*#படிங்க_ரொம்ப_பிடிக்கும்!...*

*அந்த வீட்டு ஆண் எப்போதும் வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய அக்கறையினாலும் ஒரு பதற்றத்தோடேயே இருப்பார்..... எரிச்சலும் கொள்வார்.... ஆனால் ஒரு சில தினங்களாக பதற்றமோ, கோபமோ, எரிச்சலோ இன்றி அவர் அமைதியோடு காணப்பட்டார்!.....*
*ஒருநாள் அவரது மனைவி, .... "நான் நண்பர்களோடு சேர்ந்து  சுற்றுலா  போகிறேன்" .... என்று அந்த ஆணிடம் கூறினார்.... அவரும் அமைதியாக சம்மதித்தார்....*
*மகன் தனது தந்தையிடம் தயங்கியவாறு, "அப்பா நான் எல்லா பாடங்களிலும் பின் தங்கி இருக்கிறேன்" என்றான்.... அதற்கு அந்த ஆணும், "ஒழுங்காக படித்தால் உன்னால் முடியும்.... முடியவில்லை என்றால் மறுபடியும் அதே வகுப்பில் இருந்து படி" என்றார் அமைதியாக....*
*மகள் ஓடி வந்து, "அப்பா என் காரை விபத்துக்குள்ளாக்கி விட்டேன்" என்றாள் பதற்றத்தோடு.... அதற்கு, "கொண்டு போய் சரி செய்து விடு" என்றார்....*
*குடும்ப உறுப்பினர்கள் அவரின் அமைதியை கண்டு குழப்பம் கொள்ள ஆரம்பித்தனர். ஏதாவது மருந்துக்களை பாவித்து தன்னை அமைதிப்படுத்திக் கொள்கிறாரோ என்று கவலைப்பட தொடங்கினர்....*
*ஒருநாள் அவரே எல்லோரையும் அழைத்து அமர வைத்து பின்வருமாறு கூறினார்:- ....*
*"சில உண்மைகள் புரிய எனக்கு நீண்ட காலம் எடுத்தது..... அதாவது அவரவர் வாழ்க்கைக்கு அவரவர் தான் பொறுப்பு....*

*என்னுடைய கோபம்,  என்னுடைய தைரியம் எதுவும் உங்கள் பிரச்சினைகளை தீர்க்க போவதில்லை.... அவை என் ஆரோக்கியத்தை கெடுத்து என் பிரச்சினைகளை தான் அதிகரிக்கும்.....*
*என் அன்பையும், தைரியத்தையும் மட்டுமே உங்களுக்கு என்னால் கொடுக்க முடியும்.... உங்களுக்கு தேவைப்பட்டால் என் அறிவுரைகளை நான் தருவேன்....* 

*உங்களுக்காக நான் பிரார்த்தனை செய்வேன். ஆனால் உங்கள் வாழ்க்கையை நான் வாழ முடியாது.....*
*ஏனெனில் என்னை சார்ந்து நீங்கள் இந்த பிறவியை எடுக்கவில்லை. இது உங்களுக்கு கிடைத்துள்ள வாழ்க்கை..... உங்கள் பிரச்சினைகளுக்கு நீங்களே பொறுப்பு கூறல் வேண்டும்.....*
*உங்கள் பிரச்சினைகளை களைந்து உங்கள் சந்தோசத்தை நீங்களே தேடுமளவுக்கு நீங்களும் எல்லா அறிவையும் பெற்றுள்ளீர்கள். 

*அவர்களின் செயல்பாடுகளுக்கு அவர்களே பொறுப்பு என்று அனைவரும் உணர்ந்து விட்டால் வாழ்க்கை அமைதிப் பூங்காவாக மாறும்....*

🇮🇳🙏  *இதுவே இயற்கையின் நியதி..*🙏🇮🇳

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳

Raamraaj 🇮🇳🇮🇳🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Raamraaj3

Mar 5
*பிரதோஷ நேரத்தில் மூச்சுவிடும் அதிசிய நந்தி* 

இது அமைந்துள்ள கோவில் *ஆலக்கிராமம் அருள்மிகு திரிபுரி சுந்தரி சமேத எமதண்டீஸ்வரர் திருக்கோவில்*

🙏🇮🇳1
வளநாட்டில் வரலாற்றுப்புகழ் வாய்ந்த காஞ்சிமண்டலத்தில் புகழ்பெற்ற மயிலம் அருள்மிகு முருகப்பெருமான் ஆலயத்திற்கு மேற்குதிசையில் வராகநதியின் (தொண்டியாறு) வடகரையில் அமைந்துள்ள ஊர் ஆலக்கிராமம்.

🙏🇮🇳2
இக்கிராமத்தில் பல்லவர்காலத்திற்கு முன்னர் (1500 ஆண்டுகளுக்குமுன்னர்) கட்டப்பெற்ற பழமையான சிவாலயம் உள்ளது, 

இந்த ஆலயத்தில் இப்பூவுலகு அனைத்திற்கும் அருள்பாலிக்கும் சிவன் எமதண்டீஸ்வரர் என்ற நாமத்தோடு, அம்மைதிரிபுரசுந்தரி என்கின்ற நாமத்தோடும் அருளாட்சிபுரிந்து வருகிறார்கள்.

🙏🇮🇳3
Read 32 tweets
Mar 5
மகாபாரதத்திலிருந்து ஒரு குட்டிக் கதை.!

