சற்று நீண்ட பதிவு. பொறுமையோடு படித்தால் நாம் எப்படியெல்லாம் பாஜக அரசால் வஞ்சிக்கப்பட்டுள்ளோம் என்பது புரியவரும்.
வெள்ளையாக இருக்கறவன் பொய் சொல்லமாட்டான்,உயரிய பதவியில் இருக்கறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்பதெல்லாம் பாஜக கட்சியில் கிடையவே கிடையாது.
பிரதமரே கூட நிறைய இடங்களி்ல் உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார்.
அண்மையில் துக்ளக் விழாவில் மேடையேறிய அம்மையார் இந்திய நிதியமைச்சர் பல தவறான தகவல்களை பேசிவிட்டு போயுள்ளார். அப்படி பேசியதில் எது உண்மை?
முதலில் அவர் கூறியவை என்ன?
1.ஒன்றிய அரசு தமிழக அரசுக்கு போதிய நிதி வழங்கவில்லை என்பது தமிழக அரசின் குற்றச்சாட்டு - இது உண்மையல்ல.
2. சரக்கு மற்றும் சேவை வரி நிலுவைத் தொகை தொடர்பாக தமிழக அரசு சொல்லும் தகவல்கள் பொய்யானவை.
3. மத்திய-மாநில அரசுகளுக்கிடையே சுமூக உறவு இருப்பதில்லை.
பாகுபாடு பார்க்கிறார்கள் ஒன்றிய அமைச்சர்கள் எனக் கூறிவரும் குற்றச்சாட்டுகள் எல்லாமே பொய் பிரச்சாரம்.
4. ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல் டீசல் விலையை கொண்டுவர தமிழக நிதியமைச்சர் ஒப்புக்கொண்டால் அதனை ஜிஎஸ்டி கவுன்சிலில் கொண்டு விவாதிக்க தயாராக இருக்கிறோம்.
5. தங்களை ஓரவஞ்சனை செய்வதாக தமிழக அரசு சொல்வதும், தங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்படவேண்டும் என்பதெல்லாம் பிரிவினைவாதம் என்று அம்மையார் பேசி உள்ளார்.
முதல்வர் அம்மையாரை புதுடெல்லியில் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
அம்மையார் முழுவதுமாக அதைப்படித்திருந்தால் பல கேள்விகளின் உண்மைத்தன்மை அறியமுடியும்.
உண்மையான நிலவரம் என்ன?
இதோ:
2015-2016 காலக்கட்டத்தில் 14 வது நிதிக்குழு ஊராட்சிகளுக்கு அடிப்படை மானியமாக 7899.69 கோடி ரூபாய் பரிந்துரைத்தது.
2016-17 ஆண்டிற்கான நிதியாக 494.09 கோடி ரூபாயை விடுவித்துள்ளது ஒன்றிய அரசு. அதற்கான பயன்பாட்டு சான்றிதழ் அனுப்பியுள்ளது அன்றைய அதிமுக அரசு. 2017-18 ஆண்டின் மானியக் கோரிக்கையை வைத்த போதும், தொடர்ச்சியாக 2018-19,2019-20 ஆகிய ஆண்டுகளில் மானியமாக வழங்க வேண்டிய ...
அதே ஆண்டுகளில் மற்ற பெரும்பாலான மாநிலங்களுக்கு நிதியைத் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே அடிப்படை மானிய நிலுவைத்தொகை 548.76 கோடியும், செயல்பாட்டு மானியமாக 2,029.22 கோடி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என..
முதல்வர் தந்துள்ள நிதியமைச்சருக்கான மனுவில் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
இது போக,
சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டு நிலுவைத் தொகையான 13,504.74 உட்பட 20860.40 கோடி ரூபாய் ஒன்றிய பாஜக அரசு தமிழ்நாட்டுக்கு அளித்தாகவேண்டும்.
இவை விடுவிக்கப்பட்டால் தமிழ்நாடு தனது நிதி நெருக்கடியிலிருந்து மீண்டு வர உதவியாக இருக்கும். இதனை உடனடியாக விடுவிக்க கோரி முதல்வர் தனது மனுவில் இந்திய நிதியமைச்சருக்கு கேட்டுள்ளார்.
