#ரங்கநாத_பெருமாள் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீரங்கத்தில் பக்தனனின் மேல் அவருக்கு இருக்கும் பேரன்பை விளக்கும் திருவிழா பங்குனி பிரம்மோத்ஸவத்தின் மூன்றாம் நாள் நடைபெறுகிறது. பழைய சோறும், மாவடுவும் என்று புகழப்படும் இந்த திருவிழாவில் கலந்து கொள்ள அவர் ஶ்ரீரங்கம் விட்டு #ஜீயர்புரம் என்ற
ஊருக்கு கிளம்பி செல்கிறார். அங்கு சவரத் தொழிலாளர்களின் மண்டகப்படி பெருமாளுக்கு நடைபெறுகிறது. அந்த விழாவில் முகம் திருத்தும்  தொழிலாளி ஒருவர்  ரங்கநாத பெருமாளுக்கு எதிரே கண்ணாடி காட்டி கண்ணாடியில் தெரியும் ஆண்டவரின் பிம்பத்திற்கு முகம் திருத்தம் செய்வது போன்று ஒரு நிகழ்வு நடை
பெறுகிறது. அதன்பிறகு முகம் திருத்தும்  தொழிலாளிக்கு மரியாதை செய்யப்படுகிறது. இந்த திருவிழாவில் ரங்கநாதருக்கு நைவேத்தியமாக பழைய சோறும், மாவடுவும் அளிக்கப்படுகிறது. ரங்கனுக்கு அக்காரவடிசில் கோவிலில் காத்துக் கொண்டிருக்கும் போது பெருமானுக்கும் பழைய சோறு, மாவடுவும் இங்கு விருந்து!
ஏனோ? காரணம் உள்ளது. ஏழைகளுக்கு உதவும் பரந்தாமனான திருமால் ஒரு ஏழைப் பாட்டிக்காக அவளின் பெயரனின் வடிவம் தாங்கி வந்த திருவிளையாடலை போற்றும் வைபவம் இது. #ஜீயர்புரம் என்பது காவிரிக்கரை அருகே உள்ள அழகான கிராமம். அந்த ஊரில் ரங்கநாதரையே சர்வகாலமும் நினைத்து வாழும் ஒரு பாட்டி இருந்து
வந்தாள். இளமையிலேயே கணவனை இழந்த அவளுக்கு இரண்டே உறவுகள் தான். ஒருவர் ரங்கநாத பெருமாள், மற்றொருவர் அவளின் பெயரன் ரங்கன். ஏழ்மையிலும் இறைவனை மறக்காத அந்த பாட்டி, உட்கார்ந்தால் 'ரங்கா' எழுந்தால் 'ரங்கா' என்றே வாழ்ந்தவள். அவளுக்கும் ஒருநாள் சோதனை வந்தது. அந்த சோதனை வழியே அவளை
ஆட்கொள்ள எண்ணினார் கார்வண்ணன். அன்று பாட்டியின் பெயரன் முகம் திருத்திக்கொண்டு வருவதாக சொல்லிக்கொண்டு காவிரிக்கரைக்கு சென்றான். அங்கு முகம் திருத்தி விட்டு காவிரியில் இறங்கி குளித்தான். மென்மையாக ஓடிக் கொண்டிருந்த காவிரி ஊழி வெள்ளம் பாய்ந்ததைப் போல பெருகி வரத்தொடங்கியது. பெருகிய
வெள்ளத்தில் பாட்டியின் பெயரன் ரங்கன் இழுத்துச் செல்லப்பட்டான். நேரமாகியும் திரும்பாத பெயரனை எண்ணி பாட்டி கவலைப்பட்டாள். ரங்கநாத பெருமாளை தொழுது அழுது காவிரிக்கரைக்கு சென்றாள். அதே வேளையில் காவிரி இழுத்துச் சென்ற ரங்கன் ஸ்ரீரங்கத்தின் அம்மா மண்டபத்துக்கு அருகே கரை ஒதுங்கினான்.
உயிர் பிழைத்த ரங்கன், ஸ்ரீரங்கத்து ஆண்டவனை தரிசித்து காப்பாற்றியதற்கு நன்றி சொன்னான். தன்னை எண்ணி இந்நேரம் பாட்டி அழுவாளோ என்று பதறி ரங்கநாதரிடம் முறையிட்டான். உடனே கிளம்பினான். பெயரன் செல்லும் வரை பாட்டி துடிப்பாளே என்று பரந்தாமனும் எண்ணினார்.  
