இரண்டு நாளாக இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது காசியை சேர்ந்த சுவாமி சிவானந்தர் பத்மஸ்ரீ விருது பெற்ற நிகழ்வு..பல லட்சக் கணக்கான மக்கள் அந்த வீடியோவை கண்ணீர் மல்க பகிர்கிறார்கள்..யாருக்கும் அந்த உணர்வை,அதற்கும் மேல் வெளிப்படுத்த தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.
125 வயதை அடைந்திருக்கும் ஒரு முதியவர் நடந்து வந்து,சபையின் முன்பு பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் திசையை நோக்கி விழுந்து வணங்கினார்.தன்னை விட 53 வயது பெரியவர்,நிறை வாழ்வின் எதார்த்த அளவீடுகளை கடந்த ஒரு நபர்,தன் முன்னால் இப்படி வணங்குவதைக் கண்டு
,மோடியும் அதே போல தலை தாழ்ந்து சிவானந்தரை வணங்கினார்..

ஆனால்,சிவானந்தர் அதையெல்லாம் எதிர்பார்த்து செய்தது போல இல்லை.ஒரு கடமையைச் செய்து முடித்தது போல அங்கிருந்து நகர்ந்து விருதை வாங்கப் போகும் பாதைக்கு நேரேவும் அதே போல வணங்கினார்,ஜனாதிபதிக்கு அருகே வந்ததும் அதே போல வணங்கினார்.
ஜனாதிபதி வழக்கமான நடைமுறைகளை உடைத்து அவரே வந்து சிவானந்தரை கைதூக்கிவிட்டார்.அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை,விருதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பிரதமரிடம் சென்று முன்பைப் போல வணங்கி அந்த அரங்கை விட்டு வெளியேறினார்..

சுவாமி சிவானந்தரிடம் எந்த சலனமும்,குழப்பமும் இல்லை.
தனது 125 வயதில் நெற்றி நிறைய நாமத்துடன்,கழுத்தில் துளசி மாலையுடனும் சாதாரண வேஷ்டி,ஜிப்பாவுடன் வந்து அந்த அரங்கினையே உறைய வைத்ததில்லாமல் மொத்த இந்தியாவையும் அதிர வைத்துவிட்டார்.இதற்கு எப்படிப்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.
தர்மத்தை காக்கும் ஒரு பேரரசனுக்கும்,அந்த அவைக்கும் தர வேண்டிய மரியாதை என சுவாமி சிவானந்தர் நினைத்து செய்தது போலவே இருந்தது.ஒரு மகானுக்கு தர வேண்டிய மரியாதையை,அதே அவையில் பேரரசன் வழங்கியது போலவே பிரதமர் மோடியும் பதிலாகத் தந்தார்.

வெறும் யோகா மாஸ்டர் மட்டுமல்ல சுவாமி சிவானந்தர்.
அவருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டதே 'யோகா - தியானம் - சேவை' இது மூன்றையும் கைவிடாமல் வாழ்வியல் முறையாக வைத்திருப்பதாலே.அவருடைய உச்சபட்ச பக்தியின் ஒரு சிறு அங்கம் யோகக்கலையும்..

அவர் மிகப்பெரிய வைணவர்,தீவிர சைவ உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறார்,அதையே பாரதத்தின் இளைஞர்களுக்கும்
வலியுறுத்துகிறார்.எந்த சூழலிலும் தைரியமாக இருப்பதும்,சைவ உணவை கடைபிடிப்பதும் அவசியம் என்று போதிக்கிறார்.சைவம் என்றால் அவர் பால்,எண்ணெய் பொருட்களை கூட விலக்குகிறார்.தீவிரமான உணவுகட்டுப்பாட்டை மோட்சத்துக்கான திறவுகோலாக காட்டுகிறார் சிவானந்தர்.

உடைக்கப்படாத இந்தியாவில்,
இன்றைய பங்களாதேஷாகவும் அன்றைய கிழக்கு வங்கமாகவும் இருந்த பகுதியில் சில்ஹெட் மாவட்டத்தில் 1896 வது வருடம் பிறந்தவர் சிவானந்தர்.தன் ஆறு வயதிற்குள்ளேயே தந்தை,தாயை இழந்தார்.பின் மேற்கு வங்கத்தில் உள்ள நபத்வீப் ஆசிரமத்தில் சுவாமி ஓம்காரனந்தா கோஸ்வாமியால் வளர்க்கப்படுகிறார்..
கௌடிய வைஷ்ணவமான,சைதன்ய மகாபிரபு வழியை பெரும்பாலும் கோஸ்வாமிகளே வங்காளம்,கலிங்கம் முழுக்க பரப்பினார்கள்.ஜாதி பிளவுகளை திருத்தியும்,தீவிரமான பக்தி மற்றும் யோகசாதன வழிமுறையையும் போதித்தார்கள்.

