கேட்காதே !! நினைத்தற்கு மேலாக !! நினைத்து கூட கற்பனை செய்யாத !!
பெற்றால் தீர்ந்து போகாதா !!
என்றும் எப்போதும் நிலைத்திருக்கும் !!
பிறருக்கு கொடுத்தாலும் குறையாத !!
புரிதல் !! பக்குவம் !! தெளிவு !! என்று பெற்று ...
என்ன பெற்றோம் என்று தெரியாத வண்ணம் அகத்தே ஓர் அமைதி !!
வார்த்தைகள் அற்ற உணர்வு !!
சொல்லற்ற மௌனம் !!
எண்ணமற்ற நிர்வாணம் !!
நான் இப்படி என்று நம்மை வியக்கும் மாற்றம் !!
இனி வாழ்வில் எதிர்கொள்ளும் போது அதை நம் கையாளும் விதத்தில் !! முன்பு இல்லாத அணுகுமுறை !! பொறுமை !! நிதானம் !! போன்ற வெளிப்பாடுகள் ..
பெற்றது தெரியாதே கூட இனி வாழ்வில் நிகழும் மாற்றம் வழியே !!
" ஓ இதுயெல்லாம் நம்மிடம் இது எல்லாம் எப்படி நிகழ்கிறது ??
நான் இதற்க்கு முன்னே இப்படி இல்லையே " என்று நீங்களே ஆச்சரியப்படும்படி பெற்று தான் வந்து இருக்கிறீர்கள் !!
இதையெல்லாம் நீங்கள் கேட்காதே அங்கே நிறைந்திருந்த அருளாலை வழியே உங்களுள் ஒவ்வொரு அணுவாக உட்கலந்து உங்களை தெரியாதே பெற்றது சொல்ல அளவிட முடியாதவையே !!
மேலே சொன்னதை எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு ??
ஆனா நாங்களும் தான் வந்தோம் !! அப்படி ஒன்றும் தெரியவில்லையே !!
என்ற எண்ணம் தோன்றுகிறதா ..
எதை சொன்னப்படி நாம் ஏற்கவா போகிறோம் ??
சரி இப்போது கொஞ்சம் கண்ணை மூடி போவதற்க்கு முன்னே நாம் எதை எல்லாம் எதிர்பார்த்தித்தோம் !! எப்படி எல்லாம் துடித்தோம் !! என்ன ஆர்ப்பாட்டமான எண்ணங்கள் நம்முள்ளே !!
அதே இப்போது பாருங்கள் !! ஓர் அமைதி !! இன்பம் ?? சந்தோசமா ?? என்று விவரிக்க முடியாத !! இன்ப / துன்ப அற்ற நிலையான ஆனந்தம் நம்முள்ளே ..
இதுவே நீங்கள் பெற்றதின் தாக்கம் !! இனி இதன் விளைவுகள் நம் வாழ்வில் பிரதிபலிக்கும் !!
நம் நடை உடை பாவனை போன்ற அனைத்திலும் ..
செல்லும் முன்னே இருந்த நீங்கள் !! இப்போது இல்லை !! இதுவே நிதர்சனம் ..
பெற்றது வேறு எதுவானாலும் !! எப்போதும் !! கொடுக்க முடியாதா ஒன்றே ..
அது இனி அடுத்த பிறவி எடுக்க விரும்பினாலும் கூட வரும் ..
இல்லை பிறவி போதும் என்றாலும் அதற்கும் ஆத்மஞானமாக இருக்கும்..
ஏதோ இவனுக்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து !!
அதை அறிந்து பெற்றதாக நினைத்துக்கொள்ளும் என் மடமை கடந்து !!
அறிய கொடுத்திருப்பதை இனி அனுபவித்து தெரிந்து கொள்ள இருப்பவன் வழியே ..
அறிவிக்கிறான் !! அறியவேண்டியவர்களுக்கு !! அனைத்தும் அறிந்துணர்ந்து இறைவன் ...