#துக்ளக் விழாவில் பேசிய அம்மையார் ஓன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய..
நிலுவைத் தொகையைப் பற்றி பேசாமல் மற்ற மாநிலங்களுக்கு விடுவித்த விவரத்தை கூறியதன் பின்னணி என்ன?
தமிழ்நாடு அரசு தவறான தகவல்களை தருகிறது என்றால் ஒன்றிய அரசு விடுத்துள்ளது என்ன? அதை பொதுவெளியில் சொல்லி இருக்கலாமே ?
இப்போது தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறதா?
நிதியை முறையாக தராதது ஏன்? அதைச் சுட்டிக் காட்டிய நிதி அமைச்சரை பிரிவினை பேசுகிறார் என மேடைப் பேச்சாளர் போல நிதி அமைச்சர் ஒரு தனியார் ஊடக நிகழ்ச்சியில் பல கோடி பேர் பார்க்கும் ஒளிபரப்பில் ஏன் கூறவேண்டும்?
ஆனால் இத்தனை நடந்தும் இது பற்றிய செய்திகளை கூற வேண்டிய அதிமுக கள்ள மௌனம் சாதிப்பது ஏன்? #திமுக-அதிமுக அரசியலுக்கு தானே தவிர மாநில நலன் கருதி சென்ற ஆட்சியின் நிதியமைச்சர் வாய் திறந்து பேசாதாது ஏன்?
நாட்டின் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனா? நிர்மலா சீதாராமனா?
தமிழக நிதியமைச்சர் தான் ஜிஎஸ்டியில் #பெட்ரோல்/#டீசலை கொண்டுவரவேண்டும் என்பதை ஒப்புக்கொள்ள மறுக்கிறார் என்பது எவ்வளவு பெரிய பொய். ஒருவேளை பிடிஆர் தடுத்தாலும் நிதியமைச்சர் நினைத்தால் கண்டிப்பாக கவுன்சிலில் இதைப்பற்றி விவாதிக்கலாம்.
#பிடிஆர் கூறுவது பழைய பாக்கியை தராமல் பேச வேண்டாம் என்பதே.
மொத்தத்தில் தமிழ்நாடு பாஜகவால் பழிவாங்கப்படுகிறது என்பது திண்ணம். தவிர பாஜகவுக்கும் உண்மைக்கும் என்றுமே வெகுதூரம்.மூலதனமே அவர்களுக்கு பொய் தான்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
2010 பிப்ரவரி 10 அன்று சென்னையில் ஐந்தமிழறிஞர் கலைஞருக்கு 'திருக்குறள் பேரொளி' எனும் விருது தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகள் அவர்களால் வழங்கப்பட்டது. அப்போது ஏற்புரை நிகழ்த்திய கலைஞர், 'வாய்மையே வெல்லும்' என்ற சொற்றொடருக்கு உண்மையான பொருள்
என்ன என்பது பற்றி இவ்வாறு குறிப்பிட்டார்:
"#அண்ணா அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்று சட்டமன்றத்திலே நானும் நாவலரும் பேராசிரியரும் அமருகின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்ட போது, அப்பொழுது சில வாசகங்களை எப்படியெல்லாம் நாம் நடைமுறைப்படுத்தலாம் என்று எண்ணிய நேரத்திலே,
'சத்தியமேவ ஜெயதே' என்றிருந்த அந்தச் சொற்றொடரை எப்படி மாற்றலாம் என்று கருதியபோது, 'சத்தியம்' என்றால் வாய்மை. 'வாய்மை வெல்லும்' என்று சொல்லலாமே என்று யோசித்து, 'வாய்மையே வெல்லும்' என்றிருக்கலாம் என்று அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தினோம். அது சில நாட்களுக்கு எதிர்ப்புக்கு ஆளாயிற்று.
சென்னையில் கட்டப்பட்ட முதல் மேம்பாலமும், இந்தியாவிலேயே மூன்றாவதாக கட்டப்பட்டதும், கட்டி முடிக்கப்பட்ட காலத்தில் இந்தியாவிலேயே நீண்ட பாலமாகவும் திகழ்ந்த சென்னை அண்ணா மேம்பாலம் 1973 ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி திறந்துவைக்கப்பட்டது.
சென்னை அண்ணா மேம்பாலம் தான் Asia's First Grade Separator.
இந்திய நாட்டில் பிறந்த தலைவர்களுடைய பெயரால் வழங்கப்பட வேண்டும் என்பது நம்முடைய எண்ணம்.
அந்த வகையில் இனி,
♦ சைதாப்பேட்டை மர்மலாங் பாலம் மறைமலைஅடிகளார் பாலம் என்றும்
♦ அடையாறு பாலம் தமிழ்த் தென்றல் திரு.வி.க. பாலம் என்றும்
♦ வாலாஜா பாலம் காயிதே மில்லத் பாலம் என்றும்
லார்டு #மவுண்ட்பேட்டன் சுதந்திரம் கொடுத்த போது, அவருடனும் #நேரு மாமாவுடனும் தருமபுர ஆதீனமோ அல்லது செங்கோலோ அல்லது ராஜாஜியோ இருப்பது போல் ஒரு படத்தைக் கூட காட்ட முடியாத சங்கிகள்…
தங்களின் மிகப்பெரிய ஆயுதமான வாட்ஸப் யூனிவர்சுட்டி மூலம் கட்டிவிடும் கதைகள்…
அப்பப்பா…! காது கிழிந்து ரெத்தமே வந்து விடும். அந்தளவுக்கு 1947ல் நடந்ததையே மாற்றி கதை கட்டுகிறானுங்க.
படம் 1 : 15 Aug 1947 எடுத்த படம். Lord Mountbatten கையில் இருந்து ஆதீனம் செங்கோலை வாங்கி நேரு மாமா கையில் கொடுத்தார் என்பதெல்லாம் அப்பட்டமான பச்சைப் பொய்.
படம் 2 : Aug 15, 1947 விடுதலை நாளுக்கு முன் மாலை பலரும் நேரு அவர்களை சந்தித்து வாழ்த்து கூறினர். அதில் பல மதத் தலைவர்களும் உண்டு. அதில் ஒருவர் தான் தருமபுர ஆதீனம். தனியே சந்தித்துப் பூங்கொத்து / செங்கோல் கொடுத்ததை ..
#செங்கோல் கருங்கல், யார் திறந்து வைப்பது போன்ற விவாதங்களுக்கு நடுவில், ஒரு கொடுஞ்செய்தி முகத்தை மறைத்துக்கொண்டு நழுவிச் செல்கிறது..
புதிய நாடாளுமன்ற மக்களவையில்
'எதிர்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு' 888 இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன..
அது என்ன எதிர்காலத்தேவை..?
543 என்கிற எண்ணிக்கை 888-டாக மாற வேண்டிய தேவையென்ன..?
அதாகப்பட்டது மக்கள் தொகை அதிகரிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகமாகப் போகின்றனவாம்..
தென்னிந்தியாவில் பெரும்பாலும் குடும்பக்கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுகிறது..
ஒப்பீட்டளவில் வடக்கின் அளவுக்கு தெற்கில் மக்கள்தொகை அதிகரிப்பு சதவிகிதம் குறைவு.
அதாவது இப்போதுள்ள 543 தொகுதிகளில் இன்னும் பாதியளவு வடமாநிலங்களில் தொகுதிகள் அதிகமாகும். தென்னிந்தியாவில் ஒரு தொகுதிகூட வெற்றிபெறாவிட்டாலும் பா.க.ஜ. ஆட்சியில் அமர்வதற்கான வேலைகள் நடப்பதாகத் தெரிகிறது.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை சென்னையில் நடத்தி துபாய் எஸ்போ போல சாதிக்கவேண்டும் என்று ஓடிக்கொண்டு இருக்கிறார்...அதை திசை திருப்ப என்னமோ செய்கிறார்கள்...
ஜப்பானில் முதல்வர் பேசியது முக்கியமானத:-
மருத்துவ சாதனங்கள் பூங்கா,உணவுப் பூங்காக்கள்,
மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்தொகுப்புகள்..
மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம் என்று சொன்னது தான் ..
கடைசியாக, இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத் தான் வளர முடியும்.