வசுதேவரின் சகோதரியான ஸ்ருதஸ்ரவா, சேதி தேசத்து மன்னன் தர்மகோஷனை மணந்தாள். அவர்களுக்கு மகனாகப் பிறந்தான் சிசுபாலன். சனகாதி முனிவரின் சாபத்தால் வைகுந்தத்தின் வாயில் காப்பாளர்களான ஜய-விஜயர்களே ஹிரண்யகசிபு- ஹிரண்யாக்ஷனாகவும், ராவணன்-
கும்பகர்ணனாகவும், சிசுபாலன் -தந்தவக்ரனாகவும் பிறந்தார்கள். இதில் சிசுபாலனின் பிறப்பு அதிசயமானது. பிறக்கும் போதே நான்கு கைகளோடும் மூன்று கண்களோடும் பிறந்தான். திருமால்-சிவன் இருவரின் ஒருங்கிணைந்த அம்சமாகத் தனக்குக் குழந்தை பிறந்திருப்பதைக் கண்டு மகிழ்ந்தாள் ஸ்ருதஸ்ரவா. அச்சமயம்
வானில் ஓர் அசரீரி ஒலித்தது: “யார் இந்தக் குழந்தையைத் தூக்கும் போது, இக்குழந்தையின் கூடுதல் இரு கைகளும், மூன்றாவது கண்ணும் மறைகின்றனவோ, அவரால் தான் இக்குழந்தைக்கு மரணம் ஏற்படும்!” இதைக் கேள்வியுற்ற அனைவருமே அந்தக் குழந்தையை நெருங்க அஞ்சினார்கள். கண்ணனும், பலராமனும் தங்களின் அத்தை
ஸ்ருதஸ்ரவாவைக் காணச்சென்ற போது, கண்ணன் “அத்தானே!” என்றபடி ஆசையுடன் சிசுபாலனை தூக்கி கொஞ்சினான். சிசுபாலனின் கூடுதல் இரண்டு கைகளும் மூன்றாவது கண்ணும் மறைந்து விட்டன.
“ஐயோ!” என்றாள் ச்ருதச்ரவா. “கண்ணா! என் மகனை நீயா கொல்லப்போகிறாய்?” என்று கேட்டாள்.
“அவன் ஒழுங்காக இருந்தால் நான்
ஏன் கொல்லப் போகிறேன்? தவறு செய்தால் கொல்லுவேன். அதிலும் உங்களுக்காக ஒரு சலுகை தருகிறேன். ஒரு நாளைக்கு அவன் தொண்ணுற்றொன்பது தவறுகள் வரை செய்யலாம். உங்களுக்காக நான் அவற்றைப் பொறுத்துக் கொள்கிறேன்!” என்றான் கண்ணன். சிசுபாலன் கிருஷ்ண துவேஷியாக வளர்ந்தான். தினமும் கண்ணனைக் கீழ்மை
வசவுகளால் ஏசினான். ஆனால், வசவுகளின் எண்ணிக்கை ஒரு நாளைக்குத் தொண்ணூற்றொன்பது முறைக்கு மேல் போகாமல் பார்த்துக் கொள்வான். பாண்டவர்கள் ராஜசூய யாகம் செய்த போது, கண்ணனுக்கு முதல் பூஜை செய்தார்கள். அதைக் கண்ட சிசுபாலனுக்குக் கோபம் தலைக்குமேல் ஏறியது. நூறாவது தவறு செய்தால் கண்ணன்
தன்னைக் கொல்வான் என்பதைக் கூட ஆத்திரத்தில் மறந்து போய்ச் சுடுசொற்களால் கண்ணனை ஏசத் தொடங்கினான். அங்கிருந்தவர்கள் எல்லோரும் கொதித்து போனார்கள். ஆனால், கண்ணன் சிரித்தபடியே சிசுபாலன் எத்தனை முறை தன்னை ஏசுகிறான் என்று கணக்கிட்டுக் கொண்டே இருந்தான். எண்ணிக்கை நூறை தாண்டி விட்டது. உடனே
கண்ணன் எழுந்து, “பெரியோர்களே! நான் நரகாசுரனுடன் போரிடச் சென்ற போது, என் பாட்டனார் உக்கிரசேனரைச் சிறைப் பிடித்து வைத்தவன் இந்த சிசுபாலன். என் தந்தை வசுதேவர் அசுவமேத யாகம் செய்தபோது, குதிரையை மறைத்து வைத்தான். தன் சொந்த மாமனான பப்ருவின் மனைவியிடமே தவறாக நடக்க முயன்றான். என்னைக்
