தேக்கு, அகில், மிளகு, மணிக்கல், பொன், யானைத்தந்தம் ஆகியவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிலை ஏற்பட்ட பின்...
அவற்றின் பொருளியல் சிறப்பு உணரப் பெற்றது. கால்நடை வளர்ப்பு சமூக ஆக்கத்திற்குப் பயன்பட்டது.
யானைத் தந்தம், கல்மணி, பொன் ஆகியன மூவேறுதாரங்கள் என்று குறிக்கப்பெற்றன.
#நாடன் ஆட்சிக்குட்பட்ட பகுதி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் பெறும் தகுதி வாய்ந்த பண்டங்களே உற்பத்தியாகும்...
பகுதியாக விளங்கியது. இவ்வாறு ஏற்றுமதி செய்ய தகுதிவாய்ந்த பொருட்களே சமூகத்தில் உற்பத்தி செய்யப்பட்டன.
மேலும் இத்தகைய தன்மை வாய்ந்த பொருட்கள் ஆட்சியாளர்களால் மணவினை மூலமாகவும், காணிக்கையாகவும், போரினாலும், வாணிகத்தாலும் பெறப்பட்டு, மதிப்புறு பண்டங்களாக பேணப்பட்டு...
செயற்கரிய செய்வார் தம் ஈமக்குழியில் வைக்கப்பட்டன.
திணைப்பயிர்கள் அதிகம் விளையும் பகுதிகளில், நெல் மதிப்புறு பண்டமாக கருதப்பட்டிருக்க வேண்டும்.
#பொருந்தல் அகழாய்வில் கிடைக்கும் நெல்லை, நாம் இவ்வாறு தான் கணிக்க வேண்டியுள்ளது.
இங்கு கிடைக்கும் நூற்றுக்கணக்கான கண்ணாடி மணிகளை, இப்பகுதியில் கிடைக்காத அரிய பொருளாகவே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.
அவ்வாறே தேக்கு, அகில், சந்தனம், தேன் முதலிய குறிஞ்சித் திணையான மலைப்பகுதியின் கருப்பொருட்களும் பிற திணைகளில் மதிப்புறு பண்டங்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டது எனலாம்.
கரூரில் கிடைக்கும் பொன் அணிகலன்களும், யவன வாணிகத்தால் சிறப்பாக ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருட்களுள் ஒன்றாகவே கருதப்படுகிறது.
#யவனர்கள் தமிழகத் துறைமுகத்து முத்துக்களை வாணிகத்தின் மூலம் விரும்பிப் பெறுவதால், அதிகமாக அவர்கள் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதாக....
பயணநூல் ஒன்று புலம்புவதையும் நாம் நோக்க வேண்டும்.
தம் நாட்டில் கிடைக்காத அரிய முத்துக்களை அளவுக்கதிகமாக வாங்கிக்குவித்த யவன நாட்டின் பண்டைய நிலை அதுவே.
பொன்னோடு வந்து கறியொடு பெயர்ந்த, இலக்கிய வரியும் இதனை உறுதிப்படுத்துகிறது.
- நன்று
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
தொல்குடிச் சமூகங்களில் 'பகுத்தல் விதி' எவ்விதம் கடைபிடிக்கப்பட்டது என்பதை 'மானுட - ஒப்பியல்' உத்தி வாயிலாக ஆய்வாளர்கள் எடுத்துக்காட்டியுள்ளனர்.
#பகுத்துண்ணல் என்பது மிகப் பழங்காலத்திலிருந்து, வழிவழி வந்த கூட்டு வாழ்க்கை முறையில் பகுத்துண்ணுதலும், கூட்டுண்ணுதலும் காணப்படும்.
இவை சான்றோர் செய்யுட்களில் காணப்பட்டமையாலேயே, பழந்தமிழ் இலக்கணம் வகுத்த #தொல்காப்பியம் புறத்திணையில் ‘படை இயங்கரவம்’ எனும் சூத்திரத்தில் #பாதீடு என்றொரு துறையைக் கூறுகிறது.
போர்வீரர் தாம் கவர்ந்த நிறையைத் தமக்குள் பங்கிடுவதைக் கூறும் துறை இதுவென இலக்கணக்காரர் விளக்கம் கூறுவர்.
தொல்லியல் ஆய்வில் மிக முக்கியமான சான்றுகளாக விளங்கும் #தமிழி எழுத்துப் பொறிப்புகளைக் கொண்ட 'சமணர் படுக்கைகள்' பெருவழிகளிலேயே அமைந்துள்ளன என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பண்டைய வணிகர்கள் பண்டு பெரும்பாலும் சமண சமயத்தைப் பின்பற்றியுள்ளனர்.
சமண முனிவர்களும் வணிகர்களை நெறிப்படுத்தியுள்ளனர்.
அதன் நன்றி நிமித்தமாக வணிகர்கள் தாங்கள் வணிகத்திற்காக செல்லும் நகரங்களில் அமைந்த மலைப்பகுதி குகைத்தளங்களில்,
சமண முனிவர்களுக்கு படுக்கைகளை வெட்டிக் கொடுத்து அச்செய்திகளை கல்வெட்டுச் சான்றுகளாக்கியுள்ளனர்.
'வெள்அறை நிகமதோர்' #மாங்குளம் சமணக்குகைக் கல்வெட்டில், #நிகமம் என்பது வணிகக் குழுவினைக் குறிக்கும் சொல்லாகும்.
சிலப்பதிகாரத்தில் காவிரிக்கரையோரமே ஒரு பெருவழி சென்று, #உறையூர் அடைந்து, சோழநாட்டு எல்லையில் மூன்று பிரிவாகப் பிரிந்து, #கொடும்பாளுர் வழியாக #மதுரை அடைந்துள்ளது.
பண்டைய நாளில் தென்னிந்தியாவில் பெருவழிகள் பல நிறைந்திருந்தன.
#பெருவழிகள் என்பது ஒரு நிலப்பகுதியில் அமைந்துள்ள பல்வேறு ஊர்களை இணைக்கும், நீண்ட நெடிய அகன்ற சாலைகளைக் குறித்தனவே.
இவ்வழிகளைக் குறிக்க சங்க இலக்கியத்தில் பல சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
வாணிகத்திற்காகவும், அரசு பயன்பாட்டிற்காகவும் உருவானவைகளே பெருவழிகளாகும்.
இப்பெருவழிகள் வாணிகம் மட்டுமின்றி, நாடுகளில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் பற்றிய செய்திகள், போர்ச் செய்திகள், ஓலைகள், பிறசெய்திகள் முதலியவற்றைக் கொண்டு செல்லும் வழியாகவும் செயல்பட்டன.
பண்டைக்காலத்தில் நிலவழிகள் கால்நடை மேய்ப்பர்களால் உருவாக்கம் பெற்றன.
மேய்ச்சலுக்காக நீர் நிலை தேடியும், புல்வெளி தேடியும் இடம்பெயரும் இனக்குழுக்கள்,
தங்கள் கால்நடைகளுடன் சென்று வந்த பாதைகளே பின்னாளில் தரைவழிகளாக இனங்காணப்பட்டன.