#கும்பகோணம்_அரிய_தகவல்கள்
கும்பகோணத்திற்கு குடந்தை என்ற பெயரும் உள்ளது. குடந்தை என்பது குடமூக்கு ஆகும். பின்நாளில் குடமூக்கு என்பது மறுவி குடந்தை என்று பெயர் பெற்ற. குடந்தை என்ற சொல்லுக்கு வளைவு என்ற பொருள் உள்ளது. முக்கிய நதிகளில் ஒன்றான காவிரி கும்பகோணம் வந்து வளைந்து செல்வதால்
குடமூக்கு என்ற பெயரும் உருவானதாக சொல்லப்படுகிறது. கும்பகோணம் என்ற சொல் வடமொழிச் சொல் குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அது தான் கும்பகோணமாக மறுவியுள்ளது என்பதும் உண்டு. கும்பகோணத்திற்கு பாஸ்கரசேத்திரம், கல்யாணபுரம், தேவலோகப்பட்டிணம், சிவவிஷ்ணுபுரம், மந்திராதி தேவஸ்தானம்,
சாங்கராஜன்பட்டினம் சேந்திரசாரம் ஒளிர்மிகு பட்டணம் உள்ளிட்ட பல பெயர்கள் இருந்தன. இவைகள் தற்போது எதுவம் பயன்பாட்டில் இல்லை. எல்லா தலங்களையும் நகரங்களையும் பிரம்மன் படைத்தான் ஆனால் கும்பகோணத்தையோ சிவ பெருமனே உருவாக்கியதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய நதிகளான காவிரி கங்கை
யமுனை சரஸ்வதி நதிகள் எல்லாம் கும்பகோணத்தில் உள்ளன என்று #திருநாவுக்கரசர் பாடி பெருமை சோர்த்துள்ளார். சோழ மன்னர்கள் கும்பகோணத்தையே பாதுகாப்பான நகரம் என்று தங்கள் கருவூலத்தை இங்கு அமைத்தனர். சூத முனிவர் என்ற முனிவர் சிவரகசியம் என்ற நூலை உலகில் உள்ள மற்ற முனிவர்களுக்கும் எடுத்து
உரைத்தார். அந்த நூலில் கும்பகோணம் பற்றி தெரிவிக்கப் பட்டியிருக்கும். உலக உயிர்கள் கெட்ட வினையிலிருந்து நீங்கிட மோட்சம் பெற கும்பகோணம் தலத்திற்கு சக்தி உள்ளது. இதனை சிவபெருமானே அருளியுள்ளார். கும்பகோணத்தில் உள்ள மாந்தாதா என்ற அரசன் கும்பலிங்கத்தை வைத்து பூசை செய்ததான் பலன் அவர்
உலகின் பல்வேறு இடங்களையும் ஆட்சி செய்து சக்ராதிபதியாக விளங்கினார் என்று வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. மாளவ நாட்டு வேந்தன் சத்திய கீர்த்தி பிராமணர் ஒருவரை கொன்ற பாவத்திற்காக இங்குள்ள காசிப தீர்த்தத்தில் நீராடி அந்த பாவத்தை போக்கினார். சந்திரன் கும்பகோணம் சோமலிங்கத்துக்கு அர்ச்சனை
செய்து நோயில் இருந்து விடுப்பட்டார். குபேரன் கும்பகோண தலத்தை வணங்கிய பிறகு குபேரபுரிக்கு தலைவன் ஆனான். தட்சன் யாகத்திற்கு சென்ற தேவர்கள் துன்பத்தினை சந்திக்க நேர்ந்தது. உடனே அவர்கள் கும்பகோணத்தில் உள்ள இறைவனை வழிப்பட்டதும் துன்பம் விலகிப்போனது. சூரியனின் ஒளியை அழிக்கும் படி மயனை
அவன் மனைவி தூண்டினாள்.
