#ஶ்ரீராமானுஜர் ராமானுஜர் தன் சித்தி மகனான கோவிந்தனை வைணவத்துக்கு திருப்ப விரும்பினார். கோவிந்தன் தன் அருகில் இருப்பது மிகப்பெரிய பலம் என கருதினார். அவரும் கோவிந்தனும் யாதவபிரகாசர் என்ற அத்வைத குருவிடம் தான் ஒன்றாக பயின்றார்கள். யாதவ பிராகசர் காசி யாத்திரையின் போது அவரை கொல்ல
திட்டம் வகுத்திருப்பதை ராமானுஜரிடம் சொல்லி அவர் உயிரை காப்பாற்றியது கோவிந்தன் தான். அவருக்கு கங்கையில் நீராடுகையில் கையில் சிவலிங்கம் கிடைக்கப் பெற்று அவர் காளஹஸ்தி சென்று அந்த லிங்கத்தை வைத்து வழிபட்டு வரலானார். அப்போது திருமலையில் பெரிய திருமலை நம்பி என்பவர் திருமலையில்
வேங்கடாசலபதிக்கு தொண்டு புரிந்து கொண்டிருந்தார். #திருமலைநம்பி ராமானுஜரின் தாய்மாமன். இவரே ராமானுஜர் அவதரித்த போது #இளையாழ்வார் என்ற திருநாமத்தை அவருக்கு சூட்டினவர். திருவேங்கடத்தில் இருக்கும் ஸ்ரீவைஷ்ணவர்களில் இவர் முதன்மையானவராக பாராட்டப் பட்டார். தினமும் திருவேங்கடமுடையானுக்கு
ஆகாச கங்கையிலிருந்து தீர்த்தம் கொண்டு வருவார். கோவிந்தப் பெருமாளை (பின்னர் எம்பார் என்ற திருநாமத்தால் போற்றப்பட்டார்) ஶ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று எம்பெருமானார் ஆசைப்பட்டார். கோவிந்தப் பெருமாளைத் திருத்திப் பணிகொள்ள வேண்டும் என்று ஒரு ஸ்ரீவைஷ்ணவர் மூலம்
ஶ்ரீ ராமானுஜர் பெரிய திருமலை நம்பியிடம் கேட்டுக் கொண்டார். உடனே பெரிய திருமலை நம்பி தனது சிஷ்யர்கள் மற்றும் அந்த ஸ்ரீவைஷ்ணவரை (இவர் பின்னர் திருவரங்கத்திற்கு சென்று நடந்த சம்பவத்தை எம்பெருமானாரிடம் விவரிக்கிறார்) அழைத்துக்கொண்டு கோவிந்தப் பெருமாளை பார்க்க காலஹஸ்திக்குச் சென்றார்.
கோவிந்தப் பெருமாள் வழக்கமாக நடந்து செல்லும் பாதையில் உள்ள ஒரு மரத்தினுடைய நிழலில் நம்பியும் அவருடைய சிஷ்யர்களும் உட்காந்திருந்தார்கள். கோவிந்தப் பெருமாள் சிவபக்தராக ஆடைகள் அணிந்து கொண்டு, உடம்பில் திர்யக் புண்ரம் (சாம்பல்) மற்றும் ருத்ராக்ஷ மாலையை அணிந்து அவ்வழியாக வந்தார். நம்பி
எம்பெருமானுடைய பெருமைகளைப் பாடிக்கொண்டிந்தார், அதை கோவிந்தப் பெருமாள் மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தார். சில நாட்கள் கழித்து, அதே நேரத்தில் அதே இடத்தில் நம்பி ஆளவந்தாருடைய ஸ்தோத்ர ரத்னத்தில் உள்ள 11வது ச்லோகத்தை (இந்த ச்லோகமே ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தையும், இதர தேவதைகள்
எம்பெருமனை எப்படிச் சார்ந்து இருக்கிறார்கள் என்பதையும் விளக்குவதாக அமைந்துள்ளது) பனை ஓலையில் எழுதி அந்த இடத்தில் கீழே விட்டார். கோவிந்தப் பெருமாள் அதை எடுத்துப் படித்து விட்டு கீழே போட்டு விட்டார். திரும்பி வரும்பொழுது அந்த பனை ஓலையை தேடிக் கண்டுபிடித்தார். அந்த ஸ்லோகத்தினுடைய
ஆழமான அர்த்தத்தைச் சிந்தித்து, நம்பியிடம் சென்று இது உம்முடையதா என்று கேட்டார். கோவிந்தப் பெருமாள் மற்றும் பெரிய திருமலை நம்பிக் கிடையே ஒரு சிறிய உரையாடல் நடந்தது. அப்பொழுது கோவிந்த பெருமாளுக்கு ஸ்ரீமந் நாராயணனுடைய பரத்வத்தில் இருந்த சந்தேகங்கள் அனைத்தையும் பெரிய திருமலை தெளிவு
