுங்கள் என வேண்டினார். அப்போதுதான் அந்த ஞானியின் திருநாமம் #சமர்த்த_இராமதாசர் என்பதை சிவாஜி அறிந்து கொண்டார். சமர்த்த இராமதாசர் சிவாஜிக்கு இராம மந்திர உபதேசம் செய்து அவரைத் தம் சீடராக ஏற்றுக் கொண்டார்.
குருநாதரை வணங்கிய சிவாஜி அவரிடம் இராம மந்திரத்தை இனிய இசையுடன் பாடக் கற்றுக் கொண்டார். ஒரு நாள் சிவாஜி சிறிதளவு படையுடன் சமர்த்த இராமதாசர் தங்கியிருந்த மாவுலி என்ற நகரத்திற்குப் போய்க் கொண்டிருந்தார். அந்தத் தகவலை அறிந்த முகலாய மன்னன் ஔரங்கசீப் சிவாஜியைச் சிறைப் பிடிக்க பெரும்
படையை அனுப்பி வைத்தான். இரவு நேரம் காட்டிலேயே ஓரிடத்தில் முகாம் போட்டுத் தங்கிவிட்டுக் காலையில் பயணத்தைத் தொடரலாம் எனத் திட்டமிட்டார் சிவாஜி. அவர் மட்டும் தனிமையை விரும்பி வீரர்கள் கூடாரத்தை விட்டுச் சற்றுத் தள்ளியே தனதை அமைத்து அதில் தங்கியிருந்தார். சமர்த்த இராமதாசர் கற்றுக்
கொடுத்த இராமநாம மந்திரத்தை அப்போது சிவாஜி இனிய இசையுடன் பாடிக் கொண்டு இருந்தார். அந்த நேரம் பார்த்து ஔரங்கசீப்பின் பெரும் படை சிவாஜியையும் சிவாஜியின் படையையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது. அது எதுவும் தெரியாத சிவாஜி மன்னரோ தன்னை மறந்த நிலையில் பக்திப் பரவசத்தோடு இராம
மந்திரத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அப்போது காட்டில் இருந்த குரங்குக் கூட்டங்கள் சிவாஜி மன்னரின் படைகளுக்கு உதவியாக முகலாயப் பெருஞ்சேனையின் மீது பாய்ந்தன. முகலாயப் படை திகைத்தது. இவ்வளவு பெரிய வானரக் கூட்டம் எங்கிருந்து வந்தது என்ற அதிர்ச்சியில் முகலாயப் படை சிதறிப் போய்
சின்னாபின்னமாகி ஓடியது. சிவாஜிக்கு விவரம் தெரிந்தது. ஆஞ்சனேயரே வந்து தம்மைக் காப்பாற்றியிருக்கிறார் என உணர்ந்தார். அதனால் விடிந்ததும் விடியாததுமாகப் புறப்பட்ட சிவாஜி நேரே போய் சமர்த்த இராமதாசரைத் தரிசித்து வணங்கி அவரிடம் நன்றியை தெரிவித்தான். மஹா ஞானியான சமர்த்த இராமதாசரின் ஓர்
இறந்த பறவையை மறுபடி உதிர்ப்பித்தார். இராம மந்திரத்தின் மகிமையை விளக்கும் ஒரு பாடலை ‘ஜன்ஜூட்’ எனும் இராகத்தில் பாடலைப் பாடிய படியே கீழே இறந்து கிடந்த பறவையை எடுத்து ஆகாயத்தில் வீசினார். அந்தப் பறவை உயிர் பெற்று அப்படியே பறந்து ஓடியது. ஹிந்துஸ்தானி இராகமான ‘ஜன்ஜூட்’ என்ற இராகத்தைப்
பாடினால் எப்படிப்பட்ட நோயும் நீங்கும் என்பது இன்றும் நிலவி வரும் நம்பிக்கை. கர்னாடக சங்கீதத்தில் அதே சாயலுடைய ‘செஞ்சுருட்டி’ என்ற இராகம், பக்தி பாவத்துடன் பாடப்படுமானால் மனோ ரோகங்களைப் போக்க வல்லதாக இருக்கிறது. சமர்த்த இராமதாசர் இறந்துபோன பறவையை உயிருடன் எழுப்பிய தகவல் ஊரெங்கும்
பரவியது. அப்போது மாவுலி நகரத்தை ஆட்சி செய்து கொண்டிருந்த முகலாய மன்னனுக்கும் தகவல் தெரிந்தது. அவன் மனைவிக்கு சித்தப் பிரமை உண்டாகி இருந்தது. அந்த முகலாய மன்னன் மாவுலி நகர ஹிந்துக்கள் அனைவரையும் இஸ்லாம் மதத்தைச் சாரும்படி கொடுமைப்படுத்திக் கொண்டு இருந்தான். அப்படிப்பட்ட அவன் தான்
சமர்த்த இராமதாசரைப் பணிந்து என் மனைவியின் சித்தப் பிரமையைத் தீர்த்து வையுங்கள் என வேண்டினான். சமர்த்த இராமதாசரும் பார்த்தார். இந்த மன்னனை நல்வழிப்படுத்த இஃது ஒரு நல்ல வாய்ப்பு என்று எண்ணிய அவர் மன்னனின் மனைவி முன்னால் மூன்று மணிநேரம் ‘மால் கவுஞ்ச்’ என்ற இராகத்தில் இராம பஜனை
செய்தார். மூன்றாவது மணியில் மன்னனின் மனைவி சித்தப் பிரமை நீங்கித் தெளிந்து எழுந்தாள். அவளையும் தன்னுடன் சேர்ந்து பாடச் செய்தார் சமர்த்த இராமதாசர். முகலாய மன்னன் வெட்கித் தலைகுனிந்தான். ஹிந்துக்களுக்குத் தான் இழைத்த அநீதிக்கு ஏதாவது பரிகாரம் செய்ய எண்ணி சமர்த்த இராமதாசரிடம் முறை
இட்டான். இராமதாசர், மக்கள் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ளும்போது ‘ராம்ராம்’ என்று சொல்லிக் கொள்ள வேண்டும் எனக் கேட்டார். அன்று முதல் மஹாராஷ்டிர மாநிலம், மாவுலி நகரம் முதலான வட தேசங்களில் மக்கள் ஒருவருக்கொருவர் ‘ராம்! ராம்!’ எனச் சொல்லிக் கொண்டார்கள். மஹாஞானியான சமர்த்த
