#நாலாயிரம்_பிள்ளையார்_கோயில் சதுர் ஸஹஸ்ர கணபதி என்று வட மொழியில் வழங்கப்படும் இப்பிள்ளையார் கோவில் சீர்காழிக்கு அருகில் உள்ள நாங்கூரில் உள்ளது. இக்கோவில் மூல மூர்த்தி இராமாயண காலத்தே சுயம்புவாக உருவானவர். கிஷ்கிந்தையை ஆண்டு வந்த வாலிக்கு யாரிடம் போரிட்டாலும் எதிரியின் பலத்தில்
பாதி தனக்கு வர வேண்டும் என்ற வரத்தைப் பிரம்ம தேவனிடம் பெற அவரை நோக்கிக் கடுமையான தவத்தை ஒரு குகைக்குள் இருந்து செய்து வந்தான். நெடும் காலமாகியும் வாலி வெளியில் வராதது கண்டு அவனது வீரர்கள் குகையை ஒரு பாறாங்கல்லால் மூடிவிட்டுக் கிஷ்கிந்தைக்குத் திரும்பி விட்டனர். இதற்கிடையில் கடும்
தவத்தின் பலனாக வாலிக்குப் பிரம்மனின் தரிசனம் கிடைத்தது. வாலி வேண்டியவாறே எதிரியின் பலத்தில் பாதி, அவனுக்கு வரும்படியாக நான்முகன் வரமளித்து மறைந்தார். குகையின் வாயில் மூடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த வாலி அப்பாறையை அகற்றிவிட்டு வெளியில் வந்து, கிஷ்கிந்தையை அடைந்தான்.
அரசன் இல்லாததால் மந்திரிகளும் மக்களும் கோரியபடி சுக்ரீவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் வேளையில் அவனை அரியணையில் வீற்றிருக்கக் கண்ட வாலி கோபமுற்றான். தம்பியான சுக்ரீவனைப் போரிட்டு வென்று நாட்டை விட்டே துரத்தி விட்டான். ஆனால் சுக்ரீவனது மனைவியையோ அல்லது அவனது மகனான அங்கதனையோ
சுக்ரீவனோடு அனுப்பவில்லை. இத்தவறுக்காகவே இராமனால் பின்பு தண்டிக்கப்பட்டான். காடுகளில் அனுமனோடு திரிந்துகொண்டு வாலிக்கு அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த சுக்ரீவன், இராம லக்ஷ்மணர்களைக் கண்டு தான்படும் துயரத்தை அவர்களிடம் கூறினான். அவனுக்கு அடைக்கலம் கொடுத்த இராமன், மரங்களுக்குப் பின்னால்
நின்று கொண்டு வாலியின் மீது பாணம் செலுத்தி அவனை வீழ்த்தினார். அதனால் ஏற்பட்ட தோஷத்தை நீக்கும் பொருட்டு, நாங்கூரை அடைந்து காவிரியின் கிளை நதியான மணிகர்ணிகையில் மணல் எடுத்து விநாயகர் திருவுருவை அதில் அமைத்துப் பூஜை செய்தார். அசரீரி வாக்கின்படி, தோஷ நிவர்த்திக்காக 4000 வேத
விற்பன்னர்களைக் கொண்டு யாகம் செய்ய முற்படுகையில் ஒரு அந்தணர் வரவில்லை. தடை ஏற்படுகிறதே என்று வருந்திய இராமருக்கு ஆறுதல் அளித்துத் தானே ஒரு வேதியராக மகா கணபதி வந்ததால் நாலாயிரத்தில் ஒருவர் என்ற திருநாமம் ஏற்பட்டது. அதுவே மக்கள் வழக்கில் தற்போது நாலாயிரம் பிள்ளையார் எனப் படுகிறது.
இராம பிரானே மணலால் வடிவமைத்த கணபதியாதலால் ஸ்வயம்பு மூர்த்தியாகக் காட்சி அளிக்கிறார். விநாயகரின் சன்னதி வாயிலில் துவார பாலகர்கள் இருக்கும் இடத்தில் சங்க நிதியும் பத்ம நிதியும் இருக்கிறார்கள். இவர்களே ஹோம சாமான்களை யாகம் செய்வதற்காக எடுத்து வந்ததாக ஐதீகம். அன்று முதல் இருவரும்
சன்னதி வாயிலிலேயே நின்று விட்டனர். எல்லா திரவியங்களாலும் பிள்ளையாருக்கு அபிஷேகங்கள் நடை பெறுகின்றன. பால் அபிஷேகம் செய்யும்போது அதில் ஒரு பகுதி, மூர்த்திக்குள் செல்வது அற்புதமாகக் கூறப்படுகிறது. விநாயக சதுர்த்தி விழா இங்கு சிறப்பாக நடை பெறுகிறது. ஆண்டுக்கொரு முறை நாங்கூர் 12
ஆலயங்களின் மூர்த்திகளும் ஒரே இடத்தில் ரிஷப வாகன சேவை தரும்போது, நாலாயிரம் பிள்ளையாரும் அம்மூர்த்திகளோடு தரிசனம் தருகிறார். இராமர் யாகம் செய்வவதற்காகக் கோயில் எதிரில் அமைத்த குண்டம் தற்போது குளமாகக் காட்சியளிக்கிறது. சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன் இதிலிருந்த நீர் காவி நிறத்தில்
இருந்ததாம். ஆனால் அதில் நீராடினால் வெள்ளை வஸ்திரத்தில்  காவி படிவதில்லையாம்.அதன் பிறகு, குளத்தைத் தூர் வாரப் போய், குளத்து மணலை அகற்றிவிட்டதால் அந்தக் காவி நிறம் போய் எல்லா நீர்நிலைகளில்  உள்ள நீரைப் போன்று தோற்றமளிக்கிறது. 
