#பைரவர் சிவனின் 64 வடிவங்களில் மகாஞானியான, ரௌத்ர தோற்றம் கொண்டவர். எல்லா சிவன் கோவில்களிலும் இருப்பார். சிவன் சொத்துக்களை காவல் காக்கும் அதிகாரியும் இவரே. நாயை வாகனமாகக் கொண்டு அனேகமாக திகம்பரராக காட்சி தருபவர். அஷ்டமி திதி இவரை பூகிக்க உகந்த நாள், அதிலும் தேய்பிறை அஷ்டமி திதி.
அன்று நம் குறை தீர வேண்டிக் கொண்டு ஸ்ரீ காலபைரவருக்கு விரதம் மற்றும் வழிபாடு நடத்தினால் மிக சிறப்பான பலன்களை வாரி வழங்குவார். தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற ஆடை அணிந்து, சிகப்பு நிற மலர்களால் அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றி வர மிகவும் நல்ல பலன்களை பெறலாம்.
ராகுகாலத்தில் 11 நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ருத்ராபிஷேகம் செய்தல், வடைமாலை சாற்றி வழிபடுவது நல்லது. தினமும் ஸ்ரீ காலபைர் காயத்திரி மந்திரம் சொல்லி அர்ச்சனை செய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் நடக்கும். அவரை வணங்குவதால் வறுமை, பகைவர்களின் தொல்லை, வியாபார
முன்னேற்றம், தன லாபம், பயம் நீங்கி அஷ்ட ஐஸ்வர்களும் கிடைக்கும். எலுமிச்சம்பழத்தை பைரவமூர்த்தியின் காலில் வைத்து அர்ச்சித்து வீட்டுக்கு கொண்டு போனால் தீராத வியாதிகள் தீரும். வீட்டை சூழ்ந்திருக்கும் பீடைகள் ஒழியும். கெட்ட அதிர்வுகள் விலகும் என்று சொல்லப்படுகிறது. மன அமைதியே
இல்லாதவர்களுக்கு பைரவரே நல்ல துணை. செல்வவளம் பெருக சொர்ணாகர்ஷன பைரவரை வணங்கலாம். எட்டு தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவ வழிபாடு செய்தால் எந்தத் துன்பமானாலும் விலகி வாழ்க்கையில் சுபிட்சம் உண்டாகும் என்பது ஆன்றோர்கள் வாக்கு. தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால்
தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்ப எண்ணெய், விளக்கு எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.
ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள்
நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம். நம்முடைய முன்னோர்கள் வழிபாட்டினை தேய்பிறை தேதிகளில்
துவங்கி வளர்பிறை தேதிகளில் முடிப்பார்கள். இதுவே வழிபாட்டின் ரகசியம் ஆகும். தேய்பிறை தேதிகளில் நமது கர்ம வினைகள் அனைத்தும் அழியத் தொடங்கும். பின்னர் வளர்பிறை தேதிகளில் நமது தேவைகள் கிடைக்க ஆரம்பிக்கும். இதனை எந்த எல்லா கடவுள் வழிபாட்டிலும் பின்பற்றலாம். வளர்பிறை அஷ்டமி திதியில்
சனிக்கிழமையும் சேர்ந்து வருவது ஒரு விசேஷமான நாளாக கருதப் படுகிறது. இந்நாளில் மேற்கொள்ளும் விரதங்களும், வழிபாடுகளும் நம் கஷ்டங்களை நீக்கும். குறிப்பாக கடன் நீங்கி செல்வ செழிப்பு, பிள்ளை வரம், பாவங்கள் தீர, தோஷங்கள் கழிய செய்ய வேண்டிய எளிதான பூஜையின் முறை தான் இது.
வளர்பிறை
அஷ்டமியில், திதி மூடிய விரதம் இருந்து உண்ணாமல், உறங்காமல் சைவ முறையில் மகாலட்சுமியையும், பைரவரையும் நினைப்பவர்களுக்கு கேட்ட வரம் கேட்டபடி நிச்சயம் கிடைக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. 8 வளர்பிறை அஷ்டமி திதிகளில் 8 அகல் விளக்குகள் ஏற்றி வந்தால் மடியில் கனம் உண்டாகும்.