காவிரியின் வெள்ளம் கண்டு அழுது
புலம்பிக்கொண்டிருந்த பாட்டியை ஆற்றுதல் படுத்த கிளம்பினார் பரந்தாமன். பாட்டி அழுது கொண்டிருந்த ஜீயர்புரத்து காவிரி கரையருகே முகத்திருத்தம்  செய்த முகத்தோடு குளித்து எழுந்த நிலையில் பாட்டியின் பெயரன் ரங்கனாகவே வந்தார் பெருமாள். பாட்டி மகிழ்ந்தாள். பெயரனை கட்டி அணைத்து வீட்டுக்கு
கூட்டி சென்றாள். பசித்திருந்த பெயரனுக்கு பழைய சோறும் மாவடுவும் அளித்து சாப்பிட சொன்னாள். பரந்தாமன் சாப்பிட்டுக் கொண்டிருந்த அதே வேளையில் உண்மையான பெயரன் ரங்கன் வந்து விட்டான். பாட்டி திகைத்தாள். அடியவருக்கு அடைக்கலம் தரும் பெருமான் சிரித்தபடியே மறைந்தான். பாட்டியும் பெயரனும்
ரங்கநாத பெருமானின் அருளை எண்ணி தொழுதார்கள். அன்று பக்தையை ஆறுதல் படுத்த வந்து பழைய சோறும், மாவடுவும் உண்ட ரங்கநாத பெருமாள் இன்றும் அதை நினைவூட்ட ஆண்டுதோறும் பிரம்மோத்ஸவ விழாவில் இதை நடத்தி வருகிறார். ஏழைக்கு ஏழையான நம்பெருமாள் என்றுமே நம்மை காப்பார் என்பதையே இந்த நிகழ்ச்சி
காட்டுகிறது!
அரங்கன் திருவடிகளே சரணம்
சர்வம் ஶ்ரீ கிருஷ்ணார்ப்பணம்🙏🏻

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with அன்பெழில்

அன்பெழில் Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @anbezhil12

Jul 7
#தில_ஹோமம்
பொதுவாகவே மரணம் என்பது யாருக்கு எப்போது வரும் என்றே சொல்ல முடியாது. அது வயது வித்யாசம் பார்க்காமல் வரக்கூடியது. விபத்துகளில் மரணம் நேரும் போது பல நேரங்களில் உடல் சிதைந்து தகனம் செய்ய தகுதியற்ற நிலையை அடைந்து விடுவதால் அந்த பிரேதங்களுக்கு சரியான முறையில் சம்ஸ்காரங்கள் Image
செய்யப் படுவதில்லை. அந்தகைய ஆன்மாக்கள் அந்த அஸ்தி கிடக்கும் இடத்தையே ஆவிகளாக சுற்றி வருகின்றன. இந்நிலையில், அவற்றிற்கு மோக்ஷம் கிடைத்து பித்ரு லோகத்தை அடைய செய்யப்படும் ஹோமமே தில ஹோமம் ஆகும். இது ப்ரேத தோஷம் மற்றும் பித்ரு தோஷத்திலிருந்து விடுபடவும், மரித்த முன்னோர்கள் நல்ல கதி
அடையவும் கருப்பு எள்ளை முக்கிய திரவியமாகக் கொண்டு முறையாக அக்னியில் செய்யப் படும் ஹோமம் ஆகும். கிருஷ்ண பக்ஷம் சனிக் கிழமை, அமாவாஸை பரணி நக்ஷத்ரம் குளிகன் இருக்கும் ராசி ஆகிய நாட்கள் தில ஹோமத்துக்குச் சிறந்தவை. ஆனாலும் இப்படிப் பட்ட தில ஹோமத்தை தேவையில்லாமல் செய்யக்கூடாது. Image
Read 7 tweets
Jul 7
#MahaPeriyava
There is an organisation in America called the Paul Brunton mission, extolling the British journalist who came to see the Sages here. Brunton had Sri Maha Periyava’s darshan and on his advice went to Ramana Maharishi whose gracious glance he received. Every year Image
the students who were members of this association, would visit Kanchipuram and stay on for 10 or 15 days, immersing themselves in Periyava’s blissful darshan. The Group had come as usual one year. One day, Periyava was seated under the Night-flowering jasmine (Pavazhamalli) tree,
which used to be in SriMatham in those days and was giving them the darshan. Periyava was sitting with his eyes closed. The American boys were seated around Periyava with their eyes closed in Meditation. It was very silent, not a whisper anywhere. The attendants Balu Mama and
Read 12 tweets
Jul 7
#விசேஷ_தர்மம்
மரணத்துக்குப் பின் தன் தந்தையான சூரிய பகவான் இருப்பிடத்தை அடைந்த கர்ணன் அவரிடம், “தந்தையே! நான் என் செஞ்சோற்றுக் கடனைத் தீர்க்க நண்பன் துரியோதனன் பக்கம் நின்று போர் புரிந்தேன். ஆனால் வஞ்சகன் கண்ணன் என்னை வஞ்சித்து வீழ்த்தி விட்டானே!” என்று புலம்பினான். அப்போது சூரிய Image
பகவான், “இல்லை கர்ணா! கண்ணனை வஞ்சகன் என்று சொல்லாதே. நீ ஒரு தவறு செய்து விட்டாய். செஞ்சோற்றுக் கடன் தீர்ப்பது சிறந்த தர்மம் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் கண்ணனோ சாமானிய தர்மங்களை விட உயர்ந்த விசேஷ தர்மமாக விளங்குபவன். “க்ருஷ்ணம் தர்மம் ஸனாதனம்” என்று அதனால் தான் சொல்கிறோம்.