ராமதாசரின் நல்லிசையால் அவர் பெற்ற இராம பக்தியால் நம்தேசத்தில் ஒரு ஹிந்து சாம்ராஜ்ஜியமே நிறுவப்பட்டது.
ஜெய்ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்..ஜெய் ஸ்ரீராம்..
ஸ்ரீராமஜயம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
#கும்பகோணம்_அரிய_தகவல்கள்
கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்ற. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால்
குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது என்பதும் உண்டு. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டிணம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம்,
சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளான காவிரி கங்கை
Experiences with Maha Periyava:
The greatness of #Mylapore
Everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri https://t.co/wHfXISnLbo.Ja’s daughter-in-law,
Tripurasundari went there for darshan. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked
“Where are you staying in Madras?”
Here in Mylapore Periyava, replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
Yes Periyava. Especially, I always enjoy going to Kapaleeswarar Temple and praying to Karpagambal said Tripurasundari with a face blooming with
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார், அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு
சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக இனிமேல் ரங்கநாதரின் துணிகளை நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் இராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல்
அரங்கனின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, இராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். இராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் இராமானுஜரிடம், சுவாமி நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு இராமானுஜர் அவனை
#வேப்பஞ்சேரி#லட்சுமிநாராயணர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது லட்சுமி நாராயணர் திருக்கோவில். இக்கோயிலில் உள்ள தசாவதார கிருஷ்ணர் வரப்பிரசாதியாக திகழ்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில்
இக்கோயில
கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம்
ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும் என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத்
தொடங்கினர். கோவிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர், விஜயரைத
ஒரு சமயம் சிஷ்யர் ஒருவர் தன் குருவிடம், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா என்றார். குருவும், “ஆஹா
அளக்கலாமே. ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். சிஷ்யனும் கொண்டு வந்தான். “இந்த பேப்பரில், என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் மனைவி, என் புத்திரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் உடை என்று, உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு
பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில், என் பெருமாள் என்று எழுதிக்கொள்” என்றார். சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு, என் மனைவி, என் புத்ரன் என்று ஆரம்பித்து, என் பெருமாள் என்று எழுதி முடித்தார்.
அடுத்து என்ன செய்வது என்று சிஷ்யன் கேட்டார். ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து,
வெள்ளிக்கிழமை #மகாலக்ஷ்மி_துதி
மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!
- குறு முனி அகத்தியர்
பொருள்: அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும்
மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!
சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்