படுத்தினார். அவர் வார்தைகள் அனைத்தையும் கேட்டு உறுதியான நம்பிக்கையுடன் கோவிந்தப் பெருமாள் அந்த இடத்தை விட்டு சென்றார். பின்னர் நம்பி மீன்டும் அந்த இடத்திற்கு வந்தார். அப்பொழுது கோவிந்தப் பெருமாள் மரத்தில் ஏறி ருத்ரனுக்காக புஷ்பங்கள் பறித்துக் கொண்டிருந்தார். நம்பி திண்ணன் வீடு
பதிகத்தை விளக்கமாக உபந்யஸிக்க ஆரம்பித்தார். அந்த பதிகத்தில் எம்பெருமானுடைய பரத்வத்தைப் பற்றி ஆழ்வார் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் 4வது பசுரத்தை மிகவும் அழகாக விவரித்தார். அதாவது புஷ்பமும், பூஜையும் (திருவாராதனமும்) எம்பெருமானுக்கு மட்டுமே தகும் என்று நம்மாழ்வார் மிகவும் அழகாக
நிர்வகித்துள்ளார் என்று கூறினார். இதைக் கேட்டவுடன் கோவிந்தப் பெருமாள் மரத்திலிருந்து கீழே குதித்து, வேரற்ற மரம் விழுவது போல நம்பியினுடைய திருவடித் தாமரைகளில் சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார். தன்னை நம்பியினுடைய திருவடிகளில் கைங்கர்யம் பண்ணுவதற்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அழுது
கொண்டே கேட்டுக் கொண்டார். நம்பி அவரை மேலே எழுப்பி ஆறுதல் கூறினார். கோவிந்தப் பெருமாள் காளஹஸ்தியில் உள்ள அனைத்து சம்பந்தத்தையும் விட்டு, கருவூலத்தின் சாவியை ருத்ர பக்தர்களிடம் ஒப்படைத்தார். அந்த சமயத்தில் ருத்ர பக்தர்கள் கோவிந்தப் பெருமாளிடம் “நேற்று இரவு ருத்ரன் கனவில் வந்தார்.
இந்த உலகத்தில் உள்ள எல்லோருக்கும் உண்மையான அறிவைக் கொடுக்க வேண்டும் என்பதற்காகவே எம்பெருமானார் அவதரித்திருக்கிறார். கோவிந்தப் பெருமாள் நம் மீது உள்ள பற்றை விட்டால் யாரும் தடுக்க கூடாது என்று ருத்ரன் கூறியதாக” கூறினார்கள். அதனால் மிகவும் சந்தோஷத்துடன் அவரை அனுப்பி வைத்தார்கள்.
அவர்கள் இருவரும் திருமலைக்கு வந்த பிறகு, நம்பி கோவிந்தப் பெருமாளுக்கு உபனயன சம்ஸ்காரமும், பஞ்ச ஸம்ஸ்காரமும் செய்து வைத்து அவருக்கு ஆழ்வார்களுடைய அருளிச்செயலைக் கற்றுக்கொடுத்தார்.
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#மகாபெரியவா
கட்டுரையாளர்- டாக்டர் சுதா சேஷய்யன்.
தினமணி வெள்ளி மணி 19-02-2016
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
1985-ஆம் ஆண்டு, தீபாவளிக்கு முந்தைய நாள் காஞ்சிபுரத்தில் கம்பன் கழக நிகழ்ச்சியில் பங்கு கொண்டு விட்டு தீபாவளியன்று ஸ்ரீமடம் சென்று தரிசித்தபோது ஏற்பட்ட அனுபவம். ஆனந்தம்,
அற்புதம். அன்று தீபாவளி என்பதால் ஆசீர்வாதம் பெற வந்த பக்தர்கள், தீபாவளி மலர்களைக் கொண்டு வந்து சமர்ப்பித்த பத்திரிகைக்காரர்கள், எல்லோருக்கும் ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்கள் ஸ்ரீ மஹா பெரியவா. தட்டுத்தட்டாகப் பட்டாசுகள். தாம்பாளம் தாம்பாளமாகப் பழங்கள் -காணிக்கையாய் வந்தவையெல்லாம்
ஸ்ரீ மஹா பெரியவர்கள் அருகில். தாயாரோடும் தந்தையோடும் நின்று தரிசித்துக் கொண்டிருந்த அடியேனுடைய அனுபவம் இது!
வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்த நிறைய சிறுவர்கள் வந்திருந்தார்கள்.(அவர்கள் எந்த ஊர், எந்த பாடசாலை என்றெல்லாம் விசாரிக்கத் தோன்றாத வயசு)
ஸ்ரீ மஹா ஸ்வாமிகள் அவர்களை
#மகாபெரியவா
ஒரு முறை பக்தர் ஒருவர் பெரியவாளிடம், சுவாமி! குழந்தைகளுக்கு பக்தியில் நாட்டம் வருவதில்லையே. வாழ்வில் வரும் அனுபவங்களைப் பொறுத்து, காலம் போகப் போகத் தான் பக்தியின் ருசி புரியத் தொடங்கும், அவர்களின் மனம் கடவுளை நாடத் தொடங்குமா? அது வரை பொறுமையுடன் இருக்க வேண்டுமா?
வலுக்கட்டாயமாக பக்திப் பயிரை விதைத்தால் பலன் கிடைக்குமா என்று கேட்டார்.
சுவாமிகள் கனிவுடன், "உன் வீட்டில் தயிர் கடைந்து வெண்ணெய் எடுப்பதுண்டா?" என்றார். பக்தர், தினமும் தயிர்ப் பானையில் மத்தை வைத்து, கயிறு கட்டி இழுத்துக் கடைவார்களே என்றார்.
"எந்த வேளையில் கடைவார்கள்?காலையிலா,
மத்தியானமா?"
"அதிகாலையில் தான் சுவாமி"
"மத்தியானம், அல்லது சாயந்திரம் கடைவதில்லையே ஏன்?"
பதில் தெரியாமல் திகைத்தார் பக்தர்.
"அதிகாலை சுபமான வேளை. அந்நேரத்தில் வெயில் ஏறாததால் சுற்றுப்புறம் குளிர்ச்சி யாக இருக்கும். அப்போது கடைந்தால் வெண்ணெய் பந்தாக திரளும். உருகாமல் கெட்டியாகவும்
#NupurSharama#நுபுர்சர்மா மீது இஸ்லாமிய நாடுகள் ஒரு சேர குரல் கொடுத்து கண்டனத்தை இந்திய தூதரகம் மூலம் பதிந்தது. அதில் இரு நாடுகள் இந்தியா மன்னிப்பு கோர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது? இன்னும் சில நாடுகள் தங்கள் கோபத்தை காட்டும். ஆனால் இந்தியா நீ ஜெர்க் ரியாக்ஷன் எதுவும்
கொடுக்கவில்லை, இந்த பிரச்சினையை மட்டுமல்ல இது போன்ற பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர நினைத்தது. அதன் விளைவாக சர்மாவை கட்சி பதவியில் இருந்தும், உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கியது. உடனே நாம் எல்லாம் கொதித்து எழுந்தோம். ஆம், நாம் நம் உணர்ச்சிகளுக்கு ஆளானதால், அரபு நாடுகளுக்கு
இந்தியா கொடுத்த அழுத்தமான, ஆழமான பதிலை கவனிக்க தவறிவிட்டோம். அந்த பதிவுகளை மீடியாவில் மட்டுமல்ல, வலைதளத்தில் கூட கிடைக்காத அளவிற்கு மறைக்கப்பட்டது. ஏனெனில், அதில் சொல்லப்பட்ட விஷயங்களும் சொல்லாமல் சொன்ன விஷயங்களும் ( Read between lines) அந்த நாடுகளை அதற்கு மேல் பேச விடாமல்
#நம்மாழ்வார்திருநட்சத்திரம்#வைகாசி_விசாகம்
ஸ்ரீவைஷ்ணவ குரு பரம்பரையில், இப்பூவுலகில், இக்கலியுகத்தில் அவதரித்த ஆசார்யர்களுள் முதன்மையானவர் ஸ்ரீ நம்மாழ்வார். இவரின் மற்ற பெயர்கள் சடகோபன், பராங்குசன், காரிமாறன், குருகூர் நம்பி ஆகியவை. நான்கு வேதங்களையே தீந்தமிழில் பாடியதால் வேதம்
