#ஸ்ரீமுஷ்ணம் மனிதர்களுக்கு மோக்ஷ பூமி. இங்கு அருள்புரிபவர் ஸ்ரீ பூவராஹ மூர்த்தி. ஸ்ரீ வராஹ க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்த புண்ய க்ஷேத்திரம் ஸ்வயம் வயக்த க்ஷேத்திரம். அதாவது பூமியில் யாராலும் தோற்றுவிக்கப்படாது, அனாதி காலம் முதல் இருந்து வரும் க்ஷேத்திரம். இவ்வாறான மற்ற
க்ஷேத்திரங்கள்: வேங்கடாத்ரி, ஸ்ரீரங்கம், கும்பகோணம், அகோபிலம், நரநாராயணம், துவாரகை, மதுரா, ஜனார்த்தனம் போன்றவை. நதிகளில் எப்படி கங்கை முக்கியமானதோ அது போல ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு க்ஷேத்திரங்களில் முக்கியமானது இந்த வராஹ க்ஷேத்திரம்.
ஸ்ரீமுஷ்ணத்தில் எல்லா தீர்த்தங்களும் சேர்கின்றன
என்பது நம்பிக்கை. எல்லா தேவதைகளும் இங்கிருக்கும் ஸ்வேதவராஹனுக்கு சேவை சாதிக்கும் பொருட்டு வசிப்பதாக ஐதீகம். இப்பெருமாளை ஆராதித்து வந்தால் வைகுந்த பதவி நிச்சயம் என்று வராஹ புராணம் கூறுகிறது. பெருமாள், கடலில் இருந்து பூமியை மேலே கொண்டு வந்து தேவர்களின் வேண்டுகோளை நிறைவேற்றி
அவர்களின் துயரைத் துடைத்தவுடன் வைகுண்டம் திரும்ப எண்ணினார். அப்போது பூமிதேவி பெருமாளை வேண்டி அவர் தன்னுடனேயே வாசம் செய்யவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறாள். அவளது வேண்டுகோளை ஏற்று வாசம் செய்யும் இடமே ஸ்ரீமுஷ்ணம் என்று நாரத புராணம் கூறுகிறது. பூதேவியுடன் வாசம் செய்வதால் #பூவராஹர்
என்று பெருமாளுக்கு பெயர். தான் ஸ்ரீமுஷ்ணத்தில் தங்கிய சமயத்தில் தனது பரிவாரங்களையும் அங்கேயே தன்னைச் சுற்றித் தங்கச் செய்ததார். அதன்படி சங்கு தீர்த்தத்தில் சங்கும், சக்ர தீர்த்தத்தில் சக்ரமும், பிரம்ம தீர்த்தத்தில் ப்ரம்மாவும், பார்க்கவ தீர்த்தத்தில் கருடனும், கோபுரத்தில்
வாயுவும், பலிபீடத்தில் ஆதிசேஷனும், வாயிற்படியில் விஷ்வக்சேனருமாக அவர்கட்கு உரிய இடத்தை நிர்ணயம் செய்து கடமைகளையும் விதித்தார். பகவானை சேவிப்பவர்களை எமதூதர்கள் அண்டாதிருப்பது ஆதிசேஷனுக்கும், இங்கு இறைவனை வழிபடுபவர்களை வைகுண்டத்திற்கு அழைத்துச் செல்வது இந்திரனுக்கும் கடமையாகச்
சொல்லப் படுகிறது. இந்த க்ஷேத்திரமானது பிரம்மாதி யோகிகளுக்கு வேதாத்யயன பூமியாகவும், தேவர்களுக்கு யாக பூமியாகவும், மனிதர்களுக்கு மோக்ஷ பூமியாகவும் திகழுமென பெருமாளே அருளியுள்ளார்.
#உபநிஷத் என்றால் குருவின் அருகில் இருந்து அவர் மூலமாக அறியப்படும் மெய்ஞான உபதேசம் என்று பொருள். ரிபு
என்ற முனிவர் 12 ஆண்டுகள் ஸ்ரீவராஹரை நோக்கித் தவமிருந்து தரிசனம் பெற்றார். அந்த தரிசனத்தின் போது வராஹர் ரிபு முனிவருக்கு அளித்த உபதேசம் #வராஹோபநிஷத்.
இந்த க்ஷேத்திரத்தில் இருக்கும் தீர்த்தங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. அவை, நித்ய புஷ்கரிணி,
லக்ஷ்மி நாராயண தீர்த்தம், பூமி
தீர்த்தம், சக்ர தீர்த்தம், சங்கு தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், அக்னி தீர்த்தம், வேணு தீர்த்தம் போன்றவை. கோவில் மேற்கு நோக்கிய அழகிய ராஜ போபுரத்துடன் கூடியது.
துவஜஸ்தம்பத்திற்கு மேற்கிலும், கோபுர வாசலுக்கு கிழக்கிலும் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. துவஜஸ்தம்பம் தாண்டி உள்ளே
