#தர்ப்பை சுப காரியம் அல்லது அசுப காரியம் எதுவாக இருந்தாலும் அங்கே தர்ப்பை புல்லுக்கு முக்கியமான இடம் உண்டு. தர்ப்பை புல்லுக்கு இன்னொரு பெயர் 'குசா'. எந்த ஒரு புனிதச்செயல் செய்யும் நேரத்திலும் நம் சக்தி தடைபடாமலிருக்க நாம் கையில் தர்பத்தினாலான பவித்ரத்தை (மோதிரம் போன்ற அமைப்பு)
தரிக்கிறோம். முழுமையாக அந்த வேலை பூர்தியாகும் வரை கழற்றாமலிருப்பது நம் செயலுக்கு உதவுகிறது. #பாணிணி முனிவர் கௌமுதியை எழுதும் போது "பவித்ர பாணியாக உட்கார்ந்து ஆலோசித்து எழுதினார்" என்று மஹாபாஷ்யத்தில் கூறப்படுகிறது. பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம். இந்த பவித்ரம்,
செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது. அவை: 1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை 2) சுப கர்மாவில் 2 தர்ப்பை 3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை 4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை 5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை
தேவ கார்யங்களுக்கு கிழக்கு
நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப் படுகிறது. ஹோமங்களில் தர்ப்பங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன. ஶ்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங்களினால் தான் செய்யப் படுகின்றன. குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப
கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) பித்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லியுள்ளது. கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றியமையாதது. ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது. கல்யாணத்தில், கல்யாண பெண்ணிற்கும்,
சீமந்தத்திற்கும், அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் வழக்கமும் இருந்து வருகிறது. உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத் தவிர மற்றதுக்கு உபயோகப்
படுவதில்லை. தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.
க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கனவே பக்குவமாகி இருக்கும் பதார்த்தங்களிலும், குடிநீரிலும் தர்பங்களை போட்டுவைத்தால்
எந்த வித தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது. முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப்புல், தண்ணீர், மந்திரசத்தி மூன்றையும் இணைத்து செயற்கரியா செயல்களை செய்தனர். வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களை பிரயோகிதனர். பிரபஞ்சத்தில் பிராணசக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு. அதனாலேயே
சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான:" என்று விரலில் இடுக்கிக் கொண்டு பிராணயாமம் செய்கிறார்கள்.
குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:
ச நித்யம் ஹிந்தி பாபானி தூல ராசிமிவாநல:
கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராமணன் அகங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல
அவன் பாவங்களை அழிக்கவல்லான். தர்பை ஒரு சிறந்த மின் கடத்தி. அது ஆற்றலையும் கடத்த வல்லது. #திருநள்ளாறு கோயிலுக்கு ஒரு காலத்தில் சிவனை வழிபட்டு பிரம்மா பரிகாரம் பெற்றதாக ஸ்தலபுராணம் சொல்கிறது. பிரம்மதேவர் பூஜித்த சிவனுக்கு 'தர்ப்பாரண்யேஸ்வரர்' என்பது பெயராகும். இங்குள்ள ஸ்தல
விருட்சம் தர்ப்பை ஆகும். திருப்புல்லாணி திருத்தலத்தில் ராமன் சீதையைத் தேடிக்கொண்டு வந்தபொழுது, இங்கே மூன்று நாட்கள் புல்லில் இட்ட படுக்கையில் பள்ளி கொண்டிருந்தார். எனவேதான் இப்பெருமாளுக்கு ‘தர்ப்ப சயன ராமன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இவ்வாலயத்துத் தல விருட்சம் அரசமரம் எனினும்
புல்லாரண்யம் எனப் புகழ்பெற்ற இவ்விடத்தில் ஒருகாலத்தில் தர்ப்பைப் புல் ஏராளமாக வளர்ந்திருந்ததால், தர்ப்பைப் புல்லுக்கும் இங்கு முக்கியத்துவம் அதிகம். தர்ப்பைப்புல் எல்லா இடங்களிலிலும் வளராது. மிகவும் தூய்மையான இடங்களில்தான் வளரும். தர்ப்பைப்புல் இருக்கும் இடத்தில் துர்சக்திகளின்
நடமாட்டம் இருக்காது. தருப்பைப் புல்லைப் பொதுவாக பவுர்ணமிக்கு அடுத்த நாள் பிரதமையன்று சேகரிப்பர். அப்பொழுது அதற்குரிய மந்திரங்கள் உச்சரிக்கப்படும். தர்ப்பைப்புல் கொய்யும் போது சொல்லப்படும் மந்திரம்:
“தேவானாம் பரிஷூதமஸி வர்ஷவ்ருத்தமஸி,
தேவபர்ஹிர்மாத்வாஞ்..விவயஹம் ருஹேம!”-யஜுர்வேதம்
தை.ஸ 1.1.2.1
பொருள்: தர்ப்பமே, நீ தேவர்களின் பொருட்டு சேகரிக்கப்படுகிறாய், மற்றும் மழையால் வளர்கிறாய். உன்னை அறுப்பதற்கு கத்தியை
வைக்கிறேன். உன்னை அறுப்பவனாயினும் நான் குறைவற்றவனாகவே இருக்க வேண்டும். தர்ப்பமே, நீ நூற்றுக்கணக்கான தளிர்களாய் தளிர்த்து இனிது தழைப்பாயாக!
தர்ப்பையைக்
கொண்டே வேத காலங்களில் தவறான அதிர்வலைகளைக் கட்டுப்படுத்தினார்கள் என்பது இன்றைய விஞ்ஞான உலகத்திற்கு தெரிய வேண்டிய ஒன்று. தர்ப்பையை உபயோகப்படுத்திய பின், அதை நான்காக பிரித்து வடக்கு பக்கமாக போடவேண்டும். பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால்தான், நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்ம பலன்
அளிக்கும். (ஆசமனம் என்பது வலது கையை பசுவின் காது போல கோகர்ண முத்திரை செய்து கொண்டு, அதில் உளுந்து மூழ்குமளவிற்கு நீர் எடுத்துக் கொண்டு, பிறகு சுண்டு விரலையும் கட்டை விரலையும் நீக்கி கையை குவித்துக்கொண்டு உறிஞ்சுகின்ற போது ஒலி எழாமல், கைகள் உதட்டின் மீது படாமல் நீர் பருகுவதே.
இவ்வாறு 3 முறை மந்திரம் கூறி நீர் பருக வேண்டும். #ஆசமன_மந்திரம் ஆசமன மந்திரம் அவரவர் குல ஆசாரப்படியும், குரு உபதேசப்படியும் வேறுபடும். சிலர் அச்சுதாய நமஹ, அனந்தாய நமஹ, கோவிந்தாய நமஹ என்று கூறி செய்வர்.)
இத்தகைய சிறப்பு வாய்ந்த தர்ப்பையின் மகத்துவம் அறிந்து அதை போற்றி பாதுகாக்க
வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
ஒருவரின் சொந்த அனுபவம், டிஎம்மில் பகிர்ந்தது. தன் தந்தை உடல் நலம் இல்லாதிருந்தபோது ஒருவரின் அறிவுரைப்படி தர்ப்பைப்புல்லை கையில் பிடிதுக் கொண்டு அதன் முனை நீரில் இருக்குமாறு வைத்து தன்வந்திரி ஸ்லோகத்தை 12 முறை சொல்லி அந்த நீரை தன் தந்தைக்கு அருந்த அளித்து வந்தார். வெகு விரைவில்
தந்தை உடல் நலம் பெற்றதை இப்பொழுது நினைவு கூர்ந்துள்ளார். முன்பே இழையில் கூறியிருந்தபடி தர்ப்பை சிறந்த மின் கடத்தி. அறிந்து கொள்வோம் நம் இந்து மதத்தின் மகத்துவத்தை!
