நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.
▪︎ கொழு:
உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.
புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
நிலத்தில் கலப்பையின் #கொழு சென்ற படைச்சாலெங்கும் ஒளிவிளங்கும் மணிகளைக் கொண்ட கதிர்கள் விளைந்தன.
புன்செய் நிலத்தை உழுத கொழுப்போல, எம் பற்கள் இரவும் பகலும் இறைச்சியைத் தின்றதால் முனை மழுங்கியது.
பாறைப் பகுதியைத் தோண்டி நீர் பெறுதற்கும், கற்கள் நிரம்பிய இடங்களைச் சமன் செய்யவும், பரற்கற்கள் உள்ள பகுதியில் பள்ளம் தோண்டவும் பயன்படும் கருவி #கணிச்சி.
காட்டைச் சார்த்த இடத்தே, குந்தாலியால் பாறைகளை உடைத்துத் தோண்டப் பெற்ற கிணற்றுள் மிக்க ஆழத்தில் நீர் ஊறிக்கிடக்கும்.
வெயிலின் வெம்மையால் கொதிப்புற்ற பரற்கற்களை உடைய பள்ளங்களில், கணிச்சியால் குழிதோண்டி உருவாக்கிய கிணறுகளில் பசுக்கூட்டத்தை மேய்க்கும் #ஆயர்கள் நீரைக் காணாராகி...
அவ்விடத்தே மேலும் தோண்டி ஊறிவரும் நீரைத் தாமும் குடித்து ஆனிரையின் விடாயும் தீர்ப்பர்.
▪︎ நவியம் (கோடரி)
இக்கருவி #கோடாலி என்றும் அழைக்கப்பெறும். இக்கருவி மரங்களை வெட்டுதற்குப் பயன்படுவது. வடித்தலினால் செய்யப்பட்ட #கோடரி வெட்டுவதனால்...
ஊர் தோறுமுள்ள காவல் மரங்கள் உள்ள சோலைகள் நிலை குலைந்தன.
நெடிய காம்புகளை உடைய கோடரி பாய்தலால் மணமிகு பூக்கள் உள்ள, நெடுங்கிளைகள் முறிந்து தனியே கிடப்பவும், சோலைகள் தோறும் உள்ள காவல் மரங்கள் வெட்டப்படுகின்றன.
▪︎ அரிவாள்:
நன்கு விளைந்த நெல், வரகு முதலிய கதிர்களைக் கூரிய அரிவாளால் அறுத்து, கட்டாகக் கட்டி, களத்து மேட்டிற்கு எடுத்துச்செல்வர்.
நெற்கதிரை அரிகின்ற உழவரது கூரிய #அரிவாள் பற்றி #நற்றிணை கூறுகிறது.
நெற்கதிர்களை அறுவடை செய்யும் உழவர்கள், தம் அரிவாள்கள் கூர் மழுங்கின், மீண்டும் அவை வலிமையுடன் கதிர் அறுக்க, தீட்டும் கல் #அரியக்கல் என்று அழைக்கப்படுவதைப் புறம் சுட்டுகிறது.
குயம், இரும்பு ஆகிய சொற்கள் கதிர், அரிவாள் என்ற பொருளில் ஆளப்பட்டுள்ளன.
குனிந்து நின்று அரிவாளின் வாயாலே நெற்கதிரை அறுத்து,
அரிவாளால் அரிதலுற்றன பெரிய புனத்திலுள்ள வரகுக் கதிர்கள்.
இக்கருவி கரிய கரம்பு நிலத்தைக் குத்திக்கிளரப் பயன்பட்டது.
இரும்பாலான பூண் தலையிலே கட்டப்பட்டுத் திரட்சி உடைய மரத்தாலான கைப்பிடி உடையதும், உளி போலும் வாயை உடைய பாரைகளாலே கட்டிகள் கீழ் மேலாக வரும்படி குத்திக் கிண்டினர்.
- நன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.
மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.
அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.
உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.
நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.
ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.
தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.
#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.
க) மனை அமைப்பு:
#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.