நுழைந்ததும் புருஷ சூக்த மண்டபம் மிக அழகிய வேலைப்பாடுகளுடன் உள்ளது. கர்பகிரஹத்தில் சுவாமி மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார். முகம் தெற்கு நோக்கியதாக, பூமியை மேலே கொண்டு வந்த வெற்றிப் பெருமிதத்தில் கைகளை இடுப்பில் வைத்து, முகத்தை நிமிர்த்தி கம்பீரப் பார்வை
பார்க்கிறார். பெருமாள் நம்மிடம் பேசு என்று சொல்லிக் கேட்கக் காது கொடுத்துக் காத்திருக்கும் கோலம். மூர்த்தி சாளக்ராமத்தால் ஆனது. கர்ப கிரஹ விமானம் பிராக்ருத விமானம் என்று அழைக்கப்படுகிறது. கர்ப கிரஹத்தின் முன்பாக உள்ள அர்த்த மண்டபத்தில் உத்சவர் ஸ்ரீ யக்ஞவராஹ மூர்த்தி, ஸ்ரீதேவி-
பூதேவியுடன் மேற்கு நோக்கிக் காட்சி அளிக்கிறார். அருகிலேயே ஆதி வராஹரும், ஸ்ரீகிருஷ்ணரும் உள்ளனர். இதற்கும் முன்பாக உள்ள மஹா மண்டபத்தில் போகநாராயணர் தமது தேவியருடன் காட்சித் தருகிறார். பிராகாரத்தில், தென்மேற்கு திசை மூலையில் பெருமாளை நோக்கியவாறு அம்புஜவல்லித் தாயார் சன்னதி.
சன்னதியின் முன்மண்டபம் ஊஞ்சல் மண்டபம் என்று அழைக்கப்படுகிறது. வடமேற்கு மூலையில் கோதை நாச்சியார் மற்றும் உடையவர் சன்னதிகள். வடப்புறத்தில் வேணுகோபாலன், மற்றும் விஷ்வக்சேனர் சன்னதிகள் இருக்கிறது. வடக்குப் பகுதியில் குழந்தையம்மன் சன்னதி என்று ஒரு சன்னதி உள்ளது. இது சப்தமாதர் சன்னதி.
இங்கே சப்த மாதர்கள் அம்புஜவல்லித் தாயாரின் தோழிகள் என்று கூறுகின்றனர். கோவிலின் வடக்குத் திசையில் இருக்கும் வாசல் வைகுண்ட வாசலாக கருதப்பட்டு தாழிடப்பட்டிருக்கிறது. இங்கே பெருமாளுக்கு 2 பிரம்மோத்சவங்கள் (மாசி மற்றும் சித்திரை மாதங்களில்), மற்றும் மார்கழிச் சிறப்பு பகல்-ராப்பத்து
உற்சவங்களும் நடக்கிறது. இவை தவிர ஒவ்வொரு வெள்ளியும் அம்புஜவல்லித் தாயாருக்கு டோலோத்சவமும், வைகாசி விசாகம், ஆவணியில் ஸ்ரீஜெயந்தி, புரட்டாசி கொலு, மற்றும் வைகுண்ட ஏகாதசி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பங்குனி உத்திரத்தன்று இங்கும் திருக்கல்யாண வைபவம் மற்றும் அக்ஷய திருதியை அன்று
கருட சேவையும் நடைபெறுகிறது. நித்ய புஷ்கரிணி தீர்த்தத்தின் அருகில் இருக்கும் அஸ்வத்த மரமானது மிக பழமையானதாக, யுக-யுகாந்தரமாக இருப்பதாகவும், அதன் அடியில் இருந்து ஸ்வேத வராஹப் பெருமாள் தேவர்களுக்கு வேதாத்யயனம் செய்து வைப்பதாகவும் சொல்லப்படுகிறது. இங்கே பெருமாளே யக்ஞரூபமாகவும்,
யக்ஞாங்கமாகவும், யக்ஞத்துக்கு உரியவனாகவும், யக்ஞத்தை புசிப்பவனாகவும், யக்ஞேஸ்வரனாக யக்ஞபலத்தை தருபவனாகவும் இருக்கிறான். இம்மரத்தடியில் உட்கார்ந்து வேத பாராயணம், மந்திர ஜபம் போன்றவை செய்தால் அளவற்ற பலன் என்று கூறுகிறார்கள். ஸ்ரீ வராஹ மூர்த்தியின் நான்கு பாதங்கள் 4 வேதங்களாகவும்,
வராஹம் எழுப்பும் சப்தம் சாம கோஷமாக, அதன் தந்தம் யூபஸ்தம்பமாக, நாவே வேள்வித்தீயாக, உடலில் இருக்கும் உரோமங்கள் தர்பைப் புல்லாக, அதன் உமிழ்நீரானது நெய்யாக, மூக்கு சுருவம் என்று சொல்லப்படும் ஹோமக் கரண்டியாக, எலும்புகள் மந்திரமாக, ரத்தம் சோமரசமாக, அதன் பிராணன் அந்தராத்மாவாக, இதயம்
தக்ஷிணையாக, தலை பிரம்மனாக, குடல் உத்காதாவாக, குறி ஹோதாவாக, சரீரம் யக்ஞசாலையாகவும் நடை ஹவ்பகவ்யம் என்றும் வாயு புராணத்தில் கூறப்பட்டிருக்கிறது.