சூரியனும் மயனால் ஒளியை இழந்தான். பிறகு சூரியன் கும்பகோணத்தில் வந்து பெருமாளை வணங்கியாதால் மீண்டும் ஒளி பெற்றான். வானவர்களும் பெறாத மகத்துவத்தைக் கும்பகோணத்தில் வழிபாடு செய்வர்கள் பெறலாம் என்ற ஐதீகம் உள்ளது. #பவிஷ்யோத்ர என்ற வடமொழியில் உள்ள புராணத்தில்
கும்பகோணத்தின் மகாமக மகிமை பற்றி சொல்லப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முருகேசன் பிள்ளை குடந்தை சிலேடை வெண்பா பாடியுள்ளர். காசியைப் போலவே கும்பகோணத்திலும் எட்டுத் திசைகளில் எட்டு பைரவர்கள் காக்கின்றனர். இங்கு தான் ஞானம்பிகையுடனான பைரவேசர் கோவில் உள்ளது. ‘சேதுவில் காசியில்
செய்பெரும் பாவம் கோதிலாக் கும்பகோணத்தில் தீரும்’ என்ற கும்பேசர் குறவஞ்சியில் காசியிலும் நீங்காத பாவம் கும்பகோணத்தில் தீரும் என்றுள்ளார். கும்பகோணத்தின் பெருமையான மகாமகம் குளம் 15 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் லட்சகணக்கில் மக்கள் நீராடுகின்றனர். சூரியனுக்கு நேர் எதிராக குருவும்
சந்திரனும் இருக்கும் கிரக நிலையில் இந்த மூன்று கிரகங்களும் ஒன்று சேரும் இடமாக மகாமக குளம் உள்ளது. அதனால் புத்திர பாக்கியம் செல்வம் என அனைத்தும் தரும் இடமாக உள்ளது. மகாமகம் குளத்தில் நீராடிய அரசர்கள் பொன், பூமி, கன்னிகை, வஸ்திரம், பசு, குதிரை, காளைமாடு, அன்னம், தென்னை, குப்ததானம்
சந்தனம், முத்து, நவரத்தினம், தேன், உப்பு, பழங்கள் எனப்படும் 16 தானங்களைச் செய்தார்கள். இந்தத் தானங்கள் எப்படிச் செய்வது என்ற விவரம் குளக்கரையைக்கு அருகே உள்ள தான மண்டபங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ராஜகேசரி என்ற என்ற சோழ அரசனுடைய கல்வெட்டில் மாகமகம் பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது.
இவர் ராஜராஜ சோழனுக்கும் முற்பட்ட அரசன். கும்பகோணம் மகாமகக் குளம் கிழக்கு மேற்காக நீள் சதுரமாகவும், வடகரையும் தென்கரையும் சிறிது உள்வளைந்தும், கிழக்கில் குறுகியும், மேற்கில் அகன்றும் அள்ளது. இதை மேலிருந்து பார்த்தால் குடம்போல காட்சியளிக்கும். இக்குளத்தில் நீராடினால் அமுத குளத்திலே
நீராடிய நன்மை கிடைக்கும். மகாமக குளத்தில் நீராடினால் காசியில் 100 ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியமும் உலகை வலம் வந்த பலனும் கிடைக்கும் என்று புராணங்களில் குறிப்பிடப் பட்டுள்ளது. பௌர்ணமி அன்று நீராடுவது மிகவும் சிறப்பு. அது ஏழேழு பிறவிக்கும் நன்மை தரும். மகாமக குளத்தில் நீராடும் நவநதிகள்
எவை என்பது புராணங்களில் பல தகவல்கள் உள்ளன. மகாமகம் அன்று கும்பகோணத்தில் உள்ள ஐந்து வைணவ தலங்களில் இருந்து பெருமாள் காவிரி நதிக்கரையில் தீர்த்தவாரி செய்வார்கள். மகாமகம் விழாவில் பங்கேற்க கும்பகோணம் செல்பவர்கள் கும்பேஸ்வரர், காசிவிசுவநாதர், அபிமுகேஸ்வரர், கவுதமேஸ்வரர்,
