இந்தியை தமிழர்கள் மீது திணிக்கும் முயற்சி நடக்கும் போதெல்லாம் ஒரு மொழி என்பதற்காக மட்டும் இந்தியை நம் முன்னோர்கள் எதிர்க்கவில்லை. அதன் பின்னால் இருக்கும் ஆதிக்கத்திற்காகத்தான் எதிர்த்தார்கள்.
உதாரணமாக 1920இல் யங் இந்தியா பத்திரிக்கையில் எழுதிய காந்தி
”திராவிடர்கள் சிறுபான்மையினர். ஆகவே இந்தியாவில் இருக்கிற பிறபகுதிகளில் உள்ளவர்கள் திராவிடர்களுடன் பேசவேண்டுமென்றால் அவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றை கற்றுக்கொள்ளவேண்டும். அது சிரமம்.
அதற்கு பதிலாக திராவிடர்கள் தேசிய மொழியான இந்தியை கற்றுக்கொள்ளலாம். அதுதான் தேசிய பொருளாதாரத்திற்கு உகந்தது”.
இதில் மொழியை கற்றுக்கொள்ளுங்கள் என்றோடு முடிந்திருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் காந்தி ’தேசிய பொருளாதாரத்திற்கு நல்லது’ என்கிறார். அது என்ன தேசிய பொருளாதாரம்.
பனியாக்கள் (மார்வாடி குஜராத்திகள்) இந்தியா முழுமைக்கும் இருக்கிற மக்களோடு வியாபாரம் செய்ய அனைத்து மக்களும் ஒரே மொழி பேசக்கூடியவர்களாக இருந்தால் தங்களுக்கு செல்வம் கொழிக்கும் என்பதற்காகத்தான் ஒரே மொழி என்பதனை காந்தி வழியாக பனியா கும்பல் முன்னெடுத்தது.
ஏன்னெறால் 1917இல் தான் முதன்முதலாக இந்தியை இந்தியா முழுமைக்கும் பரப்ப வேண்டுமென்று முடிவை காந்தி எடுக்கிறார். குறிப்பாக தென்னிந்தியாவில் பரப்பவேண்டும். அப்படி காந்தி முடிவெடுத்த கூட்டம் நடந்தது குஜராத் மாநிலம் புரொச் மாவட்டத்தில் தான்.
இதிலிருந்தே இந்தியை காந்தி யாருடைய நன்மைக்காக புகுத்த நினைத்தார் என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
இன்னும் சொல்லப்போனால் இந்தியை தென்னிந்தியாவில் பரப்ப 1917இல் முடிவெடுத்த காந்தி, அதன்படி சென்னையில் 1918இல் ’தட்சிண பாரத இந்தி பிரச்சார சபையை’ உருவாக்கினார்.
இந்த அமைப்பின் மூலம் இந்தி பரப்பல் இன்றுவரை தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுவருகிறது. அதுவல்ல செய்தி, இந்தியை பரப்ப 1920 ஜீன் மாதத்தில் திருநெல்வேலியில் நடந்த முதல் கூட்டத்திற்கு அப்போதே 50,000ரூபாய் மார்வாடிகள் கொடுத்தனர்.
எச்சிகைகளில் கூட ஈ ஓட்டாத மார்வாடிகள் அப்போதே இவ்வளவு பெரிய தொகையை கொடுத்தார்களென்றால் அவர்களுக்கு லாபமில்லாமல் இந்த காரியத்தை எப்படி செய்வார்கள்.
இப்போது காந்தி சொன்ன தேசிய பொருளாதாரத்தையும், மார்வாடி குஜராத்திகளின் பல்கி பெருகிய வியாபாரத்தையும் இணைத்து பார்த்தால் இந்தி என்கிற மொழிக்கு பின்னால் இருக்கக்கூடிய பனியாக்களின் பொருளாதாரம் நலன்களை புரிந்துகொள்ளமுடியும்.
இப்படி பனியாக்களுக்கான பொருளாதார காரணங்கள் ஒருபக்கமென்றால் இன்னொரு பக்கம் ஆர்.எஸ்.எஸ் இந்துமகாசபா போன்றவர்களின் ஆரிய மயமாக்களுக்கு இந்தி தேவையும் இருந்தது.
