#நாராயண_நாமம் இன்பம், செல்வம், புகழ், மற்றும் இவற்றிற்கெல்லாம் மேலான மோக்ஷத்தையும் தரவல்லது. ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தில் ஒரே ஒரு முறை மட்டுமே நாராயண நாமம் வருகிறது. இதற்கு வியாக்யானம் கூறும் ஸ்ரீ பராசர பட்டர் இது ஒரு குஹ்ய (ரகசிய) நாமம் என்று கூறுகிறார். இந்த நாமத்தின் அர்த்தத்தை
குரு முகமாக அறிய வேண்டும் என்கிறார். அர்த்தம் தெரியாவிட்டாலும் உள்ளன்போடு செய்யும் நாம சங்கீர்த்தனம் நமக்கு உரிய பலனை அளிக்கும். அதற்கு #அஜாமிளன் சரித்திரமே ஒரு நல்ல எடுத்துக்காட்டு. ஸ்ரீமத் பாகவதத்தில் 6வது காண்டத்தில் அஜாமிளோபாக்யனம் கூறப்பட்டுள்ளது. அஜாமிளன் பிறப்பால் அந்தணர்
குலத்தை சார்ந்தவர். ஒரு முறை யாக யக்ஞங்களுக்காக தர்ப்பை முதலியவற்றை சேகரிக்க அஜாமிளன் காட்டுக்கு சென்றார். அங்கே ஒரு தாசியை கண்டு அவளை மோகித்து, தன்னிலை மறந்து, அவளுடனேயே வாழ்கிறார். அந்த தாசிக்கும் அஜாமிளனுக்கும் 10 பிள்ளைகள் பிறக்கிறார்கள். முன் வினை பயனால் தனது கடைசி பிள்ளைக்க
நாராயணன் என்று பெயரிட்டார். கடைசி பிள்ளையின் மேல் பாசம் வைத்த அஜாமிளன் தன்னை அறியாமல் நாராயணா என்று பல முறை கூறுகிறார். கடைசி காலத்தில் அஜாமிளனின் உயிரை கொண்டு செல்ல யம தூதர்கள் வருகிறார்கள். யம தூதர்களை கண்ட பயத்தில் அஜாமிளன் தன் கடைசி மகனை நினைத்து நாராயணா என்றழைக்கிறார்.
நாராயணா நாமத்தை சொன்னவுடன் வைகுண்டத்திலிருந்து பகவான் விஷ்ணுவின் தூதர்கள் வந்து யம தூதர்களை தடுத்தார்கள். யம தூதர்கள் அஜாமிளன் செய்த பாவத்தின் பட்டியலை எடுத்து கூறினார்கள். அதற்கு விஷ்ணு தூதர்கள் அனைத்து பாவங்களையும் ஸ்ரீ நாராயண நாம ஜபம் போக்கி விட்டதை எடுத்துரைத்து அஜாமிளன் உயிர
காக்கிறார்கள். இதைப் பார்த்த அஜாமிளன், பகவான் நாமத்தின் மகிமையை உணர்ந்து, தன் மீதி நாட்களை ஹரித்வாரில் பகவன் நாம சங்கீர்த்தனத்தில் கழித்து பிறகு வைகுண்ட பதவி அடைகிறார். விஷ்ணு தூதர்கள் தங்களை தடுத்த விஷயத்தை யமதர்மராஜனிடம் யம தூதர்கள் கூற, அதற்கு யமன் பகவான் விஷ்ணுவிற்கு தான்
கட்டுப்பட்டவர் என்றும், பகவானின் பக்தர்களை, பகவானின் நாமத்தை கூறுபவர்களை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று யம தூதர்களுக்கு உரைக்கிறார். ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசியில் ஒரு ஸ்லோகத்தில்
'சங்கீர்த்ய நாராயணா சப்த மாத்ரம் விமுக்த துக்கா சுகினோ பவந்து'
என்று வருகிறது. இதன் பொருள், அது
பகவானின் நாமம் என்று தெரிந்து கூட சொல்ல வேண்டாம். நாரயணா என்ற சப்தமே நம் எல்லா துயரங்களையும் போக்க வல்லது. எப்படி ஒரு குழந்தை மழலை சொல்லால் கூறுவதை (அது தவறாக இருந்தாலும்) தாய் புரிந்து கொள்கிறாளோ அது போல் அவன் பெயரை நாம் தெரிந்து சொன்னாலும் தெரியாமலே சொன்னாலும் பகவான் அதை நாம
சங்கீர்தனமாக ஏற்று கொண்டு நமக்கு அருள் செய்கிறார்.
குலம் தரும் செல்வம் தந்திடும்* அடியார் படு துயர் ஆயின எல்லாம்*
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்* அருளொடு பெரு நிலம் அளிக்கும்*
வலம் தரும் மற்றும் தந்திடும்* பெற்ற தாயினும் ஆயின செய்யும்*
நலம் தரும் சொல்லை நான் கண்ட
கொண்டேன்* நாராயணா என்னும் நாமம்.