அந்தக் கண்ணன் என்ற விசேஷ தர்மத்துக்கும், செஞ்சோற்றுக் கடன் தீர்த்தல் என்ற சாமானிய தர்மத்துக்கும் முரண்பாடு வருகையில் விசேஷ தர்மத்தைக் கைக்கொள்ள வேண்டும். நீ அதை விட்டுவிட்டுச் சாமானிய தர்மத்தைக் கைக்கொண்டு விசேஷ தர்மத்தைக் கைவிட்டாய். அதனால் தான் அழிந்தாய்."
என்றார். கர்ணன்
Read 8 tweets
Jul 6
#ஶ்ரீகிருஷ்ணன்கதைகள் குயவன் முனியாண்டி பானைகளைச் செய்து கொண்டிருந்தான். அங்கு ஏராளமான பானைகள், குடங்கள், சட்டிகள் அடுக்கப்பட்டிருந்தன. அவன் அருகில் ஓர் ஆடு, கட்டிப் போடப்பட்டிருந்தது.
அவ்வப்போது, மே மே என்று கத்திக் கொண்டிருந்தது. வயதான மகான் பழனிசாமி , மெல்ல நடந்து அங்கே வந்தார் Image
குயவன் பானை செய்வதைப் பார்த்தபடியே தரையில் அமர்ந்தார்.
வந்தவருக்கு ஒரு சிறு மண் கலயத்தில் குடிக்கத் தண்ணீர் கொடுத்தான் குயவன் முனியாண்டி. அதை வாங்கிக் குடித்த குரு பழனிசாமி, இந்த ஆட்டை நீ வளர்த்து வருகிறாயா என்று கேட்டார். இல்லீங்க சாமி. இது ஏதோ காட்டாடு. இந்தப் பக்கமாக வந்தது.
பிடித்துக் கட்டிப் போட்டேன் என்றான் குயவன். எதற்காக என்று கேட்டார் குரு பழனிசாமி. பண்டிகை வரப் போகிறதே! இறைவனுக்கு பலி கொடுக்கலாமென்று தான் என்று இழுத்தான் குயவன் முனியாண்டி .
பலியா? குரு வியப்புடன் வினவினார்.
ஆமாம் சாமி. தெய்வத்துக்குத் திருவிழா அன்றைக்குப் பலி கொடுத்தால் ரொம்ப Image
Read 11 tweets
Jul 6
Not much is written about Sri Vaishnava pontiffs. The present pontiff of Sri Vaishnava Mutt #Sri_Ahobila_Matam is the 46th Jeeyar since its inception. Let us learn about HH.
In the present day context, only a handful of families have maintained an unbroken Veda adyayana lineage
that could be traced back to many centuries in the past. It is lord Lakshmi Nrisimha's kripa kataksham that a few families still exist that stick to the rigorous vaideeka traditions irrespective of changes in social tastes and preferences. The Aani masam of Manmatha Varusham in
1955 (June 23, 1955) was a special day in a Vaideeka family belonging to Koundinya gotram, in Thillai Vilagam, Thiruvarur District, TN. A baby boy was born as fourth child to devout dampathis, Shri Bhaktavatsalachariar and Shirmathi Rajalakshmi. The child was named Rangarajan and
Read 55 tweets
Jul 6
#MahaPeriyava
Periyava would get pain in the chest, often. When he suffered from this, he would not be able to eat anything at all. So I told Venkataramaiyer, the lawyer, about it. He would consult his Homeopathy books and give some medicine. In a day or two Periyava would be
relieved of the pain. Venkataramaiyer was no Homoeopathy doctor, but he practiced relying on his books. Then after a while, we thought of seeking Ayurvedic remedy. So I went to Venkata Subbachar and told him about Periyava’s suffering from frequent chest pain. He said “I am
working in Venkataramana pharmacy and can give a good medicine. But I do not wish to give Periyava something that is already on the shelf and being sold. His body is sacred and immaculate. Give me a few days, get me the things I want and I will make it afresh and have it ready.
Read 9 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us on Twitter!

:(