கோபாயேத் அநிசம் ஜகந்தி குஹநா போத்ரீ பவித்ரீ க்ருத
ப்ரஹ்மாண்ட: ப்ரள்யோர்மிகோஷ குருபிர் கோணாரவை: குர்குரை
மத் தம்ஷட்ராகுர கோடி-காட-கடநா-
நிஷ்கம்ப-நித்யஸ்திதி:
ப்ரஹ்ம ஸ்தம்ப மஸெளத் அஸெள் பகவிதீமுஸ்தேவ் விச்வம் பரா:
என்று #ஸ்ரீவேதாந்ததேசிகர் தமது தசாவதார ஸ்தோத்ரத்தில் இந்த அவதாரத்தைப் போற்றுகிறார்.
இதன் பொருள், மஹாப் பிரளய காலத்தில் கரைபுரண்டு பொங்கியெழும் சமுத்திரத்தின் அலைகளின் ஓசைபோல் குர்-குர் என்று மூக்கில்
இருந்து வரும் சப்தத்தால் இவ்வுலகினைப் பரிசுத்தமாக்கிய பன்றியாக அவதரித்த பெருமான், எல்லா உலகங்களையும் காப்பாற்றக் கூடியவர். மகிமை பொருந்திய இந்த பூமிதேவி அந்த வராஹப் பெருமானின் கோரைப் பல்லின் நடுவில் ஒரு கோரைக் கிழங்கு போல கெட்டியாக அசைவற்று இருத்தப் பெற்றாள். இவ்வாறாக பூமிதேவியே
உறைந்திருப்பது இப்பெருமானின் பல் நுனியில் என்றால் அந்த உருவத்தில் பெருமை சொல்லவும் தகுமோ என்பதாம். கலியில் வேங்கடவனே பலப்பிரதாயகன் என்பர். அவனது அஷ்டோத்திரத்திலும் முத்தாய்ப்பாக "ஸ்ரீயக்ஞ வராஹாய நம:" என்ற நாமம் வரும். பூமி தேவியை மீட்ட பின், ஆனந்தத்தினால் வராகர் புன்னகைக்க, அவரது
கண்களிலிருந்து விழுந்த கண்ணீரிலிருந்து அரசமரமும், திருத்துழாயும் தோன்றின. வராக மூர்த்தியின் மேனியிலிருந்து பெருகிய வியர்வை வெள்ளம் ஸ்ரீமுஷ்ணம் என்ற ஸ்தலத்தில் நித்ய புஷ்கரிணியாக விளங்குகிறது. சித்ரா பௌர்ணமியன்று ஸ்ரீவராக மூர்த்தி பூமாதேவியுடன், ஒரு முகூர்த்தகாலம், அதில்
ஜலக்கிரீடை செய்வதாய் ஐதீகம்-அன்று ஸ்நானம் செய்வது மிகவும் விசேஷமானது. ஸ்ரீமுஷ்ணம் 108 திவ்ய தேசங்களில் ஒன்றில்லை. ஆயினும் மிகவும் சிறப்புள்ள அபிமானத் தலம்! பெருமாளுக்கு இங்கு கோரைக் கிழங்கால் செய்த லட்டு போன்ற உணவே நிவேதனம் என்பது இன்னொரு உபரித் தகவல்!
பூமிப் பிராட்டியுடன்
கூடியுள்ள ஸ்ரீமுஷ்ண வராகப் பெருமாளைப் பற்றிச் சொல்லும் போது #வராக_சரம_ ஸ்லோகம் நினைவுக்கு வருகிறது! பார்த்தனுக்கு கண்ணன் சொன்ன "சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம் வ்ரஜ" என்னும் சரமச் செய்யுளைப் போன்றே, பூமிப் பிராட்டிக்கும் சொன்ன சரமச் செய்யுள் ஒன்று உண்டு!
வராக சரம ஸ்லோகம்-
ஸ்ரீ வராக உவாச:
ஸ்த்திதே மநஸி ஸுஸ்வஸ்த்தே ஸரீரே ஸதி யோ நர:
தாதுஸாம்யே ஸ்த்திதே ஸ்மர்த்தா விச்வரூபஞ்ச மாமஜம் |
ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட்டபாஷாண ஸந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதிம் ||

