#கந்தகோட்டம்#உத்சவமூர்த்தி
கந்தகோட்டத்து முருகன் கோயிலுக்கு உற்சவ விக்ரகம் உருவாக்க வேண்டும் என்று முடிவெடுத்து சிற்ப சாஸ்திர வல்லுநரிடம் உத்சவ முருகனாக பஞ்சலோகத்தில் விக்ரகம் ஒன்றை வார்த்து தரும்படி ஒப்படைத்தனர். அவரும் புடம்போட்டு எடுத்தபின் வார்ப்படத்தை பிரித்த போது, விக்ரகம்
மினு மினுவென மின்னியது. ஆனால் வார்ப்படத்திலிருந்த பிரித்தெடுத்த பகுதிகள் பூராவும் முட்கள்போல சிறு பிசிறுகளாய் இருந்தன. கோயில் நிர்வாகிகள் சிற்பசாஸ்திர முதன்மையாளரிடம் சிற்பம் நன்றாக வந்திருக்கிறது. ஆனால் வெளித் துருத்தியிருக்கும் முட்கள் போலான பிசிறுகளை நீக்கினீர்கள் என்றால்
சிற்பம் இன்னும் அழகாக இருக்கும் என்றனர். தலமை சிற்பியும் துருத்திய பிசிறுகளை எல்லாம் சுத்தப்படுத்தி தருகிறேன் என்று சொல்லி அதற்குண்டான கருவியுடன் விக்ரகத்தை தொட்டார். அவ்வளவு தான் மின்சாரம் தாக்கியவர் போல தூரப் போய் விழுந்தார். பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவரை தூக்கி வைத்து
ஆசுவாசப் படுத்தி என்ன ஆச்சு ஐயா என்றனர். என் தேகமெல்லாம் மின்சாரம் பாய்ந்தது போலிருக்கிறது. ஒரே பதட்டமாக இருக்கிறது என வாய் குழறி குழறிக் கூறினார். சிறிது நேரத்திற்குப் பிறகு தெளிந்து எழுந்த சிற்பி கண்களில் மிரட்சியோடு ஆலயப் பக்தர்களை நோக்கி கைகளைக் கூப்பி இந்த விக்ரகம் நீறு
பூத்த அனலாக இருக்கிறது. என்னால் இதை ஒன்றும் செய்ய இயலாது என்று கூறி போய்விட்டார். பிசிறுகளுடன் இருக்கும் உத்சவ விக்ரகத்தை தீண்டப் பயந்து வழிபாட்டுக்கு எடுத்துக் கொள்ளாமல் விக்ரகத்தை ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டி விட்டனர். இந்தச் செயலுக்குப் பின்பு இரண்டு ஆண்டுகள் கடந்தன.
ஒருநாள் காசியில் இருந்து சாம்பையர் எனும் துறவி கந்தகோட்டத்து முருகனைத் தரிசிக்க ஆலயத்திற்கு வந்தார். அவர் மூலவரைத் தரிசித்த பின் ஆர்வத்தோடு உற்சவர் இல்லையா எனக் கேட்டார். சிவாச்சாரியாரும் விக்ரகம் வார்ப்பெடுத்து உருவான விபரம் முதல் அனைத்தையும் சாம்பையரிடம் கூறிவிட்டு ஆலய
நிர்வாகிகளிடம் அழைத்துப் போனார். சாம்பையருடைய தோற்ற கோலத்தைக் கண்டு கட்டுப்பட்ட நிர்வாகிகள் உத்சவர் இருந்த அறையைத் திறந்து விட்டனர். அறைக்குள் நுழைந்த சாம்பையர் சில நிமிடத்தில் வெளியே வந்தார். சாம்பையர் கூடியிருந்த அனைவரையும் பார்த்து நீங்கள் அனைவரும் பாக்கியசாலிகள் இக்கோயிலில்
உள்ள மூலவருக்கு எவ்வளவு சக்தி இருக்கிறதோ அதே சக்தி இந்த உற்சவ மூர்த்தத்திலும் பொதிந்து இருக்கிறது என்றார். விக்ரகம் இவ்வாறு அமைவது வெகு அபூர்வம். தன்னை வழிபடும் அடியார்களுக்கு மூலவரைப்போல் இந்த உத்சவரும் அளவிலா அருட்செல்வத்தை வழங்குவார் இவர். இவரைப் பார்த்து வணங்கி, தியானம்,
ஆராதணை செய்யலாமே தவிர இவர் திருமேனியில் எந்த விதமான கருவிகளும் படக் கூடாது என்றார். இந்த உத்சவரை ஆத்ம சக்தியால் நானே தூய்மை செய்து தருகிறேன் என்றார். தனி அறையில் உற்சவ விக்ரகம் வைக்கப்பட்டு திரை போட்டு மறைக்கப்பட்டது. வெளியே நாதஸ்வரம் வாசிக்கப்பட்டது. வடிவேலனின் முன் அமர்ந்து வேத
மந்திரங்களைச் சொல்லி ஆத்ம சக்தியால் உத்சவரின் திருமேனி மீது இருந்த பிசிறுகளை நீக்கினார் சாம்பையர். திரை விலக்கி வெளியே வந்தார் சாம்பையர். முருகனின் முகத்தை மட்டும் சரி செய்ய இயலாது என்று கூறி விட்டு சென்று விட்டார். இப்போதும் கந்தகோட்டத்தில் இருக்கும் உத்சவர் முகம் அந்த
பிசிறுகளோடு இருக்கிறது .
