என்னை எல்லோரும் ரிஷி என்றே அழைக்கிறார்கள். ஆனால், மகரிஷி என்ற பட்டம் மட்டும் இன்னும் எனக்குக் கிடைக்வில்லை. முனிவர்களிடையே நானும் ஒரு மகரிஷி என்ற அந்தஸ்தைப் பெற விரும்புகிறேன்” என்றார்.
“உத்தவரே! நான் வேறொரு விசயமாக உங்களோடு பேச இருந்தேன் அதற்குள் மகரிஷி பட்டம் பேச்சில் குறுக்கிட்டு விட்டது. என தூபம் போட்டார்.
மேலும் கிருஷ்ணர்
நான் அவசரமாக பிருந்தாவனத்தில் இருக்கும் ராதைக்கு ஒரு செய்தி அனுப்ப வேண்டும். நீங்கள் செய்தியைக் கொடுத்துவிட்டு வர இயலுமா?”
என்ன பேச்சு இது,
செய்தியைக் கொடு. இப்போதே தேரில் கிளம்புகிறேன் என்றார்
உத்தவர்
அருகிலிருந்த பேழையிலிருந்து ஒரு பனையோலையை எடுத்து, உத்தவரிடம் கொடுத்தார்.
ஜாக்கிரதையாக அந்த ஓலையை ராதையிடம் சேர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
உத்தவர் ஓலையைத் திருப்பித் திருப்பிப் பார்த்தார். அதன் இருபுறங்களிலும் ஆராய்ந்தார். அதில் ஒரு செய்தியும் இல்லை! ஓர் எழுத்துக் கூட எழுதப்படவில்லை!
“ எழுதாத ஓலையில் உள்ள செய்தியைப் படிக்காமலே ராதை தெரிந்துகொள்வாள். நீங்கள் இந்த ஓலையை அவளிடம் கொடுத்தால் போதும்!”
“நீங்கள் ராதையிடம் ஓலையைக் கொடுக்கும்போது அதில் செய்தி எதுவும் தானாய்த் தோன்றாது! அப்போதும் இது வெறுமையாய்த்தான் இருக்கும். ஆனாலும் என் ராதைக்கு எழுதாத ஓலையை வாசிக்கத் தெரியும்”.
உத்தவர், செய்தி ஏதும் எழுதாத ஓலையில் உள்ள செய்தியை எடுத்துக் கொண்டு
பிருந்தாவனம் நோக்கித் தேரில் பயணமானார்.
தேரில் போகும்போது தான் உத்தவருக்கு அந்த எண்ணம் எழுந்தது. “செய்தியே இல்லாத ஓலையைக் கண்ணன் அனுப்பியுள்ளது பற்றி ராதாதேவி கவலை கொள்வாளோ? கண்ணன் தன்மேல் சரிவர அன்பு செலுத்தவில்லை என்று எண்ணுவாளோ?
ஒரு காதலன் தன் காதலிக்கு இரண்டுவரி கூட எழுதாமலா ஓலையை அனுப்புவது?
உண்மையிலேயே அன்னை ராதையின் பொருட்டாக உத்தவரின் உள்ளம் பாடாய்பட்டது
கண்ணன் எழுதியதுபோல் நாமே ஓரிரு வார்த்தைகள் எழுதி விட்டால்தான் என்ன?
நல்ல நோக்கத்தில் தானே இதைச் செய்கிறோம்? கண்ணன் இதைச் சரியான கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வான்”.
உத்தவர் எழுத்தாணியை எடுத்தார்.
“அன்பே ராதா! உன் நினைவு அடிக்கடி வந்துகொண்டே இருக்கிறது. அன்பன் கண்ணன்,” என்று எழுதினார்.
பிருந்தாவனத்தில் ராதையை கண்டு தன் வசமிருந்த ஓலையை ராதையிடம் கொடுத்தார்.