ஏகாம்பரேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், ஆதிகம்பட்ட விசுவநாதர், கோடீஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், பாணபுரீஸ்வரர், அமிர்த கலசநாதர் ஆகிய 12 சைவ தலங்களுக்கும் சாரங்கபாணி, சக்கரபாணி, ராமசாமி, அனுமார், சாரநாராயணை பெருமாள், வராக பெருமாள், ராஜ கோபாலசாமி ஆகிய 7 வைணவத் தலங்களுக்கும் ஆக மொத்தம் 19
ஆலயங்களுக்கு சென்று வழிபடுவது மேலும் நன்மை தரும். உப்பிலியப்பன் கோவில், பட்டீஸ்வரம், தாராசுரம், திருக்கருகாவூர், சுவாமி மலை, 108 சிவாலயம், இன்னம்பூர், திருவலஞ்சுழி ஆகிய ஊர்களில் உள்ள ஆலயங்களுக்கும் சென்று தரிசிப்பது வாழ்வில் மேலும் செல்வத்தைப் பெருக்கும். கும்பகோணத்தில்
கும்பேஸ்வரர் ஆலயத்தில் அமுத குடத்தை சிவபெருமான் வேடனாக வந்து அம்பு எய்தது சிலையாக உள்ளது. சிவன் விஷ்ணு பிரம்மா மும்மூர்த்திகளுக்கும் கும்பகோணத்தில் தான் கோவில்கள் உள்ளன. மரசிற்ப கலைகளுக்கு பெயர் பெற்றது கும்பகோணம் தான். சிற்பகலையிலும் சிறந்து விளங்கியதாற்கான ஆதாரங்களும் உள்ளன.
கும்பகோணத்தில் வைணவ மத்வ சைவ மடங்கள் நிறைய உள்ளன. இவற்றில் அஹோபிலமடம், வியாசராய மடம், ராகவேந்திர மடம், திருவாவடுதுறை, தருமபுரம், திருப்பனந்தாள் ஆதீன மடங்கள் முக்கியமானவைகள் ஆகும். குடந்தை நாகேஸ்வரர் ஆலயத்துக்கு தரிசனம் செய்ய செல்லும் போது மறக்காமல் 4 யானைகள் பூட்டப்பட்ட தேர்
வடிவில் இருக்கும் நடராஜர் சன்னதியை நிச்சயம் பார்க்க வேண்டும். நம்மை கவர்ந்து இழுக்கும் கங்கை கொண்ட விநாயகர் சிலை நாகேஸ்வரர் ஆலய கருவறை மின் மண்டபத்தில் உள்ளது. நாகேஸ்வரர் ஆலய பிரகாரத்தில் பகவத் சித்தரின் ஜீவசமாதி உள்ளது. பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவாரான திருமழிசை ஆழ்வார்
சித்தியான இடம் திருமழிசை பிரான் ஆலயமாக கும்பகோணத்தில் உள்ளது. குடந்தை கும்பேஸ்வரர் இருக்கும் திசையை நோக்கியும் வழிபட்டாலும் அவரது அருள் கிடைக்கும்.
நம் ஊர்கள் பேருமைகளை தெரிந்து கொள்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
Experiences with Maha Periyava:
The greatness of #Mylapore
Everyone is familiar with the name Sri Ki.Va.Jagannathan, a very eminent Tamil scholar, poet and author. Once when MahaSwamigal was camping in Mylapore, Sri Ki.Va.Ja’s daughter-in-law,
Tripurasundari went there for darshan. She was introduced to Sri Maha Periyava. She kept the fruits, flowers and other offerings which she brought for the Mahan in a bamboo tray in front of Him and prostrated. Raising His right hand, the Mahan blessed Tripurasundari and asked
“Where are you staying in Madras?”
Here in Mylapore Periyava, replied Tripurasundari.
“Do you have the habit of going to temples?”