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் சாமியார் மணிகண்டன் ஆசிரமத்துக்கு அவர் நண்பர் பரணி என்பவர் வந்தார். அவருக்கு உணவு கொடுக்க விரும்பிய சாமியார், தான் வளர்த்த குரங்கைப் பார்த்து ஆஞ்சநேயா இலை போடு என்றார். குரங்கு ஆஞ்சநேயா வாழை இலை எடுத்து வந்து போட்டது. உடனே சாமியார் தன் கையில் வைத்திருந்த
பிரம்பால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து சாதம் போடு என்றார். குரங்கு சாதம் கொண்டு வந்து பரிமாறியது. திரும்பவும் தலையில் அடித்தார் மணிகண்டன். அவர் சொன்னதை எல்லாம் குரங்கு சரியாகச் செய்தாலும் அடி விழுந்து கொண்டே இருந்தது. நண்பர் பரணிக்கு மனம் பொறுக்கவில்லை. குரங்கு தான் நீங்கள்
சொன்னதை எல்லாம் சரியாகச் செய்கின்றதே, அப்புறம் ஏன் அந்த வாயில்லா ஜீவனை அடித்துத் துன்புறுத்துகிறீர்கள் என்று கேட்டார். சாமியார் மணிகண்டன் எதுவும் பதில் அளிக்கவில்லை. சிரித்து விட்டுப் பிரம்பை தானிருந்த பாயின் கீழே ஒளித்து வைத்தார். சற்று நேரத்தில் குரங்கு ஆஞ்சநேயன் தாவிப்
#MahaPeriyava was god incarnation Himself. Though He never attempted to display His spiritual powers explicitly, innumerable miracles stand as a testimony for the power of His blessings to save the world. Such a miracle was witnessed at an event happened at Tirupathi Kshetram. It
happened about 50 years ago. It is a common practice for the people of Tirupathi Tirumala Devasthanam to bring changes in the temple, to facilitate easy darshan to the devotees considering the ever increasing number. Once the Public Works Department and the Devasthanam members
had planned for such a change. It was customary for the people to go into the Sanctum Sanctorum and come out through the same way as they went in. Instead, if the side walls of the Artha Mandapa was removed and a way made through it, people could move to their right & left sides
இன்று #நரசிம்மஜெயந்தி#NarasimhaJayanti மகா விஷ்ணுவின் நான்காவது அவதாரமான நரசிம்ம ஜெயந்தி சதுர்த்தசி திதி மே 14 அன்று பிற்பகல் 3:22 முதல் மே 15 மதியம் 12:45 வரை உள்ளது. அதே போன்று, நரசிம்ம ஜெயந்தி பூஜை நேரமாக, மாலை 4:22 மணி முதல் 7:04 மணி வரை உள்ளது.
ஹிரண்யகசிபு என்ற அரக்கன்
நீண்ட ஆயுளை பெற பிரம்மாவை நோக்கி கடும் தவம் புரிந்தான். இரவிலோ, பகலிலோ, தேவர்களாலோ, மனிதனாலோ, விலங்காலோ, பறவையாலோ, ஆயுதங்களாலோ, நீரிலோ, நிலத்திலோ, ஆகாயத்திலோ, வீட்டிற்கு உள்ளேயோ, வெளியேயோ தனக்கு மரணம் ஏற்படக்கூடாது, என் உடலில் இருந்து ஒரு சொட்டு ரத்தம் நிலத்தில் சிந்தினாலும்
தன்னை கொல்ல முயல்பவன் தலை சுக்குநூறாக வெடித்துவிட வேண்டும் என்ற வரத்தை பிரம்மாவிடம் பெற்றான். அதன் பிறகு அவனின் அட்டூழியங்கள் எல்லை மீறி போயின. ஶ்ரீமன் நாராயணனை வணங்கியதற்காக தன் சொந்த மகன் பிரஹலாதனையே கொல்லத் துணிந்தான். பலவாறாக மகனை சித்தரவதை செய்தும் பிரகலாதன் நாராயண நாமத்தை
