22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை #சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?
பெண்ணாசை காரணமாக அப்படிச் செய்தால், அப்படிச் செய்தவரை, நான் காணும் போது என்ன நடக்கும் என்பது தெரியாது?”
இந்தச் செய்தி சுந்தரருக்கும் தெரிந்தது. அவர் தன் பிழையை உணர்ந்து, இப்படிப்பட்ட சிவனடியாரின் கோபத்தைத் தீர்க்கும்படி சுவாமியைக் வேண்டிக் கொண்டார்.
சிவபெருமான் வன்தொண்டரையும் மென்தொண்டரையும் இணைக்கத் திருவுள்ளம் கொண்டார். கலிக்காம நாயனாருக்கு கடுமையான சூலை நோய் கொடுத்தார். கலிக்காம நாயனார் வயிற்று வலியால் துடிக்க, சிவபெருமான், இந்த நோயை தீர்க்க வல்லவர் வன்தொண்டன் ஆகிய சுந்தரமூர்த்திநாயனார் என்று சொல்ல,
‘உன்னையே தூது செல்லச் சொன்ன அவரால், என் நோய் தீர வேண்டிய அவசியமில்லை. அதைவிட இந்த நோயால் நான் படுகின்ற துன்பமே சரி” என்று சொல்ல சிவபெருமான் சுந்தரரிடம் சென்று, ‘‘ஏயர் கோன் நாயனார் சூலை நோயால் அவதிப்படுகின்றனர். நீ சென்று தீர்ப்பாய்” என்று சொல்லி அருளினார்.
நம்பியாரூரரும் விரைந்து, தாம் வருகின்ற செய்தியை
கலிக்காம நாயனாருக்குச் சொல்லி அனுப்பினார்.
இதை அறிந்த கலிக்காம நாயனார் கடும் கோபம் கொண்டார். ‘‘சிவ நிந்தை கொண்ட வன்தொண்டர் வந்து தன்னுடைய நோயைத் தீர்க்கும் முன், இந்த நோயையும்,
இந்த நோய் கொண்ட உடலையும், என்னுடைய வாளால் கிழித்துக் கொள்வேன்” என்று உடைவாளால் தம்மைத் தாமே கிழித்துக் கொண்டு, சரிந்து விழுந்தார்.
அவர் நிலையைக் கண்டு மனைவியார் அழுதார். தானும் உடன் உயிர் விட துணிவு கொண்டார். அப்போது சுந்தரர் அந்த ஊருக்கு அருகில் வந்துவிட்டதை மற்றவர்கள் சொல்ல,
கணவன் இறந்தாலும் தம் ஊரை நாடிவரும் சிவனடியாரை வரவேற்பது முறை என்று, தன் உறவினர்களை, சுந்தரரை வரவேற்கும்படி சொல்லி அனுப்பினார்.
சுந்தரர் வந்தவுடன் அவரை எதிர்கொண்டு அழைத்துவந்துவணங்கி அவருக்குரிய ஆசனத்தில் அமர்த்தினார்.
அப்போது சுந்தரர் ‘‘நான் வந்தது கலிக்காம நாயனாரோடு நட்புறவு கொள்ளவே.
அவர் எங்கே?” என்று கேட்க, மற்றவர்கள் திகைத்து, அவர் உள்ளே உறங்கிக் கொண்டிருக்கிறார் என்று அப்போதைக்கு சமாதானமாக சொல்லினர்.
அது கேட்ட சுந்தரர், உடனே அவரைக் காண வேண்டும் என்று உள்ளே செல்ல,
அங்கே கலிக்காமர் குடல் சரிந்து, உயிர் மாண்டு கிடப்பதைக் கண்டு துடித்துப் போனார்.
‘‘ம்... இதுவரை நிகழ்ந்தது நன்று தான்... இனி நானும் இறப்பதே நலம்” என்று தன்னுடைய உடைவாளை பற்றினார். அப்பொழுது ஒரு அதிசயம் அங்கே நடந்தது.
சிவபெருமான் அருளால் கலிக்காமர் உயிர் பெற்றார். உடனே எழுந்து சுந்தரர் கையிலுள்ள வாளைப் பிடித்துக் கொள்ள, ஆரூரர் விழுந்து வணங்கினார்.
கலிக்காமரும் சுந்தரரின் திருவடிகளில் விழுந்து வணங்கினார். ஒருவரை ஒருவர் அன்பினால் ஆரத்தழுவிக்கொண்டு பிரியா நண்பர்களாக மாறினர்.