காதலித்த ருக்மிணியைப் பலவந்தமாகத் திருமணம் செய்ய எண்ணினான். ஆனால், நான் இவன் தாய்க்குக் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக இத்தனை தவறுகளையும் பொறுத்துக் கொண்டேன். இப்போது சிசுபாலனே தன் முடிவைத் தேடிக்கொண்டு விட்டான். இன்று நூறு முறைக்கு மேல் என்னை அவமானப் படுத்தி விட்டான். இவன்
இனி புறப்படலாம்!” என்றான். தன் சக்கராயுதத்தை அவன் மேல் ஏவினான். அது சிசுபாலனின் கழுத்தை அறுத்தது. சிசுபாலனின் உடல் கீழே விழுந்தது. அதிலிருந்து ஒரு ஒளிப்பந்து புறப்பட்டு வந்து கண்ணனின் திருவடிகளை அடைந்தது. சிசுபாலன் வைகுந்தத்தை அடைந்துவிட்டான். இத்தனை பாபங்கள் செய்த சிசுபாலன்
எப்படி முக்தி அடைந்தான்? ஜய-விஜயர் மூன்று பிறவிகள் முடிந்தபின் வைகுந்தத்துக்கு மீள வேண்டும் என்று ஏற்கெனவே எம்பெருமான் விதித்திருந்தான். அதை நிறைவேற்றுவதற்காக சிசுபாலனுக்குக் கண்ணன் முக்தியை அளித்துவிட்டான். அனைத்து உலகுக்கும் இறைவனான கண்ணனுக்குத் தான் விரும்பும் போது, தான் போட்ட
சட்டங்களை மீறுவதற்கும் உரிமையுண்டு. மனிதனாக அவன் அவதரித்தாலும் தனது இயற்கையான சக்திகளோடு தான் இருக்கிறான். எனவே அந்தச் சக்தியால் சிசுபாலன் பாபங்கள் செய்திருந்தாலும் கண்ணனே விதிகளை மீறி அது பாவிக்கும் . நினைத்த நேரத்தில் நினைத்த செயலைச் செய்வதால் எம்பெருமானுக்கு ‘ப்ரபு:’ என்ற
திருநாமம் ஏற்பட்டுள்ளது. அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 35-வது திரு நாமம். ‘ப்ரபு:’ என்றால் அறம், பொருள், இன்பம், வீடு என அனைத்தையும் நினைத்த நேரத்தில் அருளவல்லவன் என்று பொருள்.
“ப்ரபவே நம:” என்று தினமும் சொல்லி வந்தால் சரியான நேரத்தில் நமக்குத் தேவையானதை எம்பெருமான் அருளுவான்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா சென்னையிலுள்ள ஐ.ஐ.டி. கல்லூரி வளாகத்தில்
ஜலகண்டேஸ்வரர் கோயில் கும்பாபிகேஷம் நடந்த சில நாட்களுக்குள்ளாக மகாசுவாமிகள் அந்தக் கோயிலுக்கு விஜயம் செய்தார்கள். தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்து புல் தரையில் உட்கார்ந்து கொண்டார்கள் மகா பெரியவா. அவருக்கு எதிரில் கல்லூரிப்
பேராசிரியர்கள், உயர் அதிகாரிகள். கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு, உடனே பெரியவா புறப்பட்டுப் போய் விடுவாரோ என்று தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு பெரியவா புல் தரையில் தாமாகவே உட்கார்ந்து கொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி. காட்டுப் பகுதியாக அடர்ந்த மரம், செடி, கொடிகள் மண்டியிருந்த
இடத்தில் கட்டப்பட்டிருந்தது
அந்தக் கல்லூரி. சிறிது நேரத்தில் சில மான்கள் துள்ளிக் கொண்டு வந்தன. பெரியவாளைப் பார்த்து மெய்மறந்து நின்றன. பெரியவாளும் மான்களின் அழகை ரசித்துக் கொண்டிருந்தார்கள். அவர் சொன்னார், "மான்களுக்கு கண் ரொம்ப அழகு. மான்கள் வெஜிடேரியன். புல்தான் சாப்பிடும்.