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு காட்டில் ஒரு பெரிய ஆலமரத்தின் அடியில் துறவி ஆறுமுகசாமி ராம நாமவை சொல்லிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அவ்வழியாக வந்த ஒருவன், ஏ கிழவா! இந்த வழியாக சற்று முன் யாராவது சென்றார்களா என்று அதிகாரத் தோரணையில் கேட்டான். அதற்குத் துறவி
ஆறுமுக சாமி ராம நாமவை சொல்லிக்கொண்டே, இதற்கு முன் இந்த வழியாக யாரும் சென்றதாகத் தெரியவில்லை என்றார். சிறிது நேரத்தில் மற்றொருவன் அங்கே வந்து, ஐயா, இதற்கு முன் யாராவது இப்பக்கமாகச் சென்றார்களா என்று கேட்டான். அதற்கு அத்துறவி ராம நாமவை சொல்லிக் கொண்டு, சற்று முன் இந்த வழியாகச்
சென்ற ஒருவன் இதே கேள்வியைக் கேட்டு விட்டுச் சென்றான் என்றார். மேலும் சிறிது நேரம் கழித்து இன்னொருவன் அங்கு வந்தான். அவன், துறவியாரே வணங்குகிறேன். இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் சத்தம் தங்களுக்குக் கேட்டதா? தயவு செய்து கூறுங்கள் என்று பணிவோடு கூறினான். உடனே துறவி ஆறுமுக
#பிரதோஷம்#அதன்_மகிமை
ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அப்பொழுது தான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்தார். இந்த பிரதோஷ வேளையில் தேவர்கள் அனைவரும், பூமியில் அமைந்துள்ள சிவன்
கோவிலுக்கு வந்து பூஜிப்பதாக ஐதீகம். அதனால் இந்த நேரத்தில் நாமும் சிவன் கோவிலில் நடைபெறும் பூஜையில் பங்கேற்றால், தேவர்களுடன் இணைந்து பூஜை செய்த பலன் கிடைக்கும். இந்த வகையில் பிரதோஷத்தில் தொடர்ந்து கலந்து கொண்டு ஈசனின் அபிஷேக ஆராதனைகளைப் பார்த்து வந்தால், பிரம்மஹத்தி தோஷம் கூட
விலகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அந்த வகையில், பிரதோஷ நிகழ்வை எத்தனை முறை பார்த்தால் என்னென்ன பலன்கள் ஏற்படும் என்பதை பார்ப்போம்.
3 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால் பிரம்மா. விஷ்ணு, சிவன் முதல் மூன்று தெய்வங்களும் பார்ப்பதற்கு சமம்.
5 பிரதோஷங்கள் தொடர்ந்து பார்த்தால்
#இடிவிழுந்த_சிவலிங்கம்
ஒரு ஏழைப்பெண் பூ வியாபாரம் செய்து வந்தாள். பூ கட்டாத தினங்களில் கோயிலுக்கு சந்தனம் அரைத்துக் கொடுப்பது, கோயிலைப் பெருக்கிக் கோலமிடுவது. நந்தவனத்துக்கு நீர் பாய்ச்சுவது போன்ற வேலைகளை அவள் செய்து வந்தாள். (இக்கோவிலின் பெயர் #அச்சாளீஸ்வரர் கோவில், நாதனே பொன்
மனை மகாதேவர் கோயிலுக்கும் நந்தீஸ்வரத்துக்கும் இடைப்பட்ட கோயில், கன்யாகுமரி மாவட்டம்.)
அப்பெண்ணுக்கு, கோயிலுக்கு தினமும் வரும் பணக்காரப் பெண் ஒருத்தியோடு தோழமை ஏற்பட்டது. அது கைமாற்றாய் பணம் கேட்குமளவு வளர்ந்தது. ஒரு முறை அந்தப் பணக்கார நங்கையிடம் கொஞ்சம் பெரிய தொகையை வாங்கினாள்.
ஒரு மாதம் சென்றபின் பணத்தைத் திருப்பிக் கேட்டாள் செல்வவதி. இதோ அதோ என்று சாக்குச் சொல்லி வந்தாள் ஏழைப் பெண். கடன் கொடுத்தவளோ, என் வீட்டாருக்குத் தெரியாமல் நகையை அடகு வைத்து இப்பணத்தைக் கொடுத்தேன். அடுத்த மாதம் என் மைத்துனர் திருமணம். அதற்குள் திருப்பாவிட்டால் என் கணவர் திட்டுவார்