#அனுமந்தன்பட்டி#அனுமந்தராயப்பெருமாள் கோயில். தேனி மாவட்டம்.
இலங்கைப் போரின் போது, இந்திரஜித்தின் அஸ்திரத்தால் மயங்கி வீழ்ந்து உயிருக்குப் போராடிய லட்சுமணனையும் வானர சேனைகளையும் காப்பாற்ற, அனுமன் சஞ்ஜீவி மலையைப் பெயர்த்தெடுத்து வந்தார். அப்போது, ராவணனின் ஆணைக்கு இணங்க, அப்போது
அவனுடைய கட்டுப் பாட்டில் இருந்த சனி பகவான், அனுமனைத் தடுத்து நிறுத்த முற்பட்டார். தன்னை வழிமறித்த சனியிடம், நண்பா, போர்க்களத்தில் மலையைச் சேர்த்து விட்டுத் திரும்பும்போது நாம் பலப்பரீட்சை செய்யலாம். இப்போது வேண்டாம் என்றார் அனுமன். ஆனால் சனி, அனுமனின் வேண்டுகோளை ஏற்கவில்லை.
ஆவேசத்துடன் அனுமன் மீது பாய்ந்தார். இதனால் கோபம் கொண்ட அனுமன், சனியைத் தன் காலில் சுற்றிக் கட்டிக் கொண்டு போர்க்களத்தை நோக்கிப் பறந்தார். பிறகு, அவர் மீண்டும் அதே இடத்துக்குத் திரும்பி வந்து, சனி பகவானுக்கு விமோசனம் தந்ததாக புராணம் உள்ளது. விமோசனம் பெற்ற சனிபகவான், ‘இனி தங்களை
வணங்கும் அடியார்க்கு என்னால் பாதிப்பு இருக்காது’ என்று வாக்கு தந்தார். இங்கே அனுமன் நின்ற இடத்தில் தான் தற்போது கோயில் அமைந்திருக்கிறது. தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ளது ஹனுமந்தன்பட்டி. இங்கே சுரபி நதிக்கரையில் கோயில் கொண்டு இருக்கிறார் சனிபந்தன ஹனுமந்தராயப் பெருமாள். மிகுந்த
வரப்பிரசாதி இவர்! சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு சுயம்பாக அனுமந்தராயர் தோன்றியதாக கூறப்படுகிறது. பூஞ்சாத்து தம்பிரான் அரசர் காலத்தில் இக்கோயில் அமைந்து இருக்கும் இடத்தில் இருந்த பெரிய அரச மரத்தை வெட்டும் பொழுது அந்த மரத்தில் இருந்து குருதி வெளியேறி உள்ளது. இதனால் அதிர்ச்சி
அடைந்த மரத்தை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் உடனடியாக மரத்திற்கு பரிகாரம் செய்து மீண்டும் மரத்தை வெட்டத் தொடங்கி உள்ளனர். அப்போது அந்த மரத்திற்கு அடியில் இருந்து அனுமந்தராயர் சுயம்பாக தோன்றியதாக கூறுகின்றனர். மரத்திற்கு அடியில் அனுமந்தராயர் வீற்றிருக்கிறார் என்பதை அறிந்த
நபர்கள் அந்த இடத்தில் சிறிய அளவில் பீடம் ஒன்றை மட்டும் கட்டி வழிபட்டு வந்துள்ளனர். ஆனால் அக்கோவில் காலப் போக்கில் பூமிக்கடியில் புதையுண்டு உள்ளது. அதற்குப் பின்பாக வியாஸராய மஹரிஷி என்பவரால் சிறிய அளவில் இந்த அனுமந்தராய பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. அக்கோவிலும் காலப் போக்கில்
பூமிக்கடியில் புதைந்து உள்ளது. இதனால் ஸ்ரீவில்லிபுத்தூரில் இருக்கும் அர்ச்சகர்கள் இக்கோயிலுக்கு வந்து தலைமுறை தலைமுறையாக ஐநூறு ஆண்டுகளுக்கும் மேல் தொடர்ந்து பூஜை செய்து வந்துள்ளனர். அதற்குப் பின்பாக 1948 ஆம் ஆண்டு கிருஷ்ணசாமி அய்யனார் பெரிய அளவிலான அனுமந்தராய பெருமாள் கோவிலை
கட்டியுள்ளார். தற்போது இக்கோயில் 30வது தலைமுறையைச் சேர்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் அர்ச்சகரான வெங்கட்ராமன் அனுமந்தராயருக்கு பூஜை செய்து வருகின்றனர்.
