#BREAKING | 2016ல் ஜெயலலிதா பதவியேற்கும் முன்பே அவருக்கு உடல்நலக்குறைவு இருந்தது - ஆறுமுகச்சாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவமனை தரப்பில் தகவல்
ஓய்வெடுக்குமாறு பரிந்துரைத்ததை அவர் மறுத்தார் - அப்பல்லோ மருத்துவமனை
2016ல் முதல்வராக பதவியேற்பதற்கு முன்னதாகவே அவருக்கு தலை சுற்றல், மயக்கம், துணையில்லாமல் நடக்க முடியாத சூழல் இருந்தது - அப்பல்லோ மருத்துவமனை
மருத்துவர் சிவக்குமார் அழைப்பின் பேரில் பதவியேற்புக்கு முதல்நாள் ஜெயலலிதாவை சந்தித்து, பரிசோதனை செய்தேன் - அப்பல்லோ மருத்துவர் பாபு மனோகர்
ஜெயலலிதாவுக்கு சில மருந்துகளை பரிந்துரைத்ததோடு, சில உடற்பயிற்சிகளை மேற்கொள்ளவும் பரிந்துரைத்தேன். மேலும் சிறுதாவூர் அல்லது ஊட்டி சென்று சில நாட்கள் ஓய்வு எடுக்குமாறு பரிந்துரைத்தேன் - அபல்லோ மருத்துவர் பாபு மனோகர்
#JUSTIN | 1938ம் ஆண்டு தமிழ்நாட்டில் நடந்த மொழிப்போராட்டத்தின் வெப்பம்தான் 2022ம் ஆண்டு வரை தணியாமல் உள்ளது; அன்றைய நாள் தந்தை பெரியார் மூட்டிய நெருப்பு ஒட்டுமொத்த தமிழர்களையும் ஒன்று சேர்த்தது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இருப்பது ஒரு உயிர், அது மொழிக்காக போகட்டுமே என்று சிறைக்கொடுமையால் முதலில் உயிர் துறந்தார் நடராஜன்; அதன் பின்பு உயிர் துறந்தார் தாளமுத்து - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
1938ம் ஆண்டு தொடங்கிய போராட்டம் 1940ல் இந்தி கட்டாயம் இல்லை என்று அறிவிக்கப்படும் வரை நடந்தது; 1948ம் ஆண்டு மீண்டும் இந்தி திணிக்கப்பட்டது. அப்போதும் பெரியாரும், அண்ணாவும் போர் பரணி பாடினர் - முதலமைச்சர்
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹108 கோடி மதிப்பீட்டில் நடப்பாண்டில் 3510 வீடுகள் கட்டித்தரப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | இலங்கை தமிழ் அகதிகளுக்கு ₹5 கோடி வாழ்வாதார மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | தொழிற்கல்வி படித்து வரும் இலங்கை அகதி மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை உயர்த்தி வழங்கப்படும் - சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
#BREAKING | அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் - பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நடப்பு கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
நூலகங்களின் அனைத்துப் புத்தகங்களின் விவரங்களும் சர்வதேச தரநிலைகளின் அடிப்படையில் சரி செய்யப்பட்டு, ஒரே இணையதளத்தின் மூலம் அனைத்துப் பொது நூலகங்களிலும் உள்ள புத்தகங்களை தேடும் வசதி ஏற்படுத்தப்படும் -பள்ளிக்கல்வித்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
மக்கள் எளிதில் சென்று வரமுடியாத பகுதிகள் மற்றும் மலைப்பகுதியில் நியாய விலைக்கடைகள் திறக்க சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
கடந்த மே மாதம் 7ம் தேதியில் இருந்து தற்போது வரை மட்டும் 3,38,512 புதிய மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்