தினமும் ஸ்ரீமந் நாராயண நாமம் சொல்வதால் ஸ்ரீமந் நாராயணனின் அருளோடு ஸ்ரீமஹாலட்சுமியின் அருளையும் சேர்த்து பெறுவோம். ஒவ்வொரு பெளர்ணமி அமாவாசை வைகுண்ட ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவின் மலைக் கோவிலை சுற்றுவதால் நம் பாவம் குறைவதுடன் எண்ணற்ற செல்வமும் புகழும
மோஷமும் கிடைக்கும்.

ஜெய் ஸ்ரீராம்
சர்வம் ஸ்ரீகிருஷ்ணார்பணம்🙏🏾
மோக்ஷம்*

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 17
#அழகர்_ஆற்றில்_இறங்கும்_வைபவம் எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் ImageImageImageImage
சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் #அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும். மதுரைக்கு
வடக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
Read 25 tweets
Apr 17
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார். பூசாரி தினமும் தனது 3 வயது மகனுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தந்தை Image
கோவிலுக்குள்ளே தனது கடமைகளைச் செய்யும்போது, ​​மகன் கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் கோவில் வராந்தாவில் அப்பா தூங்குவதும், பையன் அருகில் விளையாடுவதும் வழக்கம். பாதி மூடிய கண்களுடன் தன் மகன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்.
குட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிய
வந்து சிறுவனுடன் விளையாடுவது வழக்கம். குட்டி கிருஷ்ணன் மற்ற சிறுவர்கள் விளையாடுவது போல சிரித்து, கத்தி, ஓடி ரசித்து, மகிழ்ந்து இந்தச் சிறுவனுடன் விளையாடுவான். இந்த நடைமுறை தினமும் பின்பற்றப்பட்டது. ஒருமுறை விஷூவுக்கு முந்தைய நாளில், தந்தை கோவில் வளாகத்தையும் உட்புறத்தையும்
Read 8 tweets
Apr 16
பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்தது #சித்ராபௌர்ணமி. (16.4.2022) தமிழ்ப் புத்தாண்டில் வரும் முதல் முழுநிலவு நாள் என்பதால் முதல் சிறப்பு. இன்று தோன்றும் சந்திரன் 64 கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி மேலும் சிறப்புப் பெறுகிறது. எமலோகத்தில் நம் Image
புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திர குப்தனின் அவதார நாள் இன்று. சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவர் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். யமனுக்கு உதவியாக மானிடர்களின் பாவ புண்ணிய கணக்கைத் துல்லியமாக ImageImage
பதிவிட படைக்கப்பட்டவர். மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால்
Read 11 tweets
Apr 16
#MahaPeriyaba In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and digested, but it includes everything
that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’. A number of our scriptures talk about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’. Kanchi Paramacharya, Sri Chandrasekharendra Saraswati Swami
took sannyasam and ascended the throne of Kanchi Kamakoti Peetham at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often astonishingly simple: a small handful of
Read 17 tweets
Apr 16
#MahaPeriyava
There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years go. The bank officials of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and
expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their own building in front of the Matham whatever shops were required to be vacated for this purpose, alternate
places were to be given to the shopkeepers without fail. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood before Sri Maha Periyava and said, Today is our wedding day. Maha Periyava should bless us They prostrated to him.
Read 11 tweets
Apr 16
#தர்மம் #அதன்_அளவுகோல்
தர்ம குணம் படைத்த மாமன்னன் போஜன். மகளின் திருமணத்திற்காக மன்னரிடம் பணம் பெற எண்ணிய ஒரு விவசாயி மன்னரை காண தலைநகர் புறப்பட்டார்.
வழியில் பசித்தால் உதவும் என்று சில ரொட்டிகளை பொட்டலம் கட்டிக் கொண்டார். வழி நெடுக திருமணத்திற்கு வேண்டிய அளவு பணம் தர மன்னர்
சம்மதிக்க வேண்டுமே என்று கடவுளை வேண்டிக் கொண்டே வந்தார். பசி எடுக்கவே, ஒரு குளக்கரையில் அமர்ந்து எடுத்து வந்த ரொட்டியை சாப்பிட கையில் எடுத்தார். மனதிற்குள் இந்த உணவைக் கொடுத்த கடவுளுக்கு விவசாயி நன்றி சொன்னார். அப்போது நாய் ஒன்று அவர் எதிரில் எலும்பும் தோலுமாக வந்து நின்றது.
இரக்கப்பட்ட விவசாயி ஒரு ரொட்டியை அதனிடம் வீசினார். ஒரே விழுங்காக உள்ளே தள்ளிய நாய், மீண்டும் ஆவலுடன் பார்த்தது. இரக்கப்பட்ட விவசாயி அத்தனை ரொட்டியையும் கொடுத்து விட்டார், ஒரு நாள் சாப்பிடாவிட்டால் உயிரா போய்விடும் என்று நினைத்து. அரசர் அவர் தகுதிக்கு தானம் கொடுத்தால், பிரஜையான
Read 10 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(