#ஶ்ரீராமநவமி ராம நாமத்தின் பெருமை:
“நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
சென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே இராமவென் றிரண்டெழுத்தினால்”
(கம்பராமாயணம்: – சிறப்புப் பாயிரம் 14)
ஸ்ரீ ராமநவமியன்று அனைவரும் கம்பராமாயணத்தில் கீழுள்ள பாக்களை
பாராயணம் செய்ய வேண்டும்.
‘வேய்புனர் பூசமும் விண்ணுளோர்களும்
தூயகற் கடகமும் எழுந்து துள்ளவே
சித்தரும் இயக்கரும் தெரிவைமார்களும்
வித்தக முனிவரும் விண்ணு ளோர்களும்
நித்தரும் முறைமுறை நெருங்கி யார்ப்புறத்
தத்துறல் ஒழிந்துநீள் தருமம் ஓங்கவே.
ஒருபகல் உலகெலாம் உதரத்துட் பொதிந்
தருமறைக்
குணர்வரும் அவனை யஞ்சனக்
கருமுகிற் கொழுந்தெழில் காட்டுஞ் சோதியைத்
திருவுறப் பயந்தனள் திறங்ககொள் கோசலை.’
(கம்ப ராமாயணம் : பாலகாண்டம் – திரு அவதாரப் படலம்)
எல்லோரும் ஏதாவது சிறிது கோயில் சந்நிதியிலோ, அல்லது பஜனை மடத்தின் முன்போ கூடி ஸ்ரீராம நாம மந்திரத்தை ஐந்து நிமிஷம் ஜபம் செய்து,
பிறகு, “ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்” என்னும் பதின்மூன்று அக்ஷரங்கள் கொண்ட மந்திரத்தை, ஒருவர் முதலில் சொல்ல, எல்லோரும் அதைப் பின்பற்றிச் சொல்லி நம் பகுதி காலனி அல்லது தெரு அல்லது கிராமம் சுற்றி வந்து பஜனை செய்தல் மிகவும் நல்லது. ஸ்ரீ ராமாவதாரத்தில் (கம்ப ராமாயணத்தில்) ஸ்ரீ ராம
பட்டாபிஷேகத்தை வர்ணிப்பதாக உள்ள கீழ்க்காணும் பாக்களைப் பாராயணம் செய்து, அல்லது ஸம்ஸ்கிருதம் படித்தவர்கள் எவரேனும் இருந்தால், அவரைக் கொண்டு வால்மீகி ராமாயணத்தில் உள்ள ஸ்ரீராம பட்டாபிஷேக ஸர்க்கத்தைப் பாராயணம் பண்ணும்படி செய்ய வைத்து கேட்பது நல்லது.
மங்கள கீதம் பாட
மறையொலி முழங்க
வல்வாய்ச்
சங்கினம் குமுறப் பாண்டில்
தண்ணுமை யொப்பத் தாவில்
பொங்குபல் லியங்கள் ஆர்ப்பப்
பூமழை பொழிய விண்ணோர்
எங்கள் நாயகனை வெவ்வேறு
எதிர் அபிடேகஞ் செய்தார்.
மாதவர் மறைவ வாளர்
மந்திரக் கிழவர் முற்று
மூதறி வாளர் உள்ளஞ்
சான்றவர் முதனீ ராட்டச்
சோதியான மகனு மற்றைத்
துணைவரும் அனுமன்
தானும்
தீதிலா இலங்கை வேந்தும் – பின்
அபிடேகஞ் செய்தார்.
சித்தமொத் தனன்என் றோதுந்
திருநகர்ச் செல்வ மென்ன
உத்தமத் தொருவன் சென்னி
விளங்கிய உயர்பொன் மௌலி
ஒத்துமெய்க் குவமை கூர
ஒங்குமூ வுலகத் தோர்க்குந்
தத்தம் உச்சியின்மேல் வைத்தது
ஒத்தெனத் தளர்வு தீர்ந்தார்
(கம்ப ராமாயணம் : யுத்த
காண்டம் திரு அபிடேகப் படலம்)
‘ராம பிரானின் சிரத்தின் மேல் பொன்கிரீடம் விளங்கியது கண்டு, மூவுலகிலும் உள்ள மக்களும் தத்தம் சிரமேல் பொற்கிரீடம் வைக்கப்பட்டது போலவே எண்ணி மகிழ்ந்தார்கள் என்பது கடைசிச் செய்யுளின் கருத்து.
நாட்டில் உள்ள எல்லா மக்களிடையேயும் தெய்வ பக்தியும்,
நன்னடத்தையும் வேரூன்றி வளரவேண்டும் என்று எல்லோரும் ஸ்ரீ ராமநவமியன்றும், மறுநாள் புனர் பூஜையிலும், ஸ்ரீராம சந்திர மூர்த்தியைப் பிரார்த்தித்து கொள்ள வேண்டும்.
ஜெய் ஶ்ரீராம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
From dheivathinkural.wordpress.com/2014/07/01/%e0…

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 10
#இறந்தகுழந்தையை_உயிர்ப்பித்த_ராமநாமம்
கோபன்னா என்பவர் சிறந்த ராம பக்தர். மிகவும் வசதியான குடும்பத்தில் பிறந்தவர். வருடாவருடம் ஸ்ரீ ராம நவமியை மிக விமரிசையாகக் கொண்டாடுவார். கோபன்னா நடத்தும் ஸ்ரீ ராம‌நவமி உற்சவம் என்றால் ஏராளமான பாகவதர்கள்‌ வந்துவிடுவர். பத்து நாள்களுக்கு இரவு Image
பகல்‌ பாராமல் பஜனை நடந்துகொண்டேயிருக்கும். வருபவர்கள்‌ அனைவருக்கும் உணவுப் பந்தி நடந்துகொண்டே இருக்கும்.
கோபன்னாவுக்கேற்ற குணவதி அவர் மனைவி. ஒரு சமயம் #ஸ்ரீராமநவமி உற்சவத்தில் காலை பஜனை நடந்து கொண்டிருந்த சமயம், அன்னத்தை வடித்து வடித்து சமையலறையில் உள்ள முற்றத்தில் ஒரு
தொட்டியில் கொட்டி வைப்பது வழக்கம். உறங்கிக் கொண்டிருந்த ஒன்றரை வயதுக் குழந்தையை ஓரமாக சமையல் அறையிலேயே விட்டிருந்தாள் கோபன்னாவின் மனைவி. நைவேத்ய சமயம் வந்துவிட்டதா என்று பார்க்க கூடத்திற்குச் சென்றார். மிக உற்சாகமாக பஜனை நடந்து கொண்டிருந்தது. தன்னை மறந்து சிறிது நேரம் அங்கேயே
Read 17 tweets
Apr 10
#மகாபெரியவா
மகாபெரியவாளின் உன்னத பக்தர்களில் கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளும் ஒருவர். வேதங்களை நன்கு கற்றுணர்ந்தவர். மகானின் அருகில் சற்று எட்ட அமர்ந்து வேதபாராயணம் செய்து கொண்டு இருப்பவர். இப்போது அவருக்கு வயது என்பத்தைந்துக்கு மேல் இருக்கலாம். பல வருடங்களுக்கு முன் மகானின் அருகே Image
அமர்ந்து சாமவேதத்தை பாராயணம் செய்து கொண்டு இருந்தார். மகான் வழக்கம் போல் பக்தர்களுக்கு ஆசியும் பிரசாதமும் வழங்கிக் கொண்டு இருந்த நேரம். ஒரு பக்தர் கையில் ஒரு சிறிய பையுடன் வரிசையில் நின்று கொண்டு இருந்தார். அவரது முறை வந்தபோது மகானிடம் ஆசிபெற்று பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அவர்
நகர முற்பட்டபோது, பெரியவரின் குரல் அவரை நிறுத்தியது. "எனக்கு கொடுக்கணும்னு கொண்டு வந்ததை கொடுக்காம போறியே"
பக்தர் திடுக்கிட்டு நின்றார். அவர் கையில் இருந்த பையில் அவர் தோட்டத்தில் விளைந்த நெல்லிக் கனிகள். அவை மகானுக்கு கொடுக்கவே அவர் கொண்டு வந்தார்.
