- எனும் புறநானூற்றுப் பாடல் (புறம். 322) கூறுகின்றது.
சங்க காலத்தில் பல்வேறு வகையான விலங்குகள் வேட்டையாடப்பட்டன. அதற்குப் பல்வேறு வகையான கருவிகளும் உத்தி முறைகளும் பயன்படுத்தப்பட்டன.
▪︎ உடும்பு வேட்டை:
வேட்டுவச் சிறுவர்கள் வீட்டருகில் இருக்கும் மடுக்கரையில் உடும்பைப் பிடித்து வந்துள்ளனர் என்பதை பின்வரும் பாடலடிகள் வழி அறியலாம்
▪︎ பன்றி வேட்டை:
குறிஞ்சித் திணை வாழ்வில் பன்றி வேட்டை முக்கியமானது. சில வேளைகளில் பன்றிகள் தாக்கும் என்பதால்,
#வேடர்கள் அவை நீர் பருகச் செல்லும் வழித் தடங்களில் பதுங்குக் குழி அமைத்து அவற்றை வேட்டையாடினர்.
தினைப்புனத்தில் விளைந்த கதிர்களை மேய வரும் பன்றிகளைக் கற்பொறிகளை வைத்துப் பிடித்தனர். இக்கற்பொறி பின்வருமாறு அழைக்கப்பட்டது.
▪︎ முள்ளம்பன்றி வேட்டை:
சங்க காலத்தில் #முள்ளம்பன்றி வேட்டை ஆபத்தாக இருந்தது. சில சமயங்களில் முள்ளம்பன்றி தனக்கு ஆபத்து ஏற்படும் காலத்தில்...
உடலைச் சிலிர்த்துத் தன் முட்களால் வேட்டைக்காரனைத் தாக்கிவிடும்.
இவ்வாறு புண்பட்ட #வேட்டுவன் ஒருவன் வலிதாங்காமல் கூச்சலிட்டு அழுதபோது, அது கானகமெங்கும் எதிரொலித்ததை, பின்வரும் பாடலடிகள் விளக்குகின்றன.
உடலைச் சிலிர்த்து எதிரிகளின் மேல் முள்ளை எய்வதால் #முள்ளம்பன்றி என்றும் #எய்பன்றி எனவும் அழைக்கப்பட்டது.
▪︎ மான் வேட்டை:
சங்க கால #வேட்டுவர்கள் புதுமையான முறை ஒன்றின் மூலம் மான் வேட்டையாடினார்கள். முதலில் பெண்மான் ஒன்றைப் பிடித்து அதனை இளைப்பாறச் செய்து...
விளாமரம் அல்லது பலாமரத்தில் கட்டி வைப்பர். அந்த மானைக் காண ஆண்மான் வந்தபோது அதனை வேட்டையாடினார்கள் (புறம். 320). #பெண்மான், #சினைமான் ஆகியவற்றை வேட்டையாடுவது இல்லை.
▪︎ பறவை வேட்டை:
அக்காலத்தில் பறவை வேட்டை எளிமையாக இருந்திருக்கிறது. #கானவர் தம் குடிசைகளின் முற்றத்தில்...
நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.
▪︎ கொழு:
உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.
புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.
மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.
அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.
உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.
நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.
ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.
தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.
உலோகங்களில் உயர்ந்தது பொன். ஈரம், காற்று ஆகியவற்றால் ஒளி மங்குதல் இல்லாமையானும், அமிலம் போன்றவற்றில் கரையாத் தன்மையானும் #பொன் உயர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சங்க காலத்தில் வானத்தைத் தொடும் வனப்புறு அரண்மனைகள், உயர்ந்த மதிற்சுவர்கள், காற்று உள்ளே வர சன்னல்கள் பொருத்தப்பட்ட இல்லங்கள், குழாய்களை மண்ணுக்குள் புதைத்து நீர்கொண்டு செல்லும் அமைப்புகள் இருந்தமையைச் சங்கப்பாடல்கள் உணர்த்துகின்றன.
#அரண்மனைகள்
அக்காலத்தே அரண்மனைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதைப் பத்துப்பாட்டில் ஒன்றாய #நெடுநல்வாடை வழிக் காண்போம்.
க) மனை அமைப்பு:
#அரண்மனை அமைக்கும் முன், நல்லதொரு நாளில் நல்ல நேரத்தில் மனைநூலில் கண்டவாறு மனையைப் பிழை ஏதும் வாராமல் நூலிட்டு அளந்து, அரண்மனைக்குத் திருமுறைச் சாத்துச் செய்வர் என்பதைக் கீழ்க்கண்ட அடிகள் புலப்படுத்தும்.