#இதுதான்உலகம் ஒரு கிராமம். சிறுவன் ஒருவன் ஏரிக்கரையில் விளையாடிக் கொண்டு இருக்கிறான். அப்போது, என்னை காப்பாற்று, காப்பாற்று என்று ஓர் அலறல். ஆற்றோரத் தண்ணீரில், வலைக்குள் சிக்கி இருக்கும் முதலை ஒன்று சிறுவனைப் பார்த்துப் பரிதாபமாக கதறுகிறது. மாட்டேன். உன்னை விடுவித்தால் என்னை
விழுங்கி விடுவாய். காப்பாற்ற மாட்டேன் என மறுக்கிறான் சிறுவன்.
ஆனால் முதலை, நான் உன்னை சத்தியமாகச் சாப்பிட மாட்டேன். என்னை காப்பாற்று என்று கண்ணீர் விடுகிறது. முதலையின் பேச்சை நம்பி சிறுவனும் வலையை அறுக்க ஆரம்பிக்கிறான். அறுத்து முடிப்பதற்குள் சிறுவனின் காலைப் பிடித்துக் கொண்டது.
பாவி முதலையே இது நியாயமா? என்று சிறுவன் கண்ணீருடன் கேட்க,
அதற்கென்ன செய்வது, பசி வந்தால் பத்தும் பறந்துவிடும். இதுதான் உலகம். இதுதான் வாழ்க்கை என்று சொல்லிவிட்டு விழுங்க ஆரம்பித்தது முதலை. சிறுவனுக்கு சாவது பற்றிக்கூட கவலை இல்லை. முதலை ஏமாற்றி விட்டதோடு மட்டும் அல்லாமல், நன்றி
#தந்தவக்ரன் (தந்தவக்ரன், சிசுபாலன் மகாவிஷ்ணுவின் வாயிற் காப்போற்கள் ஜய விஜயர்களின் இறுதி இரு அரக்கப் பிறவிகளாகும்) மதுராவின் மன்னன் சூரசேனனுக்கு (வாசுதேவரின் தந்தைக்கு) ஐந்து மகள்கள் இருந்தனர்: பிருதா (குந்தி), ஷ்ருததேவா, ஷ்ருதகீர்த்தி, ஷ்ருதஷ்ரவா மற்றும் ராஜாதிதேவி. சிசுபாலன்
ஷ்ராதஸ்வராவுக்கு பிறந்தார். ஷ்ருததேவா க்ருஷ ராஜ்ஜியத்தின் அரசரான விருத்தசர்மாவை மணந்தார். அவர்களுடைய மகன் தான் தந்தவக்ன். அவன் பல் கோணலாக இருந்ததால் தந்தவக்ரன் என்று அழைக்கப்பட்டான். அவன் சிசுபாலன் மற்றும் ஜராசந்தனின் நெருங்கிய கூட்டாளி. பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்திற்கு
முன் சகாதேவனால் தோற்கடிக்கப் பட்டான். பீமன் ஜராசந்தனைக் கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பாண்டவர்கள் நடத்திய ராஜசூய யாகத்தில் அவன் கலந்து கொள்ளவில்லை. அதன் பின் நடந்த அஸ்வமேத யாகத்தில் ஸ்ரீ கிருஷ்ணர் சிசுபாலனைக் கொன்றார். சிசுபாலனின் மரணத்திற்குப் பழிவாங்க நினைத்தான்.