வள்ளலாருக்கும் வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகளுக்கும் பாம்பன் சுவாமிகளுக்கும் அருள் புரிந்த கந்தக் கோட்ட கந்தசுவாமி நமக்கும் அருள் புரிவார்.
ஓம் சரவண பவாய
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#பகவான்ரமணர் இன்று ஶ்ரீ ரமண பகவானின் ஆராதனை தினம். அவரை தியானிப்போம். ரமணர் ஆத்ம விசாரம் சொன்னார். ஆனால் ‘ரமண பெரிய புராணம்’ என்ற அவரின் பக்தர்களின் சரிதத்தை படித்தால், ரமணர் நமக்கு தான் நிறைய அனுக்கிரகம் செய்திதுப்பது புலப்படும். சின்னக் குழந்தையிலேயே அவருக்கு பளிச்சென்று ஞானம்!
அதற்கு முன் அவர் மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 63 நாயன்மார்கள் முன் நின்றுகொண்டு கண்ணில் நீர் வழிய உங்களுக்கெல்லாம் பரமேஶ்வரன், தரிசனம் கிடைச்சிருக்கு, உங்களுக்கு கிடைச்ச அனுக்கிரஹம், எனக்கு கிடைக்காதான்னு கதறியிருக்கார். அவருக்குத் தாபம் இருந்ததால், அருணாசலேஸ்வரர்
கூப்பிட்டார். ஓடிவந்து அப்பா என்று அருணாசலேஸ்வரரை கட்டிக் கொண்டார். அதற்குப் பிறகு, ஞானசூரியனா உட்காந்து கொண்டார். அவரிடம் வந்தவர்களுக்கெல்லாம், அவர் அந்தந்த ஜீவனுடைய தகுதிக்கு ஏற்ப வழிநடத்தினார். நிறைய பேர், அவரை சரணாகதி பண்ணி சத்கதியை அடைந்தார்கள். ஒரு லக்ஷ்மிங்கிற பசுமாடு,
#மகாபெரியவா மகா பெரியவா க்ஷேத்ர யாத்திரை பண்ணிக் கொண்டு இருந்த காலகட்டம் அது. வழியில திருவாரூர் பக்கத்துல ஒரு ஊர்ல முகாமிட்டிருந்தார் பெரியவா. அங்கே அவரை தரிசிக்க பக்தர் ஒருவர் குடும்பத்தோடு வந்திருந்தார். மகான் முன்னால் வந்து நின்னவர், தன் இரண்டு மகன்களை மகாபெரியவளிடம்
ஆசிர்வாதம் வாங்கிக் கொள்ள சொன்னார். வாத்ஸல்யத்தோட குழந்தைகளை ஆசிர்வதித்த பெரியவா, "உங்களுக்கு ஏதாவது ஸ்லோகம் தெரியுமோ" என்று கேட்டார். அதற்காகவே காத்துக் கொண்டு இருந்த மாதிரி இரண்டு குழந்தைகளும் தெரியுமே என்று கோரசாக கூறினர். பெரியவா குறிப்பிட்ட ஒரு துதியோட பேரைச் சொல்லி, அது
தெரியுமா என்று கேள்வியை முடிப்பதற்குள் இருவரும் மளமளவென்று சொல்ல ஆரம்பித்தனர். ஸ்லோகத்தைச் சொல்லி வரும்போது இரண்டு பேரில் சின்னவன் திணறாமல், யோசிக்காமல் கடகடவென்று சொன்னான். பெரியவன் கொஞ்சம் யோசித்து, தடுமாறி சொன்னான். அவர்கள் சொல்லி முடிக்கற வரை அமைதியாக கேட்டுக் கொண்டு இருந்த
#MahaPeriyava
Periyava visited the house of a very rich and distinguished man in a village in Tanjore district, all of a sudden. It was a surprise visit and so arrangements had not been made to welcome Him. Periyava did not wait for the members of the family to escort Him around
the house, but walked through the courtyard, the hall, the corridor and looked around everywhere. Hearing of Periyava’s visit, the head of the family came rushing back home. One room in the house had been locked. Periyava told the gentleman to unlock the door and show him the
room. The gentleman hesitated to do so and stood there, looking confused. Periyava would not give up. He sat down outside the locked room. He had no option but to open the locked room. Inside the locked room was their cook, who had been imprisoned on charges of theft. As soon as
