#மகாலட்சுமியை_அரவணைத்தபடி_பரஸ்பர_ஆலிங்கனம்
ஶ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் திருவள்ளூரில் இருந்து 20கிமீ தூரத்தில் உள்ள #நரசிங்கபுரம் என்னும் ஊரில் அமைந்துள்ளது. பழமையான வைணவ ஸ்தலங்களில் நரசிங்கபுரமும் தரிசிக்க வேண்டிய ஒன்று. இக்கோவில் சோழர்கள் மற்றும் விஜயநகர ராயர்கள்
காலத்தை பெருமைப் படுத்துகிறது. கோவிலில் உள்ள கட்டிடக்கலை, விஜயநகர காலத்தைச் சேர்ந்தது என்று நினைக்க வைக்கிறது. ஆனால் இங்கு சோழ மன்னர்களின் ஆட்சி கால கல்வெட்டுகள் உள்ளன. ஆண்டாள் சன்னதியின் அடித்தளத்தில் உள்ள கல்வெட்டுகளை தொல்பொருள் ஆய்வாளர்கள் மிகவும் பழமையானதாகவும், முதலாம்
குலோத்துங்க சோழன் மற்றும் முதலாம் விக்ரம சோழன் காலத்தைச் சேர்ந்ததாகவும் கருதுகின்றனர். மதுராந்தக நல்லூரில் மதுராந்தக விண்ணகர் கோயிலைக் கட்டி, ராமர் சீதை லட்சுமணன் சிலைகளை நிறுவியதைப் பற்றியும், அவர்கள் தினசரி பூஜைகள் நடத்த மானியங்கள் கொடுத்தது பற்றியும் கல்வெட்டுகளில் உள்ளன.
இக்கோயிலின் மூலவரான ஶ்ரீலட்சுமி நரசிம்மர் 7 1/2 அடி உயரத்துடன் வலது காலை கீழே வைத்து, இடது காலை மடித்து சிரித்த முகத்துடன், தாயார் மகாலட்சுமியை அமரவைத்து, தனது இடது கையால் தாயாரை அரவணைத்தபடி, வலதுகரத்தை அபயஹஸ்தமாக காட்டி அருள் பாலிக்கிறார். நரசிம்ம அவதாரத்தை குறிப்பிடுகையில்
சிங்கம் சிரித்தது என்பார் திருமங்கையாழ்வார். அதே போன்று சிரித்த முகத்துடன் பெருமாள் இருக்க, தாயாரின் பார்வை பக்தர்களை நேரடியாக பார்ப்பதாக இருப்பது தனிச்சிறப்பாகும். இத்தல மூலவர் பரஸ்பர ஆலிங்கனம் அமைப்பில் உள்ளதால் இவருக்கு #கல்யாண_லட்சுமி_நரசிம்மர் என்ற பெயரும் உண்டு. நரசிம்மர்
சுவாதி நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் இவரை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் வணங்கினால், தீராத கடன், நோய் மற்றும் திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். உத்சவர் ஶ்ரீ பிரகலாத வரதர். இக்கோயிலில் கருடாழ்வார் 4 அடி உயரத்தில் கழுத்தில் 16 நாகங்களை
அணிகலன்களாக அணிந்து அழகாக அருள் பாலிக்கிறார். ஆதலால் இக்கோயில் நாகதோஷ பரிகார தலமாக விளங்குகிறது. இக்கோயிலில் 5 அடி உயரமுள்ள மரகதவல்லித் தாயார் அபயஹஸ்தத்துடன் வசீகரமான சிரிப்புடன் அருள்பாலிக்கிறார். முழு அலங்காரத்தில் தாயாரை தரிசிக்கக் கண் கோடி வேண்டும். பிரகாரத்தின் வடமேற்கில்
ஆண்டாள் சன்னதி அமைந்துள்ளது. பிரகாரத்தின் தெற்கில் ஆதிலட்சுமி, தான்யலட்சுமி, வீரலட்சுமி, கஜலட்சுமி ஆகியோர் அழகாக காட்சி தருகின்றனர். பிரகாரத்தின் மேற்கு பக்கம் சென்றால் சந்தானலட்சுமி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யலட்சுமி, தனலட்சுமி என அஷ்ட லட்சுமிகளையும் தரிசிக்கலாம்.
