பௌர்ணமிகளில் மிக சிறப்பு வாய்ந்தது #சித்ராபௌர்ணமி. (16.4.2022) தமிழ்ப் புத்தாண்டில் வரும் முதல் முழுநிலவு நாள் என்பதால் முதல் சிறப்பு. இன்று தோன்றும் சந்திரன் 64 கலைகளையும் முழுமையாகக் கொண்டு பிரகாசமாக ஒளி வழங்குவதால் இம்மாதப் பெளர்ணமி மேலும் சிறப்புப் பெறுகிறது. எமலோகத்தில் நம்
புண்ணிய - பாவ கணக்கை எழுதிக் கொண்டிருக்கும் சித்திர குப்தனின் அவதார நாள் இன்று. சிவபெருமான் வரைந்த சித்திரத்திலிருந்து உயிர்பெற்று வந்தவர் என்பதால் சித்திரகுப்தர் என்றும் சித்திரபுத்தர் என்றும் அழைக்கப்படுகிறார். யமனுக்கு உதவியாக மானிடர்களின் பாவ புண்ணிய கணக்கைத் துல்லியமாக
பதிவிட படைக்கப்பட்டவர். மக்களின் மனதில் ஒளிந்திருக்கும் எண்ணங்களையும் அவர்கள் செய்யும் நல்வினை, தீவினைகளையும் சாரணர்கள் என்ற ஒற்றர்களின் உதவியால் கண்டறிந்து எழுதி வருகிறார் அவர். அனைத்தையும் மிக மிக ரகசியமாகப் பாதுகாப்பதால் சித்திர குப்தர் என்ற பெயர் ஏற்பட்டது. குப்தர் என்றால்
ரகசியம் காப்பவர் என்று பொருள். இந்நாளில் இவரை வழிபட்டு தான தர்மங்கள் செய்வதால், அவரின் அருள் பெற்று நீண்ட ஆயுள் கிடைக்கும். இவர் வலக்காலை ஊன்றி இடக்காலை மடித்து சுகாசன நிலையில் வீற்றிருப்பார். வலது கையில் எழுத்தாணியும் இடக்கையில் சுவடியும் இருக்கும். கேதுவுக்கு சித்திரகுப்தன்தான்
அதிபதி என்றும் கேது தோஷத்தால் பாதிக்கப் பட்டவர்கள் இவரை வழிபட்டால், அத்தோஷம்
நீங்கும். மயன் மகள் பிரபாவதி மனுவின் மகள் நீலாவதி, விஸ்வ கர்மாவின் மகள் கர்ணிகி ஆகியோர் இவரது மனைவியர் அக்கிர சந்தானி என்பது இவரது கணக்குப் புத்தகத்தின் பெயர். இவருக்கு காஞ்சிபுரத்தில் கோவில் உள்ளது.
சித்திரகுப்தரின் படத்திற்கு முன் பேனா, காகிதம் முதலியவற்றை வைத்து மலர்களால் பூஜித்து வணங்கலாம். அந்தக் காலத்தில் பூஜை அறையில் ஓர் ஓலைச் சுவடியில், ‘சித்ரகுப்தன் படி அளக்க’ என்று எழுதி வைத்து வழிபடுவார்களாம். இன்று நாம் அதை ஒரு நோட்டில் எழுதி வைத்து வணங்கலாம். விரதம் இருந்து
மாலையில் பூஜை செய்வதும் விசேஷம். பானகம், நீர் மோர் போன்றவற்றை நிவேதனமாகப் படைத்து அருந்தலாம். சித்ரா பௌர்ணமியன்று மதுரை கள்ளழகர் வைகையாற்றில் இறங்கி மண்டூக மகரிஷிக்கு அருள் புரியும் வைபவம் நடக்கிறது. சித்ராபௌர்ணமி நாளில் காஞ்சிபுரம் ஸ்ரீவரதராகப் பெருமாள் ‘நடவாவி’ என்னும்
கிணற்றுக்குள் எழுந்தருள்வார். ஸ்ரீராமாநுஜருக்கு வரதராஜப் பெருமாள் காட்சி அளித்து அருள்பாலித்த வைபவத்தைக் கொண்டாடும்விதமாக இந்தத் திருவிழா நடந்து வருகிறது. குற்றாலத்தில் உள்ள செண்பகா தேவிக்கு சித்ரா பௌர்ணமியன்று சிறப்பு பூஜைகள் நடைபெறும். அப்போது சந்தன வாசனையுடன் மழை பொழியும்
என்றும் கூறப்படுகிறது. இத்தினத்தன்று அம்பாளின் திருவுருவ சிலை அல்லது படத்திற்கு மலர் மாலை அணிவித்து, வஸ்திரம், ஆபரணங்களை அணிவித்து வழிபடுவது நல்லது. அம்பாளுக்கு மஞ்சள் கலந்த சாதம் படைத்து, பானகம், கிராம்பு, ஏலம், பச்சைக் கற்பூரம் சேர்த்த தாம்பூலம் அடங்கிய நைவேத்தியத்தைப் படைக்க
வேண்டும். இன்று தயிர்சாதம், எலுமிச்சை சாதம், நீர் மோர் போன்றவற்றை பக்தர்களுக்கு தானமாக வழங்குவது மிகுந்த புண்ணியத்தைத் தரும். திருச்சி மலைக்கோட்டை கோயிலில் ராஜராஜ சோழனின் பத்தாம் ஆண்டுக் கல்வெட்டில் சித்ரா பௌர்ணமிக்கு நிவந்தம் கொடுத்த குறிப்பு உள்ளது. இதன் மூலம் தமிழர்கள் தொன்று
தொட்டு சித்ரா பௌர்ணமி வழிபாட்டை மேற்கொண்டு வருகிறார்கள் என்பதை அறியமுடியும். இந்த நாளில் செய்யும் தானம் சிறிதளவாக இருந்தாலும் அதன் பலன் மலையளவாகத் திரும்பக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. எனவே தவறாமல் தானம் செய்து வழிபாடு செய்ய வேண்டிய நாள்.

சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Apr 18
#ஆஞ்சநேயர்
அஞ்சனா கிரி மலையில் அஞ்சனா என்ற பெண் குரங்கிற்கும், கேசரி என்ற ஆண் குரங்கிற்கும் மகனாய் அனுமன் அவதரித்தார். அஞ்சனா பிரம்மாவின் சபையில் ஒரு அப்ஸரஸாக இருந்தவர். துர்வாச முனிவரின் தவத்தை கலைத்ததற்காக சாபம் பெற்று குரங்காகப் பிறந்தார்.
அவர் சிறு பெண்ணாக இருககும்போது ஒரு Image
குரங்கு, காலை ஆசனமிட்டு தவம் செய்து கொண்டிருப்பதைக் கண்டார். அதை பார்த்தவுடன் குதூகலத்தில் அந்த குரங்கின் மீது பழங்களை எறிந்தார். அந்த குரங்கு துர்வாச முனிவராக மாறி தவம் கலைந்து எழுந்தது. கடும் சினம் கொண்ட அவர் அஞ்சனா யார் மீதாவது காதல் கொண்டால், அத்தருணமே குரங்காக மாறி விடுவாள்
என சாபமிட்டார். மன்னிப்பு கேட்டு மன்றாடிய அஞ்சனா, தனக்கு குரங்கு முகம் இருந்த போதிலும் தன் காதலன் தன்னை நேசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். அவ்வாறே நடக்க அவர் ஆசி கூறினார். மேலும் சிவபெருமானின் அம்சமே தனக்கு மகனாக பிறக்க வேண்டும் என்றும், அப்படி பிறந்தவுடன் தான் சாப விமோசனம்
Read 12 tweets
Apr 18
#மகாபெரியவா மகாராஷ்டிராவில் உள்ள சதாரா என்ற இடத்தில் பக்தர்களுக்கு அருள் புரிந்த மஹா பெரியவா, பண்டரிபுரம் நோக்கி கிளம்பினார். சதாராவில் இருந்து பண்டரிபுரம் 150 கி.மீ. எங்கும் நடந்தே செல்லும் அவருக்கு அப்போது என்பது வயது தாண்டியிருந்தது. அதனால், பெரியவா உடல்நலம் குறித்து அன்பர்கள் Image
கவலைப் பட்டனர். அவரோ அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் நடந்தார். வழியெங்கும் மக்கள் கூட்டம் அவர் தரிசனத்தை பெற்று மகிழ்ந்தது. வழியில் ஒரு மலை தென்பட்டது. அதன் மீது ஒரு கோயில் இருந்தது. அடிவாரத்தில் நின்றார் பெரியவா. மலைக் கோயிலை தரிசிக்க விரும்புகிறாரோ என்று நினைத்தனர் பக்தர்கள். 80
வயதில் நெடுந்தூரம் நடப்பதே பெரிது, இதில் மலையேறுவது சாத்தியமா என அனைவரும் கருதினர். அப்போது உச்சியில் இருந்து தாவி வந்தது ஒரு கருங்குரங்கு. மனிதர் போல வளர்ந்து இருந்து, உயரமாக, வலிமையாக இருந்தது அக்குரங்க. அன்பர்கள் அதை விரட்ட முயற்சி செய்தனர். ஆனால், அது பெரியவாளை வைத்த கண்
Read 6 tweets
Apr 17
#அழகர்_ஆற்றில்_இறங்கும்_வைபவம் எல்லோருக்கும் ஐப்பசியில் தீபாவளி வரும். ஆனால், மதுரைவாசிகளுக்கு, சித்திரையிலும் ஒரு தீபாவளி. அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தை அந்த அளவுக்கு மிக விமரிசையாகக் கொண்டாடி வருகிறார்கள். திருவிழா நடக்கும் பத்து நாட்களும் ஊரே திமிலோகப்படும். மதுரை மற்றும் ImageImageImageImage
சுற்றிலுமுள்ள ஊர்களில் இருந்து குடும்பத்துடன் புறப்பட்டு வந்து சேருவார்கள். சுமார் பத்து லட்சம் பேருக்கு மேல் ஒரே இடத்தில் கூடும் திருவிழா இது. கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைச் சொல்வதற்கு முன், அவர் குடிக்கொண்டிருக்கும் #அழகர்மலையின் சிறப்பையும் சொல்லியாக வேண்டும். மதுரைக்கு
வடக்கே சுமார் 20 கிலோ மீட்டர் தொலைவில், அழகர்மலை கம்பீரமாகக் காட்சி தருகிறது. பார்ப்பதற்கு காளை வடிவில் இருப்பதால் இந்த மலைக்கு 'விரிஷபாத்ரி' என்று ஒரு பெயர் உண்டு. தன்மேல் ஏவி விடப்பட்ட சாபத்துக்கு விமோசனம் கேட்டு, எமதர்மன் இந்த மலைக்கு வந்து பெருமாளை வேண்டித் தவமிருந்தான்.
