#AdiShankaracharya
ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம் கருணாலயம் |
நமாமி பகவத்3பாத3 ஶங்கரம் லோகஶங்கரம் ||
‘ஶங்கர:’ மங்களங்களை செய்பவரென்று பொருள்.
‘ஶங்கரம் லோகஶங்கரம்’ உலகத்துக்கெல்லாம் நன்மைகளை மங்களங்களை செய்பவர் ‘ஶங்கரம்’.
சங்கராச்சாரியார் reformer கிடையாது. ‘ஶ்ருதி ஸ்ம்ருதி
புராணானாம் ஆலையம்’ – வேதம், தர்ம சாஸ்திரங்கள், புராணங்கள் இதையெல்லாம் வைத்து ஒரு கோயில் கட்டினால் அந்த கோவிலில் என்ன ஸ்வாமியை வைக்கவேண்டும் என்றால் ஆசார்யாளைத் தான் வைக்க வேண்டும்.
‘ஶ்ருதி ஸ்ம்ருதி புராணானாம் ஆலையம் கருணாலயம்’ – வெறும் படிப்பு மட்டும் கிடையாது. அவருக்கு கருணையும்
இருந்தது. கருணைக்கும் ஒரு கடலாக இருந்தார். ‘அந்த ஆதிசங்கர பகவத்பாதாளை நமஸ்கரிக்கறேன்’ என்று இந்த ஸ்லோகத்திலேயும் #தோடகாஷ்டகம் முடிவிலும் சொல்லி நமஸ்காரம் செய்வது வழக்கம். மஹா பெரியவா ஆசார்யாள் மேல் ஒரு ஸ்லோகம் இயற்றியுள்ளார். மஹா பெரியவா 100 வருடங்கள் இருந்தார். ஆனால் அவருக்கு
ஸ்லோகம் எழுதவேண்டும் என்கிற ஆசையே வரவில்லை! இருக்கிறதை எல்லாம் படிப்போம். ஆசார்யாள் கிரந்தங்கள் எல்லாம் படிப்போம் என்று அதையே திரும்ப திரும்ப பிரசாரம் பண்ணிக் கொண்டிருந்தார். அவர் ‘துர்கா பஞ்சரத்னம்’ என்று ஒன்று இயற்றியுள்ளார். அடுத்தது இந்த ஒரு ஸ்லோகம் ஆசார்யாள் மேல்!
கு3ருர் நாம்னா மஹிம்னா ச ஶங்கரோ யோ விராஜதே |
ததீ3யாங்க்4ரிக3லத்3ரேணு கணாயாஸ்து மனோ மம ||
‘நாம்னா ச மஹிம்னா ச’ பேரிலும் சரி, மகிமையிலும் சரி எவருக்கு ‘ஶங்கரர்’ என்ற பெயரோ, ‘ஶங்கர:’ என்கிற ஆசார்யாளோட பேரே அவர் பிறந்த இந்த ‘வைகாசி சுக்ல பஞ்சமி’ யை வைத்து ‘கடபயாதி ஸங்க்யை’ என ஒன்று,
அதைக் கொண்டு இந்த நாளில் அவருக்கு ‘ஶங்கர:’ என்று பேர் வைத்தார் அப்பா. அந்த பேருக்கு ஏத்த மாதிரி மகிமையோட இருந்தவர் என் குருநாதர். பேருக்கேற்ற மகிமையோட விளங்கினார்.
