மரபுவழிக் கலங்களும், அவற்றைச் செலுத்தும் நுட்பங்களும்...!
கப்பற்கலையில் பழந்தமிழர்கள் சிறந்து விளங்கி இருக்க வேண்டுமென்பதை அவர்கள் தொன்றுதொட்டே மேற்கத்திய நாடுகளுடனும், கிழக்கத்திய நாடுகளுடனும் கொண்டிருந்த கடல் வணிகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது.
அதற்குக் காரணம் தமிழகம் மூன்று பக்கங்களிலும் கடலாற் சூழப்பெற்றுள்ளமையேயாகும்.
பழந்தமிழ் இலக்கியங்கள், வெளிநாட்டுப் பயணிகளின் குறிப்புகள், வரலாற்றுச் சான்றுகள், கல்வெட்டுகள், தொல்பொருள் சான்றுகள் ஆகியன நமக்கு இவ்வுண்மையைத் தெளிவுப்படுத்துகின்றன.
தமிழகத்தில் பயன்படுத்தப்பட்ட #கலங்கள் கடல் வணிகத்திற்கு மட்டுமல்லாமல் மீன் பிடிப்பதற்கும், நீர் வழிப் பயணத்திற்கும், நீர்நிலை விளையாட்டிற்கும், கடற்கொள்ளைக்கும், போட்டிப் பந்தயங்களுக்கும், கடற்போருக்கும் தொழில் திறம்பெற்ற வல்லுநர்களால் ஆக்கப்பட்டுச் செலுத்தப்பட்டு வந்துள்ளன.
இந்தியாவில் கிடைத்திருக்கும் உரோமானியக் காசுகளில், 90 விழுக்காடு தமிழ்நாட்டில், அதுவும் அதிகம் கொங்கு நாட்டில் கிடைத்திருப்பது இதற்கு ஒரு சான்றாகும்.
பழந்தமிழர்கள் மேலை நாடுகளோடு பொ.மு 7-ஆம் நூற்றாண்டிலிருந்து வணிகம் தொடர்ந்து நடைபெற்றதாகவும்,
#கிரேக்கர்கள் பொ.மு 6-ஆம் நூற்றாண்டிலேயே வணிகத் தொடர்பு வைத்திருந்தனர் எனவும்,
கீழை நாடுகளான #சீனா, #மலேசியா, #சாவகம் ஆகியவற்றோடு பன்னெடுங்காலமாகவே வணிகம் செய்து வந்துள்ளனர் எனவும்..
பொ.மு 1000 அளவில் சீனத்தோடு தமிழர் வணிகத் தொடர்பு கொண்டிருந்தனர் எனவும்,
பொ.மு 7-ஆம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து பொருள்கள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு அங்கு விற்கப்பட்டதாகவும்,
சீனத்துப் பட்டும், சர்க்கரையும் தமிழகத்துக்கு வந்தன எனவும் குறிப்பிடுகின்றனர்.
▪︎ கலங்களின் வகைகள்:
தமிழ் இலக்கியங்களைப் பொறுத்தமட்டில் 18 வகையான கலங்கள் கூறப்படுகின்றன.
பொதுவாக, கலங்களை உருவத்தின் அடிப்படையிலும், வளர்ச்சி நிலையிலும், கட்டுமானப் பொருள்களின் அடிப்படையிலும் மூன்று வகைகளாக பின்வருமாறு வகைப்படுத்தலாம்.
1) கட்டுமர வகைக் கலங்கள்:
இவை மீன் பிடித்தொழிலுக்கும் (அகநானூறு 280:7-11), புனல் விளையாட்டுக்கும் (குறுந்தொகை 168:5, பரிபாடல் 6:3) பண்டைக் காலங்களில் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன.
#வெப்பர் - வீரன் ஒருவன் அதிரல் எனும் புனலிக்கொடியின் மலரைத் தலைமுடியில் சூடிக்கொண்டு, புலியன் கண் போன்ற நிறத்தையுடைய மதுவை (வெப்பர்) ஓரிருமுறை மாந்தியப் பின்னர் பசுவைக் கவர்ந்து சென்றோரிடம் போரிட்டு மீட்டான்
#வேரி - மலைநாடன் 'வல்வில் ஓரி' வேட்டையில் கொன்ற மான் தசைப் புழுக்கையும் பசுவின் நெய்யுருக்குப் போல் மதுவையும்,
தன் மலையில் உண்டாகிய குற்றமில்லாத நல்ல பொன்னையும் மணிகளையும், கொல்லிப் பொருநனுக்குத் தந்தான்.
#பாண் சமூகத்தார் தன்னை நாடி வந்தபோது, வல்வில் ஓரிக்கு #வேரி எனும் மதுவைத் தந்து மகிழ்வித்தான் என்பதை மேற்காணும் #புறநானூறு வழி அறிகிறோம்.
இவ்வூர் வரலாற்றில் மிகச்சிறந்த இடத்தைப் பெற்று வந்திருக்கின்றது.
முற்காலப் பாண்டியர், சோழர், சேரர் கல்வெட்டுக்களில் இவ்வூர் இடம் பெற்றிருக்கின்றது.
'மும்முடிச் சோழபுரம்', 'மும்முடிச் சோழநல்லூர்', 'சோழ கேரளபுரம்' என்று இவ்வூருக்குப் பல பெயர்கள் இருந்திருக்கின்றன.
இது சமயம், அரசியல் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க இடத்தைப்பெற்று வந்திருப்பதை, #சோழபுரம், #கோட்டாறு, #நாகர்கோயில் இடங்களில் காணப்படும் கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன.
இவ்வூரில் சமண சமயத்தைச் சார்ந்த முனிவர்கள் முற்காலப் பாண்டியர் காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர்.
சோழர்களது படைத்தலைவர்கள் முகாமிட்டுத் தங்கி, காவல் பணி புரிந்திருக்கின்றனர்.
இதே போன்று இவ்வூரில் கல்வெட்டு பொறிக்கும் கற்சிற்பிகளும், கோயில் திருப்பணி செய்யும் சிற்பிகளும்...