பண்டைக்காலத்தில் ஒவ்வொரு குலத்திற்கும், ஒரு குறியீடு இருந்தது.
அக்குறியீடு அக்குலத்தின் அடையாளமாகவும், பெருமைக்காகவும் மதிப்புடன் அவ்வின மக்களால் போற்றப்பட்டு வந்தது.
ஆவி வழிபாட்டின் அடுத்தக்கட்ட வளர்ச்சி நிலையாக ஒரு குறிப்பிட்ட குலத்தின் வீரன் இறந்துபட்டால்,
அவனது நினைவுச்சின்னத்தில் அவன் குலத்தின் குறியீடான விலங்குகளையோ, மரங்களையோ சேர்த்து வைத்து வழிபடுவது பண்டு வழக்காயிருந்தது.
உடலில் இருந்து ஆவி எளிதில் பிரிந்து விடாது.
அதை வெளியேற்றுவதற்கு உடலைத் தீயிட்டு அழிக்கின்றனர். தீயிட்ட பின்னரும் எலும்புகளில் உயிர் தங்கியிருப்பதாக நினைக்கிறார்கள்.
அதனால் எலும்புகளையும் உடைத்துவிடுகிறார்கள். இறுதியாக ஆவி பிரிந்து விடுகின்றது. அது வானத்தில் மேகங்களுக்கும் மேல் சென்று நின்று விடுகிறது.
இவ்வுலக வாழ்வில் வீரர்களாகவும், சான்றோர்களாகவும் வாழ்ந்தவர்கள் மேலே, ஆனிலை உலகத்தில் தங்கியிருக்கும் வாய்ப்பைப் பெறுவர் என்று நம்புகின்றனர். அந்த ஆவிக்கு மறுபிறவியும் உண்டு.
உயிர் பேயாக மாறும் நிலை குறிப்பிடத்தக்கது. உயிரை யாரும் வழிபடுவதில்லை. ஆனால் பேயை வழிபடுகின்றனர்.
இறப்புதான் உயிரை பேயாக மாற்றிவிடுகின்றது. இறந்தவர் உடலுக்குச் செய்யும் இறுதிச்சடங்கிற்குப் பின் உயிர் பேயாக மாறிவிடுகின்றது.
#டைலர் கூற்றுப்படி, ஆவி எங்கு வேண்டுமானாலும் தங்கியிருக்கும். இந்த ஆவி அனைத்து ஆற்றலையும் பெற்றிருக்கின்றது. எனவே மனிதன் ஆவியைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தால் அனைத்து இயக்கங்களையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும் என்று நம்பினான். அதற்காக ஆவிகளை வழிபட்டான்.
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர்.
சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.
அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,
சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர்.
'வெள்அறை நிகமதோர்' #மாங்குளம் சமணக்குகைக் கல்வெட்டில், #நிகமம் என்பது வணிகக் குழுவினைக் குறிக்கும் சொல்லாகும்.
சிலப்பதிகாரத்தில் காவிரிக்கரையோரமே ஒரு பெருவழி சென்று, #உறையூர் அடைந்து, சோழநாட்டு எல்லையில் மூன்று பிரிவாகப் பிரிந்து, #கொடும்பாளுர் வழியாக #மதுரை அடைந்துள்ளது.
பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.