திருப்புன்கூர் திருத்தலம் சென்று அப்பெருமானை வணங்கிப் போற்றினர். அவருடைய பூசை நாள் ஆனி மாதம் ரேவதி, இன்று.
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
சிவமூலிகைகளின் சிகரம் வில்வம்... இறைவன் நமக்களித்த செல்வம்! #சைவ_சமயம்
நம்முடைய பூமியில் பல விதமா தாவரங்கள் - உள்ளது என்று நாம் அறிவோம். இங்கே வில்வ மரத்தை ஏன் சிவனுக்கு தேர்வு செய்தார்கள். வில்வ மரத்தை பற்றி புரிந்தால் ரகசியம் புரியும். வில்வமரம் நெருப்பு அம்சம் இதில் உள்ள
ரசாயனம் உடலில் உள்ள நச்சு பொருளை அழிக்கும் தன்மைகளை உடையது. சிவ மந்திரம் சொல்லும்பொழுது உடல் சூடாகும் ஆன்மா விழித்து எழும்
இப்படி நடக்கும் பொழுது உடலை சீர் செய்ய வில்வம் இலை உதவி செய்யும். சிவ பெருமான் தொழிலே தவறான செயல் களை அழிப்பது தான்.
நடராஜ தத்துவமும் இதைத்தான் செய்கிறது
அவருடைய தியானம் அதற்கு சக்தி பெறும் செயல்.கருவறையில் சொல்ல படும் மந்திரத்தால் வெப்பம் மிகும். இதனால் உடல் சீர் நிலை மாறும் இதை சரி செய்ய வில்வ இலையால் முடியும்.
ஆம் வில்வத்தில் உள்ள வெப்பம் பனி மலையில் உள்ள வெப்பம்.
சக்தி தேவி முழுமையாக நெருப்பு சிவ பெருமான் மறைமுக நெருப்பு
இன்று அருள்மிகு அன்னை மீனாட்சி பாண்டிய தேசத்து பெண்ணரசியாக முடிசூடும் நாள்.
வழிவழி வம்சமாய் ராஜ குலங்களுக்கு ஆண் வாரிசு பிறப்பதும், அந்த ஆண் வாரிசு 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, பருவம் அடைந்த பின் பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்படுவதும் வழமை.
பாண்டிய வம்சத்துக்கு கிடைத்த பெரும் பாக்கியம், மூன்று வயது பெண்ணாக தோன்றினால் புத்திரகாமேஷ்டி என்னும் வேள்வி தீயில், 64 கலைகளையும் கற்றுத்தேர்ந்து, இந்த பாண்டிய ராஜ்யத்தின் அரசியாக பட்டம் கட்டி அரசாளும் பொறுப்பு வழங்கப்பட்டது.
பிற ராஜியங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாய், இல்லை என்ற வார்த்தை எங்கும் இல்லாதபடி சர்வ வளங்களும் கொட்டிகிடக்கும் அளவுக்கு ஆட்சி செய்தாள் பாண்டிமாதேவி, அங்கயற்கண்ணி, ஆலவாய்க்கு அரசி, அமுத நாயகி, தடாதகைபிராட்டி, அரசியார் மீனாட்சி தேவி
பஞ்ச ஆரண்ய தலங்கள் என்பவை ஒரு நாளின் காலை முதல் நள்ளிரவு வரை ஐந்து வேளை நடைபெறும் வழிபாட்டுமுறையில் கலந்து கொண்டு தரிசனம் பெறும்வகையில் அமைந்த ஐந்து சிவ தலங்களாகும்.
ஒரே நாளில் ஒவ்வொரு வேளை வழிபாட்டின்போதும் பஞ்ச ஆரண்ய தலங்களை தரிசிப்பதால் இப்பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி மறுபிறவி இல்லாத நிலையை அடையலாம்.
ஆரண்யம் என்றால் காடு எனப் பொருள்படும். பஞ்ச ஆரண்ய தலங்கள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு வகைக் காடு அமைந்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொதுவாக இத்திருத்தலங்களில் விடியற்காலை காலை உச்சிவேளை மாலை அர்த்தசாமம் என ஐந்து முறை வழிபாடு நடத்தப்படுகிறது.
தஞ்சைக்கு அருகில் பஞ்ச ஆரண்ய தலங்கள்