தொடர்ச்சியாக சந்தையில் #ITstocks ஏன் விழுகுதுன்னு சிலருக்கு புரியாமல் இருக்கலாம். என்னோட ஒரு சின்ன அனாலிஸிஸ் இங்கே ஷேர் பண்றேன்.எவ்வளவு நல்ல செக்டார் அல்லது கம்பனியாக இருந்தாலும் தொடர்ச்சியாக மேலே போகாது. கீழேயும் வராது.நீண்ட காலத்தில் பல ஏற்ற இறக்கங்கள் இருக்கும்.
#overbought ,#oversold இது கண்டிப்பாக தெரிஞ்சிருக்கணும். நான் இருக்கும் வாட்சாப் குழுமத்தில் மெட்டல் ஸ்டாக்ஸ் ,மற்றும் ஐடி ஸ்டாக்ஸ் முன் கூட்டியே வெளியேறச் சொல்லிட்டேன். கோவிட் 2020 மார்ச் இறக்கத்தில் இருந்து நிப்டி மற்றும் பல இண்டெக்ஸ் ரிட்டர்ன்ஸ் எடுத்து பார்த்தாலே தெரியும்.
2020 மார்ச் 25 க்கு பிறகு சந்தை ஏற ஆரம்பித்தது.லாக் டவுணில் பல தொழில்கள் பாதிக்கப்பட்டபோது வீட்டில் இருந்து பணி செய்யும் ஆப்சன் மற்றும் அதிகப்படியான மெடிக்கல் தேவைகள் கொண்டு முதலில் ஏற ஆரம்பித்தவை பார்மா மற்றும் ஐடி பங்குகள். மெதுவா ஒவ்வொன்னா மேலே வர லாக்டவுணில் சந்தையில் நுழைந்த
புது டீமேட் அக்கவுண்ட் ஓபன் செய்த ரீட்டெய்லர்ஸ் சகட்டு மேனிக்கு எல்லாவற்றையும் வாங்க கோவிட் கு முன்பு வருடக்கணக்காக தவழ்ந்துட்டு இருந்த பங்குகள் கூட குதிரையாட்டம் பறக்க ஆரம்பித்தன. ஒரு மாதிரியான mad run.இது இங்கே மட்டும் இல்லை எல்லா சந்தையிலும் குறிப்பா அமெரிக்காவிலும் நடந்தது.
ஐடி பங்குகள் குறுகிய காலத்தில் அதிக லாபம் கொடுத்தன. போலவே பார்மா,மெட்டல் பங்குகளும். இவைகள் நிப்டியின் வரவை விட அதிகம். மெதுவாக மூன்றும் இறங்க ஆரம்பித்தன. மற்ற தொழில்கள் தங்கின்றி நடந்து அடுத்தடுத்து காலாண்டு முடிவுகள் வர வர பணம் ஒன்றில் இருந்து இன்னொன்றுக்கு மாறிக்கிட்டே
தொடர்ச்சியாக ஒரு பங்கை வைத்திருப்பது ஒரு வகையான முதலீடு. அதையே சில நேரங்களில் சரியான நேரத்தில் வெளி வந்து மறுபடியும் குறைந்த விலைக்கு வாங்கிக்கொள்ளலாம். #ITsrocks ல் அடுத்த ஏற்றம் வரும்னு எதிர்பார்க்கிறேன். உயர்ந்து வரும் கோவிட் தொற்று தான் சின்ன தடங்கல்.#Tamilshareinvesting
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
குழந்தைகள் இருக்கும் வீட்டில் இருக்க வேண்டிய முக்கிய பாதுகாப்பு பொருட்கள். 1. Baby proofing edge and corner guards.கதவிடுக்கு, கூரான மேசை முனைகள்,டைல்ஸ் முனைகள்னு இதை ஒட்டிக்கலாம்.அதிலேயே ஒட்டும் தன்மையோடுதான் வரும்.
கட்டில் திருப்பி போட்ருக்கேன்.கூரான கால்பக்கம் தலைக்கு வைக்கிற மாதிரி இருக்கும்.என் குழந்தை எப்பவும் இந்த டேப்பை எடுத்து போடுவதே வேலையா வச்சிருப்பான்.ஒரு நாள் இரவு அதை எடுத்து ஒட்டி வச்சேன்.அடுத்த 5 நிமிடங்களில் நடந்து விளையாடிட்டு இருந்தவன் அது மேலேயே கால் தடுக்கி விழுந்தான்.
நெற்றி சரியாக டேப் மேலேயே விழுந்தது.எனக்கு கொஞ்ச நேரம் எதையும் யோசிக்கவே முடியலை.அதை ஒட்டாமல் மட்டும் வச்சிருந்தேன்னா அந்த இரவு எவ்வளவு இரத்தம் போயிருக்கும். மருத்துவமனைக்கு ஓடிருப்போம்னு நினைச்சி பார்க்கவே முடியலை.
பங்குச்சந்தை இப்பொழுது இறக்கத்தில் இருக்கிறது. நீண்ட கால முதலீட்டுக்கு பங்குகள் வாங்க சரியான நேரம். Large cap ,IT துறை பங்குகள் விலை குறைவாக இருக்கிறது. மாதம் 10,15,20 ஆயிரம் வரை என்னால் சேமிக்க முடியும் ஆனால் எப்படி எங்கே முதலீடு பண்ணுவதுன்னு குழப்பமாக இருக்கிறதா?
பெருகி வரும் பண வீக்க விகிதம் குறைந்து வரும் வங்கி வட்டி விகிதம் இதெல்லாம் சமாளிக்க பங்குச்சந்தை தவிர வேறு எங்கும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது. ஈமு கோழி மாதிரி யாராச்சும் மாதம் இவ்வளவு பணம் தருகிறோம் எங்களிடம் உங்கள் பணத்தை லட்சக்கணக்கில் முதலீடு பண்ணுங்கன்னு சொல்வாங்க.
இன்னும் நாலு பேரை சேர்த்து விடுங்க உங்களுக்கு போனஸ் தரோம்னு சொல்வாங்க. இந்த மாதிரி வசீகர விளம்பரத்தில் மாட்டி மொத்தமும் இழந்தவங்க ஊருக்குள் நிறைய பேர் இருக்காங்க. உங்க பணத்தை நீங்க மட்டுமே முதலீடு பண்ணுங்க. உங்க அக்கவுண்டில் பணம் இருக்கும்வரை மட்டுமே அதற்கு பாதுகாப்பு.
குடும்பத் தலைவிகளுக்கு ப்ரிட்ஜில் இட்லி மாவு இல்லேன்னா தலைவலி வந்திடும். எனக்கு 2 குழந்தைகள் வீட்டில் வச்சுக்கிட்டு மாவு எப்பவும் இருந்தே ஆகணும்.ஆனா 2 நாள் தான் மாவு நல்லா இருக்கும். அப்புறமா அதிகமா புளிச்சி தண்ணி சேர்த்துன்னு நிறைய சோதிச்சது.இன்வெஸ்ட்மெண்ட் கு ஒரு ஸ்டாக் வாங்க
எவ்வளவு ஆராய்வேனோ அதற்கு சற்றும் குறைவில்லாத வகையில் சில பல ஆராய்ச்சிகள் மூலம் ஒரு வாரமானாலும் புளிக்காத இட்லி மாவு சூட்சுமம் கொண்டு வந்துட்டேன்.மாவு தீர்ந்து போகும் கடைசி நாளில் கூட மிருதுவான புளிக்காத இட்லி வர வைக்கும் இட்லி மாவு அரைப்பது எப்படி?
உதயம் உளுந்து,AST ரக குண்டு இட்லி அரிசி . அரிசியும் உளுந்தும் 4:1 அளவில் எடுத்துக்கணும். 1 ஸ்பூன் வெந்தயம்.வெந்தயத்தை அரிசியில் சேர்த்து ஊற வைக்கணும். 4-5 மணி நேரங்களாச்சும் அரிசியும் உளுந்தும் ஊறணும்.மாவு அரைக்கும் நேரத்தையும் எப்படி மிச்சப்படுத்தலாம்னு சொல்றேன்.