ஏனென்றால் இந்தி மொழியில் அதிகபடியான சமஸ்கிருத சொல்லாடல்கள் இருப்பதால் இன்று இந்தியை புகுத்திவிட்ட்டால் நாளடைவில் சமஸ்கிருதத்தை அனைவரும் மீதும் திணித்து விடலாமென்று கணக்குபோட்டார்கள். ஆர்.எஸ்.எஸின் தலைவர் கோல்வாக்கர் தங்களது மொழிக்கொள்கையாக சொன்னது.
“தொடர்பு மொழிக்கான தீர்வு என்றவகையில் சமஸ்கிருதம் அந்த இடத்தை பிடிக்கும் வரையில் வசதிக்காக இந்திக்கே நாம் முன்னுரிமை கொடுக்க வேண்டுமென்றார்”
இப்படி இந்தி என்ற ஒரு மொழிக்குப்பின்னால் அரசியல் பொருளாதார ஆதிக்க காரணம் இருப்பதாலேயே பெரியார் உள்ளிட்ட நம் முன்னொர்கள் ஆதிக்க இந்தி ஒழிக என்றும் அன்னை தமிழ் வாழ்க என்றும் முழங்கினார்கள்.
இந்த வரலாற்றையெல்லாம் சொல்லாமல் வெறுமன இந்தி ஒழிக என்றால் இன்று இருப்பவர்களுக்கு ஒரு மொழியை கற்றுக்கொள்ள ஏன் இவர்கள் தடையாக இருக்கிறார்களென்ற தட்டையான புரிதல் தான் ஏற்படும்.
ஆகவே இந்தி மொழி எதிர்ப்பு என்பது நமது பொருளாதாரத்தையும், பண்பாட்டையும் காக்கும் போர். இதில் கிஞ்சித்தும் தமிழர்கள் பின்வாங்கக் கூடாது. ஒருவேளை பின்வாங்கினால் தமிழர்கள் என்ற இனம் இருந்ததாக வரலாறு பதிவு செய்யும் நிலைமை உருவாகும்.
2014 ஏப்ரல் தேர்தலுக்கு இரண்டு வாரத்துக்கு முன்னாடி ஐயா.நெடுமாறன் நடத்திய நிகழ்ச்சியில் தங்களை இணைத்து கொண்ட நாடகம் இது. இந்த கூட்டம் நடந்து 10-15 நாட்களில் அதிமுகவிற்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை சீமான் தொடங்கினார்.
அந்த பிரச்ச்சார பயணத்தில் மே17 இயக்கத்தையும் இணைக்கக் கோரி கேட்டனர். அதிமுக ஆதரவு பிரச்சாரம் என்பதை அறிந்தவுடன் நாம் மறுத்தோம். அதிலிருந்து மே17 இற்கு எதிரான தெலுங்கர் எனும் அவதூறுப் பிரச்சாரத்தை நாதக தொடங்கியது.
👇🏼
அதிமுகவிடம் பேரம் பேச தம்மிடம் இந்த அமைப்புகள் இருப்பதாக காட்டிக்கொள்ளவே இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்தது அம்பலமானதால் இவர்களிடமிரிந்து மே17 விலகியது. ஓட்டுப்பொறுக்கும் காண்ட்ராக்ட் பெறுவதற்காக சீமான் நடத்திய நாடகம் இது.
"ஈழத்தமிழரை இலங்கைத் தமிழர் என்று சொல்லும் வழக்கைத் தவிர்க்கக் கோரும் வேண்டுகோளாகத் தான் தோழர் திருமுருகன் முன்வைத்தார்.
போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும்; இந்த மேடையில் வீற்றிருக்கும் தமிழ்நாட்டின் ஈழ ஆதரவு சக்திகளின் பங்களிப்புப் பற்றி வரலாறு பேசும்."
1/
"காங்கிரஸ் ஆனாலும், பாஜக ஆனாலும் ஈழத்திற்கு எதிராகத்தான் இந்தியரசு இருக்கிறது என்பதை, இன்றளவும் தனி ஈழக் கோரிக்கையில் எள்ளளவும் மாற்றுக் கருத்தின்றி பயணிக்கும், இன்று ஒரே மேடையில் கூடியிருக்கும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஈழ மக்களுக்கான நிரந்தரத் தீர்வாக நாங்கள் கேட்பது,"
2/
"தனித்தமிழ் ஈழம், இனப்படுகொலைக்கான சர்வதேச நீதிமன்ற விசாரணை.
இதனை மறுத்து 13 ஆம் சட்டத்திருத்தை நடைமுறை முறைப்படுத்த முயலும் கயமைத்தனத்தை இம்மாநாடு முற்றிலுமாக நிராகரிக்கிறது."
தந்தைப் பெரியாரால் "சுதந்தரத் தமிழ்நாடு ஏன்?" என்று 'குடியரசு வெளியீடு' மூலம் 1960ஆம் ஆண்டில் வெளியிட்டப்பட்ட நூலின் நிமிர் வெளியீட்டின் மறுபதிப்பிலிருந்து.
நாங்கள்தானே இந்த ஜாதி இழிவு, மதம், சாஸ்திரம், புராணம் இவைகளைப் பற்றியும் இந்தப் பார்ப்பனர்கள் அக்கிரமங்களைப் பற்றியும் துணிந்து எடுத்துச் சொல்லிக்கொண்டு வருகிறோம். மற்றவர்கள் யாரும் இதைப் பற்றி சிந்திப்பதே இல்லை.
2/n
அந்தக்கவலை இருப்பதாக கூட தெரியவில்லையே. இப்போது என்கிற சட்டம் இந்து லா(Hindu Law) என்றால் அது மனு தர்மம்தான். அதேபோல் இந்திய அரசியல் சட்டம் என்றால் அதுவும் மனு தர்மம் தான்.
3/n
“என் பிறவி காரணமாக, என் இழிவுக் குக் காரணமாக இருக்கும் ஜாதியை ஒழிப்பதும், என் இன மக்களாகிய தமிழர்களுடைய, என்னுடைய, தாய்நாடான தமிழ்நாட்டைப் பார்ப்பன பனியா அடிமைத் தளையிலிருந்தும், சுரண்டலிலிருந்தும் மீட்டுச் சுதந்திரமாக வாழவைக்க..
👇🏼
..வழி செய்வதுமான ‘தனித்தமிழ்நாடு’ பெறுவது என் உயிரினும் மேலான கொள்கை!”
இது பெரியார் முழங்கியது. சாதியத்தால் சனாதனப் பிடியில் ஊரிப்போன தமிழர்க்கான நாடாக சாதியற்ற சமவுடைமை (Socialist) நாட்டையே பெரியார் முன்வைத்தார்.
👇🏼
பிற்போக்குத்தனம் ஊறிப்போன இந்தியத் துணைக்கண்டத்தின் தேசியயினங்களின் விடுதலைக்கு, வெறும் அரசியல்ப்புரட்சியால் இன விடுதலையடைந்திட முடியுமென்ற பொதுடைமைத்துவம், உதவாது; அதற்குமுன் சாதியிலிருந்து விடுதலைப் பெற்றால் மட்டுமே சமவுடைமையை நோக்கிச் செல்ல முடியுமென்றார்.
விடுதலைப்புலிகளின் ஈழவிடுதலை அரசியலுக்கும் இந்தியாவிலுள்ள தமிழ்நாடு அரசியலுக்கும் தொடர்பில்லை என்போர் கவனத்திற்கு!
தங்களுக்கு புவிஅரசியலின் மேல் நாட்டம் இல்லாமல் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், இந்துத்துவ பாசிசத்தின் அகோர வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இது மிக அவசியமானது.
👇🏼
ஜூன் 1-ஆம் தேதி திமுகவை மிரட்டும் தொனியில் ராஜபக்சே அரசுடன் இணக்கமாகப் போகச்சொன்ன சுப்பிரமணியசாமியின் பதிவை கவனிக்க. இதற்கு பின்னர் நடந்தேறியுள்ள அரசியல் நகர்வுகளைப் புரிந்துகொள்வதென்பது, இந்துத்துவ பாசிசத்தின் அதிகார முகமான இந்தியப் பார்ப்பனியத்தின் நோக்கத்தை
👇🏼
..எதிர்ப்பதற்கான அடிப்படைத் தேவை என்ற இடத்தில்தான், தலைவர் பிரபாகரன் மீதான அவதூறுகளை உடைக்க வேண்டிய இடம் வருகிறது. புலிகளை விமர்சனமே செய்யக்கூடாதா என்னும் கேள்வி எழும் எனில், யார் பார்வையில் அதை விமர்சனம் செய்கிறீர்கள் என்பதே அதற்கு பதில்.