அவருடைய ‘அங்க்4ரிக3லத்3ரேணு’ – பாத தூளியின்
‘கணாயாஸ்து மனோ மம’ – ஒரு துகளாக இருக்க ஆசைப்படுகிறேன் என்கிறார் மகா
பெரியவா. அப்படி ஒரு பக்தி! ‘ஆசார்யாள் மாதிரி நீங்க’ என்று அவரிடம் யாராவது சொன்னால், “அவர் யானை மாதிரி காரியம் பண்ணினார் 32 வருஷத்துல. நாங்கள்லாம் அவர் பேரை வெச்சுண்டு இருக்கோம். ஆனா அவர் பேரு எங்களுக்கெல்லாம் எதுக்கு வெச்சிட்டு போய்யிருக்கார்னா அதுனாலாயாவது எங்களுக்கு ஒரு நாள்
ஆத்ம சக்தி வந்து அதுனால நாங்க நல்ல காரியம் பண்ணலாமேன்னு வெச்சிருக்கா” என்று சொல்லுவார். இந்த ஸ்லோகத்தை பார்த்தால் பெரியவாளோட வினய ஸம்பத் தெரியும். அப்படி வினயமா இருந்தே மஹாபெரியவா என்னும் ஒரு ஜோதி 100 வருடங்கள் நமக்கு வழிகாட்டவில்லை என்றால் இன்னும் எவ்வளவோ துன்பப் பட்டிருப்போம்.
அதனால் இன்று தோடகாஷ்டகம் சொல்லி மஹாபெரியவாளையும் நமஸ்காரம் செய்வோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

valmikiramayanam.in/?p=3753

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 7
#மாத்ருகா_பஞ்சகம்
#ஆதிசங்கரர்
ஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பதிலிருந்து அவரின் மாத்ரு பக்தியை கண்டு நம் கண்கள் குளமாகும். கயாவில் ஸ்ராத்தம் செய்யும் போது ஸ்ராதத்தை நடத்தும் சுவாமி பிண்ட பிரதானம் கொடுப்பதை பற்றி ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பார். Image
குறிப்பாக தாயாருக்கு பிண்ட பிரதானம் கொடுக்கும் போது நாம் கர்ப்பத்தில் இருக்கும் போதும் நம்மை வளர்த்து ஆளாக்கும் போதும் தாயாருக்கு எவ்வளவு உபாதைகளை கொடுத்தோம் என்பதை பற்றி ஓர் அரை மணி நேரம் விரிவாக விளக்குவார். அப்போது நம் கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் சுரக்கும். ஆதி சங்கரர்
மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிக்கும் விதம் அவரின் மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும். உன் மரண சமயத்தில் அருகே இருப்பேன் என்று வாக்குக் கொடுத்து தான் துறவியாக மாறுவதற்குத் தன் தாயிடம் சம்மதம் வாங்கியதும், அதன்படி அந்தச் சமயத்தில் தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை
Read 11 tweets
May 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஏழை குடியானவன் செந்தில், குடும்ப கஷ்டங்களால் மிகவும் அவதிப்பட்டு வந்தான். தன் பணிக்காக அதிகாலையில் செல்லும் செந்தில் இரவு வேளையில்தான் வீடு திரும்புவான். எனவே அவனால் தினமும் ஆலயத்திற்குச் சென்று இறைவனை வழிபட முடியவில்லை. இறைவனை வழிபட்டு தன்னுடைய துன்பங்களைப்
போக்கிக் கொள்ளலாம் என்று நினைத்தால், வேலைப்பளு காரணமாக ஆலயத்திற்குச் செல்ல முடியவில்லையே என வருந்தினான் செந்தில். ஒரு நாள் சிறிய கிருஷ்ணர் சிலையை வாங்கி வந்து, தன் குறைகளைச் சொல்லி வழிபட்டு வந்தான் செந்தில். தினமும் பணிக்கு செல்லும் போதும், இரவு தூங்கும் வேளையிலும் கிருஷ்ணரின்
சிலையை வணங்கினான். ஊதுபத்தி, சாம்பிராணி போன்ற நறுமணப் பொருட்களை வைத்து வழிபட்டான். பல மாதங்கள் ஆகியும் அவன் வறுமை அகலவில்லை. இதனால் கிருஷ்ணரின் மீது செந்திலுக்கு கோபம் வந்தது. ‘நான் தினமும் இந்த கிருஷ்ணரை வழிபட்டுக் கொண்டிருக்கிறேன். என் கஷ்டத்தை இவர் கண்டுகொள்வதே இல்லை’ என்று
Read 8 tweets
May 6
#MahaPeriyava
"I want to perform panchayatana puja", my father prayed to Him in His Vishnupuram camp. Since the pooja murtis such as Salagramam, Banam, and Spatikam were not available then, the anugraham to send them after reaching Kumbakonam was given.
When they reached
Kumbakonam, the pooja murtis were given to a Mutt attendant with orders to deliver them to Vishnupuram.
"In whose house should I deliver?"
"Deliver it to the gruham where I am present!"
The attendant had climbed up and down the steps of each house in the Vishnupura Agraharam but
could not find out the location of the house. As he came to our house and peeped in, he sat on the thinnai satisfied.
My father who came out asked him, "enna samacharam (what is the matter)?"
"Periyava asked this puja box to be delivered to you."
"To me?"
"Yes, without specifying
Read 5 tweets
May 5
தெலுங்குக் கவிஞர் ஆருத்ரா, கவிஞர் கண்ணதாசன் இருவரும் சம காலத்தவர். அவர் ஒரு விழாவில் பேசியது:
நானும் கவிஞர் கண்ணதாசனும் நல்ல நண்பர்கள். அடிக்கடி நேரிலும் அவ்வப்போது தொலைபேசியிலும் அளவளாவாவதுண்டு! இன்றைக்கு என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்பார், நான் சொல்லுவேன். அதே போல
நீங்கள் என்ன பாடல் எழுதினீர்கள் என்று கேட்க அதையும் அறிந்து கொள்வேன். அப்படி ஒரு சமயம் நான் கேட்டபோது அவர் ஒரு பாடல் சொன்னார். அசந்து போனேன். இன்னொரு முறை சொல்லுங்கள் எனச் சொல்லிக் கேட்டேன். அந்தப் பாடல் அந்த அளவுக்கு என்னை மிகவும் ஈர்த்தது. என்ன பாடல் தெரியுமா?
#லட்சுமிகல்யாணம் என்கிற திரைப்படத்திற்காக கண்ணதாசன் இயற்றிய #ராமன்_எத்தனை_ராமனடி என்கிற பாடல்தான் அது. கவிஞரிடம் எப்படி இத்தனை ராமனை வரிசைப் படுத்தினீர்கள் என்று கேட்டேன். எந்தப் பாடலுக்கும் ஒரு கரு உண்டல்லவா? இந்தப் பாடலுக்கு என்ன கரு என்று கேட்டேன். கண்ணதாசன் சொன்னார், Image
Read 8 tweets
May 5
#Sandhyavandanam
Sandhyavandana is a short religious practice that Hindus perform thrice daily. It combines specific mantras with breathing practice and meditation. Regular practitioners perform this thrice a day, just before sunrise, at noon and just before sunset. Vedic saints
believed that it is those times of the time that the mind & body is fully alert, and we could leverage those periods to strengthen the mind. It takes about 10-15 minutes each time. There are 4 main components of Sandhyavandana:
1. Gayathri Japa - this is the core of the ritual.
It comprises of 5-10 min of meditating on a manthra (hymn) that Hindus consider very sacred. The mantra has a deep calming effect and sharpens the concentration.
2. Pranayama - this is the breath control part of the exercise. Pranayama has a great health benefit as it can greatly
Read 14 tweets
May 5
#MahaPeriyava
Once a group of people from Thiruvananthapuram, came to Kanchi, after visiting Kanyakumari, Thiruchendhur, Madurai, Trichy, Thanjavur and Kumbakonam. It was abisheka time at Kamakshi koil and seemed it might take an hour of time to be spent waiting. So, they decided
to have darshan of Sri Maha Periyava and started except for one couple. That man was a shishya of another Sankara Mutt. So, he stayed in the temple itself to avoid seeing and doing namaskaram to Sri Maha Periyava. Since nobody returned even after a long time, that man came to
SriMatham in search of people who came there. Periyava was doing aarathi when the couple entered. After completing the pooja, Periyava came down and started giving theertha prasadam. This man’s turn came. Periyava told his name, about his father, their gotram, the construction of
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(