"இங்கே நிறைய ஆரஞ்சு, ஆப்பிள், Image
Read 12 tweets
Apr 10
#ஶ்ரீகுர்ய்ஷ்ணன்கதைகள் #ஶ்ரீராமநவமி
'ராம நாமா சொல்லும்பொழுது ஏற்படும் தூய அதிர்வானது காற்றில் பதிந்துள்ள மனிதர்களின் தீய எண்ணங்களால் ஏற்பட்ட தீய அதிர்வுகளை, தீய சக்திகளை, நோய்க்கிருமிகளை அழித்துவிடும். ராம நாமா அதிர்வு நமது ரத்தத்தில் உள்ள கோபம், வெறுப்பு, பொய், பொறாமை, சூது Image
போன்ற தீய குணங்களின் தன்மைகளுக்கு காரணமானவற்றை அழித்து, ராம நாம அதிர்வு சாந்தம், பொறுமை, பணிவு, உண்மை, தூய்மைக்கு காரணமான ராமரின் குணங்களை ஏற்படுத்தும்.('யத் பாவோ தத் பவதி’-எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்!) அகில உலகையும் வியாபித்து காக்கும் விந்தை மிக்கதோர் நுண்ணிய சக்தியே ராம்
ராம் அனைத்திலும் உள்ளான், அனைத்தும் ராமில் உள்ளன. ராம் ஒருவனே உண்மையான பேரன்பே வடிவான உணர்வுமய வஸ்து. பிரம்மம் என்பதும் அவனே! எண்ணம், மனம், செயல், உள்ளம், உயிர் அனைத்தும் ராமில் ஒடுங்கவேண்டும். இடை விடாது ராம நாமத்தை ஜெபித்து வந்தால் அழியா இன்பத்தை ஶ்ரீராமன் அருள்வான் என ஸ்வாமி
Read 8 tweets
Apr 9
#மகாபெரியவா பிராமணர்கள் கடல் கடந்து போகக் கூடாது என்பது அந்தக் கால ஆச்சாரம். அப்படி கடல் கடந்து வெளிநாடு போய் வந்தவர்களுக்கு காஞ்சி மஹா பெரியவர் தன் கையால் தீர்த்தம் கொடுப்பது இல்லை. ஒரு தடவை எம்.எஸ். சுப்புலக்ஷ்மி சதாசிவம் தம்பதிகள், கச்சேரிக்காக வெளிநாடு போய் விட்டு திரும்பி
வந்தவுடன் நேராக காஞ்சி மஹா பெரியவரை தரிசனம் செய்ய வந்து விட்டார்கள். அவர்கள் வந்த அந்த வேளையில் பெரியவர் தன் கையாலேயே பக்தர்கள் எல்லாருக்கும் தீர்த்தம் கொடுத்துக் கொண்டிருந்தார். சற்றும் யோசிக்காமல் சதாசிவமும் தீர்த்தம் வாங்க வரிசையில் நின்று விட்டார்.
[அவருக்கு இந்த ஆச்சாரம்
அனுஷ்டானம் அந்த சமயத்தில் எப்படி மறந்து போனதோ தெரியவில்லை!] சதாசிவத்துக்கு பின்னால் ரா.கணபதி என்ற ஆன்மீக எழுத்தாளர் நின்று கொண்டிருக்கிறார். [இவர்தான் காஞ்சிப் பெரியவர் சொல்லச் சொல்ல அவற்றைத் தொகுத்து "தெய்வத்தின் குரல்” என்ற நூலை எழுதியவர்] காஞ்சி மடத்துக்கு ரொம்ப நெருக்கமான
Read 10 tweets
Apr 9
#கர்மா பலவகை. இது நாள் வரை எத்தனையோ பிறவிகளை நாம் எடுத்திருப்போம். அத்தனைப் பிறவியிலும் பலப் பல பாவ புண்ணியங்களை சேர்த்து வைத்துள்ளோம். அந்தத் தொகுப்பின் பெயரே #சஞ்சித_கர்மா
அதன் ஒரு பகுதியை இப்பிறவியில் அனுபவிக்கக் கொண்டு வருகிறோம். அதுவே #பிராரப்தக்_கர்மா இந்த பிராரப்தக் கர்மா
நிறைவடையாமல் இப்பிறவி முடிவடையாது, இவ்வுலக வாழ்க்கையிலிருந்தும் விடுதலைப் பெற முடியாது. யாராலும் யாருக்கும் எந்த கர்மாவையும் ஏற்படுத்தவோ உருவாக்கவோ முடியாது. அவரவர்கள் செய்வினையின் பயனாலேயே அவரவர்கள் அனுபவம் மற்றும் வாழ்க்கை அமையும். துக்கமும், சந்தோஷமும், சண்டையும், சமாதானமும்
ஏற்றமும், இறக்கமும், வெறுப்பும், ஆதரவும் அவரவர் கர்ம கதியே. இதைத் தான் தீதும் நன்றும் பிறர் தர வாரா என நம் மதம் போதிக்கிறது. இதைத் தவிர #ஆகாம்ய_கர்மா என்று ஒன்றுள்ளது. அது கொடுக்கப் பட்டுள்ள இந்தப் பிறவியில் நாம் செய்யும் நல்ல, கெட்ட செயல்களால் புதிதாக ஏற்படுவது. நம் நல்ல கெட்ட
Read 8 tweets
Apr 9
#MahaPeriyava
Professor Robinson was the President of the South Carolina University, U.S.A. He was trained in Greek philosophy. A team of professors from many departments of some of the universities of the U.S.A. came to Chennai. I told Robinson, "You must go to Kanchi and have
darshan of Periyavar.” That was all! His eyes blossomed. He narrated the wonderful story of their visit to Kanchi on the very same day. They roamed Kanchi in small groups, knowing nothing about Sankara Matham or Periyavargal. Robinson and two others came accidentally opposite the
entrance to Sankara Matham. They entered, thinking it was a temple. He narrates what happened there, himself: "The cot was a charpoy fitted with ropes. A man of matured old age was sitting on it. A large crowd around him. We did not understand anything. Suddenly a boy came
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(