#அறிவோம்_கோவில்கள்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 11
#மகாபெரியவா "கல்யாணம், மத்த விசேஷம், சாதாரணமாக வீடுகளில் போஜனம் எப்படி சாப்பிடுறோம்?'' என்று பெரியவா கேட்டார்.
"வாழை இலைலே எல்லா அயிட்டம் வச்சதும் போஜனம் சாப்பிடறோம் ''
"அது சரி எல்லாரும் போஜனம் பண்றச்சே எதை எதை எந்த ஆர்டர்ல எடுத்துக்குவேள்"
''ஓ அதை கேக்கறேளா பெரியவா. மொதல்ல Image
சாம்பார், அடுத்தது ரசம், அப்புறம் பாயசம்,
பட்சணம், கடைசியா மோர்" அங்கே இருந்த பலர் சேர்ந்து சொன்னார்கள்.
"ஏன் இப்படி ஒரு ஆர்டர் வைச்சிருக்கா தெரியுமோ?"
மௌனமாக இருந்தார்கள். அவரே பதில் சொல்வார் என்று தெரியும்.
"இலையை போட்டவுடனே வாழ்க்கை பசுமையா இருக்கேன்னு அதுல மயங்கிடாதேன்னு
தண்ணிய தெளிக்கிறா. அப்பறம் பாயசம் அதுக்கு எதிரில பச்சடி எதுக்கு வைக்கிறா தெரியுமா? பாயசத்தால பிறந்த ஸ்ரீ ராமனையும், தயிர் வெண்ணைப் பிரியனான ஸ்ரீகிருஷ்ணனையும் சாப்பிடும்போது நிணைக்கனும் என்பதற்காகத் தான். மொதல்ல குழம்பு. இதுல, 'தான்' இருக்கு. தான் என்பது வெண்டக்கா, சுண்டக்கா, பூசண
Read 8 tweets
Jun 11
#ஸ்ரீகிருஷ்ணன்கதைகள் இளைஞன் மாரி ஒரு வெள்ளிக் கட்டியைக் கொண்டு வந்து அதை அழகிய வேலைப்பாடுடன் கூடிய ஒரு ஆபரணமாகச் செய்யச் சொல்லி கொல்லனிடம் பணித்திருந்தான். அவனுக்கு அந்தக் கொல்லன் எப்படி அதைச் செய்கிறான் என்று பார்க்க ஆவல் இருந்ததால் ஆரம்பத்தில் இருந்தே கொல்லன் வேலை செய்வதை Image
ஆர்வத்துடன் பார்த்தபடியே அங்கேயே அமர்ந்திருந்தான். கொல்லன் மிகுந்த கவனத்துடன் வெள்ளியை உருக்கிக் கொண்டிருந்தான். அதையே பார்த்துக் கொண்டிருந்த மாரிக்கு இந்த வேலைக்கு பொறுமையும், கவனமும் நிறைய வேண்டும் என்று தோன்றியது. அந்த இரண்டும் கொல்லனிடம் நிறைய இருந்தன. அய்யா, இந்த வெள்ளியை
எவ்வளவு நேரம் சூடுபடுத்த வேண்டும் என்று கொல்லனிடம் கேட்டான் மாரி. இது உருக ஆரம்பித்து இதன் அழுக்குகள் நீங்கும் வரை இதை உருக்க வேண்டும், வெள்ளி சுத்தமானவுடன் உடனடியாக சூடுபடுத்துவதை நிறுத்தி விட வேண்டும். இல்லாவிட்டால் வெள்ளி இந்த தீயில் கருகி விடும் என்று அதிலிருந்து பார்வையை
Read 8 tweets
Jun 10
#அறிவோம்_மகான்கள் #அறிவோம்_திருத்தலங்கள் #திருவூறல் என அழைக்கப்படுகின்ற தக்கோலத்தில் சிவாச்சாரர் என்ற சிவனடியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். திருமேனியெங்கும் வெள்ளிய விபூதி தரித்தும் கழுத்தில் உருத்திராட்ச மாலை அணிந்த தோற்றத்துடனே எப்போதும் காணப்படுவார். இவர் பார்க்கும் Image
சிவனடியார்கள் அனைரையும் ஈசனாகவே பாவித்து பணிந்து தொழுவார். எந்நேரமும் சிவபுராண தோத்திரங்களை உருகி உருகி பாடிக் கொண்டேயிருப்பார். நியமம் தவறாமல் சிவ பூஜை செய்து வருபவர். ஒரு சமயம் சிவபூஜையை மேற்கொண்டிருந்த நேரத்தில் சிவனடியாரின் ஆயுளை முடிக்க எமதூதர்கள் இருவர் சிவாச்சாரர் பூஜை அறை Image
வரைக்கும் வந்து விட்டிருந்தனர். அந்த நேரத்தில் சிவனடியார் செய்த பூஜை புணர்மான முடிவில் புனித நீரை தன் தலையில் தெளித்துக் கொண்டார். இது நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த யமதூதர்கள் இருவர் மீதும் இந்த புனித நீரின் சில துளிகள் பட்டுவிட்டன. உடனே யமதூதர் இருவரும் சிவஞானம் பெற்றனர். Image