அதாவது குழந்தை வரம் வேண்டி காத்திருப்பவர்களுக்கு இந்த அஷ்டமி வளர்பிறை திதியில் ஆரம்பித்து எட்டு வாரங்கள் இதே போல மகாலட்சுமி வழிபாடு செய்து வர கரு உண்டாகும். மகாலட்சுமி படம் அல்லது அஷ்டலட்சுமிகளின் திரு உருவத்துடன் கூடிய படங்கள் இருந்தால் அதனை வாசம் மிகுந்த மல்லிகை மலர்களால்
அலங்கரித்து 8 சிறிய அளவிலான மண் அகல் விளக்குகளில் நெய் ஊற்றி அதில் சுத்தமான வெள்ளை நிற திரியை போட்டு, சர்க்கரை பொங்கல் நிவேதனம் வைத்து, செய்த பாவங்கள் தொலைய பிள்ளை பேறு உண்டாக வேண்டும் என்று மனதில் நினைத்து தீபம் ஏற்றி, மகாலட்சுமி 108 நாமாவளிகளை உச்சரித்து வந்தால் 8 வாரத்திற்குள்
நல்ல செய்தி கிடைக்கும். கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தவர்களுக்கு இந்த வளர்பிறை அஷ்டமி உடன் கூடிய சனிக்கிழமை கிழமையில் பைரவ பூஜை செய்வதன் மூலம் நல்ல நிவாரணம் கிடைக்கும். அசைவம் தவிர்த்து, திட உணவுகளை நீங்கி முடிந்தால் திரவ உணவுகளை மட்டுமே எடுத்துக் கொண்டு விரதம் இருக்கலாம்.
முழுநேர விரதம் இருக்க முடிந்தவர்கள் முழுநேரமும் சாப்பிடாமல் விரதம் இருக்கலாம்.
ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் படத்தை வைத்து 108 ஐந்து ரூபாய் நாணயங்கள் அல்லது குபேர நாணயங்களை வைத்தும் சிவப்பு நிற ரோஜா, செம்பருத்தி, செவ்வரளி போன்ற செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சிக்கலாம். நைவேத்தியமாக தயிர்
சாதம் படைத்து வழிபட்டு வரலாம்.
பைரவ விரதம் இருந்து கடன் தீர மிளகு தீபம் ஏற்றுபவர்கள் வீட்டில் அதை செய்யக்கூடாது. பைரவர் சன்னிதிக்குச் சென்று அங்கு சிவப்பு நிறத்தில் திரி வைத்து உள்ளே மிளகு போட்டு தீபம் ஏற்றுவது முறையாகும். இதற்கும் எட்டு தீபங்கள் வீதம், மிளகு தீபம் ஏற்றி வந்தால்
8 வாரத்திற்குள் தீராத கடன் பிரச்சனைகள் முடிவுக்கு வரும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது. பாவங்கள், முன்வினை கர்மாக்கள் தீர்வதற்கு தொடர்ந்து வளர்பிறை, தேய்பிறை அஷ்டமி நாட்களில் பைரவரை வணங்கி அவருடைய விபூதியை வீட்டில் வைத்து தினமும் பூசிக் கொண்டால் வாழ்க்கையில் திருப்பம்.
உண்டாகும்.
செய்து பாருங்கள் பலன் கிடைக்கும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#அழகர்_ஆற்றில்_இறங்கும்_வைபவம் எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும்
சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் #அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும். மதுரைக்கு
வடக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார். பூசாரி தினமும் தனது 3 வயது மகனுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தந்தை
கோவிலுக்குள்ளே தனது கடமைகளைச் செய்யும்போது, மகன் கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் கோவில் வராந்தாவில் அப்பா தூங்குவதும், பையன் அருகில் விளையாடுவதும் வழக்கம். பாதி மூடிய கண்களுடன் தன் மகன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்.
குட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிய
வந்து சிறுவனுடன் விளையாடுவது வழக்கம். குட்டி கிருஷ்ணன் மற்ற சிறுவர்கள் விளையாடுவது போல சிரித்து, கத்தி, ஓடி ரசித்து, மகிழ்ந்து இந்தச் சிறுவனுடன் விளையாடுவான். இந்த நடைமுறை தினமும் பின்பற்றப்பட்டது. ஒருமுறை விஷூவுக்கு முந்தைய நாளில், தந்தை கோவில் வளாகத்தையும் உட்புறத்தையும்
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்தது #சித்ராபௌர்ணமி. (16.4.2022) தமிழ்ப் புத்தாண்டில் வரும் முதல் முழுநிலவு நாள் என்பதால் முதல் சிறப்பு. இன்று தோன்றும் சந்திரன் 64 கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி மேலும் சிறப்புப் பெறுகிறது. எமலோகத்தில் நம்
புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திர குப்தனின் அவதார நாள் இன்று. சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவர் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். யமனுக்கு உதவியாக மானிடர்களின் பாவ புண்ணிய கணக்கைத் துல்லியமாக
பதிவிட படைக்கப்பட்டவர். மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால்
#MahaPeriyaba In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and digested, but it includes everything
that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’. A number of our scriptures talk about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’. Kanchi Paramacharya, Sri Chandrasekharendra Saraswati Swami
took sannyasam and ascended the throne of Kanchi Kamakoti Peetham at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often astonishingly simple: a small handful of
#MahaPeriyava
There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years go. The bank officials of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and
expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their own building in front of the Matham whatever shops were required to be vacated for this purpose, alternate
places were to be given to the shopkeepers without fail. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood before Sri Maha Periyava and said, Today is our wedding day. Maha Periyava should bless us They prostrated to him.
#தர்மம்#அதன்_அளவுகோல்
தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.
வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர்
சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.
இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார், ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் என்று நினைத்து. அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான