சங்க காலத்தில் தமிழகத்திற்கும், கிரேக்க, ரோமானிய நாடுகளுக்குமிடையே நடைபெற்ற கடல் வணிகத்தில் இவ்விரு நாடுகளுக்கிடையே #புலம்பெயர்தல் நிகழ்ந்துள்ளது.
கிறித்து பிறப்பதற்குப் பன்னூறாண்டுகட்கு முன்பே தமிழர் மேற்கே கிரேக்கம், உரோம், எகிப்து முதல் கிழக்கே சீனம் வரையில் கடல் வணிகத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.
வணிகத்துக்காகத் தமிழகம் வந்த கிரேக்க, ரோமானியர்களைச் சங்க இலக்கியம் #யவனர் என்று குறிப்பிடுகின்றது.
#யவனர்கள் வணிகத்தின் பொருட்டும், தொழில்நுட்பத்தின் காரணமாகவும் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்துள்ளனர்.
#காவிரி ஆறு கடலோடு கலக்கும் #பூம்புகார் சோழர்களின் தலைநகரமாகவும் பெருந்துறையாகவும் வாணிப, கலாசார நகரமாகவும் இருந்தது.
யவன, கிரேக்க, எகிப்து நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து வந்த வணிகர்கள்; வாயில் காப்போர், சிற்பிகள், ஆடல் மகளிர் எனப் பலரும் தங்கள் மொழியைப் பேசிக்கொண்டு தனிக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்தார்கள்.
அது #யவனச்சேரி என்று அழைக்கப்பட்டது. #புகார் ஒரு சர்வதேச நகரமாகும் என்பர்.
வணிக நிமித்தமாகச் சோழ நாட்டின் பூம்புகாரில் யவனர்கள் வாழ்ந்ததைப் #பட்டினப்பாலை குறிப்பிடுகிறது.
இவர்கள் தங்கியிருந்த இடத்தைச் #சிலப்பதிகாரம் 'யவன இருக்கை' என்று குறிப்பிட்டுள்ளது.
'அவந்தித் தச்சரும், யவனக் கொல்லரும்' (மணி.19:108) சோழ நாட்டில் தங்கித் தொழில் செய்ததைக் கூறுகிறது
சோழர்களின் சிறப்புமிகு இத்துறைமுக நகரை உருவாக்க 'யவனத் தச்சர்' என அழைக்கப்பட்ட ரோம நாட்டுச் சிற்பிகள், கட்டக்கலை வல்லுநர்கள் பயன்பட்டதை மணிமேகலையால் அறிய முடிகிறது.
தமிழகத் தொல்பொருள் ஆய்வும், கோவா தேசியக் கடலாய்வு நிறுவனம் நடத்திய கடல்ழாய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிற்காலத்தில் தோன்றிய பெருங்கதையும் யவனர்கள் தங்கிருந்த இடங்களை #யவனச்சேரி, #யவனப்பாடி பின்வருமாறு அறியலாம்.
யவனர்கள் தொடர்ந்து தமிழ்நாட்டில் வாழ்ந்துள்ளனர் என்பதைப் பெருங்கதை பதிவு செய்துள்ளது.
பாண்டிய நாட்டில் யவனர்களான கிரேக்க, ரோமானியர்கள் இருந்ததையும் பாண்டியர் தலைநகரான மதுரையை, ரோம் நாட்டு வீரர்கள் காவல் செய்ததையும் இலக்கியங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
யவனர்களின் இப்புலம்பெயர்வு வாழ்வு பாண்டிய நாட்டின் சிறப்புமிக்க கொற்கைத் துறைமுகத்தின் முத்து வணிகத்தால் ஏற்பட்டது.
தமிழர்கள் மத்திய தரைக்கடல் நாடுகளோடு நடத்திய முத்து வணிகம் பினீஷியர், சால்டியர் மூலம் நடைபெற்றதாம்.
பின்னர் கிரேக்கமும், எகிப்தியரும் இக்கடமையை ஏற்றனர். அவர்களைத் தொடர்ந்து, பொ.பி முதல் - இரண்டாம் நூற்றாண்டுகளில் அராபியரும், உரோமரும் இக்கடமையைச் செய்துள்ளனர்.
நைல் ஆற்றின் துறைமுகப்பட்டினமான அலெக்சாந்திரியாவில் நூற்றுக்கணக்கான பழந்தமிழர்கள் குடியேறியிருந்தனர் என அறிகின்றோம்.
இக்குடியேற்றம் கடல் வணிகத்தால் நடைபெற்ற புலம்பெயர் வாழ்வை எடுத்துரைக்கிறது.
இலண்டன் பல்கலைக்கழக வரலாற்றுப் பேராசிரியர் வார்மிங்டன் இலத்தீன், கிரேக்க நூல்களை ஆய்ந்து உரோமர், யவனர், சீனர் நாட்டாரோடு பழந்தமிழர்கள் பன்னூற்றாண்டுகள் வணிகம் நடத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார்.
யவன நாட்டினின்று பல பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்றும்,
யவன நாட்டிலுள்ள தச்சர்களும், வணிகர்களும், தமிழகத்திற்கு வந்து தமிழ் மன்னர்களின் தலைநகரங்களிலும், துறைமுகப் பட்டினங்களிலும் குடியேறி வாழ்ந்து வந்தனர் என்றும்...