#மாமனிதர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு குதிரை வண்டி தான் போக்குவரத்துக்கு பயன்பட்டது. அப்படியொரு குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்கு செல்வது வழக்கம். ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம் நீங்கள் பெரியவனானதும் என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று கேட்டார். அதற்கு ஒவ்வொரு மாணவனும்
வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர். அப்போது ஒரு மாணவன், நான் குதிரை வண்டிக்காரனாவேன் என்று கூறினான். சுற்றியிருந்த மாணவர்கள் சிரித்தனர், ஆசிரியரும் அவனை கேலி செய்து உட்கார சொன்னார். அந்த சிறுவன் வீட்டிற்கு சோகமாக வந்ததை பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை
கூறினான். அதை கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய், நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம் என்று காஎட்டார். “தினமும் பள்ளிக்கு செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதை பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். எனக்கும்
அம்மா என்கிற ஸ்தானம் ரொம்ப உயர்ந்தது. ஒருவர் சன்யாசி ஆகிவிட்டால், உலகத்தில் உள்ள எல்லாரும் அவரை நமஸ்காரம் செய்யணும், அவருடைய அப்பா உட்பட. ஆனால் ஒரு சன்யாசி தன் அம்மாவைப் பார்த்தால், அந்த சன்யாசி அம்மாவை நமஸ்காரம் செய்யணும் என்கிற நியதி உள்ளது. ஒரு சன்யாசி, தன் அம்மா அப்பா இரண்டு
பேரும் காலமாகி விட்டார்கள் என்று கேள்விப்பட்டால் கட்டின துணியோட ஸ்நானம் செய்யணும் என்பது சாஸ்திரம். மற்ற உறவுக்காரர்கள் யாருக்காகவும் ஒரு தலை முழுகல் கூட கிடையாது. ஒரு நாள் மகா பெரியவா, வாக்யார்த்தம் செய்துகொண்டு இருக்கும்போது ஒருவர் தந்தி எடுத்து கொண்டு வருகிறார். “கும்பகோணத்துல
இருந்து தந்தியா?” என்று பெரியவா கேட்கிறார். அவர் ஆமாம் என்று சொல்கிறார். மஹாலட்சுமி அம்மா முக்தி அடைந்து விட்டார். பெரியவா எழுந்து கொண்டு பக்கத்தில் இருந்த ஓர் அருவியில் போயி ஸ்நானம் செய்கிறார். அதற்குள் விஷயம் பரவி 100 பேர்கள் சேர்ந்து போய் அந்த புண்யவதிக்காக அந்த அருவியில்
ஒருமுறை மகாவிஷ்ணு அவருடைய பிரியமான கருடனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது
திருமால் கருடனை பார்த்து கேட்டார்,
“இவ்வுலகில் எத்தனை வகையான மனிதர்கள் உள்ளனர் கருடா?”
சற்றும் யோசிக்காமல் கருடன் சொன்னார், “மூன்று வகையான மனிதர்கள் உள்ளனர் மகா பிரபு.”
மகாவிஷ்ணு, “என்ன மூன்று விதமான
மனிதர்களா? இத்தனை கோடி மக்களில் மூன்று விதமான மக்கள் தானா உள்ளார்கள்" என்று கேட்டார்.
"மகா பிரபு ஒன்றும் அறியாதவர் போல நீங்கள் கேட்பது ஏன்? என்னை வைத்து என்ன நாடகமோ தெரியவில்லை! ஆனால் தங்கள் அருளால் நானறிந்தவரை மூன்று விதமான மக்கள் தான் உள்ளனர்" என்றார் கருடன்.
"அப்படியானால்
அவர்களைக் கூறு" என்றார் மகாவிஷ்ணு.
"பிரபு முதல் வகையினர்: பறவையும் அதன் குஞ்சுகளும் போல் உள்ளனர்.
இரண்டாம் வகையினர்: பசுவும் அதன் கன்றையும் போல் உள்ளனர்.
மூன்றாம் வகையினர்: கணவனும் மனைவியும் போல் உள்ளனர்.” என்றார் கருடன்.
"சற்று விளக்கமாக புரியும்படி சொல்" என்றார் மகாவிஷ்ணு.