*நம்பினோர் கைவிடப்படார்..* 

பாண்டவர்களுக்கும், கௌரவர்களுக்கும், நிகழப் போகும் போருக்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்தனர்..
குருஷேத்திரத்தில், யானைகளைக் கொண்டு, பெரும் மரங்களை, வேரோடு பிடுங்கி அகற்றி, நிலத்தை சீர் படுத்திக் கொண்டிருந்தனர்..
ஒரு மரத்தில் தாய் சிட்டுக்குருவி ஒன்று தன் நான்கு குஞ்சுகளுடன் வசித்து வந்தது. 

அந்த மரம் அகற்றப் படும்போது, பறக்க அறியாத தன் குஞ்சுகளுடன் தாய்க்குருவியும் தரையில் கூட்டோடு விழுந்து விட்டது..
Read 19 tweets
Mar 5
இன்று ஒரு மிக மிக மோசமான அனுபவம்!..மிக மிக கேவலமான நிகழ்வு!...

எனது நண்பரின் தாய் சற்று உடல்நலம் இல்லாமல் இருந்தார்.மூக்கு,காது தொடர்பான கோளாறு.
இதற்க்கு சில தினம் முன் அருகில் உள்ள ENT மருத்துவ நிபுணரிடம் அழைத்து சென்றுள்ளார்கள்.
அவர்கள் மருந்து எழுதி அந்த மருந்தை அவர்களது மருந்து கடையில் வாங்கவேண்டும் என்று கூறியுள்ளார்கள்.மருந்து கிட்டதட்ட 3 மாதம் எடுத்துக்கொள்ள பரிந்துரை.
இதில் இவர்கள் ஒரு மாதத்துக்கு தேவையானதை வாங்கி வந்துள்ளார்கள்.
இப்போது ஒருமாதம் ஆகிவிட்டதால் மருந்து தீர்ந்தது.
Read 7 tweets
Mar 5
கர்நாடகாவில் ஹிஜாப் தடை தொடர்பாக கல்லூரி முதல்வரை மிரட்டிய நபர் கைது

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கல்வி நிலையங்களில் ஹிஜாப், காவி துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
இதனை மீறி கடந்த வாரம் உடுப்பி பி.யு. கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வந்த மாணவியை கல்லூரி நிர்வாகம் தடுத்து நிறுத்தியது. இதனால் கோபமடைந்த மாணவியின் உறவினர் முகமது தவுசீஃப் கல்லூரி முதல்வருக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
இதையடுத்து உடுப்பி போலீஸார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை குந்தாப்பூர் பி.யு.கல்லூரி முதல்வருக்கு மிரட்டல் மின்னஞ்சல் வந்தது.
Read 6 tweets
Mar 5
*பழனி முருகன் கோவில்..*

தமிழ்நாட்டில், மதுரையில் இருந்து 115 கிமீ மேற்கே உள்ள பழனியில் அமைந்துள்ளது.

இங்குள்ள முருகனது சிலை போகர் எனும் சித்தரால் உருவாக்கப்பட்டது.

முருகனது கோவில் குன்றின் உச்சியில் அமைந்துள்ளது.

மூலவர்..
தண்டாயுதபாணி சுவாமி (முருகன்)

🙏🇮🇳1 Image
*கோவில் வரலாறு..*

ஒருநாள் நாரதர் மிக அரிதாக கிடைக்கும் ஞானப்பழத்தை பரமசிவனுக்கு படைப்பதற்காக கொண்டு வந்தார்.

அப்பொழுது அருகிலிருந்த உமையாள் அந்தப் பழத்தை தனது குமாரர்களான குமரனுக்கும், விநாயகனுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்பினாள்.

🙏🇮🇳2
ஆனால் பரமசிவனோ பழத்தை பகிர்ந்தால் அதன் தனித்தன்மை போய்விடும் எனக்கூறி தனது மைந்தர்கள் இருவருக்கும் ஒரு போட்டியை அறிவித்தார் அதில் உலகத்தை யார் முதலில் சுற்றிவருகிறார்களோ அவர்களுக்கு அந்த ஞானப்பழத்தை பரிசாக அறிவித்தார்.

🙏🇮🇳3
Read 21 tweets
Mar 4
" *பிரம்மா எழுதும் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை ஸ்ரீ ராமபிரானுடைய திருவடிகளுக்கு உள்ளது - விளக்கும் எளிய கதை

பிரம்மாவுக்கு ஒரு பேரழகியைப் படைக்க வேண்டுமென்ற எண்ணம் தோன்றிற்று. அதனால் தன் கற்பனை நயங்களை எல்லாம் திரட்டி ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருந்தார். Image
இதைக் கண்டு பொறாமை கொண்ட சரஸ்வதி, தன் மகனான நாரதரை அழைத்து, “உன் தந்தை ஒரு பேரழகியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். குற்றமில்லாத பெண்ணாக அவளை உருவாக்கப் போவதாகப் பெருமிதம் கொண்டிருக்கிறார்.
எப்படியாவது அந்தப் பெண்ணுக்கு ஏதாவது ஒரு குறை ஏற்படும்படி செய்துவிடு!” என்றாள். பிரம்மா அந்தப் பெண்ணைப் படைத்து முடித்துவிட்டார். அவளுக்குப் என்ன பெயர் சூட்டலாம் என்று யோசித்தார்.
Read 14 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(