திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.
ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.
தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
என்னுடைய வீட்டில் இருந்த காலை, தலைவன் தன்னைப் பெருமைப்படுத்தும் மொழிகளையே கூறினன்.
அவன் இல்லத்திலே தம்முன் நிற்பவர் கையைத் தூக்கினால் தானும் தூக்கி, காலைத்தூக்கத் தாமும் தூக்கும் #ஆடிப்பாவை போல, அவன் புதல்வனின் தாய் ஏவுவனவற்றையெல்லாம் செய்கிறான் எனத் தலைவனை இழித்துக் கூறுகிறாள்
'வட்டக் கண்ணாடியை ஒத்த பகன்றை மலர்' (நற்றிணை 86:3)
முதிர்ந்த இதழ்கள் நீருள் உதிர்ந்து விழுகின்ற காட்சி, தெளிவான கண்ணாடிப் பாத்திரத்தில் மணி இட்டது போல இருந்தது.
பாண்டில், வயங்குமணி, வயங்கல் என்பன ஒளி ஊடுருவும் கண்ணாடியைக்
குறிப்பன.
#Glass is obtained by fusing silicon dioxide, sodium carbonate and lime
stone, Ordinary glass acquires colour by the addition of metallic oxide to the molten mass.
#Mirror is made of glass by giving shiny coating on the back. The light rays pass through the glass and are reflected from the coating.
ஈயத்தகட்டின் மீது பாதரஸத்தைத் தடவி, அதனைக் கண்ணாடி மீது ஓட்ட, அப்பாதரஸம் கண்ணாடி மேல் பரவி ஒளி ஊடுருவும் கண்ணாடி, எதிரொளிக்கும் கண்ணாடி ஆகிறது
#Obsidian - Natural glass of volcanic origin is formed by rapid cooling of viscous. Lava obsidian was used by greeks for mirrors.
எரிமலைப்பகுதிகளில் கண்ணாடி கிடைத்தாற் போலத் தமிழ்நாட்டிலும் பளிங்குப் பாறைகள் புதையுண்டு கிடந்தன.
அண்மைக்காலம் வரை தஞ்சைக்கு அருகில் உள்ள வல்லம் என்ற ஊரில் புதையுண்டு கிடந்த கண்ணாடிப் பாறைகளிலிருந்து, கண்ணாடியை வெட்டி எடுத்துக் கண்ணுக்குப் பொருத்த வேண்டிய கண் கண்ணாடிகளைத் தயாரித்தனர். இவை தமிழ்நாடு முழுவதும் புகழ்வாய்ந்தவை.
இதை நோக்க, சங்ககாலத்தில் கண்ணாடிப் பாறைகளிலிருந்து கண்ணாடிகளைப் பெற்றிருப்பார்களோ என்று எண்ண வேண்டியுள்ளது.
கண்ணாடி தயாரிப்புக்குத் தேவைப்படும் சலவைச் சோடா (உவர்மண்) மண், சுண்ணாம்புக்கல் ஆகியவை நிலத்தடிப் பொருட்களே என்பதால் அவற்றை உருக்கிக் #கண்ணாடி தயாரித்தார்கள் என்று எண்ணுவதும் மிகையன்று.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.
மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.
அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.
உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.
நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.
#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.
க) மனை அமைப்பு:
#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.
வழிகளைக் குறிப்பதற்கு இலக்கியங்களும், கல்வெட்டுகளும் பல்வேறு சொற்களைக் குறிப்பிடுகின்றன.
அவற்றில் அத்தம், நெறி, வழி, இட்டுநெறி, பெருவழி ஆகிய சொற்கள் சங்க இலக்கியங்களிலும், காவியங்களிலும் பயின்று வருகின்றன.
சங்க இலக்கியத் திணைக்குடி வாழ்வில் தலைவியைக் காண #இரவுக்குறி செல்லும் குறிஞ்சி நிலத்தலைவன் சென்று வந்த வழி பற்றிக் குறிஞ்சித் திணைப் பாடல்கள் பேசுகின்றன.
முல்லை நிலத்து ஆயர்கள் கால்நடைகள் மேய்த்து வந்த வழியும், முல்லை மகளிர் தயிர் விற்கச் சென்ற வழியும்...,
மன்னர்கள் போர் முடித்து நாடு திரும்பும் தேர் வழியும் முல்லைப் பாடல்கள் பேசுகின்றன.
தலைவியும் தலைவனும் உடன் போக்குச் சென்ற அத்தமும், தலைவன் பொருள் தேடச் சென்ற சுர வழிகளும், மொழிபெயர் தேயத்து வழிகளும், உமணர்களும், வணிகச் சாத்துகளும் சென்ற வணிக வழிகளும்....
Early Tamil society had evolved some conception of true love and norms of moral conduct. The lapses and the protests they provoked reveal the ideals held in view.
The virtues of immaculate love and true partnership in life between...
...the husband and wife find their echo in several verses of #Narrinai. One of these states that even poison offered by a real lover would not be rejected: (Stanza 355).
In passing it may be mentioned that below lines bear a tinge of similarity with the precept in Kural-586.
Love of a high order which promotes unbounded courage and unselfish sacrifice was known and appreciated.