திருச்சிற்றம்பலம்
படித்தேன் பகிர்ந்தேன்
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#வீதி_உலாவிற்கு_வெளியே_வராத_நடராஜர் #சைவ_சமயம்
சோழவள நாட்டில் திருவிடைமருதூரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள கோனேரிராஜபுரம் என்ற ஊரில் பூமீஸ்வரர் கோயிலில் இருக்கும் நடராஜர் ஆறடி உயரத்தில், மிக அழகாகவும் கம்பீரமாகவும் காணப்படுகிறார்.
• இங்குள்ள நடராஜருக்கு மனிதருக்கு இருப்பது போலவே ரோமம் மார்பில் மருவு உடலில் கொழுப்புக் கட்டி கையில் மச்சம், கைவிரல் ரேகைகள் நகம் போன்றவைகள் இருப்பது அதிசயமாகும்.
இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆனந்தக்கூத்தராகிய நடராஜப்
பெருமான் காண்போரை கவர்ந்திழுக்கும் சுந்தர நடராஜராகவும்,
உலகிலேயே மிகப்பெரிய நடராஜராகவும் விளங்குகிறார்.
ஒரு சமயம் சோழ மன்னர் ஒருவரது கனவில் பூமீஸ்வரர் தோன்றி கலைநுட்பத்துடன் கூடிய பெரிய பஞ்சலோக நடராஜர் சிலை ஒன்றை அமைக்கும்படி கூறினார்.
அதையடுத்து, நல்ல அழகிய நடராஜர் சிலை அமைத்திட மன்னன் தனது ஆஸ்தான கலைஞர்களிடம் கூறினான்.
#துலாமை_நேர்_நிறுத்திய#அமர்நீதி_நாயனார் #சைவ_சமயம்
அமர்நீதி நாயனார், சோழவள நாட்டில் பழையாறை என்ற பகுதியில் பிறந்தவர். வணிக குலத்தில் பிறந்தவர். சிவ பக்தியில் திளைத்தவர். பொன், நவரத்தினங்கள், சிறந்த பட்டு,
பருத்தி ஆடை போன்றவைகளை எந்த பகுதியில் சிறப்பாக விளையுமோ அந்தப் பகுதிகளுக்கே சென்று வாங்கி வந்து முறையான விலையில் விற்பனை செய்து வந்தார். அதில் கிடைக்கும் செல்வத்தில் இறைவனுக்கும், அவர்களின் அடியவர்களுக்கும் தொண்டுகள் புரிந்துவந்தார்.
சிவனடியார்களுக்கு துறவிகள் அரைஞாணுக்கு பதிலாக கட்டும் கீழாடை மற்றும் கோவணம் முதலானவற்றை வழங்கி வந்தார். சிவனடியாருக்குச் செய்யும் தொண்டு, சிவனுக்கு செய்யும் தொண்டு என தருமங்கள் செய்து வந்தார்.
பக்தி என்றால் மாணிக்கவாசகா் போல் இருக்க வேண்டும்... மாணிக்கவாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார்...
அதற்கு மணிவாசக பெருமான் என்ன கேட்கிறார் பாருங்கள் ...
பாடல்
வேண்டதக்கது அறியோய் நீ !
வேண்ட முழுதும் தருவோய் நீ!
வேண்டும் அயன்மாற்கு அறியோய் நீ!
வேண்டி என்னைப் பணி கொண்டாய்!
வேண்டி நீ யாது அருள் செய்தாய்
யானும் அதுவே வேண்டின் அல்லால்
வேண்டும் பரிசொன்று உண்டென்னில்,
அதுவும் உந்தன் விருப்பன்றே...!
பாடல் விளக்கம்:
எனக்கு என்ன தர வேண்டும் என்று உனக்குத் தெரியும்... எனக்கு எவ்வளவு தர வேண்டும் என்றும் உனக்குத் தெரியும்.... எனக்கு ஏதாவது வேண்டும் என்று நான் நினைத்தால் , அதுவும் உன் விருப்பமே என்று மணிவாசகர் ஈசனிடம் உருகி பாடுகிறார்....