அதாவது, நல்ல நிலையில் மனதும் உடலும் இருக்கும் போது (இளமைக்காலத்தில்) என்னை ஒரு
கணமேனும் மகாவிஸ்வாசத்துடன் ஒருவன் நினைப்பானாகில், அவன் வயதாகி உடல் தளர்ந்து மரக்கட்டையைப் போல் ஸ்மரணை இன்றி கிடக்கும்போது நான் அவனைப் பற்றி நினைக்கிறேன்!
இதையே உறுதியாய் பூமாதேவி பற்றிக்கொண்டாள். பிறகு கலியுகத்தில் பகவத் ஆக்ஞையின் பேரில் ஆண்டாளாக அவள் அவதாரம் செய்தபொழுது இந்த
பொருளையே தம் திருப்பாவை வாயிலாக உச்சி முகர்ந்து கொண்டாடினாள். இவ்வாறான பெருமைசேர் ஸ்வேத வராஹனைத் தொழுது நாமும் நமக்கு விதிக்கப்பட்ட யக்ஞாதிகளில் நாட்டம் ஏற்பட பெருமாளை வேண்டுவோம்.🙏🙏
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
@threadreaderapp compile please

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 7
சினிமா சொல்வது தான் தமிழர்களுக்கு வேத வாக்கு. அது மெய்யா பொய்யா என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள், ஆழ்ந்து ஆராய மாட்டார்கள், இதற்கான மூலம் என்ன என்று தேடி சரி பார்க்க மாட்டார்கள். நமக்கு சிவாஜி கணேசன் நடித்த #கர்ணன் தான் நிஜ கர்ணன். ச்சே எப்படி வஞ்சிக்கப் பட்டான், எவ்வளவு நல்லவன் Image
அவன் என்பது தான் அதிலிருந்து நம் கணிப்பு! கர்ணன் நல்லவன் என்ற எண்ணத்தையும் கர்ணனை சதியால் வீழ்த்திய காரணத்தினால் அர்ஜுனனும் கிருஷ்ணரும் வஞ்சகர்கள் என்ற எண்ணத்தையும் பதித்துவிட்டன. மகாபாரதத்தில் அவன் யார் என்று பார்ப்போம்.
ஒரு புறம் தனது கவச குண்டலத்தையும் தானமளித்தப் பெரும்
வள்ளல், மறுபுறம் குலப் பெண்ணை சபையில் அவமானப்படுத்திய கவயன். ஒரு பக்கம் நண்பனுக்காக உயிரை கொடுக்க தயாராக இருக்கும் விசுவாசம், மறுபக்கம் குருவிடமே பொய் கூறும் கபடத்தனம். அறச் செயல்களில் ஆர்வம் கொண்டு போரிடத் துடிக்கும் அதே இதயம், அதர்மவாதிகளையும் ஆதரிக்கிறது. மொத்தத்தில், கர்ணன்
Read 12 tweets
Apr 7
சங்கு மிகவும் புனிதம் வாய்ந்தது. அதனால் தான் திருமாலின் கையில் எப்பொழுதும் இருக்கும் பாக்கியம் பெற்றுள்ளது.

ஸ்ரீ சங்கு காயத்ரி
ஒம் பாஞ்ச ஜன்யாய வித்மஹே
பவமானாய தீமஹி
தந்நேர் சங்க ப்ரசேர்தயாத்

மகாலட்சுமியுடன் திருப்பாற்கடலில் தோன்றியது சங்கு. கடலில் அமாவாசை மற்றும் பவுர்ணமி Image
நாட்களில் வலம்புரிச்சங்கு ஓங்கார ஒலியெழுப்பும். சாதாரணச் சங்கில் ஓம்கார ஒலி உள்ளடங்கியிருக்கும். சங்கொலி துர் ஆவிகளை விரட்டும். சங்குப்பக்கம் துர் ஆவிகள் வராது. அதனால் தான் குழந்தைகளுக்குக் சங்கில் பால் ஊற்றிப் புகட்டுவர். இப்பொழுது அது வழக்கொழிந்து விட்டது. சங்கு காயத்ரி மூலம்
பிற உலகத்துடன் சூட்சுமத் தொடர்பு கொண்டுள்ளனர். இப்போதும், தமிழ்நாட்டில் மிகச் சில இடங்களில் இந்தத் தொடர்பு இருக்கிறது. சங்கு பூஜை செய்வதால் பல நன்மைகள் உள்ளன. வலம்புரிச் சங்கு வீட்டில் இருந்தால் தோஷங்கள், துர்சக்திகள் நெருங்காமல் வீடு பாதுகாப்பாக இருக்கும். மற்றவர்கள் வைக்கும்
Read 8 tweets
Apr 7
#MahaPeriyava
Sri Maha Periyava is a divine incarnation and the God of the Kali age whose presence is a blessing upon the world. No other God existed for my father except Sri Maha Periyava. He dedicated his three sons, my brothers and me, to the service of Veda when he heard Image
Sri Periyava's discourse. He gave my sister in marriage in a kanya vivaha ceremony to a scholar who had studied the Veda. So too, by his will, kanyas were given in marriage to my elder brother and me. In the days when I was a student in the Patasala, if we happened to get two or
three holidays at a stretch, we boys would be sent to Sri Periyava by our teacher. 'Chant the Veda in Periyava's presence', he would say. On such occasion, Sri Periyava would make concerned enquiries to ascertain that we had been fed properly. None can match that concern. I have
Read 11 tweets
Apr 7
#மகாபெரியவா
1986ல் ஒரு ஏகாதசி ஞாயிற்றுக்கிழமை.
காஞ்சி சங்கர மடத்தில் ஸ்ரீ மஹா பெரியவா பக்தர்களுக்கு தரிசனம் தந்து கொண்டிருந்தார். ஓரத்தில், சுமார் ஐந்து வயது குழந்தையுடன் ஒரு பக்தர் அழுதபடியே நின்று கொண்டிருந்தார். அப்போது ஸ்ரீ மஹாபெரியவருடன், எப்போதும் கூடவே கைங்கர்யம் செய்து Image
கொண்டிருக்கும், சந்திரமெளலி என்பவரும் திருச்சி ஸ்ரீகண்டன் என்பவரும் இருந்தனர். ஸ்ரீ மஹா பெரியவா ஸ்ரீகண்டனை அழைத்து, “கையில் குழந்தையுடன் ஒருவர் அழுதுகொண்டிருக்கிறாரே, ஏன் அழுகிறார் என்று விசாரி” என்றார். ஸ்ரீகண்டனும், அவரிடம் சென்று அவரது கவலைக்கான காரணத்தை ஸ்ரீ மஹா பெரியவா
கேட்டு வரச் சொன்ன தகவலைத் தெரிவித்தார். “ஐயா, என் கையில் இருப்பது ஐந்து வயது பெண் குழந்தை. உடல்நிலை சரியில்லை. டாக்டரிடம் காண்பித்தேன். குழந்தைக்கு இதயத்தில் துவாரம் இருக்கிறது. ஆபரேஷன் செய்ய வேண்டும், இருப்பினும் கொஞ்சம் சிரமம் தான் என்றும் அவர் சொல்லி விட்டார். ஆபரேஷனுக்கு
Read 11 tweets
Apr 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் திருமாலையில் அரங்கனை ஆனந்தமாகப் பாடிக்கொண்டு வந்த தொண்டரடிப் பொடியாழ்வார், திடீரெனத் தனது குற்றங்களை எல்லாம் எண்ணிப் பார்த்தார். அரங்கனின் பெருமைகளையும் எண்ணிப் பார்த்தார்.
“உள்ளத்தே உறையும் மாலை உள்ளுவான் உணர்வொன்று இல்லா
கள்ளத்தே நானும் தொண்டாய்த் Image
தொண்டுக்கே கோலம் பூண்டு
உள்ளுவார் உள்ளிற்று எல்லாம் உடனிருந்து அறிதி என்று
வெள்கிப் போய் என்னுள்ளே நான் விலவறச் சிரித்திட்டேனே”
என்ற பாடலின் வாயிலாக, அவ்வளவு உயர்ந்தவனான அரங்கனின் அருகே நிற்பதற்குக் கூட நீசனான அடியேனுக்குத் தகுதியில்லை என்று கூறி அரங்கனின் கோயிலை விட்டு விலகிச்
செல்ல முயன்றார். அவரைத் தடுத்தான் அரங்கன். “ஆழ்வீர் எங்கே செல்கிறீர்” என்று கேட்டான். இல்லை இல்லை நீ மிகவும் உயர்ந்தவன். அடியேனோ மிக மிகத் தாழ்ந்தவன்.
உன் தொண்டன் என்று வேடமிட்டுக் கொண்டு கள்ளத்தனத்துடன் உன் முன்னே வந்து நின்று உன்னையே ஏமாற்றப் பார்த்து விட்டேன். என் குற்றங்களை Image
Read 12 tweets
Apr 6
#ஸ்ரீராமநவமி_ஸ்பெஷல்
திரைப்படம்- லவகுசா
லீலா - சுசீலா
இசை கே வி மகாதேவன் கண்டசாலா
பாடல் வரிகள் மருதகாசி
படம் வெளிவந்த வருடம் 1963

