#ஏன்மாறினோம்? #யாரைகுற்றம்சொல்வது?
நம் சமூகத்தில் இன்று திருமணமான பெண்கள் பெரும்பாலும் புடவை அணிவதை நிறுத்தி விட்டார்கள்.
நெற்றியில் திலகம் ஒரு காலத்தில் நம் அடையாளமாக இருந்தது. வெறுமையான நெற்றியை அசுபமாகவும், துக்கத்தின் அடையாளமாகவும் கருதிய ஆண்களும் பெண்களும் பாழ் நெற்றியுடன்
இருப்பதை நாகரீகம் என்று கருதும் காலமாகிவிட்டது. பாரம்பரிய பண்டிகைகளை நம் குடும்ப வழக்கப்படி கொண்டாடுவது அரிதாகி வருகிறது. இன்றைய தலைமுறை கோவில்களுக்கு செல்லாதது மட்டுமல்ல, கோயில்களை பார்ப்பதைக் கூட விட்டுவிட்டார்கள். ஒரு சிலர் கோயிலுக்கு சென்றாலும் 5 அல்லது 10 நிமிடங்கள் சுற்றுலா
போல செல்கிறார்கள். பெரும்பாலானோர் ஒன்று தேவைப்படும் போதோ அல்லது துன்பத்தில் இருக்கும்போதோ மட்டுமே கோயிலுக்கு செல்கின்றனர். நம் குழந்தைகள் கோவிலுக்குச் செல்வதற்கான சரியான காரணத்தையும், கோயிலில் என்ன செய்ய வேண்டும் என்பதையும், வழிபடுவது அவர்களின் கடமை என்பதையும் அவர்களுக்கு
சொல்கிக் கொடுத்து ஆன்மீகத்தை உணர்த்தி வழி நடத்த தவறி வருகிறோம். நம் பிள்ளைகள் கான்வென்ட் பள்ளிகளில் படித்த பிறகு ஆங்கில கவிதைகள் சொல்வதில் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் ஆன்மீக ஸ்லோகங்களை அறிந்து கொள்ளாததைப் பற்றி கவலை கொள்வதில்லை. வீட்டுற்கு வருபவருக்கு வணக்கம் சொல்லி வரவேற்க கற்று
கொடுக்காமல் ஹாய் ஹலோ பை பை சொல்ல பழக்குகிறோம். நம் பிள்ளைகள் ராமாயணம், கீதை, திருவாசகம் போன்ற ஆன்மீக நூல்களை படிக்க வைப்பதில்லை. நாம் நம் வேர்களுடனான உறவை அறுத்துக் கொண்டு வளர பார்க்கிறோம். அது அறிவியல் பூர்வமாக சாத்தியமா என்று சற்றே சிந்திக்க வேண்டும். நாகரீகம், வரலாறு, மரபுகள்,
பாரம்பரியம் போன்ற அனைத்தையும் கொண்டிருந்தோம். குருட்டு நவீனத்துவம் என்ற பெயரில் அனைத்தையும் தியாகம் செய்து விட்டோம். திலகம், யக்ஞோபவீதம், சிகை அணியவேண்டியவர்கள் அதனை தவிர்க்கிறார்கள். பெண்கள் திலகம், வளையல்கள் மற்றும் மங்களசூத்திரம் அணிவதற்கு வெட்கப்படுகிறார்கள். அவற்றைத்
தேவையற்றதாகக் கருதி, நம் அடையாளத்தை வெளிப்படையாகக் காட்ட சங்கடப்படுகிறோம். நவீனத்துவம் என்ற பெயரில், அதிகாலை 4-5 மணிக்கு எழும் பழக்கத்தை விட்டுவிட்டு, நம் சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள், மரபுகள் அனைத்தையும் இழந்து வருகிறோம். ஒரு சமூகம் தன் அடையாளங்களைப் பாதுகாக்க இயற்கையாகவே
விழிப்புடன் இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி இல்லை. உண்மையான பிரச்சனை என்னவென்றால், நம் சமூகம் விழித்திருக்க வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் யாருமே நடைமுறைக்கு உதாரணமாக தற்போது வாழவில்லை. எனவே சமூகம் மட்டுமல்ல, சொந்த குடும்ப உறுப்பினர்களும் நம் மதப் பேச்சுகளைக் கேட்பதில்லை
முதலில் நம் நாகரீக அடையாளம் மற்றும் அதன் சின்னங்களை அணிந்து கொள்வதில் பெருமிதம் கொள்ள, சமூக கலாச்சாரத்தை வளர்த்துக் கொள்ள விழிப்புணர்வை உருவாக்கவேண்டும்.
