சிவபுராணம் தினமும் ஓத வேண்டும் !திங்கட்கிழமைகளில் கண்டிப்பாக பாட வேண்டும் ! ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் அவசியம் அனைவரும் படித்து இறைவன் அருளை பெற உதவும் அற்புத பதிகம்
#சிவாயநம
#திருச்சிற்றம்பலம்

#சிவபுராணம்
நமச்சிவாய வாஅழ்க நாதன் தாள் வாழ்க
இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க 5
வேகம் கெடுத்தாண்ட வேந்தன் அடிவெல்க
பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க
புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க
கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க 10
ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி
தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி
நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி
மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி
சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி
ஆராத இன்பம் அருளும் மலை போற்றி 15
சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால்
அவன் அருளாலே அவன் தாள் வணங்கிச்
சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை
முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். 20
கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்து எய்தி
எண்ணுதற்கு எட்டா எழில் ஆர்கழல் இறைஞ்சி
விண் நிறைந்தும் மண் நிறைந்தும் மிக்காய், விளங்கு ஒளியாய்,
எண் இறந்த எல்லை இலாதானே நின் பெரும்சீர்
பொல்லா வினையேன் புகழுமாறு ஒன்று அறியேன் 25
புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
பல் விருகமாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல் அசுரர் ஆகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்ற இத் தாவர சங்கமத்துள் 30
எல்லாப் பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான்
மெய்யே உன் பொன் அடிகள் கண்டு இன்று வீடு உற்றேன்
உய்ய என் உள்ளத்துள் ஓங்காரமாய் நின்ற
மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
ஐயா எனவோங்கி ஆழ்ந்து அகன்ற நுண்ணியனே 35
வெய்யாய், தணியாய், இயமானனாம் விமலா
பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே
எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே
அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே 40
ஆக்கம் அளவு இறுதி இல்லாய், அனைத்து உலகும்
ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள் தருவாய்
போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின் தொழும்பின்
நாற்றத்தின் நேரியாய், சேயாய், நணியானே
மாற்றம் மனம் கழிய நின்ற மறையோனே 45
கறந்த பால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
சிறந்தடியார் சிந்தனையுள் தேன்ஊறி நின்று
பிறந்த பிறப்பு அறுக்கும் எங்கள் பெருமான்
நிறங்கள் ஓர் ஐந்து உடையாய், விண்ணோர்கள் ஏத்த
மறைந்திருந்தாய், எம்பெருமான் வல்வினையேன் தன்னை 50
மறைந்திட மூடிய மாய இருளை
அறம்பாவம் என்னும் அரும் கயிற்றால் கட்டி
புறம்தோல் போர்த்து எங்கும் புழு அழுக்கு மூடி,
மலம் சோரும் ஒன்பது வாயில் குடிலை
மலங்கப் புலன் ஐந்தும் வஞ்சனையைச் செய்ய, 55
விலங்கு மனத்தால், விமலா உனக்கு
கலந்த அன்பாகிக் கசிந்து உள் உருகும்
நலம் தான் இலாத சிறியேற்கு நல்கி
நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் 60
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
தேசனே தேன் ஆர்அமுதே சிவபுரானே
பாசமாம் பற்று அறுத்துப் பாரிக்கும் ஆரியனே
நேச அருள்புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடப் 65
பேராது நின்ற பெருங்கருணைப் போராறே
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே
ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே
நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே
இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே 70
அன்பருக்கு அன்பனே யாவையுமாய் இல்லையுமாய்
சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
ஈர்த்து என்னை ஆட்கொண்ட எந்தை பெருமானே
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் 75
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே
போக்கும் வரவும் புணர்வும் இலாப் புண்ணியனே
காக்கும் என் காவலனே காண்பரிய பேர் ஒளியே
ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக்காய் நின்ற
தோற்றச் சுடர் ஒளியாய்ச் சொல்லாத நுண் உணர்வாய் 80
மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்து அறிவாம்
தேற்றனே தேற்றத் தெளிவே என் சிந்தனை உள்
ஊற்றான உண்ணார் அமுதே உடையானே
வேற்று விகார விடக்கு உடம்பின் உள்கிடப்ப
ஆற்றேன் எம் ஐயா அரனே ஓ என்று என்று 85
போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய் ஆனார்
மீட்டு இங்கு வந்து வினைப்பிறவி சாராமே
கள்ளப் புலக்குரம்பைக் கட்டு அழிக்க வல்லானே
நள் இருளில் நட்டம் பயின்று ஆடும் நாதனே
தில்லை உள் கூத்தனே தென்பாண்டி நாட்டானே 90
அல்லல் பிறவி அறுப்பானே ஓ என்று
சொல்லற்கு அரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவன் அடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து. 95

திருச்சிற்றம்பலம்

சிவாயநம

திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
சிவசிதம்பரம்

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Chowkidar Kaalabala🇮🇳

Chowkidar Kaalabala🇮🇳 Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @Kaalabala1

May 21
அறிவோம் பாரத நாட்டின் வரலாறு

1999 ம் ஆண்டு நமது நாட்டு விமானம் நேபாளத்திலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது.

அப்போது செய்தி சேகரிப்பதற்காக இங்குள்ள பத்திரிகைகள் சில தனது நிருபர்களை ஆப்கனுக்கு அனுப்பி வைத்தது.. Image
அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த நிருபர்கள் கந்தகார் நகரை சுற்றி பார்க்க கிளம்பினார்கள்...

அவர்கள் நடந்து சென்ற தெருவின் ஓரிடத்தில் ஒரு மண்மேடு காணப்பட்டது. அந்த வழியாக வந்த ஒருவர் அந்த மண்மேட்டை பார்த்ததும் காரி உமிழ்ந்துவிட்டு சென்றார்.
மற்றொருவர் மண்மேட்டின் மீது சிறுநீர் கழித்துவிட்டு சென்றார்.. அந்தப் பக்கமாக வந்த இரண்டு பெண்கள் செருப்பை கழற்றி மண்மேட்டை அடித்துவிட்டு சென்றார்கள்.

இதைப்பார்த்துக்கொண்டிருந்த நிருபர்கள் என்னவென்று புரியாமல் நேராக ஹோட்டலுக்கு வந்தார்கள்.
Read 16 tweets
May 20
இரண்டாம் பதிவு

ஜெய்ஹிந்த்

நான் இந்த முப்பதடிக்கு டெத் சார்ஜ் (death charge) பண்ணப்போறேன். அதாவது அவனுங்க சுடுற குண்டுகளை உடம்பில் வாங்கிக்கொண்டு அவனுங்க பங்கர் வரை ஓடி பங்கருக்குள் இந்த வெடிகுண்டை வீசப்போறேன் .
அவனுங்களை ஒழிச்சப்புறம் நீங்க பங்கரை புடிச்சிருங்க ன்னு சொல்லிட்டு கிரெனேடோட ஓட தயாரானேன் .(u)
......
அப்போதுதான் உங்க பையன் என்னைப்பார்த்து . "பைத்தியமாடா நீ ? உன்னை நம்பி வீட்ல பொண்டாட்டியும் ரெண்டு சின்ன குழந்தைகளும் இருக்கு .
நான் இன்னும் கல்யாணமாகாதவன் .நான் அந்த டெத் சார்ஜ் பண்ணுறேன் . நீ கவரிங் ஃபயர் கொடுடா போதும்"ன்னு சொல்லிட்டு என் கையிலிருந்த கிரெனெடை பிடுங்கிக்கொண்டு டெத் சார்ஜ் பண்ணார் சார் .(r)
....
பாகிஸ்தானியர் எச்.எம்.ஜி யிலிருந்து மழை போல குண்டுகள் பாஞ்சது .
Read 12 tweets
May 20
Sri. Muralidhar Babu பதிவு

இரு நீண்ட பதிவாக

ஜெய்ஹிந்த்

1999 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு நாள்.
......
இமயமலை கார்கில் / திராஸ் / பட்டாலிக் / டோலோலிங் செக்டர்களில் துவந்த யுத்தம். அதாவது திருட்டுத்தனமாக இந்தியாவை சேர்ந்த பல மலை முகடுகளை மலையுச்சிகளையும் ஏராளமான
ஆயுதங்களுடன் பாகிஸ்தானியர்கள் ஆக்கிரமித்திருந்த கால கட்டம். (M)
......
ஒரு எக்குத்தப்பான மலைமுகடு. வான் வழி தாக்குதல் நடத்திட வாய்ப்பில்லாத ஒரு எடக்குமுடக்கான இடம். அதன் உச்சியிலிருந்து நாலா பக்கத்திலும் சுடக்கூடிய வசதி.
பாகிஸ்தானியர் அந்த மலை முகட்டினை திருட்டுத்தனமாக ஆக்கிரமித்துவிட்டிருந்தனர் . (u)
....
அந்த மலைமுகடு ஒரு GTI அதாவது Ground of Tactical importance, (GTI யின் விளக்கம் என்னவெனில் that ground.. the loss of which renders the defender incapable of fighting a successful battle.)
....
Read 21 tweets
May 19
1991ம் ஆண்டு மேமாதம் 21 இரவு 10.25 மணிக்கு அன்றைய பாரத பிரதமர் ராஜிவ் காந்தி குண்டு வெடிப்பின் மூலம் படுகொலை செய்யப்பட்டபோது அவர் அணிந்திருந்த லோட்டோ ஷூக்கள் மூலமே அவரது உடல் அடையாளம் காணப்பட்டது.

ஜூன் 11 வரை அதாவது 21 நாட்களாக கண்களை கட்டி காட்டில் விட்டது போல
துப்பு துலக்க முடியாமல் சிபிஐ தலையை பிய்த்து ஒரு வழியாக கொலைக்கு முன்னர் எடுக்கபட்ட புகைப்படம் ஒன்றை கைப்பற்றி நூலின் ஒரு முனையை மெல்ல பிடித்தது.

பின்னர் சரசரவென நூலின் ஒரு முனையை பிடித்து இழுக்க ஒவ்வொரு மீன்களாக சிக்க தொடங்கியது.
நேரடி குற்றவாளிகள் முதல் குற்றத்துடன் நேரடி தொடர்பில் இல்லாத இரண்டாம் குற்றவாளிகள் வரை மொத்தம் 41 பேர் சுமத்தப்படுகின்றனர்.

புலனாய்வு செய்து கைது நடவடிக்கையின் பொருட்டு சுற்றி வளைக்கும் தருணங்களில் 15 தற்கொலைகள் வேறு.

நன்கு கவனியுங்கள் இறந்த இந்த குற்றவாளிகளின் வாக்குமூலம்
Read 21 tweets
May 18
கேரள மாநிலத்தில் உள்ள திருச்சூர் மாவட்டத்தில் குருவாயூர் எனும் இடத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற
#கிருஷ்ணர் கோவில் இதுவாகும்.

பூலோக வைகுண்டமாகவும் பூமியில் இறைவன் இருக்கும் இடமாகவும் கருதப்படும் அற்புத திருத்தலம் இது.
கிருஷ்ண அவதாரத்திற்கு முன்பே தன் தாய் தந்தையருக்கு இக்கோவிலில் குழந்தை வடிவத்தில் கிருஷ்ணன் காட்சி கொடுத்த சிறப்பு இக்கோவிலுக்கு உள்ளது.

108 திவ்யதேசங்கள் வரிசையில் இந்த கோவில் சேராது என்றாலும் வைணவர்களால் பெரிதும் வணங்கப்பட்டு வரும் இந்திய அளவில் மிகப்பெரிய வைணவஸ்தலம் இது.
தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் குருவாயூர் கோவில் உருவாக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது.

குரு மற்றும் வாயுவால் பிரதிஷ்டை ஆனதால் குருவாயூர் என பெயர் பெற்றது.
மும்மூர்த்திகளின் அனுக்ரஹம் இந்த விக்கிரகத்துக்கு உண்டு என்பதால்
Read 21 tweets
May 17
ஞானவாபி மசூதி கிணற்றில் லிங்கம்😢😢
அடப்பாவி ஔரங்கசீப் கொள்ளையடிக்க வந்த உன்னையா பக்கம் பக்கமாய் படித்து மதிப்பெண்கள் எடுத்தேன்...

உனக்கு தேவையான தங்க வைர பொக்கிஷங்களை எடுத்துக்கொண்டு எங்கள் பொக்கிஷத்தை..அந்தக் கோவிலை விட்டு வைத்திருக்க கூடாதா???? Image
எம் மூதாதையர் எப்படி அழுதனரோ...எவ்வளவு பேர் உயிரை‌ விட்டனரோ...கிணற்றுக்குள் மூச்சுத்திணறிக் கொண்டிருப்பது எங்கள் முன்னோரின் உயிர்க்காற்று...

எவ்வளவு வைராக்கியத்துடன் அவர்கள் உயிரை விட்டிருந்தால் இத்தனை வருடம் கழித்து அவர் நம் கைகளுக்கு கிடைத்திருப்பார்... Image
பொன்னும் வைரமும் மணியும் பவளமும் முத்தும் வில்வமும் துளசியும் எண்ணாயிரம் மலர்களும் கொண்டு விதவிதமாய் அலங்கரித்து...பூஜித்த எங்கள் இறைவனுக்கு 356 ஆண்டுகள் ஒரு‌ வில்வம் கூட படைக்காமல் பாழுங்கிணற்றில் விட்டோமே!!!! ImageImage
Read 6 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(