ஜெகம் புகழும் புண்ய கதை
ராமனின் கதையே
உங்கள் செவிகுளிர பாடிடுவோம்
கேளுங்கள் இதையே

இகபர சுகமெல்லாம் அடைந்திடலாமே
இந்த கதை
கேட்கும் எல்லோருமே
இனிக்குது நாவெல்லாம்
உரைத்திடும்போதிலே இணையே
இல்லாத காவியமாகும்

அயோத்தி மன்னன் தசரதனின்
அருந்தவத்தால்அவன் மனைவி
கெளசல்யா, கைகேயி, சுமித்திரை
கருவினிலே உருவானார் ராமர்,
லஷ்மணர்கனிவுள்ள பரதன்,
சத்ருக்னர் நால்வர்..

நாட்டினர் போற்றவே நால்வரும்
பலகலை Image
ஆற்றலும் அடைய
மன்னன் வளர்த்து வந்தாரே..காட்டில் கெளசிகன் யாகத்தைக் காக்கவே
கண்மணி ராமலஷ்மணரை
அனுப்பினனே

தாடகை சுபாகுவை தரையில் வீழ்த்தியே தவசிகள் யாகம் காத்து ஆசி கொண்டனரே பாதையில் அகலிகை சாபத்தை தீர்த்தபின்
சீர்பெறும் மிதிலை நகர் நாடி சென்றனரே..

வீதியில் சென்றிடும் போதிலே
Read 12 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(