ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்.
இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.
1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.
2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.
ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன.
தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.
"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’
என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.
இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..
ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய
பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப் இளைஞன் சபதம் செய்தான்...
சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி
1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.
உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.
நேருவும், காந்தியும் பஞ்சாப் காங்கிரஸ் அரசை,
உத்தம் சிங்கின் செயலைக் கண்டித்தும் ஜெனரல் டயரின் மனைவிக்கு ஆறுதல் தெரிவித்தும் தீர்மானம் இயற்ற வைத்தனர்.
இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இதனால் காந்தியின் வெறுப்புக்கு ஆளானார்.
காந்திக்கும் நேதாஜிக்கும் பிளவு ஏற்பட்டு காந்தியால் நேதாஜி காங்கிரசில் இருந்து திட்டமிட்டு இழிவுபடுத்தப்பட இது ஒரு முக்கிய
காரணமாக அமைந்தது.
அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.
"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்துவிடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக்கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.
ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தேமாதர கோஷத்துடன் தூக்குக்கயிறை முத்தமிட்டார்.
“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.
பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,
“
உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்துவர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.
முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் பு
தைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம்மீதி எலும்புக்கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.
உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.
தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.
ஜெய்ஹிந்த்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
ஒருகோடி என்ற கிராமத்தில் ஒரு கண் மட்டும் வைத்து பார்க்கும் அளவிற்க்கு. #உலகிலேயே_மிகச்சிறிய_நுழைவாயில் கொண்ட அதிசய சிவன் கோயில் உள்ளது.
விழுப்புரம்-திருக்கோவிலூர் சாலையில் தோகைப்பாடியில் இருந்து 5கி.மீ சென்றால் வரும் அழகிய கிராமம் #ஒருகோடி.
மொத்தம் 230 வீடுகளும், ஆயிரத்துக்கும் குறைவான மக்கள் தொகையும் கொண்டது. விவசாயமே பிரதானத் தொழிலாக உள்ளது.
பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட
பழமை வாய்ந்த இந்த சிவாலயத்தில் ஒரு கோடி சித்தர்கள் வந்து வழிபட்டு, தவம் செய்து சென்றுள்ளனராம். அதனால்தான் இந்த கிராமத்தின் பெயர் "ஒருகோடி' என்று அழைக்கப்படுகிறதாம். தற்போது சிதிலமடைந்த நிலையில் உள்ள இந்த சிவாலயத்தில்
இரண்டு நாளாக இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது காசியை சேர்ந்த சுவாமி சிவானந்தர் பத்மஸ்ரீ விருது பெற்ற நிகழ்வு..பல லட்சக் கணக்கான மக்கள் அந்த வீடியோவை கண்ணீர் மல்க பகிர்கிறார்கள்..யாருக்கும் அந்த உணர்வை,அதற்கும் மேல் வெளிப்படுத்த தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.
125 வயதை அடைந்திருக்கும் ஒரு முதியவர் நடந்து வந்து,சபையின் முன்பு பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் திசையை நோக்கி விழுந்து வணங்கினார்.தன்னை விட 53 வயது பெரியவர்,நிறை வாழ்வின் எதார்த்த அளவீடுகளை கடந்த ஒரு நபர்,தன் முன்னால் இப்படி வணங்குவதைக் கண்டு
,மோடியும் அதே போல தலை தாழ்ந்து சிவானந்தரை வணங்கினார்..
ஆனால்,சிவானந்தர் அதையெல்லாம் எதிர்பார்த்து செய்தது போல இல்லை.ஒரு கடமையைச் செய்து முடித்தது போல அங்கிருந்து நகர்ந்து விருதை வாங்கப் போகும் பாதைக்கு நேரேவும் அதே போல வணங்கினார்,ஜனாதிபதிக்கு அருகே வந்ததும் அதே போல வணங்கினார்.
இன்று "ஏக்நாத் ஷஷ்டி"
ஏக்நாத் மகராஜ் அவர்களின் க்ஷேத்திரமான பைட்டன் நகரில் ஏக்நாத் சஷ்டி கொண்டாடப்படுகிறது. பங்குனி மாதம் கிருஷ்ண பக்ஷ சஷ்டி திதியில் அவர் ஜலசமாதி எடுத்துக் கொண்டார். அந்த பவித்ரமான புனித தினம் இன்று தான்.
இந்த நாளில் மிகவும் விசேஷம் என்னவென்றால் ஏக்நாத் மகராஜ் அவர்களின் குரு ஜனார்த்தன ஸ்வாமியின் ஜென்ம தினம், ஏக்நாத் மகராஜ் ஜனார்த்தன சுவாமியிடம் குரு அனுக்கிரகம் பெற்ற தினம், குருவின் மூலமாக தத்தாத்ரேயரின் தரிசனம் பெற்ற தினம்,
குரு ஜனார்த்தன சுவாமியின் சமாதி தினம் மற்றும் ஏக்நாத் மகாராஜ் ஜலசமாதி எடுத்த தினம் என்றவாறு மிகவும் புனிதமாக கருதப்படும் உயர்ந்த தினம் இன்று. பைடன் க்ஷேத்திரத்தில் இந்த ஏக்நாத் சஷ்டி விசேஷமாக கொண்டாடப்பட்டு
சம்பளம் உயர்த்தி கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த Test!
Q: நீ flightல போய்கிட்டு இருக்க, அதுல 50 செங்கல் இருக்கு, அதுல ஒன்னை தூக்கி வெளிய போட்டுட்டா மீதி எவ்ளோ இருக்கும்?
A: 49 இருக்கும்.
Q: ஒரு யானையை எப்படி 3 Stepல் fridgeக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: ஒரு மானை எப்படி 4 Stepல் fridgrக்குள் வைப்பது?
A: fridgeஐ திறக்கனும், யானைய வெளிய எடுக்கனும், மானை உள்ள வைக்கனும், fridgeஐ மூடனும்.
Q: அன்னைக்கு சிங்கத்தோட பிறந்தநாள் எல்லா விலங்கும் வந்துருச்சு ஒன்னு மட்டும் வரல அது என்ன?
A: மான், ஏன்னா அது fridgeக்குள்ள இருக்கு.
Q: முதலைகள் வாழும் குளத்தை ஒரு பாட்டி கடக்கனும், என்ன பண்ணுவாங்க.?