பழைய கற்காலத்தில் மனிதன் மலைகளிலும், காடுகளிலும் அலைந்து திரிந்தான்.
விலங்கோடு விலங்காக வாழ்ந்து வந்தான்.
விலங்கின் தோல்களையும், மரப்பட்டைகளையும், மரத்தழைகளையும் ஆடையாக அணிந்து கொண்டான்.
புதிய கற்காலத்தில் மனிதன் ஒரு இடத்தில் தங்கி வாழத்தலைப்பட்டான்.
அப்பொழுது பயிர்த் தொழிலையும் மீன் பிடித்தலையும், நெசவுத் தொழிலையும் கற்றுக் கொண்டான். இதுவே மனிதனின் முன்னேற்றத்தின் முதற்படியாக அமைந்தது.
புதிய கற்காலத்தில் மனிதன் ஏதோ ஒருவகை வாழ்ந்த ஆடையினை உடுத்தியிருக்கின்றான் என்பது தெரிகிறது.
#ஆடை அணிகின்ற பழக்கம் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் இருந்தே வந்திருக்கிறது.
'ஆடையைக்’ குறிக்கின்ற சொல் தொடக்க காலத்தில் #புடவை என்ற பெயரில் வழங்கி வந்திருக்கிறது.
#புடவை என்பது ஆண், பெண் இருபாலரும் அணிந்து கொள்ளும் ஆடையைக் குறிப்பதாகும்.
ஆனால் இப்பொழுது #புடவை என்பது பெண்கள் அணிந்து கொள்ளும் ஆடையை மட்டும் குறிக்கிறது.
தமிழக மக்கள் எந்த வகையான ஆடையை அணிந்திருந்தனர்?
அணிந்து கொண்ட ஆடை எவ்வாறு நெய்யப் பெற்றது?
எந்தவகையான நூல்கள் பயன்படுத்தப்பெற்றன?
எத்தனை வகை ஆடைகள் தமிழகத்தில் இருந்திருக்கின்றன?
இவ்வினாக்களுக்குத் தொல்லியல் சான்றுகள், மேலை நாட்டார் குறிப்புகள், இலக்கியங்கள், கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், செப்புத் திருமேனிகள் ஆகியவற்றின் துணை கொண்டு விடை அறியலாம்.
தங்க நெற்றிச் சுட்டிகள் சிலவற்றில் துளைகள் காணப்படுகின்றன.
இவற்றைக் கோர்ப்பதற்கு நூலைப்
பயன்படுத்தியிருக்க வேண்டும் என்பது தெரிகிறது.
#அரிக்கமேடு, #வசவசமுத்திரம், #உறையூர் ஆகிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இடங்களில் 'சாயத் தொட்டிகள்' இருந்ததற்கான தடயங்கள் அகழாய்வில் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
#உறையூர் அகழ்வாய்வில் ஏறக்குறைய பொ.பி 2 ஆம் நூற்றாண்டிலிருந்து பொ.பி 5 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த செங்கற்களால் பெற்ற சாயமேற்றுவதற்கெனக் கருதத்தக்க கட்டடப்பகுதிகள் கண்டுபிடிக்கப் பெற்றுள்ளன.
#சாயத்தொட்டிகள் இருந்ததற்கான சான்றுகளாக சில ஊர்களின் பெயர்கள் #தொட்டி என்ற பெயரில் இன்றும் வழங்குகிறது.
ஆடைகளுக்கு வண்ண மூட்டுகின்ற கலை தமிழ்நாட்டில் சிறந்து விளங்கியிருக்கிறது.
#வண்ணம் தயாரிக்க காடுகளில் முளைத்திருக்கும் செடிகளிலிருந்து தழைகளும், மரப்பட்டைகளும், அவுரிச் செடியும் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அவுரிச் செடிகள் நம் நாட்டிலிருந்து மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பெற்றன என்பது தெரிகிறது.
• மேலை நாட்டினர் குறிப்புகள்:
#ஹேரடோடஸ், #பிளைனி போன்றவர்கள் நம் நெசவுத் தொழிலைப் புகழ்ந்து போற்றி உள்ளனர்.
2000 ஆண்டுகளுக்கு முன்னரே கிரேக்க, அரேபிய வணிகர்கள் துணிகளை வாங்கிச் சென்று எகிப்திலும், ரோமிலும் பிற நகரங்களிலும் விற்றனர் என்று குறிப்பிட்டுள்ளனர்.
#உறையூர் நெசவுத் தொழிலுக்கும், பருத்தி ஆடைகளுக்கும், வணிகத்திற்கும் பெயர்போன நகரம் என #பெரிபுளூஸ் குறிப்பிடுகிறார்.
தமிழகத்திலிருந்து #ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பெற்ற #மஸ்லின் துணிகளை, அந்நாட்டு மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கினர்.
#திருச்சி, #தஞ்சை மாவட்டங்களிலிருந்து #மஸ்லின் துணிகள் #ரோம் நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டன என்பது தெரியவருகிறது.
சீன வரலாற்று ஆசிரியர் சௌ-ஜூ-குவா, பொ.பி 13-ஆம் நூற்றாண்டில் சோழ நாட்டிலிருந்து சீனாவிற்கு இறக்குமதியான பொருட்களின் பட்டியலைக் குறிப்பிடும்போது...