பண்பாட்டையும், தர்மத்தையும் காப்பாற்ற முயற்சி எடுப்போம்.
வளர்க பாராம்பரியம். எந்த மதமாக இருந்தாலும் மதப் பண்பாடுகளை பின்பற்றி
அதன் வழி நடப்பதே நல்லது. காரணம் மதக்கோட்பாடுகள் அனைத்துமே மனிதனை நெறிமுறை படுத்தவே முன்னோர்களால் வகுக்கப்பட்டன.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

May 28
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் நிறைய பேருக்கு இந்த விஷயம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. #ராஜாரவிவர்மா ஒரு ராஜ குடும்ப ஓவியர். தன் வாழ்நாளில் ஸ்ரீ ஆதிசங்கர் உருவம் வரைய ஆர்வம் கொண்டிருந்தும் அவர் படைப்புக்களை படித்திருந்தும் அவர் உருவத்தை அவரால் உணரமுடியவில்லை . இதனால் ஒருவித தவிப்பில் Image
தளர்ந்த படி இருந்தார் ரவிவர்மா. ஒருநாள் உறங்கப் போகுமுன் ஆதிசங்கர பகவத்பாதாள் குறித்து ஆழ்ந்து கவலையுடன் சிந்தித்தவாறு அன்றிரவு கண் உறங்கினார். மறுநாள் விடியற்காலை நேரத்தில் அவருக்கு ஒரு காட்சி கனவு போல் உதித்தது. அதில் ஆதிசங்கரர் ஒருமரத்தடியில் அமர்ந்திருக்க அவரை சுற்றி சீடர்கள்
அமர்ந்திருக்க, அவர்களுக்கு உபதேசித்தபடி ஓர் காட்சியை தன் அனாகத சக்கரத்தில் (நெஞ்சு பகுதியில்) கண்டார். இந்த காட்சி விடியும் வரை ரவிவர்மா உள்ளத்தில் திரும்பத் திரும்ப உதிக்கக் கண்டார். அன்றைய தினமே தொடங்கி ஒரு மாத காலத்துக்குள் இந்த அற்புத சித்திரத்தை வரைந்து முடித்தார். தான்
Read 5 tweets
May 28
#நம்பிக்கை ஒரு முறை சிவனும் பார்வதியும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது பார்வதி சிவனிடம், “ஐயனே கங்கையில் குளித்தால் அனைவருக்கும் மோட்சம் என சொல்கிறார்கள். ஆனால் குளிக்கும் அத்தனை பேரும் மோட்சம் பெறுவது போல தோன்றவில்லையே அது ஏன்” என கேட்டார். சிவன் சொன்னார், “ அது ஏன் எனும் Image
காரணத்தை விளக்குகிறேன் என்னோடு வா, ஆனால் இப்படியே வராதே இருவரும் வயதான பெரியவர்களாக போவோம் வா” என அழைத்து சென்றார். கங்கைக் கரையினை அடைந்த சிவன், “நான் இப்போது கங்கையில் விழுந்து விடுவேன் நீ உதவிக்கு யாரையாவது கூப்பிடு, ஆனால் இது வரை பாவமே செய்யாதவர்கள் மட்டுமே வந்து
காப்பாற்றுங்கள் எனக் கூறு” என்று சொல்லி ஆற்றில் விழுந்ததை போல நடித்தார். உடன் பார்வதிதேவி அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்தார். அழைத்த்தவுடன் ஓடி வந்தவர்களிடம் தேவி, பாவம் செய்யாதவர்கள் மட்டும் போய் காப்பாற்றுங்கள் என கூறினார்.