இக்கோயிலுக்கு வருபவர்களுக்கு உடனடியாக குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், காரியசித்தி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் உடனடியாக நிவர்த்தி
பெறுவதால் கோவிலின் புகழ் தேனி மாவட்டத்தை கடந்து வெளி மாவட்டங்களுக்கும் பரவியதால் இக்கோயிலுக்கு அதிகப்படியான பக்தர்கள் வழிபாடு செய்ய வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு வரக்கூடிய பக்தர்கள் சனிக்கிழமை நாளில் செந்தூரம், குங்குமம், மஞ்சள் பொடி, மற்றும் ஆஞ்சநேயருக்கு பிரதானமான
வாழைப்பழம் ஆகியவற்றை கொண்டு பூஜை செய்கின்றனர். காரிய தடை உள்ளவர்கள் ஒரு பாக்கு இரண்டு வெற்றிலைகளை 24 ஜோடியாக கட்டி வெற்றிலை மாலையை ஆஞ்சநேயருக்கு அணிவிக்கின்றனர். ஆஞ்சநேயருக்கு உகந்த சிறப்பு நாட்களில் நடைபெறும் அபிஷேகங்கள், நெய்யபிஷேகம், அனுமானுக்கு சிறப்பு மலர் அலங்காரம்
செய்யப்பட்டும் நேரத்தில் பக்தர்கள் வழிபாடு செய்யும் போது காரிய தடை விலகும் எனவும் கூறப்படுகிறது. நம் காரியங்கள் கை கூட, தடைகள் விலக இவரை வழிபடுவோம்.
ஜெய் ஆஞ்சனேயா!
சர்வம் ஶ்ரீ கிருஷ்னார்ப்பணம்🙏🏻
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
#கோவிலில்_வழிபடும்_முறை நம் இந்து மதத்தில் தான் இறைவனை நம் உள்ளப்படி எப்படி வேண்டுமானாலும் வழிபடலாம் என்றிருக்கிறது. வழிபட முக்கிய தேவை பக்தியும் பணிவும் தான். ஆனால் கோவிலுக்குச் சென்று வழிபடும்போது நாம் சிலவற்றை கடைபிடிக்க வேண்டும். கோயிலுக்கு செல்லும்போது உடல், ஆடை, மனம் ஆகியவை
தூய்மையாக இருக்க வேண்டும். குளித்து விட்டு துவைத்த துணிகளை அணிந்து (கோவிலுக்கு உகந்த வேட்டி சட்டை, புடைவை) செல்ல வேண்டும். ஆண்கள் நெற்றியில் திருநீறு, சந்தனம், திருமண் காப்பு ஏதாவது ஒன்றை தரித்திருக்க வேண்டும். பெண்கள் குங்குமம் அல்லது சந்தனம், அல்லது திருநீறு இல்லாமல் வழிபடக்
கூடாது. வெறும் கைகளோடு கோவிலுக்கு செல்லாமல், நம்மால் இயன்றவரை இறைவனுக்கு பூக்கள், பழங்கள் அல்லது ஒரு கற்பூரமாவது எடுத்துச் செல்ல வேண்டும். சிவனுக்கு வில்வ இலையையும், பெருமாளுக்கு துளசியையும் அர்ச்சனைக்கு வாங்கி செல்வது இன்னும் சிறப்பு. கோவில் வாயிலில் நுழையும் போது தண்ணீரால் கை,
#சொர்க்கவாசல் 108 திவ்யதேசங்களில் பெரும்பாலும் சொர்க்கவாசல் எனப்படும் பரமபத வாசல் இருக்கும். ஆனால் கும்பகோணம் #ஸ்ரீசாரங்கபாணி ஆலயத்தில் சொர்க்க வாசல் எனப்படும் பரமபத வாசல் கிடையாது. இதற்கு காரணம் இத்தலத்து சுவாமி நேரே வைகுண்டத்தில் இருந்து இங்கே வந்து மகாலட்சுமியின் அவதாரமான
கோமளவல்லியை மணமுடிப்பதற்காக திருமால், தான் எழுந்தருளியுள்ள ரதத்துடன் வைகுண்டத்தில் இருந்து இங்கு வந்து கோமளவல்லியை மணந்து கொண்டார். எனவே, இவரை வணங்கினாலே பரமபதம் (முக்தி ) கிடைத்து விடும் என்பதால், இந்த ஆலயத்தில் சொர்க்கவாசல் கிடையாது. மேலும், இங்குள்ள உத்ராயண, தட்சிணாயண வாசலைக்
கடந்து சென்றாலே பரமபதம் கிட்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது. உத்ராயண வாசல் வழியே தை முதல் ஆனி வரையும், தட்சிணாயண வாசல் வழியே ஆடி முதல் மார்கழி வரையும் சுவாமியை தரிசிக்க செல்லவேண்டும். ஏதாவது ஒரு வாசல் தான் இங்கு திறக்கப்பட்டு இருக்கும். பெருமாள் தேரில் வந்து மணமுடித்ததால் கோவில்
#மஹாபெரியவா
ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர். ஒரு சமயம் மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப் படுவதைக் கண்ட பாலு, அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை
சென்று வர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார். கேலியான புன்னகையுடன்,
"என்னடா உன் அப்பா, தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?" என்று கேட்டார் ஆசார்யா.
"அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை
வேண்டிண்டேன். அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்" என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு. பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது, பிறகு சொன்னார்.
"நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம். நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக்
#MahaPeriyava
A gentleman greatly devoted to Periyaval was very poor. His daughter’s wedding was to be held. He came to Periyaval and made a prayer.
“There is still time. Do not worry,” said Periyaval and sent the devotee away.
Later, Periyaval sent one of his attendants to
another devotee in Madras. This devotee was a wealthy man. Besides, on Periyaval’s instructions, he would also help those in need now and then. When the attendant informed him of the matter, he gave a small amount of money. “But one needs much more for the wedding. Five hundred
rupees will not be sufficient,” said the attendant. “Look here,” said the devotee. “Do you know what I did? I wrote Rs.200, Rs.500, Rs.1000 and so on right up till Rs.5000, on little slips of paper and placed them in front of the altar. I called my grand-daughter and told her to
#தென்திருப்பேரை குழைக்காது வல்லி நாச்சியார், திருப்பேரை நாச்சியார் உடனுறை மகரநெடுங் குழைக்காதர், நிகரில் முகில் வண்ணன் திருக்கோவில், தென் திருப்பேரை, தூத்துக்குடி மாவட்டம். இத்திருக்கோயில் நவதிருப்பதிகளில் 7வது திருப்பதியாகவும் 108 திவ்ய தேசங்களில் 53வது திவ்ய தேசமாகவும்
விளங்குகிறது. மூலவர் வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம். திருமாலின் தேவியரில் ஸ்ரீதேவி சிவந்த நிறம் கொண்டவர். பூதேவி கருமை நிறம் கொண்டவர். "திருப்பேரை" என்பது ஸ்தலம் பெயர் என்று நினைக்கின்றனர். அது பூதேவி தாயாரின் பெயர். எப்படி வந்தது என்று பார்ப்போம். திருமாலின்
திருமடியில் சயனித்து இருந்த பூதேவி துர்வாசரின் வருகையை கவனிக்கவில்லை. இதனால் கோபமுற்ற துர்வாசர் பூதேவி கரிய நிறம் நீங்கி சிவந்த நிறம் அடையுமாறு சபித்தார். பூதேவியும் குற்றத்தை பொருத்தருள வேண்டி சாப விமோசனம் வேண்டினார். தாமிரபரணி நதிக்கரையில் உள்ள அரிபதம் என்ற இடத்திற்கு சென்று
#MahaPeriyava:
A couple greatly devoted to SriMatham offered bhikshavandanam to Periyava often. It must have been about two in the afternoon. Periyava accepted his bhiksha and sitting down to relax for a while sent for the couple. When they came he asked them, “Have you had
your meal?”
“We were given hand-stitched leaf plates because banana leaves are not there in the Matham. We gave up those leaves in Gaya. So, we have not eaten the food we cooked for ourselves.” The couple who followed all the rules of orthodoxy did not eat outside their home.
Even when they visited the Matham they would cook their own meal and eat it.
“So, what do you intend to do?”
The gentleman said, “If I go to the market to get banana leaves I will have to take another purificatory bath. Then I cannot eat this meal. So, we have decided to fast