Read 25 tweets
Apr 17
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் கேரளாவில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு சிறிய கிருஷ்ணர் கோவில் இருந்தது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஜமீன்தார், தினமும் காலையிலும் மாலையிலும் கோயிலில் பூஜை செய்ய ஏழை பூசாரியை நியமித்தார். பூசாரி தினமும் தனது 3 வயது மகனுடன் கோயிலுக்கு வருவது வழக்கம்.
தந்தை Image
கோவிலுக்குள்ளே தனது கடமைகளைச் செய்யும்போது, ​​மகன் கோவில் வளாகத்தில் விளையாடிக் கொண்டிருப்பான். மதியம் கோவில் வராந்தாவில் அப்பா தூங்குவதும், பையன் அருகில் விளையாடுவதும் வழக்கம். பாதி மூடிய கண்களுடன் தன் மகன் விளையாடுவதை ரசித்துக் கொண்டிருப்பார்.
குட்டி கிருஷ்ணன் கோவிலுக்கு வெளிய
வந்து சிறுவனுடன் விளையாடுவது வழக்கம். குட்டி கிருஷ்ணன் மற்ற சிறுவர்கள் விளையாடுவது போல சிரித்து, கத்தி, ஓடி ரசித்து, மகிழ்ந்து இந்தச் சிறுவனுடன் விளையாடுவான். இந்த நடைமுறை தினமும் பின்பற்றப்பட்டது. ஒருமுறை விஷூவுக்கு முந்தைய நாளில், தந்தை கோவில் வளாகத்தையும் உட்புறத்தையும்
Read 8 tweets
Apr 16
#MahaPeriyaba In Sanatana Dharma, the term annam is used for the English term 'food', but not as an equivalent. The term annam denotes and connotes physical and spiritual ramifications. Annam is not just something which is input to stomach and digested, but it includes everything
that is ingested by the ten senses and the mind. This is the reason our physical body is called ‘annamaya kosha’. A number of our scriptures talk about annam. The main emphasis is on the truth ‘What we eat, we become’. Kanchi Paramacharya, Sri Chandrasekharendra Saraswati Swami
took sannyasam and ascended the throne of Kanchi Kamakoti Peetham at the age of thirteen. From that day, until he attained videha mukti at the age of 100, he lived an exemplary life of strictest austerity. His daily main meal was often astonishingly simple: a small handful of
Read 17 tweets
Apr 16
#MahaPeriyava
There were a number of shops such as a flower shop, a medical shop and others doing brisk business in front of Kanchi Matham many years go. The bank officials of Indian Bank had a desire to open a branch there and take care of the administration of the revenue and
expenses of the Matham. They expressed their wish to the Matham officials and got the approval. The conditions from the Matham was such that the bank should construct their own building in front of the Matham whatever shops were required to be vacated for this purpose, alternate
places were to be given to the shopkeepers without fail. The conditions were implemented, and the Bank branch was opened. Two years later, a couple came and stood before Sri Maha Periyava and said, Today is our wedding day. Maha Periyava should bless us They prostrated to him.
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(