உடனே ஓடி வந்தவர்கள் அனைவரும் பின் வாங்கினார்கள்,
Read 7 tweets
May 28
#ஜெய்ஶ்ரீராம் #Anandashram #ஆனந்தாஷ்ரம் ராம நாம கீர்த்தனை செய்வதற்கு மட்டுமே ஒர் ஆஸ்ரமம் இந்தியாவில் உள்ளது. பலருக்கும் இது தெரியாமல் இருக்க வாய்ப்புள்ளது. 1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. காலை Image
6 மணி - மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது. முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள். அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும். இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம். ஜாதி மத பேதமில்லை, பெரியோர் சிறியோர் குழந்தைகள் அனைவரும் Image
பங்கு பெறலாம். அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு மட்டுமே! அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்க அறை கிடைக்கும், உணவும் கிடைக்கும் இலவசமாக. ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதம ஏற்பாடு இது. தனியாக செல்லலாம், தம்பதியாக Image
Read 9 tweets
May 28
#MahaPeriyava
A State Government employee lived in Kanchipuram and was a tax-collector at the Excise office. He did not need money through dishonest means of course. But his superiors had stipulated a sum to be given to them every month. So the money that came to him as bribe was Image
never used by him for his household. He would spend it on agathi greens (green leafy vegetable) for cows, for lighting lamps in temples and so on. He would come every day for Sri Maha Periyava's darshan and one day he brought a garland of vilva leaves made of gold. In a soft
voice, gently Periyava said,"This need not be offered to Chandramouleeswara".
The attendants were disappointed. Here was an ardent devotee making an excellent offering and Periyava was refusing to accept it. They did not know anything more about this of course.
"This has not been
Read 5 tweets
May 28
#நுண்அரசியலும்_மோடியும் #TransformingTN
மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது புறக்கணிக்கிறது என்று வாய் கூசாமல் ஸ்டாலினும் திமுகவினரும் பேசி வரும் நேரத்தில் ஸ்டாலினை மேடையில் வைத்துக் கொண்டே 31ஆயிரம் கோடி 500லட்சம் ரூபாயில் நிறைவற்றப்பட்ட, தொடங்கப்பட உள்ள திட்டங்களை திறந்து வைத்தார
மோடி. இவையெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்த பின் தொடங்கப்பட்ட திட்டங்கள் அல்ல. அது ஆட்சிக்கு வரும் முன் தொடங்கப்பட்டு இப்போது நிறைவேறியிருப்பவை. திமுகவின் பச்சைப் பொய்கள் மேடையிலேயே தவிடு பொடியாகின. செவித் திறன் இழந்தோர் ஒலிம்பிக்சில் வென்றோரில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதை
அறிவீர்களா என்று கேள்வி கேட்டு, அவர்களை நம் முதல்வர் சந்திக்கக் கூட இல்லை என்பதை சுட்டிக்காட்டினார். தமிழின் எதிர்காலம் அது அடுத்த தலைமுறையிடமும் தொடர்வதில் இருக்கிறது, வெறுமனே அதன் தொன்மையில் மட்டுமில்லை. அதற்கு தாய் மொழி வழிக் கல்வியும், அதற்கான புதிய கல்விக் கொள்கை கொண்டு
Read 10 tweets
May 27
பெரும்பாலான குடும்பத்திற்கு திருப்பதி ஏழுமலையான்தான் குலதெய்வமாக இருப்பார். குல தெய்வம் அறியாதவர்களும் ஸ்ரீ வேங்கடாசலபதியை குலதெய்வமாக வரிப்பர். வேறு எந்த இறைவனுக்கும் இல்லாதே ஒரே தனிச்சிறப்பு இவருக்கு மட்டும்தான்.
"ஸ்ரீ பத்மநாப புருஷோத்தம வாஸுதேவ
வைகுண்ட மாதவ ஜநார்த்தன சக்ரபாணே!
ஸ்ரீ வத்ஸ சிந்ஹ சரணாகத பாரிஜாத
ஸ்ரீ வேங்கடாசலபதே தவ ஸுப்ரபாதம்!!"

திருப்பதி சென்று வந்தால் திருப்பம் என்னும் வழக்கம் உண்டு. எப்பேர்ப்பட்ட நெருக்கடி இருப்பினும், பிரச்னைகள் இருப்பினும் ஒருமுறை திருப்பதி சென்று வந்தால் நிச்சயம் ஒருவித மனநிறைவு மற்றும் அனைத்து வேண்டுதல்களும் உடனே
நிறைவேறும். ஸ்ரீ வேங்கடவனின் ஆகர்ஷ சக்தி வேறு எந்த அர்ச்சாவதார மூர்த்திக்கும் இந்த கலியுகத்தில் இல்லை.

விநா வேங்கடேசம் ந நாதோ ந நாத
சதா வேங்கடேசம் ஸ்மராமி ஸ்மராமி
ஹரே வேங்கடேச ப்ரசீத ப்ரசீத
ப்ரியம் வேங்கடேச ப்ரயச்ச ப்ரயச்ச !!

வ்யாஸர் அருளிய பதினெட்டு புராணங்களில் 12 புராணங்கள்
Read 8 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(