கௌடிய வைஷ்ணவ பாரம்பரியத்தில் இருந்தே 'பக்தி - யோகா - உணவுக்கட்டுப்பாடு - சேவை'
இவற்றை பிரதானமாக முன்னிறுத்தி இந்த நிலையை அடைந்துள்ளார் சுவாமி சிவானந்தர்.50 வருடத்துக்கும் மேலே,600 க்கும் மேலே தொழுநோயாளிகளுக்கு சேவை செய்துள்ளார் சிவானந்தர்.

தெய்வாம்சம் பொருந்தியவர்களாக நோயாளிகளையும்,பலஹீனமானவர்களையும் கண்டார் சிவானந்தர்.அ
வர்களுக்கு சேவை செய்வதும் பக்தியின் ஒரு அங்கம் என்பதை உள்வாங்கிக் கொண்டார்.அவர்களுக்கு உணவு,போர்வை,கொசுவலை,பழங்கள்,சமையல் பொருட்கள் உட்பட தன்னால் முடிந்ததை இடைவெளி இன்றியும் எந்த பிரதிபலன் எதிர்பாராமலும் செய்துள்ளார்.

காலையில் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி,
அடுத்த ஒரு மணி நேரம் யோகா,அடுத்த ஒரு மணி நேரம் பூஜை என்று தனது ஒவ்வொரு நாளையும் துவங்குகிறார் சிவானந்தர்.எந்த சூழலிலும் தனது உணவுப்பழக்கத்தையும்,இந்த நடைமுறைகளையும் அவர் கைவிடவில்லை.இதையே அவர் பிறருக்கும் அறிவுரையாகத் தருகிறார்.

"தனது குறைவான தேவைகளின் வழியே ஒரு காலத்தில்
மக்கள் மனநிறைவுடன் இருந்தனர்.ஆனால்,அதீத தேவையும் அதை அடைய வழியும் உள்ள காலத்தில்,மக்கள் மகிழ்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டார்கள்.அவர்களுடைய ஆத்மசுத்தி பாழ்பட்டு,நேர்மையற்றவர்களாகவும்,ஆரோக்கியமற்றவர்களாகவும் மாறுகிறார்கள்.இந்த மாற்றத்தை என் கண் முன்னால் காண்கிறேன்,அ
தைக்கண்டு என் நெஞ்சம் பதறுகிறது" என சுவாமி சிவானந்தர் பேசியிருக்கிறார்..

யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்..இது வெறுமனே உடற்பயிற்சியில்லை,மனநிலைக்கு ஆரோக்கியத்தை வழங்கும் அகப்பயிற்சி..இன்று உலகம் முழுக்க யோகக்கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த மோடி அரசால்
எனக்கு 'பத்மஸ்ரீ'வழங்கப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்..

அதுமட்டுமல்ல,கோவிட் தடுப்பூசியை பற்றி எல்லோரும் வதந்தியை பரவவிட்ட போது,அதை தான் போட்டுக் கொண்டு பிறருக்கும் முன்னுதாரணமாக இருந்து, மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார் சிவானந்தர்.
உண்மையில் சுவாமி சிவானந்தர் வெறுமனே யோகா ஆசிரியர் அல்ல.பாரதத்தில் பக்தி,சம்பிரதாயம்,சேவை ஆகியவற்றின் செழித்த நவீன அடையாளம் ஆவார்..எல்லா ஹிந்துக்களும் ஏதோ ஒரு சம்பிரதாயத்தை உளப்பூர்வமாக ஏற்று,
அதன்படி முக்தியை நோக்கி நடைபோட வேண்டுமென தன் வாழ்வையே செய்தியாக்கி பிரச்சாரம் செய்கிறார்..

இவரைப் போன்ற மகான்களை தேடித்தேடி கௌரவிக்கும் மோடி அரசு இங்கே நிலைத்திருக்கட்டும்..அதுவே பாரதத்தாயினை 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைக்கும்' நிகழ்வாக இருக்கும்..

பெருமை கொள்கிறோம்

ஜெய்ஹிந்த்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

Mar 23
ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன.
தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’
Read 13 tweets
Mar 23
திருச்சிற்றம்பலம்

தில்லையம்பலம்

*லோகா சமஸ்தா சுகினோ பவந்து!*
🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

"#ஒருகோடி_கிராமத்தில்_கோடிவிநாயகர்."

ஒருகோடி என்ற கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவிற்க்கு. #உலகிலேயே_மிகச்சிறிய_நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில் உள்ளது. Image
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து 5கி.மீ சென்றால் வரும் அழகிய கிராமம் #ஒருகோடி.
மொத்தம் 230 வீடுகளும், ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையும் கொண்டது. விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
பழமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்டு, தவம் செய்து சென்றுள்ளனராம். அதனால்தான் இந்த கிராமத்தின் பெயர் "ஒருகோடி' என்று அழைக்கப்படுகிறதாம். தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த சிவாலயத்தில்
Read 7 tweets
Mar 23
குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ
மகேஸ்வர

அவனேதானாயிடுக

பிரபன்னாமிர்தம் என்னும் குரு பரம்பரை நூலை வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு விஷயம் தோன்றியது.

‘நானே கடவுள்’ என்று சொல்லிக்கொள்கிற யாரையும் மக்கள் நம்புவதில்லை. பெருமானையே நேருக்கு நேர் சந்தித்துவிட நேர்ந்தாலும்
அவநம்பிக்கைதான் முதலில் எழும். ஒருவேளை ஆர்.எஸ். மனோகர் குழுவில் உறுப்பினராக இருந்திருப்பாரோ என்று எண்ணத் தோன்றும்.

நமது பிறப்பு அப்படி.

ஒன்றும் பிழையில்லை என்று வையுங்கள். அறிவும் மெய்யறிவும் எதிரெதிர் திசையில் பயணம் செய்வது இக்காலத்தின் இலக்கணமே.
இது எம்பெருமானுக்கு மட்டும் தெரியாதா என்ன?

தெரியாமல்தான் இருந்திருக்கிறது என்பது ஒரு கதையில் தெரியவந்தது.

ராமானுஜர் திருக்குறுங்குடிக்குப் போயிருந்தபோது, குறுங்குடி நம்பி ஒரு சமாசாரம் கேட்கிறான். ‘சுவாமி, உம்மை ஒன்று கேட்க வேண்டும்.
Read 9 tweets
Mar 23
*✌🏼🙏🏻🌺🌺🌺.

Sathguroo Pahimam

இன்று "ஏக்நாத் ஷஷ்டி"
ஏக்நாத் மகராஜ் அவர்களின் க்ஷேத்திரமான பைட்டன் நகரில் ஏக்நாத் சஷ்டி கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ சஷ்டி திதியில் அவர் ஜலசமாதி எடுத்துக் கொண்டார். அந்த பவித்ரமான புனித தினம் இன்று தான்.
இந்த நாளில் மிகவும் விசேஷம் என்னவென்றால் ஏக்நாத் மகராஜ் அவர்களின் குரு ஜனார்த்தன ஸ்வாமியின் ஜென்ம தினம், ஏக்நாத் மகராஜ் ஜனார்த்தன சுவாமியிடம் குரு அனுக்கிரகம் பெற்ற தினம், குருவின் மூலமாக தத்தாத்ரேயரின் தரிசனம் பெற்ற தினம்,
குரு ஜனார்த்தன சுவாமியின் சமாதி தினம் மற்றும் ஏக்நாத் மகாராஜ் ஜலசமாதி எடுத்த தினம் என்றவாறு மிகவும் புனிதமாக கருதப்படும் உயர்ந்த தினம் இன்று. பைடன் க்ஷேத்திரத்தில் இந்த ஏக்நாத் சஷ்டி விசேஷமாக கொண்டாடப்பட்டு
Read 4 tweets
Mar 22
சம்பளம் உயர்த்தி கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test!
Q: நீ flightல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு, அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
A: 49 இருக்கும்.
Q: ஒரு யானையை எப்படி 3 Stepல் fridgeக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல அது என்ன?
A: மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
Q: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.?
Read 5 tweets
Mar 22
வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம், முக்கியமான கோயிலுக்கு போயிட்டு வாங்க!

இளமை சீக்கிரம் போய்விடும்,
முதுமை சீக்கிரம் போகாது,

ஆசைப்பட்டாலும் கோயிலைப் பார்க்க முடியாது.

சொத்து சுகம் இருந்தாலும் சொந்த பந்தம் இருந்தாலும் முதுமையான காலத்துல
யாரும் கோயிலுக்கு கூட்டிகிட்டு போக மாட்டாங்க.

கடைசி காலத்தில் உயிர் இழுத்துகிட்டு சாவுற நிலைமை வரக்கூடாது.

யாராக இருந்தாலும் முதுமை கால வாழ்க்கை மிகவும் மோசமானது.

கடைசி காலத்துல கட்டில்ல படுத்துகிட்டு பிள்ளைகளுக்கு சிரமத்தை கொடுக்கிற வாழ்க்கை நமக்கு வேண்டாம்.
இளமையில் சாப்பிட்ட அத்தனையும் சாப்பிட தோணும்.

பணிவிடை செய்வதற்கு இன்று யாரும் தயாராக இல்லை.

அசிங்கமா போயிடும்
நம்ம நாற்றம் பிடித்த உடம்பை வைத்துக்கொண்டு மிகவும் கொடுமையான சித்திரவதையை அனுபவிக்கவேண்டும்

இறுதிகாலத்தில்.
சிவசிவ என்று சொன்னாலே உயிர் போய் விட வேண்டும்,
Read 4 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(