தமிழகத்தில் சோகைச் சேரியும், யவனச் சேரியும் இருந்துவந்தன என சங்க இலக்கியங்கள் சான்று தருகின்றன.
பிறநாட்டிலுள்ள #தாலமி, #பெரிப்புளூசு போன்ற ஆசிரியர்கள் நன்கு குறிப்பிட்டுள்ளனர்.
யவனர்களுக்கும், சீனர்களுக்கும், தமிழர்களுக்குமிடையே புலம் பெயர்வு என்னும் புதிய வாழ்வு தொடங்கியது.
கொற்கையில் #யவனர்கள் பலர் வணிக நலத்தின் பொருட்டுக் குடியேறியுள்ளனர்.
அப்பகுதி யவனர் இருக்கை, யவனச்சேரி, வெள்ளையர் இருக்கை என்றெல்லாம் அழைக்கப்பட்டது.
கடல் வணிகத்தால் விற்பனை மையங்களில் பலமொழி பேசும் தேசத்து மக்களின் வருகையைப் #பட்டினப்பாலை அடிகளில் பின்வருமாறு அழகுற அறியலாம்.
பல தேசத்து மக்கள் பல மொழிகள் பேசி, பொருள்களின் விலை கூறி, விற்ற தகவலைச் #சிலப்பதிகாரம்
பின்வருமாறு எடுத்துரைக்கின்றது.
இதே கருத்து இந்திர விழாவூர் எடுத்த காதையில் பின்வருமாறு அறியலாம்.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
நீர் வளமும், நில வளமும் மிக்க தமிழ் நாட்டில் பண்டைக் காலந்தொட்டே நிலத்தின் தன்மைக்கேற்பப் பயிர்களைத் தேர்ந்தெடுத்து, செய்வனயாவும் செவ்வனே செய்து நல்ல வருவாய் பெற்று வளமுடன் வாழ்ந்தனர்.
பயிர்த்தொழிலுக்கு வேண்டிய கருவிகளான கொழு, கணிச்சி, கோடரி, அரிவாள், உளிவாய்ப் பாரை ஆகியவற்றைக் கொல்லர்கள் வடித்துக் கொடுத்தனர்.
▪︎ கொழு:
உழவுத்தொழிலில் நன்கு பயின்ற பெரிய எருதுகளை நுகத்தில் பூட்டி உழவர்கள் உழச்சென்றனர். பெண் யானையின் துதிக்கை போன்று வளைந்த வாயை உடைய...
கலப்பையில் பொருத்தப்பட்ட, உடும்பு முகத்தை ஒத்த #கொழு, நிலத்தில் முழுவதும் ஆழ அழுந்துமாறு உழுதனர்.
புன்செய் நிலத்தில் வித்திட வேண்டி வலிமையான கைகளை உழவர்கள் கடாக்களை நுகத்தில் பூட்டி உழுதனர்.
சங்ககாலத்தில் நகரங்களில் 'மாமதில் மஞ்சு சூழும்', 'மாளிகை நிரை விண் சூழும்' என்றவாறு உயர்ந்த மதில்களும் மாளிகைகளும் நிறைந்திருந்தன.
மன்னர்கள் வாழ் அரண்மனைகளும், நகர மாந்தர் வாழ் இல்லங்களும் மிகவும் அழகுற அமைக்கப்பட்டிருந்தன.
இவற்றில் அமைக்கப்பட்டிருந்த கதவுகளில் தெய்வ உரு, குவளை மலர் ஆகியவை செதுக்கப்பட்டிருந்தன.
அக்கதவுகளில் பருத்த இருப்புப் பட்டைகள் ஆணிகளால் பொருத்தப்பட்டிருந்ததோடு, நுண் திறத்துடன் தாழ்க்கோல்களும் பொருத்தப்பட்டிருந்தன என்பன போன்ற தச்சுத் தொழில் நுட்பத்தைக் #கட்டுமானவியல்...
... என்ற பகுதியில் அறிந்து வியப்படைந்தோம்.
உரோமப்பேரரசு, எகிப்துப் பேரரசுகளின் மன்னர்களும் அவர்தம் குடும்பத்தாரும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தனர் என்பது உலகமறிந்த செய்தி.
நம் மூத்த குடியினரான சங்க மாந்தர் சொகுசு வாழ்க்கையில் அவர்களையும் விஞ்சியவர்கள் என்பதை...
திருப்பரங்குன்றின் மீது, பேரழகு படைத்த ஆடல்மகள் ஒருத்தி கள்ளுண்ட மயக்கத்தில் நடனமாடுகிறாள்.
ஆடல்மகள் அழகிலே தன் கணவன் மயங்கிவிடுவானோ என்று அஞ்சிய ஒருத்தி, தன் கணவனைச் சினந்து நோக்குகிறாள்.
மற்றொருத்தி அந்நாட்டிய மகளிலும் தன்னழகு கூடி இருப்பின் கணவன் தன்னைப் பிரியான் என்று நினைத்துக் கண்ணாடியில் பார்த்து, தன்முகம், அணிகலன் ஆகியவற்றைத் திருத்திக் கொள்கிறாள்.
தலைவியின் தோழிகள் கேட்குமாறு, காதற்பரத்தை கூறுமாறு அமைந்த பாடல் மற்றொன்று.