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு முறை சிவபெருமான் நாரத மகரிஷியைப் பார்த்து, "ஓ நாரதரே! சோழ தேசத்தில் காவேரி மத்தியில் #சந்திரபுஷ்கரணி தீர்த்தத்தில் மிகுந்த லட்சுமிகரமாக விளங்கும் #ஸ்ரீரங்கத்தலம் என்னும் புண்ணியத் தலம் உண்டு. அந்தத் தலத்தைச் சென்று தரிசித்தவர்கள் நரகத்திற்குப் போக
வேண்டியதில்லை. எமலோகத்திற்குப் போக வேண்டியதில்லை. அவர்களை மரண வேதனை வருத்தமாட்டாது. மீண்டும் அவர்களுக்கு எவ்விதமான பிறவித் துன்பங்களும் ஏற்படாது. ஆகையால், பூலோக மண்டலத்தில் புத்திசாலியாக இருக்கின்றவர்கள், ஸ்ரீரங்கத்துக்குப் போகாமலும், காவேரி தீர்த்த ஸ்நானம் செய்யாமலும், ஸ்ரீரங்க
விமானத்தைத் தரிசிக்காமலும், ஸ்ரீரங்கநாதரை சேவை செய்யாமலும், தங்களால் இயன்றவரை பெரியோர்களுக்குத் தான தருமங்கள் செய்யாமல் இருக்க மாட்டார்கள்" என்றார். அது மட்டுமல்லாமல், தும்மல் வந்து தும்முகற போதும், நடக்கும் போதும், உடலில் ஒரு நோய் கண்ட போதும், எதிரிகள் எதிர்த்த போதும், பாவிகளோடு
பூதயக்ஞமான இந்த வைசுவதேவம், பூஜை, ஹோமம் முதலிய தேவயக்ஞம், மனுஷ்ய யக்ஞம் (விருந்தோம்பல்) பிதுரு யக்ஞம் (தர்ப்பணம்) முதலியவற்றோடு, தான் கற்றுப் பயன் பெற்ற வேதத்தை நிச்சயமாக இன்னொருத்தருக்குக் கற்பிக்கிறதாகிய பிரம்ம யக்ஞம் என்கிற ஞான வேள்வியும் செய்யவேண்டும் என்று விதி. இந்தப் பஞ்ச
மகாயக்ஞங்கள் அனைத்தையும் பிரம்ம புத்திரர்களான ரிஷிகள் முதற்கொண்டு யாவரும் யுகம் யுகமாகப் பண்ணிக்கொண்டு வந்தார்கள். ஆதி காலத்திலிருந்து நம் தாத்தா காலம் வரையில் சாஸ்திரப் பிரகாரம் எல்லோரும் இவற்றை ஒழுங்காகச் செய்து வந்தார்கள். பிரளய காலம் வரையில் இவை அவிச் சின்னமாக (முறிவுபடாமல்)
நடந்து வர வேண்டும். ஆனால் நம் நாளில் இந்த இழையைக் கத்தரித்து விட்ட பாக்கியத்தை அடைந்திருக்கிறோம். அநாதி காலமாக வந்துள்ள அநுஷ்டானங்களை கபளீகரம் செய்துவிட்டு நம்மோடு மட்டுமல்லாமல், நம்முடைய பின் சந்ததியாருக்கும் இவற்றைப் பின்பற்றுவதால் உண்டாகும் நன்மைவிளையாமல் தடுத்து
#மகாபெரியவா
ஒரு பசுமாட்டையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு வந்து ஸ்ரீமடத்துக்கு சமர்ப்பித்தார் ஒரு பக்தர். மகா பெரியவா வெளியே வந்து மாடு-கன்றைப் பார்வையிட்டார். பக்தரைப் பார்த்து, “இந்தப் பசு மடத்துக்கு வேண்டாம்" என்று சொன்னார். அன்று வெள்ளிக் கிழமை. அந்த நல்ல நாளில் வந்திருக்கும்
கோமாதாவை வேண்டாம் என்கிறாரே பெரியவா என்று மனசுக்குச் சஞ்சலம். பெரியவாளிடம் மெல்ல சொன்னார் மானேஜர், “இன்னிக்கு வெள்ளிக்கிழமை. பசுமாடு கொண்டு வந்திருப்பவர் ரொம்ப நாளா மடத்து பக்தர். திருப்பி அனுப்பறது நியாயமில்லையோன்னு”
"நீ சொல்றது சரிதான். வெள்ளிக் கிழமை அன்னிக்கு ஒரு பக்தர்
மனப்பூர்வமாகக் கொடுக்கிற
பசுமாடு-கன்றை ஏற்றுக்கொள்வது தான் நியாயம்”
மானேஜருக்கு கொஞ்சம் தெம்பு வந்தது.
“ஆனால் இந்தக் கன்றுக்கு இந்த மாடு தாய் இல்லை"
எப்படி? ஒருவருக்கும் புரியவில்லை.
"பாரு கன்னுக்குட்டி பசுமாடு கிட்டே போய் ஒட்டிக்க மாட்டேங்கிறது. பசுமாடு கன்னுக் குட்டியை நக்கிக்