எப்போது எல்லாம் நீ பிரச்சனை என்று சிந்தித்து கொண்டு இருக்கிறாய் என்று நீயே உன்னுள் பொருந்தி இருந்து நன்றாக சிந்தித்துப்பார்
நீ பிரச்சனை என்று சிந்திக்க உனக்கு எந்த வித தடையும் இல்லை தானே
சிந்திக்கும் இடம், அப்போது இருக்கும் உன் உடல்நிலை , உன்னை சுற்றி இருக்கும் சூழல் போன்ற அத்தனையும் உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் தராத போது தானே பிரச்சனை என்று இதையெல்லாம் கடந்து எதையோ சிந்திக்க கூட முடிகிறது ..
அப்போது
இப்போது உன்னை நான் எப்படி வைத்திருக்கின்றேன் என்று யோசி,
உனக்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாது தானே வைத்திருக்கின்றேன் !!
அதுவே
உன் உடலில் ஏதோ ஒரு கோளாறு ( பசி / தாகம் / வலி .. ),
இருக்கும் இடத்தில் ஏதோவொரு இடையூறு,
சுற்றி இருக்கும் சூழலில் ( நாற்றம் / வெப்பம் / பூச்சி / புகை / சொந்தம் .....)
விபூதியை, தினமும் உங்களுடைய நெற்றியில், இப்படி இட்டுக் கொண்டாலே போதுமே! இந்த உலகத்தில் உங்களை வெல்ல யாராலும் முடியாது!
சிவபெருமானின் அம்சம் பொருந்திய திருநீறை யார் தன்னுடைய நெற்றியில் பூசிக் கொண்டாலும் சரி,
அவர்களுடைய மனம் தெளிவு பெறும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது.
நம்முடைய வீட்டில் இருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வெளியே செல்லும் போது, முதலில் நாம் கேட்கக்கூடிய கேள்வி, "நெற்றியில் விபூதி வைத்துக் கொண்டாயா" அப்படி என்றுதான் கேட்பார்கள்.
அந்த அளவிற்கு, நெற்றியில் விபூதியை பூசிக் கொள்வதில் நம்மிடம் நம்பிக்கை இன்றளவும் இருந்து தான் வருகிறது.
இந்த விபூதியை நெற்றியில் தரித்துக் கொண்டால், எந்த ஒரு தீய சக்தியும் மனிதர்களை அண்டாது என்பதும் நம்முடைய அனுபவ முறையில் இருந்து வருகிறது.
22-6-2022 - புதன் #ஏயர்கோன்_கலிக்காம_நாயனார்_குருபூஜை #சைவசமயம் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் கலிக்காம நாயனாரும் ஒருவர். காவிரி வடகரைக் கீழ்பாலுள்ள திருப்பெருமங்கலம் என்ற ஊரில் வேளாண்மைக் குடியில் அவதரித்தவர். சிவபக்தியில் சிறந்தவர்.
சிவனடியார்களைப் போற்றுவதில் சளைக்காத ஊற்றமுள்ளவர். சிவநிந்தையார் செய்தாலும் பொறுக்காதவர். வைத்தீஸ்வரன் கோயிலுக்கு அருகில் திருப்புன்கூர் திருத்தலப் பெருமானுக்கு பல திருப்பணிகள் புரிந்தவர். ஒரு முறை சுந்தரமூர்த்தி சுவாமிகள் வரலாற்றைக் கேட்டவர்,
அவர் தன்னுடைய காதலுக்காக சிவபெருமானை தூது விட்டதாக அறிந்து, அவர் மீது கடும் கோபம் கொண்டார். ‘‘ஆண்டவனுக்கு நாம் தொண்டு செய்யவேண்டும். தன்னுடைய தொண்டுக்கு ஆண்டவனை தூது விடுவதும் ஏவி விடுவதும் முறையாக இருக்குமா?