அன்பெழில் Profile picture
May 26, 2022 24 tweets 8 min read Read on X
#அஹோபிலம் கிழக்குத் தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கும் நல்லமலைப் பகுதி, புராண காலத்தில் அரக்கர் தலைவர் இரண்யனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்திருக்கிறது. கிழக்குத் தொடர்ச்சி மலையின் அமைப்பே ஆதிசேஷன் படுத்திருப்பது போலக் காட்சியளிக்கிறது. அதன் தலைப் பகுதியில் திருப்பதி திருமலையும்,
மையப் பகுதியில் அஹோபிலமும், வால் பகுதியில் ஸ்ரீ சைலமும் அமைந்திருக்கின்றன. கருட புராணத்தின்படி, இந்த மலைப் பகுதியில் நரசிம்ம தரிசனத்துக்காகப் பல ஆண்டுகள் கருடன் தவமிருந்ததாகக் கூறப்படுகிறது. இரண்யனை வதம் செய்த உருவத்துடன் நரசிம்மர் கருடனுக்குக் காட்சி அளித்தபோது, கருடன் வியந்து
போய் "அஹோ பலா' (இதோ பலம்) என்று குரலெழுப்பியதாகவும் அதனால் இந்த இடத்துக்கு "அஹோபலம்' என்று பெயர் வந்து, அது மருவி அஹோபிலமானதாக ஒரு கருத்து. இரண்யனை வதைத்தைப் பார்த்துக் கொண்டிருந்த முப்பது முக்கோடி தேவர்களும், நரசிம்மரின் உக்கிரத்தைப் பார்த்து மிரண்டு போய்
"அஹோவீர்யம் அஹோசௌர்யம்
அஹோபாஹ பராக்ரம:
நரசிம்மம் பரம் தெய்வம்
அஹோபலம் அஹோபிலம்'' 
- என்று கோஷம் எழுப்பியதாகவும், அதனால் அஹோபலம் என்று பெயர் வந்ததாகவும் இன்னொரு கருத்து.
கருடனுக்கு நரசிம்மர் காட்சியளித்த குகையைப் பார்த்து "அதோ குகை' என்று அடையாளம் சொல்லப் பட்டதாகவும் அதனால்தான் "அஹோபிலம்' (அதோ குகை)
என்று பெயர் வந்ததாகவும் சொல்கிறார்கள். அஹோபிலத்துக்குப் பெயர் வந்ததன் காரணம் எதுவாக இருந்தாலும், அஹோபிலமும் நரசிம்மரும் புராண இதிகாச காலங்களுக்கு முன் வந்ததாக இருந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை. வாயு புராணம், அக்னி புராணம், பிரம்மாண்ட புராணம், மத்ஸ்ய புராணம், விஷ்ணு
புராணம், நரசிம்ம புராணம், கூர்ம புராணம், செளர புராணம், பாகவத புராணம் என்று பல்வேறு புராணங்களில் நரசிம்மர் குறித்து எடுத்தியம்பப்பட்டிருக்கின்றன. புராணங்கள் மட்டுமல்ல, நரசிம்மர் குறித்த பல கல்வெட்டு ஆதாரங்களும் கூடக் கண்டறியப் பட்டிருக்கின்றன. நான்கு முதல் எட்டாம் நூற்றாண்டு வரை
பல கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்திருக்கின்றன. இந்தியாவில் கிழக்குக் கடற்கரைப் பகுதியில்தான் நரசிம்ம வழிபாடு அதிகமாகக் காணப்படுகிறது. 6ஆம் நூற்றாண்டு சாளுக்கியர்களின் தலைநகரான பதாமியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் நரசிம்மரின் உருவம் பதித்த தூண்கள் கற்சிலைகள் வெளிப்பட்டு இருக்கின்றன.
நரசிம்மரின் முதல் ஆலயமும், மூலஸ்தானமும் ஆந்திர மாநிலம் அஹோபிலம்தான். அஹோபிலம், புராணங்கள் குறிப்பிடும் பிரகலாத சரித்திரம் நிகழ்ந்த இடம். ஏனைய இடங்களில் நரசிம்மருக்கு ஆலயங்கள் எழுப்பட்டு இருக்கின்றன. ஆனால் அஹோபிலம் என்பது நரசிம்மர் தோன்றிய இடம். அவரது அவதாரத் தலம். ஆதிசங்கரரால்
"சுதர்சன சக்கரம்' ஸ்தாபிக்கப்பட்ட கோயில்கள்தான் அதீத சக்திபெற்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன. அஹோபிலத்துக்கு ஆதிசங்கரர் வந்திருப்பதன் அடையாளமாக இங்கே அவரால் சுதர்சன சக்கரம் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. ஆதிசங்கரர் காபாலிகர்களால் தாக்கப்பட்டதும், நரசிம்மர் அவரைத் காப்பாற்றியதும்,
"லக்ஷ்மி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம்' அவரால் இயற்றப்பட்டதும் அஹோபிலத்தில் தான். ஸ்ரீ அஹோபில நரசிம்மர் ஆலயத்தில் அவரால் சிவலிங்கம் ஒன்று பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கிறது. அவரால் நரசிம்ம பஞ்சரத்ன ஸ்தோத்திரம், நரசிம்ம ஸ்தோத்திரம் ஆகியவையும் இயற்றப்பட்டிருக்கின்றன. த்வைதம்' தந்த
ஸ்ரீ மாத்வச்சாரியாரும் அஹோபிலத்துக்கு வந்திருக்க வேண்டும். அவரது வருகைக்கான ஆதாரமோ, குறிப்போ இல்லை என்றாலும், அவரால் இயற்றப்பட்ட "நரசிம்ம ஸ்துதி' நரசிம்மரிடம் அவருக்கிருந்த பக்தியை வெளிப் படுத்துகிறது. பாஷ்யக்காரர் என்று போற்றப்படும் விசிஷ்ட அத்வைதம் சொன்ன #ஸ்ரீராமானுஜரும்,
#ஸ்ரீவேதாந்ததேசிகரும் அஹோபிலம் வந்திருக்கிறார்கள். ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் அஹோபிலம் வந்து பெரிய திருமொழியில் பத்துக்கும் அதிகமான பாசுரங்கள் மூலம் துதித்துப் போற்றியிருக்கிறார். 
"தினைத்தனையும் செய்ய 
ஒண்ணாச் சிங்கவேழ் குன்றமே”
-என்று திருமங்கையாழ்வாரால் போற்றப்பட்ட
அஹோபிலத்துக்கு, பக்தி இயக்கத்தின் முன்னோடி #சைதன்யர் வந்திருப்பது பதிவாகி இருக்கிறது. ஸ்ரீ ராமானுஜருக்கும், ஸ்ரீவேதாந்த தேசிகருக்கு பிறகு விசிஷ்டாத்வைதத்தைப் பரப்பவும், வைணவத்தைப் பாதுகாக்கவும் தலைமை இல்லாத வெறுமை ஏற்பட்டபோது, மைசூருக்கு அருகிலுள்ள மேல்கோட்டையில் அவதரித்த கிடம்பி
ஸ்ரீநிவாச்சாரியாருக்கு நரசிம்மரிடமிருந்தே அழைப்பு வந்தது. (நரசிம்மர் அழைக்காமல் அஹோபிலம் சென்றுவிட முடியாது, அப்படியே சென்றாலும்கூட, மலையிலுள்ள நவ நரசிம்மர்களை தரிசித்து விட முடியாது.)
தனது 19-வது வயதில் காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் சந்நிதியில் சாஸ்திரங்கள் படித்துக் கொண்டிருந்த
ஸ்ரீநிவாசாச்சாரியாரின் கனவில், "அஹோபிலத்துக்கு வா, உனக்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று நரசிம்மர் கூறி மறைந்தார். அஹோபிலத்தில் வயதான யோகி ஒருவர் அவரை வரவேற்று வேத, வேதாந்தங்களையும், நரசிம்ம மந்திரத்தையும் பயிற்றுவித்தார். சந்நியாசம் பூணச் சொல்லி உத்தரவிட்டு, த்ரிதண்டத்தை
சங்கு சக்கரங்களையும் வழங்கினார். அவருக்கு #சடகோபயதி என்கிற திருநாமத்தையும் சூட்டினார்.
இத்தனையும் செய்துவிட்டு அந்த யோகி மாயமாய் மறைந்த போது தான், சாட்சாத் நரசிம்மரே தனக்கு குருவாக இருந்து, துறவு பூண வைத்திருப்பதை உணர்ந்தார் "சடகோப யதி' என்று மாறிவிட்டிருந்த ஸ்ரீநிவாசச்சாரியார்,
அவரால் ஸ்தாபிக்கப்பட்டதுதான் #அஹோபிலமடம் அஹோபில மடத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் ஸ்ரீவண் சடகோப யதீந்திர மகாதேசிகன் என்று அழைக்கப்படுகிறார்கள். ஜீயர் என்றும் அழகிய சிங்கர் என்றும் குறிப்பிடப் படும் இவர்களது தலைமைப் பீடம் அஹோபிலம். அந்த  குரு பாரம்பரியம் இப்போதைய 46வது
ஜீயரான ஸ்ரீவண் சடகோப ஸ்ரீ ரங்கநாத யதீந்திர மகா தேசிகன் வரை தொடர்கிறது. அஹோபிலத்திலுள்ள ஆலயங்கள் அனைத்தும் அஹோபில மடத்தின் மேற்பார்வையில்தான் இருக்கின்றன. அஹோபிலத்தின் முக்கிய கோவில் எழுவா அஹோபிலம் (மேல் அஹோபிலம்) என்றும், இங்குள்ளவர் அஹோபில உக்ர நரசிம்மர் என்று அழைக்கப்படுகிறார்.
ஹிரண்யகசிபு என்ற அரக்கனைக் கொன்ற பிறகு, நரசிம்மர் இந்த இடத்தில் உக்ர நரசிம்மராக காட்சியளித்தார். அருகிலுள்ள லட்சுமி தேவியின் கோவிலைக் காண்கிறோம், அவர் செஞ்சு லட்சுமி, பழங்குடியினரின் மகள். திரேதா யுகத்தில், ஸ்ரீ ராமர், சீதா தேவியைத் தேடிய போது, ​​அஹோபிலத்திற்குச் சென்று நரசிம்மரை
வழிபட்டதாக நம்பப்படுகிறது. வெங்கடேஸ்வரர் அஹோபில நரசிம்ம சுவாமியை வழிபட்டார். அவரது குலதெய்வம் அஹோபில நரசிம்மர் என்று கல்வெட்டுகள் சொல்கின்றன. கீழ் அஹோபிலத்தில் (திகுவா அஹோபிலம்) லக்ஷ்மி நரசிம்ம மூர்த்தி பத்மாவதி தேவியுடன் திருமணத்திற்கு முன்பே வெங்கடேஸ்வரரால் பிரதிஷ்டை செய்யப்
பட்டதாக நம்பப்படுகிறது. இங்கு ஶ்ரீனிவாச பெருமாளுக்கும் சன்னதி உள்ளது. துவாபர யுகத்தில், பாண்டவர்கள் அஹோபிலத்தில் நரசிம்மரை தரிசித்து வழிபட்டனர். அஹோபிலம் நவ நரசிம்ம க்ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது, அங்கு நரசிம்மர் அஹோபிலத்தில் 9 வெவ்வேறு வடிவங்களில் காட்சியளிக்கிறார். அவர்கள்,
ஜ்வாலா,
அஹோபிலா (உக்ர நரசிம்மர்),
மலோலா,
க்ரோதா,
கரஞ்சா,
பார்கவா,
யோகானந்தா,
சத்ரவத,
பாவனா.
ஹிரண்யகசிபுவை வதம் செய்வதற்காக நரசிம்மர் அவதரித்த தூண் இருக்கும் இடம் மேல் அஹோபிலம் கோயிலுக்கு கிழக்கே 5 கி.மீ தொலைவில் உள்ளது. இறைவனின் கால் தடங்கள் இருப்பதாகக் கூறப்படும் இடத்தில் ஒரு
சின்ன இரும்புத் தூண் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் உக்ர ஸ்தம்பம் (உக்கிரமான தூண்) என்று அழைக்கப்படுகிறது. அஹோபிலம் ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள அல்லகட்டாவிலிருந்து 24 கிமீ தொலைவில் நல்லமலா காடுகளில் அமைந்துள்ள புனித நதியான பவானாசினியின் கரையில் அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 2800 அடி உயரத்தில் வேதாத்ரி மலையின் உச்சியில் கோயில் உள்ளது. அவனருளாலே அவன் தாள் வணங்க நரசிம்மரை வேண்டுவோம். அற்புதமான இத்தலத்தில் இருக்கும் ஒவ்வொரு நரசிம்மரின் பெருமையை விவரிக்க வார்த்தைகள் இல்லை. காண விரைவோம்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 22
#தண்டபாணி_பைரவர் #காசி_வைபவம்
காசியில் 2 பைரவர் கோயில்கள் உண்டு. ஒன்று கால பைரவர் கோயில், மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல காசி விஸ்வநாதர் ஆலய கருவறைக்கு நேர் எதிரில் அமைந்துள்ள சந்நதியில் பைரவர் தண்டபாணி என்னும் பெயரில் எழுந்தருளி உள்ளார். காசியிலேயே பாவம் செய்பவர்களும்Image
இருக்கிறார்கள். காசியில் சுற்றித்திரியும் போதும், பாவ எண்ணங்களுடன் திரிபவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எல்லாம் வாழ்வில் முக்தியே கிடைக்காதபடி செய்து விடுவார் இந்த தண்டபாணி பைரவர். தண்டபாணி மந்திரிலிலுள்ள தண்டநாயகர் என்னும் தண்டபாணி பைரவர், காசிக்குப் போகிறவர்களைத் தரம் Image
பிரித்து பாவ புண்ணியங்களை வழங்குபவராக உள்ளார். குபேரனைத் தலைவராகக் கொண்ட இனத்தவர் யட்சர்கள் எனப்படுவர். பூர்வத்தில் பூர்ணபத்திரன் என்ற யக்ஷன் ஒருவன் மிகவும் புகழ் பெற்றவனாக விளங்கி கந்தமாதன பர்வதம் என்ற மலையில் வசித்து வந்தான். அவனுக்கு ஹரிகேசன் என்ற மகன் ஒருவன் இருந்தான். இவன்
Read 30 tweets
Jul 20
திருவிடைமருதூர் ஆலயத்தில் அருள் பாலிக்கும் அன்னை #அன்பிற்பிரியாள்
காவிரிப்பூம்பட்டினத்தைச் சேர்ந்த பெரும் வணிகரான மருதவாணனுக்குக் குழந்தைப் பேறு இல்லாமல் இருந்தது. அதனை நினைத்து வருந்திய அவர், தனக்குக் குழந்தைப்பேறு அளிக்க வேண்டி அங்கிருந்த சிவபெருமான் கோவிலில் தினமும் வழிபட்டுImage
வந்ததுடன், அங்கு வருபவர்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு தானங்களையும் வழங்கி வந்தார். அவரது வழிபாட்டில் மகிழ்ந்த பார்வதி தேவி, இறைவன் சிவபெருமானிடம் அவருக்குக் குழந்தைப்பேறு அளிக்கும்படி வேண்டினாள். ஆனால் இறைவனோ, “இந்தப் பிறவியில் மருதவாணனுக்குக் குழந்தைப்பேறு இல்லை. எனவே, Image
அவருக்குக் குழந்தைப்பேறு தருவது சாத்தியமில்லை” என்றார். அதனைக் கேட்டு வருத்தமடைந்த பார்வதி, தானே அவருக்குக் குழந்தையாகப் பிறப்பதாகச் சொல்லி, மருதவாணன் மனைவியின் வயிற்றில் கருவாக உருவாகிப் பிறந்தாள். அந்தக் குழந்தை வளர்ந்து பெரியவளாக ஆன நிலையில், நகர்வலம் வந்த சோழநாட்டு மன்னன்
Read 25 tweets
Jul 20
#பாரியூர்_கொண்டத்துக்_காளியம்மன்
#ஆடிமாத_சிறப்புப்_பதிவு
பாரியூர் கொண்டத்துக் காளியம்மன் என்று எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்படும் அன்னை அற்புதமான சக்தி வாய்ந்தவள். இவ்வூர் புராண காலத்தில் பராபுரி என்று அழைக்கப் பட்டது. பரா என்றால் போற்றுதல், வழிபடுதல் என்றும் புரி என்றால் ஊர், Image
என்பதற்கு ஊர், கோட்டை மதில் என்றும் பொருள். கோட்டை மதில்களால் சூழப்பட்ட தலமே பாரியூர் என்பதாக கல்வெட்டுக் குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது. கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் குல தெய்வம் கொண்டத்துக் காளியம்மன் என நம்பப்படுகிறது. எனவேதான் பாரியூர் என்று அழைக்கப்படுவதாகவும்Image
கூறுகின்றனர். வள்ளலின் பெருமைக்கும், செழிப்புக்கும் அன்னையே காரணம் என்று குறிப்பிடப் படுகிறது. இன்றும் பாரியூரைச் சுற்றியுள்ள பகுதிகள் பச்சைப் பசேல் என்று வயல்வெளிகளும், குளுமையான நீர் நிலைகள், அடர்ந்த மரங்களுமாகச் செழித்து காணப்படுகின்றன. கோயில் ராஜகோபுரம் 5 அடுக்குகள் கொண்டது. Image
Read 18 tweets
Jul 19
#ஸ்ரீகாட்டுவீர_ஆஞ்சநேயர்
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தேவ சமுத்திரம் கிராமத்தில் உள்ளது அருள்மிகு ஸ்ரீகாட்டுவீர ஆஞ்சநேயர் திருக்கோயில். அனுமன் சிறுவயது முதலே காடுகளில் வலம் வந்தமையாலும் , இந்த பகுதி பல ஆண்டுகளுக்கு முன்பு வனமாக இருந்தமையாலும், மூலவரானவர் காட்டுவீர ஆஞ்சநேயர் என்றImage
என்ற திருநாமம் கொண்டு அழைக்கப் பெறுகிறார். இக்கோவிலில் உள்ள கர்ப்ப கிரகம் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் விக்கிரகமாக உள்ளது. இப்பகுதி குன்றுகளாக விளை நிலங்களாக இருந்தது. இந்த விளை நிலங்கள் யாவும் வெங்கட்ராம செட்டியாருடையது என்கிறது வரலாறு. அப்போது நிலத்தில் உள்ள பாறையின் Image
மீது ஆஞ்சநேயர் திருவுருவம் செதுக்கப் பட்டிருந்தது. இதனைப் பார்த்த மக்கள் ஆஞ்சநேயரை பூஜித்து வழிபட்டு வந்தனர். மூலவருக்கு பின்புறம் இருந்த குன்றில் வளர்ந்து கொண்டிருக்கும் நந்தீஸ்வரரும், நாகர்களின் சிலைகளும் காணப்பட்டன. இந்த அதிசயத்தைக் காண நாளுக்கு நாள் பக்தர்களின் வருகை Image
Read 16 tweets
Jul 19
#ஆற்றுக்கால்_பகவதி_அம்மன்
கேரளம் உருவெடுக்க காரணமாக இருந்த பரசுராமர் 108 சிவாலயங்களையும், 108 பகவதி அம்மன் கோவில்களையும் நிறுவியதாக புராணம் கூறுகிறது. கேரளாவில் உள்ள அம்மன்களுக்கு என்று தனிப் பெயரில்லை. அவர்கள் அனைவருமே பகவதி என்றே அறியப்படுகின்றனர். கேரளாவில் பகவதி அம்மன் Image
கோவில்கள் அனேகம் இருக்கின்றன. இருப்பினும் அனைத்து பகவதி அம்மன் கோவில்களுக்கும் இல்லா சிறப்பு ஆற்றுக்கால் பகவதி அம்மனுக்கு உண்டு. அதற்கு, இங்கு ஆண்டுதோறும் கொண்டாடப் படும் உலகப் புகழ் பெற்ற பொங்கல் திருவிழாதான் காரணம். இந்த விழாவின்போது லட்சக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் Image
வைத்து அம்மனை வழிபடுவது பிரமாண்டமாக இருக்கும். இது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது. சிலப்பதிகாரம் எழுதிய இளங்கோவடிகள் காலத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சிலப்பதிகாரத்தின் நாயகி, கற்புக்கரசியான கண்ணகியின் அவதாரம் தான் ஆற்றுக்கால் பகவதி அம்மன் என்று கூறப் Image
Read 21 tweets
Jul 18
#தீக்ஷை
ஆன்மீக வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் ஒருவர் குருவிடம் இருந்து தீட்சை பெறுவது வழக்கம். தீட்சை என்பதற்கு ஆரம்பம் என்று அர்த்தம். அதாவது ஒரு மந்திரத்தின் மூலமாக ஆன்மீக வழியில் முன்னேற்றம் அடைய குருவின் மூலம் பெற்ற உபதேசத்தை தொடங்கி செய்வது என்பது அதன் பொருள். தீட்சைக்கு 3 Image
அடிப்படை விஷயங்கள் தேவை. முதலாவது, தீட்சை தருவதற்கான ஆன்மீக குரு. இரண்டாவது தீட்சை பெறுவதற்கான மாணவன். மூன்றாவது தீட்சைக்கு உரிய மந்திரம் அல்லது நெறிமுறை. இந்த 3 விஷயங்களும் மிகச்சரியாக அமைந்தால் தான் ஒருவரது ஆன்மீக வளர்ச்சி என்பது சாத்தியம். ஆன்மீக சான்றோர்கள் அவரவர்களுக்கு
உரிய வழிகளில் பல்வேறு தீட்சைகளை வழங்குகிறார்கள். அவை, ஸ்பரிச தீட்சை, நயன தீட்சை, மானச தீட்சை, வாசக தீட்சை, மந்திர தீட்சை, யோக தீட்சை, ஞான தீட்சை, வித்யா தீட்சை, தந்திர தீட்சை, பிரம்ம தீட்சை உள்ளிட்ட 81 வகையான தீட்சைகள் உள்ளன. சாஸ்திர ரீதியாக 64 முறைகள் வழக்கத்தில் கடைபிடிக்கப்
Read 7 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(