தமிழ் செய்த மாறன் என்றே புகழ்ப்படுகிறார். இவர் அவதரித்து 5120 வருடங்கள் ஆகின்றன. ஸ்ரீ ஆளவந்தார் அவருக்காக இயற்றிய தனியன்:
மாதா பிதா யுவதயஸ் தநயா விபூதி:
ஸர்வம் ய தேவ நியமேன மத் அந்வயாநாம் |
ஆத்யஸ்யந: குலபதேர் வகுளாபிராமம்
ஸ்ரீமத் ததங்க்ரி யுகளம் ப்ரணமாமி மூர்த்நா ||
வகுளமாலை
(மகிழம்பூ) தரித்தவரும், தாமரைத் திருவடிகள் முழுதும் ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ என்னும் திவ்யமங்களம் நிறைந்திருப்பவரும், எங்கள்(ஸ்ரீவைஷ்ணவ) குலபதியும் (தலைவர்) ஆன நம்மாழ்வார் திருவடிகளில் தண்டம் சமர்ப்பிக்கிறேன். நம் குலத்தாருக்கு அவரே தாய், தந்தை, கணவர்(மனைவி), மக்கட்பேறு, மற்றும் எல்லாச்
இன்று #வைகாசிவிசாகம் முருகப்பெருமான் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. இன்று பால் குடம் எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். திருச்செந்தூரில் தன்னை நோக்கி தவமிருந்த முனிவரின் மைந்தர்கள் ஆறு பேருக்கு முருகப்பெருமான் அருள் புரிந்த நாள் இன்றாகும். பராசர முனிவருக்கு ஆறு
குழந்தைகள். ஒரு நாள் குளத்தில் குளிக்கும்போது ஆறு பேரும் நீரினை அசுத்தம் செய்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். இதனால் அந்த நீரில் வாழ்ந்த மீன்கள், தவளைகள் வேதனைப்பட்டன. இதைக் கண்ட பராசர முனிவர், நீரை இப்படி அசுத்தப்படுத்தக் கூடாது, சிவபெருமானாக நினைத்து நீரை வழிபட வேண்டும்.
நீங்கள் நீராடியது போதும் வெளியே வாருங்கள் என்று கட்டளையிட்டார். ஆறு பிள்ளைகளும் முனிவரின் சொல்லைக் கேட்காமல் நீரில் கும்மாளம் போட்டார்கள் இதனால் பல மீன்கள் இறந்தன. அதனைப் பார்த்த முனிவர், கோபம் கொண்டு குழந்தைகள் ஆறு பேரையும் 'மீன்களாக மாறக்கடவது' என்று சாபமிட்டார். உடனே ஆறு
#மப்பேடு#சிங்கீஸ்வரர்_கோவில்#வீனை_வாசிக்கும்_அனுமன் திருவாலங்காட்டில் இறைவன் ஆனந்த தாண்டவ நர்த்தனம் ஆடியபோது சிங்கி என்ற நந்தி மிருதங்கம் இசைப்பதில் ஆழ்ந்திருந்ததால் அந்த நடனத்தை ரசிக்கத் தவறிவிட்டார். இசை ரசனையில் சிவநடனத்தைக் காண முடியாமல் போனதால், அந்த ஆனந்த நர்த்தனைத்தைக்
காண வேண்டும் என்று சிவனிடம் விண்ணப்பித்தார். அவரது தொழில் பக்தியை பாராட்டிய சிவன், பூலோகத்தினுள் மெய்ப்பேடு என்னும் தலத்திற்கு வருமாறு சொன்னார்.
நந்திதேவரும் இங்கு சென்று அங்கிருந்த லிங்கத்திற்கு பூஜை செய்தார். அப்போது சிவபெருமான் அவர் முன்தோன்றி, மீண்டும் நடனம் புரிந்தார்.
சிங்கி என்னும் நந்தி வணங்கிய தலம் என்பதால், இறைவனுக்கு #சிங்கீஸ்வரர் என பெயர் ஏற்பட்டது. அம்பாள் நறுமணம் மிக்க மலருக்கு உரியவளாக இருப்பதால் புஷ்பஜாம்பாள் என்றும், பூமுலைநாயகி என்றும் அழைக்கப்படுகிறாள். இங்கு விசேஷமாக ஆஞ்சனேயர் சன்னதி உள்ளது. ஆஞ்சநேயர் மூல நட்சத்திரத்தில்