மோடி மல்லையா, நீரவ்மோடி மாதிரி கடன்காரனுங்கள எல்லாம் தப்பிக்க விட்டுட்டார் பாத்தீங்களா - எட்டு வருஷமா காங்கிரஸ், தி.மு.க சொல்ற முக்கியமான குற்றச்சாட்டு -
இருபது முப்பது வருஷம் திருடித், திருடி சொகுசா வாழ்ந்த ஒருத்தன் இருக்கற எடத்த விட்டு, சொத்தவிட்டு, சொந்தங்களவிட்டு
பொறந்த நாட்டை விட்டே ஓடறான்னா அதுக்கு என்ன காரணம் இருக்க முடியும்? -
நம்மள்ள பலர் நம்ப ஊர்லயே பாத்திருப்போம் ஊரச்சுத்தி கடன் வாங்கி, திருப்பிக் கட்ட முடியாம ஊரவிட்டு ஓடிப்போனவங்கள, அது எவ்வளவு அசிங்கம், அவன் செத்ததுக்குச் சமம்னு நாம நெனைப்போம் -
இது மல்லையாவுக்குக் கெடையாதா?-
இருக்கு, அப்பறம் ஏன் ஓடிப்போனான்?-
அதான், இருபது முப்பது வருஷமா சொகுஷா வாழ்ந்தவன் திடீர்னு ஓடிப்போறான்னா இங்க அவனால இனி திருடி, ஏமாத்தி பழயபடி சொகுசா வாழ முடியாம தடுக்க யாரோ அல்லது ஏதோ புதுத் தொல்லை வந்திருக்குன்னு அர்த்தம்-
தனிநபரா இருந்தாலும் சரி பெரிய, பெரிய நிறுவனங்களா இருந்தாலும் சரி பேங்ல கடன் வாங்கறதே திரும்பக் கட்டத் தேவையில்லைன்ற மனநிலையோடதான் கடன் வாங்கறாங்க-
ஒரு வேளை சட்டநடவடிக்கை எடுத்தா கூட கோர்ட் கேஸ்னு அவனோட ஆயுள் முடியற வரைக்கும் இழுத்துக்கிட்டே இருக்கலாம் இதுதான் 2015 வரைக்கும் இருந்தது -
ஆனா, மோடி அரசு டிசம்பர் 2015 - ல #IBC மசோதா அறிமுகம் செஞ்சதுக்கு அப்புறம்தான்
கடன்காரனுங்களுக்கெல்லாம் அஸ்தில ஜூரம்னு சொல்லுவாங்களே அது வந்துச்சு -
#IBC-பத்தி சுருக்கமா, ஒருத்தன் அல்லது ஒரு கம்பெனி தொடர்ந்து 90 நாள் தவனை கட்டாம இருந்தா அவனோட கடன வாராக்கடனா மாத்தி (Write off) சட்டரீதியா வசூல் செய்ய ஏற்பாடு செய்றது -
அதன்படி இந்தத் தீர்பாயம் ஆறுமாசம் (180 நாள்) அவகாசம் கொடுக்கும்-
அதுக்குள்ள கட்ட முடியலன்னா, திரும்ப ஒரு 90 நாள் அவகாசம் அப்பவும் முடியலன்னா அந்த நிறுவனம் தீர்பாயம் Control-க்கு போய்டும் -
அடமானம் கொடுத்த சொத்துக்கள வித்து பணத்த வசூல் பண்ணுவாங்க-
சம்பந்தப்பட்ட நபர் திவால் ஆனாத அறிவிச்சுடுவாங்க (செத்த பொணத்துக்குச் சமம்)-
திரு ஜெய்ஷ்ங்கர் மேற்கு உலகின் போலித்தனம் என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்தினார் ..
சில்லிடும் உரை
மேற்குஉலகின் போலித்தனங்களை தோலுரித்து காட்டியது
பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து எடுத்துசென்ற ஆயிரக்ணக்கான கோடி பண மதிப்பை சொன்னவர் அப்படி
உலகெங்கிலிருந்தும் கொண்டுவந்த பணத்தில் செழித்ததுதான் பிரிட்டிஷ் மற்றும் மேற்கு உலகம் என்றார்..
உக்கிரேனை தாக்குவதுஇ ஜனநாயகக்கொலை என்று சொல்லும் மேற்கு உலகம், ஈராக்கை அமெரிக்கா தாக்கியபோது என்ன செய்தது என்று புடின் கேட்டதை அவர் கேட்கவில்லையே தவிர அதுதான் பின்னணி .
reinvigorated -புத்துயிர் பெற்ற இந்திய வெளியுறவு கொள்கைகளை ஏந்தி ஜெய்ஷ்ங்கர் நடக்க,
அவர் செல்லுமிடமெல்லாம் பாரதத்தின் ஒளிபடர்ந்து உலகே பாரதத்தின் கீழ் வருவதுபோல தோன்றமளிக்கிறது..
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 #கார்ப்பரேட்_வரிவசூல் 8.60 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 56.1% அதிகம்.
கார்ப்பரேட் வரியை குறைத்துவிட்டார்கள் என்று சொல்லித்திரியும் முரசொலி வாசகர்கள் கவனத்தில் கொள்க.
Tax to GDP ratio 11.7%. இது இந்திய வரலாற்று சாதனை.
இதற்கு காரணம் வரி ஏய்ப்பு அதிக அளவில் தடுக்கப்பட்டது . நேர்மையான ஆட்சி நடப்பதால் மட்டுமே இது சாத்தியமானது என்பதை யாரும் மறுக்க முடியாது.
மென் பொருளை பயன்படுத்தி GST மற்றும் IT வரிகள் சரிபார்க்க படுகின்றன.
இதனால் வரி ஏய்ப்புகள் குறைந்துள்ளன.
தனி நபர் வரிவசூல் 7.50 லட்சம் கோடி ரூபாய். இது சென்ற ஆண்டைவிட 43% அதிகம்.
கார், வீடு வாங்குதல், கிரெடிட்/டெபிட் கார்டு செலவுகள், வங்கி டெபாசிட்கள், சொத்து, வெளிநாட்டு சுற்றுலா என்று அனைத்து செலவுகளும் வருமான வரியுடன் சரிபார்க்க படுகிறன.
ஒரு பெரியவர் எப்போது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசலில் அமர்ந்தபடி…, “சிவபுராணம் படித்துக் கொண்டே இருப்பார்”…..!! இளைஞன் ஒருவன் பல நாட்களாக…., ” இதனை கவனித்துக் கொண்டே இருந்தான்”….!!ஒரு நாள் அவரிடம் வந்து கேட்டான்….!! ”
தாத்தா…! “எப்பப் பாத்தாலும் இந்த புத்தகத்தையே படிச்சிட்டு இருக்கீங்களே”…..,”இதை எத்தனை நாளா படிக்கிறீங்க”…? என்றான். பெரியவர் சொன்னார், ” ஒரு அம்பது அம்பத்தஞ்சு வருஷம் இருக்கும் “….!! அப்படின்னா….,
” இந்தப் புத்தகம் உங்களுக்கு மனப்பாடம் ஆயிருக்குமே”….!!”அப்புறம் ஏன் இன்னும் படிக்கிறிங்க”….. ? என்றான். தாத்தா சிரித்தபடி கூறினார், ” எனக்கு ஒரு உதவி செய்”….!!”அதை நீ செஞ்சு முடிச்சப்புறம் நான் பதில் சொல்றேன்”…..!! இளைஞன் கேட்டான், ” என்ன உதவி தாத்தா…..?
கோபால் வீட்டில் அமர்ந்து லேப்டாப்பில் ஒரு முக்கியமான ஆபிஸ் ஃபைலில் கணக்கு போட்டுக்கொண்டிருந்தான். பக்கத்தில் இருந்த எப்.எம் ரேடியோவில் “போடா போடா புண்ணாக்கு, போடதே தப்புக் கணக்கு” என்ற பாட்டு ஓடிக் கொண்டிருந்தது.
ரகசிய ஃபைல் என்பதால் திடீரென மனதில் உதித்த ஒரு பாஸ்வேர்ட் போட்டான்.
மறு நாள் காலை. பாஸ்வேர்ட் மறந்து விட்டது.
அதில் ஒரு டெண்டர் பற்றிய விபரங்கள் இருந்தன. அது கிடைக்காவிட்டால் Please tender your resignation என சொல்லி விடுவார் மேனேஜர்.