Yes Periyava. Especially, I always enjoy going to Kapaleeswarar Temple and praying to Karpagambal said Tripurasundari with a face blooming with
#இராம_நாமத்தின்_மகிமை#சமர்த்த_ராமதாசர்
சத்ரபதி சிவாஜி மகாராஷ்டிரத்தை ஆண்டு கொண்டிருந்த காலம் அது. ஒரு சமயம் அவர் நதியில் இறங்கி தன் கை, கால்களைத் தூய்மை செய்து கொண்டிருந்த போது ஆற்று நீரில் பல ஓலைச் சுவடிகள் மிதந்து வந்ததைப் பார்த்தார். ஓர் ஓலைச் சுவடியை எடுத்துப் பார்த்த போது,
அதில் மஹாராஷ்டிர மொழியில் எழுதப்பட்டிருந்த அற்புதமான கவிதைகள் இருந்தன. மனம் வியந்த சிவாஜி, ஓலைச் சுவடிகளை எல்லாம் எடுத்துக் கொண்டு ஆற்று நீர் வந்த திசையை நோக்கிக் குதிரையைச் செலுத்தினார். அங்கே ஓரிடத்தில் சிவாஜி கண்ட காட்சி, அவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. காரணம் அங்கே மர நிழலில்
ஒரு பாறையின் மீது இருந்தபடி ஒப்பற்ற ஒரு தவ சீலர் இனிய குரலில் இராம நாமத்தைப் பாடிக் கொண்டிருந்தார். அவரைச் சுற்றி காட்டில் இருந்த கொடிய விலங்குகள் எல்லாம் அமர்ந்திருந்தன. அந்தக் கொடிய விலங்குகளிடம் பயப்பட வேண்டிய பசுக்களும், மான்களும் அவற்றின் அருகிலேயே எந்த வித பயமும் இல்லாமல்
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு சமயம் ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ணாவதாரம் பற்றி தாம் செய்த உபன்யாசத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணன், சலவைத் தொழிலாளியிடம், சலவை செய்த துணிகளைக் கேட்டபோது, அவன் தர மறுத்ததாகக் கூறினார், அன்றிரவு, ஒரு சலவைத் தொழிலாளி ராமானுஜரிடம் வந்து, கிருஷ்ணனுக்கு
சலவை செய்த துணிகளைத் தர மாட்டேன் எனக் கூறிய அந்த சலவைத் தொழிலாளிக்காக நான் உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அதற்காக இனிமேல் ரங்கநாதரின் துணிகளை நானே துவைத்துத் தருகிறேன் எனக் கூறினான். அப்படியே செய் எனக் கூறினார் இராமானுஜர். அந்த சலவைத் தொழிலாளியும் அடுத்த நாள் முதல்
அரங்கனின் துணிகளை வாங்கிச் சென்று பளிச்செனத் துவைத்து, இராமானுஜரிடம் காட்டி, பிறகு கோயிலில் கொடுத்து வந்தான். இராமானுஜரும் அவனை மனமாறப் பாராட்டுவார். ஒரு நாள் அவன் இராமானுஜரிடம், சுவாமி நீங்கதான் என்னைப் பாராட்டறீங்க ஆனால் ரங்கநாதர் பாராட்டலியே என்றான். அது கேட்டு இராமானுஜர் அவனை
#வேப்பஞ்சேரி#லட்சுமிநாராயணர்
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வேப்பஞ்சேரி என்ற இடத்தில் இருக்கிறது லட்சுமி நாராயணர் திருக்கோவில். இக்கோயிலில் உள்ள தசாவதார கிருஷ்ணர் வரப்பிரசாதியாக திகழ்கிறார். 750 ஆண்டுகளுக்கு முன் மூன்றாம் குலோத்துங்கனின் ஆட்சிக் காலத்தில்
இக்கோயில
கட்டப்பட்டது. அந்நியப் படையெடுப்பால் சிதலமடையவே வழிபாடு மறைந்தது. மழையின்றி போனதால் இங்குள்ள மக்கள் வறுமையில் வாடினர். இதற்கான காரணத்தை ஆராய்ந்த போது வேப்பஞ்சேரியில் குடியிருக்கும் லட்சுமி நாராயணருக்கு பூஜை நடைபெறாததே பஞ்சம் வரக் காரணம். சுவாமிக்கு நித்ய பூஜை, அபிஷேகம்
ஆராதனை குறைவின்றி நடந்தால் பூமி செழிக்கும். கால்நடைகள் பெருகும். குடும்பங்கள் நலம் பெறும் என அசரீரி கேட்டது. இதன் பின்னர் கோயில் புதுப்பிக்கப்பட்டு பூஜைகள் நடத்தத்
தொடங்கினர். கோவிலின் கொடிமரத்தை தாண்டியதும் அமைதி தவழும் முகத்துடன் துவார பாலகர்கள் ஜயர், விஜயரைத
ஒரு சமயம் சிஷ்யர் ஒருவர் தன் குருவிடம், ஸ்வாமி! விஞ்ஞானத்தின் அபரிதமான வளர்ச்சியால் சந்திரனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் உள்ள தூரத்தை அளக்க முடிகிறது. இதே போல் பெருமாளுக்கும் நமக்கும் உள்ள தூரத்தை அளப்பது சாத்யமா என்றார். குருவும், “ஆஹா
அளக்கலாமே. ஒரு பேப்பரும் பேனாவும் கொண்டு வா” என்றார். சிஷ்யனும் கொண்டு வந்தான். “இந்த பேப்பரில், என்னுடையவை என்று ஒரு தலைப்பு போட்டுக் கொண்டு, என் மனைவி, என் புத்திரன், என் வீடு, என் கார், என் பேனா, என் கடிகாரம், என் உடை என்று, உன் உடமைகளாக நீ நினைப்பவை எல்லாவற்றையும் ஒரு
பட்டியலிடு. எல்லாம் முடிந்தபின் கடைசியில், என் பெருமாள் என்று எழுதிக்கொள்” என்றார். சிஷ்யனும் ஆசார்யனின் கட்டளையை சிரமேற்கொண்டு, என் மனைவி, என் புத்ரன் என்று ஆரம்பித்து, என் பெருமாள் என்று எழுதி முடித்தார்.
அடுத்து என்ன செய்வது என்று சிஷ்யன் கேட்டார். ஆசார்யன் சிஷ்யனைப் பார்த்து,
வெள்ளிக்கிழமை #மகாலக்ஷ்மி_துதி
மல்லல்நெடும் புவியனைத்தும் பொது நீக்கித் தனிபுரக்கு மன்னர் தாமும்
கல்வியினில் பேரறிவில் கட்டழகில் நிகரில்லாக் காட்சி யோடும்
வெல்படையில் பகைதுரந்து வெஞ்சமரில் வாகைபுனை வீரர் தாமும்
அல்லிமலர்ப் பொகுட்டுறையும் அணியிழைநின் அருள் நோக்கம் அடைந்துளாரே!
- குறு முனி அகத்தியர்
பொருள்: அகவிதழ்களையுடைய தாமரைப் பொகுட்டில் தங்கியிருக்கின்ற அழகிய அணிகலன்களை அணிந்த திருமகளே! பொதுவாக விளங்கும் தன்மையையுடைய வளம் பொருந்திய நெடும் உலகம் முழுவதையும் அதனுடைய அந்தப் பொதுவாக விளங்கும் தன்மையை நீக்கி, தமது தனியுடைமையாக்கி, அரசாட்சி செய்யும்
மன்னர்களும், கல்வியிலும், பேரறிவிலும், மிகுந்த அழகிலும் ஒப்பில்லாத தன்மையைப் பெற்றவர்களும், வெல்லுகின்ற படையைக் கொண்டு பகைவர்களை விரட்டும் கொடிய போரில் வெற்றிவாகை சூடும் வீரர்களும் உன்னுடைய திருவருள் பார்வையைப் பெற்றவர்களே!
சித்த நூல்களில் மகாலட்சுமி வாசம் செய்யும் 108 இடங்கள்