பருத்தியாலான துணிகளைகளையும், பல நிறமுள்ள பட்டு நூலையும் குறிக்கின்றார்.
#காயல் துறைமுகம் பொ.பி 13-ஆம் நூற்றாண்டில், கடல் பின் தங்கிய காரணத்தால் சிறப்பை இழந்தது.
வெனிசீய வணிகரான #மார்க்கோபோலோ தமிழ்நாட்டு மக்கள் மானத்தை மட்டும் மூடத்தக்க அளவு உடுத்துகிறார்கள்.
அரசன் அதிகத்துணி உடுத்துவதில்லை. ஆனால் உயர்ந்த வகைத் துணி உடுத்துகிறான். பல ஆபரணங்களை அணிந்து கொள்கிறான். அவை பொன்னாலானவை. இரத்தினங்கள் பதித்தவை.
இரத்தினங்கள் நிறைந்த கழுத்துப்பட்டை, பட்டு நூலில் முத்தும், செம்பும் கோர்த்த மாலை அணிந்திருந்தான் என்பதைக் குறிப்பிடுகின்றார்.
• இலக்கியங்களில் புடவை:
தொல்காப்பியத்தில் #கூறை என்ற சொல் குறிக்கப்படுகிறது. இது ஆடையைக் குறிப்பதாகும்.
கொங்கு நாட்டில் 'கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு (வழி) அலைப்பர் இல்லை' என்ற அடிகள் இதனை உறுதிப்படுத்துகின்றன.
#கலிங்கம் என்ற சொல்லும் இலக்கியத்தில் குறிக்கப்படுகிறது. கலிங்க நாட்டில் இருந்து ஒருவகை ஆடை தமிழ்நாட்டிற்கு வரப்பெற்றதால் அந்த ஊரின் பெயரில் அழைக்கப்பெற்றது.
ஆடை நெய்வதற்கு வேண்டிய
மூலப்பொருளான #பருத்தி தமிழகத்தின் கிராமங்களில் அதிக அளவில் பயிரிடப்பட்டது.
இதனைப் 'பருத்தி வேலிச் சீறூர்' என்று #புறநானூறு கூறுகின்றது.
பருத்தி, இலவமரம், கோங்குமரம் ஆகியவற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற பஞ்சினைக் கொண்டு, ஆடைகள் நெய்யப்பெற்றன.
எலியினுடைய உரோமத்தைப் பயன்படுத்தி ஆடை நெய்தனர் நம் தமிழ் மக்கள்.
ஆடைகள் அரும்பி மலர்ந்த பகன்றைப் பூப்போன்றும், பாம்பு உரித்த தோல் போன்றும், மூங்கிலின் உட்புறத்தேயுள்ள தோல் போன்றும், புகையை விரித்தாற் போன்றும், பாலாவியைப் போன்றும் விளங்கின என்பது போன்ற குறிப்புகள் காணப்படுகின்றன.
ஆடைகள் தடித்தகரையினை உடையவைகளாகவும், பூவேலைப்பாடு செய்யப்பெற்றும் இருந்தன.
• ஆடை தைப்போர்:
தமிழ்நாட்டு மக்கள் நன்கு தைக்கப்பெற்ற ஆடைகளை அணிந்திருந்தனர்.
ஆடைகள் வெளுத்துப் பசையில் தோய்த்தெடுத்து உடுத்தப்பட்டன. மக்கள் தூய்மையான ஆடையை அணிந்திருந்தனர்.
ஆடைகளுக்கு மணங்கமழும் அகிற்புகையை ஊட்டினர் என்றும், ஏழு காலத்திற்கு ஏற்றாற்போல் உடை அணிந்தனர் என்றும் தெரிகிறது.
நீராடும் பொழுது தனி உடை அணிந்தனர். அது #புட்டகம் (#உள்ளாடை) என்று அழைக்கப்பெற்றது.
செந்நிற ஆடையை 'ஆறலைக் கள்வர்கள்' அணிந்தனரென்றும், 'துணைப்புணர்ந்த மடமங்கையர்' பட்டு நீக்கித் துகிலுடுத்தினரென்றும், நீலநிறத்துணி படுக்கையில் விரிக்கப் பெற்றதென்றும் இலக்கியங்கள் குறிக்கின்றன.
• அரசன் அணிந்திருந்த ஆடைகள்:
அரசன் காலையில் எழுந்து நாள் கடன்களை செய்துமுடித்து, மார்பில் சந்தனம் பூசி, முத்தாரங்களையும் தரித்து கரத்தில் வீரவளை பூண்டு, கஞ்சி போடப்பட்ட துகிலை இடையில் அணிந்து, தெய்வத்தை வழிபட்டான் என்று #மதுரைக்காஞ்சி குறிக்கிறது.
தெய்வ வழிபாட்டின்போதும், தானங்கள் செய்தபோதும், மஞ்சள் நிறப் பட்டணிந்து இருப்பது வழக்கம்.
இவை முடிந்தவுடன் மஞ்சள் நிறப்பட்டை நீக்கி, வெள்ளையான துகிலை அணிந்து கொண்டான். இத்துகிலும் கஞ்சி போடப்பட்டிருந்தது.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...