அதை படித்த ராதை கலகலவென்று சிரித்தாள்
ஏன் இப்படி எழுதி தந்தீர்கள் என கேட்டார்.
“தாயே! செய்தி எழுதாத ஓலையைப் பார்த்து உங்கள் மனம் வருந்தக் கூடாது என்றுதான் நானாக எழுதிச் சேர்த்தேன்.
மன்னிக்க வேண்டும். அதுசரி. இதைக் கண்ணன் எழுதவில்லை என்று எப்படிக் கண்டுபிடித்தீர்கள்?
எப்படிக் கண்டுபிடித்தேனா?
இதைக் கண்ணன் மட்டும் எழுதி அந்த மாயக்கண்ணன் என் நேரிலும் இருந்தால்,
நான் போடும் சண்டையில் ஓர் யுகப் பிரளயமே இங்கு தோன்றியிருக்கும்!
என்னை அடிக்கடி நினைத்துக் கொள்வதாக அல்லவா ஓலை தெரிவிக்கிறது?
அப்படியானால் அடிக்கடி மறப்பதால் அல்லவா அடிக்கடி நினைவு வருகிறது?
எப்போதும் கண்ணன் நினைவாகவே நான் இருப்பது மாதிரி, கண்ணனும் என் நினைவாகவே இருப்பதுதானே சரி?
கண்ணனையே நினைத்து நினைத்து நான் கண்ணனாகவும், என்னையே நினைத்து நினைத்து கண்ணன் ராதையாகவும் மாறினால் கூட நான் ஆச்சரியப்பட மாட்டேன். எங்கள் அன்பு அத்தகையது”.
”உங்கள் மனம் எழுதப்படாத ஓலைபோல், பட்டம் பதவி போன்றவற்றில் பற்றில்லாமல் ஆகவேண்டும் என்பதையும்,
அதற்கான அறிவுரையை நான் உங்களுக்கு வழங்க வேண்டும் என்பதையும் கண்ணன் அதன் மூலம் தெரிவிக்கிறார்.
உத்தவரே! ஏதோ துவாரகையில் இருக்கும் கண்ணனை பிருந்தாவனத்தில் இருக்கும் நான் பிரிந்துள்ளதால், பிரிவுத்துயர் என்னை வாட்டுவதாக நீங்கள் தவறாக நினைத்தல்லவோ இந்த வாக்கியத்தை எழுதினீர்?
நான் என்றும் கண்ணனைப் பிரிந்ததே இல்லை. என் உள்ளத்தில் கண்ணன் நிரந்தரமாய்க் குடியிருக்கிறான். என் உள்ளத்தின் உள்ளேயே எப்போதும் கண்ணனைக் குடிவைத்திருப்பதுதான் அவனை நான் என்றும் பிரியாமலிருக்கும் உத்தி.
கண்ணனுக்கு எழுப்பப்படும் கற்கோயில்களை விட,
அவன் மேல் அன்பு செலுத்துபவர்களின் உள்ளக் கோயில்களில் தான் அவன் அதிகம் மகிழ்வடைவான். உள்ள கோயில்களிலெல்லாம் உயர்ந்தது உள்ளக்கோயில் தான் உத்தவரே!
கண்ணனோடு இணை பிரியாமல் இருப்பது என்பது அப்படித்தான். வெறுமே கண்ணன் அருகே இருப்பதல்ல.
அந்த நிலை வந்துவிட்டால் பட்டங்களும் பதவிகளும் துச்சமாகிவிடும்!”
உத்தவரின் முகத்தில் தென்பட்ட அசாத்தியமான ஒளி அவர் இறைவனுடன் இணைவது என்றால் என்ன என்று உணர்ந்துவிட்டார் என்பதைப் புலப்படுத்தியது.
கண்ணன், “வாருங்கள் மகரிஷி!” என அவரை வரவேற்றான்.
என்னை உத்தவரே என்றே கூப்பிடுங்கள்!