ஆனி பிரமோற்சவம் 10
நாட்கள், நரசிம்ம ஜெயந்தி, ஆடிப்பூரம், கருட சேவை, சுவாதி நட்சத்திரத்தில் திருமஞ்சனம், ஸ்ரீஜெயந்தி, கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, அனுமன் ஜெயந்தி ஆகியவை இங்கு மிக விமர்சையாக கொண்டாடப்படுகிறது.
நாகதோஷம் நீங்க, தீராத கடன், நோய், திருமணத்தடை உள்ளிட்ட சகல தோஷங்களும் நிவர்த்தியாக
இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்தும், நெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். “நாளை என்பதில்லை நரசிங்கபுரம் நரசிம்மனிடத்தில்!” இத்தலம் உடனுக்குடன் பலன் தரும் பெருமை பெற்றது.
ஸ்ரீ அஹோபில மடம் 45ஆவது பட்டம்
ஸ்ரீமத் அழகிய சிங்கர் விஜயம் செய்து மங்களாஸாசனம் செய்துள்ளார்.
காலை : 7.30 AM TO 12.00 AM
மாலை: 4.30 PM TO 08.00 PM
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட்,
நரசிங்கபுரம் (அஞ்சல்),
பேரம்பாக்கம் (வழி),
திருவள்ளுர் மாவட்டம் 631 402,
மெபைல் : 9442585638
: 9941038505
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jun 28
#MahaPeriyava has spoken about #Karkotakan as very sacred soul. So wanted to write about Him. Karkotakan is one of the powerful snakes or Nagas with numerous magical powers. His parents were Sage Kashyapa and Kadru. The descendants of Karkotaka Naga are today settled in Rajasthan Image
and are known as Katewa. Once Karkotakan cheated Sage Naradar and the angry sage cursed him that he will become immobile. The sage then said that he will be relieved of his curse by Nala. Nala was the king of Nishadha kingdom and he was married to the beautiful Damayanti. But
unfortunately Nala was possessed by Demon Kali and he took advantage of his weakness for gambling. Nala lost his kingdom to his brother in a game of dice. Nala then took refuge in the forest and once happened to find Karkotaka engulfed in a wild forest fire. The snake was unable
Read 13 tweets
Jun 28
#ஓதிமலை_முருகன்_கோவில் 3000 அடி உயரம் கொண்ட மலையில் அமைந்துள்ளது இரும்பறை (கோவை மாவட்டம்). அங்கிருந்து சுமார் 6 கிமீ தொலைவில் உள்ளது ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இருப்பது இந்த மலை ஒன்றே. இந்த மலையில் ImageImage
வீற்றிருக்கும் ஓதிமலையாண்டவரை காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் பிரணவத்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற Image
முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப் பெருமான், பிரம்ம தேவரின் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்து சில காலம் செய்து வந்தார். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகனுக்கு ஐந்து முகங்கள் உள்ளன. வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் இது. முருகப் Image
Read 18 tweets
Jun 28
#MahaPeriyava
A devotee who had been connected for long with the SriMatham was talking to Periyava. He was complaining about another man saying, "That man is an utter kaarkotaka (the king of snakes)!"
After a moment’s silence, Periyava said, "Do you mean he is good?"
The devotee Image
could not understand. "I meant he is a kaarkotaka who has the dreadfully, poisonous venom.”
Periyava asked him, "You know praatasmarana shloka?

Kaarkotakasya Naagasya Damayanthyaa Nalasya Cha
Rithuparnasya Raajarsheha Keerthanam Kalinaashanam

"Kaarkotaka, Damayanti, Nala, Image
Rituparna--just remembering them removes one of their sins. They are such punyavaans (sacred souls)."
The bhakta who had spoken disparagingly of another was embarrassed.
"You have yourself told me he is a good man. Isn't that so?"
In Periyava's viewpoint everyone is good. To
Read 4 tweets
Jun 27
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் ஒரு மனிதன் வாழ்வு முழுவதும் உண்மையே பேசாமல், பொய் சொல்லிக் கொண்டே வாழ்ந்து வந்தான். ஒரு நிலையில் அவன் மனம் திருந்தி, தனது தவறை உணர்ந்து, இனி பொய் கூற மாட்டேன் என்று சபதம் செய்துவிட்டு, திருமகளின் திருவடிகளிலும் திருமாலின் திருவடிகளிலும் தஞ்சமடைந்தான்.
தான்
இதுவரை செய்த தவறுகளில் இருந்து காத்து, தனக்கு முக்தி அளிக்குமாறு திருமாலிடம் வேண்டினான். அப்போது திருமால், “நீ நிறைய பொய் பேசி இருக்கிறாய். அதனால் அதற்குத் தண்டனையாக ஏழு பிறவிகள் மீனாகப் பிறக்க வேண்டும். அதன்பின் உனக்கு முக்தி அளிக்கிறேன்!” என்றார். ஆனால் மகாலட்சுமியோ, “சுவாமி!
இவன் இதுவரை தவறு செய்திருந்தாலும், இப்போது திருந்தி நீங்களே கதி என்று வந்துவிட்டான். இனி இவனைத் தண்டிப்பது முறையல்ல! உடனடியாக இவனுக்கு முக்தியளித்து விடுங்கள்!” என்று கருணையோடு கூறினாள்.
“இப்போதே இவனுக்கு முக்தியளித்தால், இவன் செய்த தவறுக்கென்று சாஸ்திரம் விதித்துள்ள தண்டனையை
Read 7 tweets
Jun 27
#MahaPeriyava
Those who distrust the Puranas maintain that they contain accounts that are not in keeping with day-to-day realities. The stories in the texts refer to the arrival and departure of celestials and of their awarding boons to devotees. To the critics such accounts
seem false. A woman is turned into a stone because of a curse, then the curse is broken with the grant of boon; or the sun is stopped from rising - such stories seem untrue to us because they are beyond the realms of possibility and refer to acts beyond our own capacity.
Since
such things do not happen these days, is it right to argue that they could not have occurred at any time? In the past the mantras of the Vedas had their own vibrant power because of the exemplary life led by those who chanted them. Then people practised severe austerities and
Read 46 tweets
Jun 26
#அறிவு_ஞானம்
ஒரு குருவிடம் மூன்று மாணவர்கள் பாடம் படித்துக் கொண்டிருந்தனர். அறிவு என்றால் என்ன? ஞானம் என்பது எது என்று குருவிடம் கேட்டனர். அவர் மூன்று மாணவர்களையும் அழைத்து, "இன்று உங்களுக்கு ஞானம் என்பது எது என்பதை ஒரு செயல் மூலம் விளக்கப் போகிறேன்” என்று சொல்லிவிட்டு மூவரையும்
ஒரு அறையில் உட்கார வைத்தார். அவர் மற்றொரு அறைக்குச் சென்று சிறிது நேரத்தில் வெளியே வந்தார். அறையின் கதவுகளை மூடிவிட்டு அம்மூவரின் அருகில் வந்தமர்ந்தார். முதல் மாணவனைப் பார்த்து, “நான்போய் வந்த அறையினுள் மூன்று தம்ளர் பால் உள்ளது. அதில் நீ ஒரு தம்ளர் பாலை பருகிவிட்டு வா”என்றார்.
அவன் உள்ளே சென்றான். தங்கம், வெள்ளி, வெண்கலம் ஆகிய
மூன்று தம்ளர்களில் பால் இருந்தது.
தங்கத் தம்ளரில்இருந்த பாலை எடுத்து மிகுந்த சந்தோஷத்தோடு பருகினான். பிறகு வெளியே வந்தான். அடுத்து இரண்டாவது மாணவன் உள்ளே சென்றான். தங்கத் தம்ளரில்
பால் இல்லாததைப் பார்த்த அவன் அதிலிருந்த பால்
Read 11 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(