Read 18 tweets
Jun 10
#MahaPeriyava One of my most vivid memories which changed the entire course of my life was the granting of permission by Maha Periyaval for me to go abroad. It was around April or May 1960. The first batches of students for the prestigious Commonwealth Scholarships were to be Image
selected. The scholarship scheme was a unique decision from the Commonwealth Prime Ministers’ Conference at Colombo a few weeks earlier. I appeared for the interview at Delhi and a few days later I received intimation of being selected for neurosurgical training at Edinburgh for
two years. I informed my father (Dr V.Subramaniam) who was at Trichy. In those days I knew that Maha Periyaval did not favour the idea of young boys from orthodox families going abroad for a long period of time. My father told me that I could go abroad only if Maha Periyaval gave
Read 10 tweets
Jun 9
#ஶ்ரீராமானுஜர்
எம்பெருமானார் அருளிய நூல்கள் மொத்தம் ஒன்பது. அவை நவரத்தினங்களாக கருதப்படுகின்றன.
#ஸ்ரீபாஷ்யம் அவரின் மிகச் சிறந்த படைப்பு. பிரம்ம சூத்திரத்திற்கு விளக்க உரை. வேதாந்தத்தில் விசிஷ்டாத்வைத தத்துவத்தை காலத்திற்கும் நிலைநாட்டிய நூல் இது.
#வேதாந்த_சங்கரஹம். உபநிஷத்துகள் Image
புராணங்கள், ஸ்மிருதி போன்ற நூல்களின் கருத்துக்களின் திரட்டு.
#வேதாந்த_சாரம், #வேதாந்த_தீபம் இவை இரண்டு நூல்கலும், பிரம்மசூத்திரத்தின் முக்கியமான பகுதிகளின் உட்பொருளை எளியநடையில் கூறுகிறது.
#கீதா_பாஷ்யம். இது கீதைக்கு விசிட்டாத்துவைதத்தையொட்டி எழுதப்பட்ட உரை.
#நித்யக்கிரந்தங்கள்.
அன்றாட வைதீகச் சடங்குகளும், பூஜை முறைகளும். பக்தியின் வெவ்வேறு நிலைகளை விளக்கும் நூல்.
#கத்யத்ரயம் -
#சரணாகதிகத்யம், பிரபத்தி என்ற சரண்புகுதலைப் பற்றியது.
#ஸ்ரீரங்ககத்யம் ரங்கநாதப் பெருமானை தன்னை தாசனாக்கிக் கொள்ளும்படி வேண்டுவது. #வைகுண்டகத்யம் மகாவிஷ்ணுவின் இருப்பிடமான
Read 4 tweets
Jun 9
#மகாபெரியவா
என்னுடைய குடும்பத்தினர் அனைவரும் ஓன்று சேர்ந்து எங்களுடைய பூர்வீக கிராமமான (தஞ்சாவூர் பந்தனை நல்லூர் அருகிலுள்ள) ஸ்ரீரங்கராஜபுரத்தில் மஹாவாமிகளுக்கு ஒரு திருக்கோயில் அமைத்து 2021 மார்ச் 10ஆம் தேதியன்று காஞ்சி பால பெரியவா முன்நிலையில் குருவருளுடன் கும்பாபிஷேகம் Image
செய்வித்தோம். அதன் பிறகு என் தந்தை பெயரில் S.V. Raja mani Iyer Educational & Chartable Trust என்ற ஒரு டிரஸ்டை தொடங்கி செவ்வனே நிர்வகித்து வருகிறோம். அடுத்த கட்டமாக தேவையான வசதிகளுடன் மஹாஸ்வாமிகளின் அனுக்கிரஹத்துடன் ஒரு கோசாலை தொடங்கப் பட்டது. அதன் முதல் கட்டமாக 3 கறவைப் பசுகளை
வாங்கினோம். வாங்கிய முதல் பசுவை பரசவித்த 4 வது நாளே கோசாலைக்கு கொண்டு வந்தோம். அந்த பசு பரசவித்த போது நஞ்சு முற்றிலும் வெளியேறாமல் கொஞ்சம் கர்பப்பையிலேயே தங்கியுள்ளது. அதை யாரும் அறிந்திருக்கவில்லை. கோசாலைக்கு வந்த 5 நாளுக்குள் பசுவின் உடல்நலத்தில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டது.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(