அதுபோதும். பட்டங்களைச் சுமக்க நான் விரும்பவில்லை. நீங்காமல் எப்போதும் என் நெஞ்சில் நீங்கள் இருக்கும் வரத்தைக் கொடுத்தால் அது மட்டும் போதும் எனக்கு!” என்ற உத்தவர் கண்ணனின் பாதங்களில் விழுந்து வணங்கினார்.
காளையார் கோவில் தேர் பவனியின் போது நடந்த நிகழ்வு!!!!
ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள *சொர்ண காளீஸ்வரர் கோயில்.*
இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.
தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு
தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*
புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.
#நுபுர்_சர்மாவின் மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும்.
ஆனால் #இந்தியா நீ ஜெர்க் ரியாக்ஷன் எதுவும் கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம்.
ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு #இந்தியாகொடுத்தஅழுத்தமான,ஆழமானபதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும்
சாயங்காலம் ஐந்து மணி பெரியவாள் ஸ்நானத்திற்காக உரிய இடத்தில் வந்து உட்கார்ந்தார்கள்.
அவர்கள் வஸ்திரத்தில் ஒரு பெரிய சடைப்பூரான் இருந்ததை தொண்டர் பாணாம்பட்டு கண்ணன் பார்த்து விட்டார்.பரபரப்புடன் கைகைளை நீட்டி,காவி ஆடையை வாங்கிக் கொள்ள முயன்றார்.
என்ன அவசரம்" என்றார்கள் பெரியவாள்.
பெரிய சடைப்பூரான் இருக்கு,வஸ்திரத்திலே...."
பெரியவா,கண்ணனிடம் வஸ்திரத்தைக் கொடுத்தார்.
"பூரானை ஒண்ணும் செய்யாதே....ஹிம்சை செய்யாதே.. ஜாக்கிரதையா வெளியே எடுத்துப் போடு....
துருபிடித்த துருக்கி
அய்யோ என ஐரோப்பிய நாடுகள் .......
ஆத்தா என ஆப்பிரிக்க நாடுகள்
பரிதாப நிலையில் பாகிஸ்தான்
பதற்றத்தில் பங்காளதேஷ்
நேர்மையற்ற நேபாளம்
மண்டியிட்ட மலேசியா
இக்கட்டில் இலங்கை
இனி ஆயில் விற்க முடியாத சூழ்நிலையில் அரேபிய தேசங்கள் .....
இப்படி உலகமே தறிகெட்ட நிலையில் நின்று கொண்டிருக்கும் பொழுது பாதுகாப்பு தளவாடங்கள் வாங்குவதற்கு பணம் இல்லை என்று சொன்ன நாடு இன்று மாபெரும் சக்தியாக ராஜராஜனின் பட்டத்து யானையை போன்று பவனிவரும்
உங்களுக்கு என் தாத்தா பாரதியை நன்கு தெரிந்திருக்கலாம். அவரின் இறுதிக் காலத்தைப் பற்றி பலர் எழுதி இருக்கிறார்கள். ஆனால் என் பாட்டி செல்லம்மாள்,
என் தாத்தாவின் மரணத்துக்குப் பிறகு எப்படி வாழ்ந்தார், மறைந்தார் என்பது பலருக்கும் தெரியாது.
எனக்குத் தெரியும். என் பெயர் விஜயா. பாரதியின் மூத்த பெண், தங்கம்மாவின் மகள் நான். என் பாட்டி கடையத்தில் வாழ்ந்த போது அவருடன் என் இளமைக் காலத்தைக் கழித்தேன்.
நான் திருநெல்வேலியில் கல்லூரியில் படித்த போது, என் பாட்டி வாழ்ந்த கடையத்தில்தான் என் விடுமுறைகளைக் கொண்டாடினேன்.
பாரதியின் மரணத்தின் போது என் பாட்டிக்கு முப்பதே வயது. இளம் விதவை. கல்வி கற்காத பெண். இரண்டு பெண்கள். அதில் ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை.