Dr.Devi PhD Profile picture
Aug 5, 2022 10 tweets 3 min read Read on X
என்னது ஸ்டீபன் ஸ்பீல்பெர்க் மட்டும் ஜுராசிக்பார்க்ல DNA டைனோசர்ன்னு Genetics பேசல நம்ம சிம்பு தேவனும் புலிகேசில முக்கியமான மரபணு கோட்பாடு பத்தி பேசிருக்காரா?

எப்படி மரபணுக்களைத் தாண்டி புறச்சூழல் ஒருத்தர செதுக்கும்ன்னு புலிகேசியும் உக்கிரபுத்தனும் தான் நமக்கு சொல்றங்களா? (1/8) ImageImage
புலிகேசியும் உக்கிரபுத்தனும் identical twins. அப்படினா அவங்க ரெண்டு பேரும் ஒரே கருவிலிருந்து splitஆகி இரண்டு உயிர்களா உருவானவங்க. அவங்களோட மரபணுக்கள் கிட்டத்தட்ட 99.99% ஒரே மாதிரி இருக்கும். அப்புறம் எப்படி புலிகேசி டம்மியாகவும் உக்கிரபுத்தன் திறமைமிக்கவனாகவும் இருந்தாங்க? (2/8) Image
திறமைக்கும் மரபணுக்கும் சம்பந்தம் இல்லையா?

இங்க தான் புறச்சூழல் sceneகுள்ள வருது. பொதுவா நம்மளுடைய எந்தெந்த பண்புகளெல்லாம் ஒற்றை மரபணுக்களால தீர்மானிக்கப்படுகின்றதோ அவையெல்லாம் மிகக் கண்டிப்பான மரபணு கட்டுப்பாட்டில் இருக்கும்.(3/8)
உ: கருவிழியின் நிறம். நீங்க எந்த நாட்டுல பிறந்தாலும் உங்கள் பெற்றோரிடம் இருந்து பெற்ற மரபணுப்படி தான் உங்கள் விழியின் நிறம் இருக்கும். எந்த சூழலிலும் அது மாறாது. (4/8)
எந்த பண்புகளெல்லாம் ஒன்றுக்கு மேற்பட்ட மரபணுக்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதோ அவையனைத்தயும் மரபணுக்கு நிகராக புறச்சூழலும் கட்டுப்படுத்தும். உ: ஒருவரின் உயரம். நீங்கள் எவ்வளவு போஷாக்கான உணவு சாப்பிடுகிறீர்கள் என்பதைப்பொருத்து உங்களின் உயரம் மாறுபடும். (5/8) Image
அதைப்போலத்தான் ஒருத்தரோட அறிவும் திறமையும். நமது அறிவை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரபணுக்கள் நிர்ணயம் செய்கின்றன. More the genes for a trait, more the influence of environment. அப்படியெனில் புறச்சூழலின் தாக்கம் அதில் எவ்வளவுதூரம் இருக்கும் என்று எண்ணி பாருங்கள் 6
#அறிவோம்_மரபியல் Image
சரி இப்போ நம்ம புலிகேசிக்கு வருவோம். எந்த வித கல்வியறிவும் பகுத்தறியும் நுட்பமும் சொல்லிகுடுக்கப்படாத புலிகேசி ராஜாவா இருந்தாலும் டம்மியாகவும்; கல்வி, யோசிக்கும் திறன் இதெல்லாம் குடுக்கப்படுற சூழ்நிலைல வளர்ற உக்கிரபுத்தன் திறமையானவனும் வளர்றான். இவர்களது மரபணுக்கள் ஒன்றுதான்(7/8) Image
ஆனால் புறச்சூழல் வேற. எனவே மக்களே இனிமேல் யாராவது நான் பிறப்பிலேயே அறிவாளின்னு சொன்னாலும் கல்வியறிவு மறுக்கப்பட்டுட்டு அந்த மக்களுக்கெல்லாம் படிப்புவராதுன்னு சொன்னாலும் அவங்கட்ட சொல்லுங்க “It is not our genes; it is the environment” ன்னு, மாற்றமுடியாததோ வசப்படாததோ எதுமேஇல்லனு 8/8 Image
Extra: மரபியலில் புறச்சூழலின் தாக்கத்தை அறிந்துகொள்வதற்காக பல்வேறு twin studies மேற்கொள்ளப்பட்டுள்ளன (அவர்களின் மரபணுக்கள் கிட்டத்தட்ட ஒன்று போல் இருப்பதால் அவற்றின் தாக்கம் பெரிதாக இருக்காது என்பதால்) (8.5)

• • •

Missing some Tweet in this thread? You can try to force a refresh
 

Keep Current with Dr.Devi PhD

Dr.Devi PhD Profile picture

Stay in touch and get notified when new unrolls are available from this author!

Read all threads

This Thread may be Removed Anytime!

PDF

Twitter may remove this content at anytime! Save it as PDF for later use!

Try unrolling a thread yourself!

how to unroll video
  1. Follow @ThreadReaderApp to mention us!

  2. From a Twitter thread mention us with a keyword "unroll"
@threadreaderapp unroll

Practice here first or read more on our help page!

More from @itzmedevi

Oct 31, 2023
மாதவிடாய் நிற்றல் (Menopause) - புதிரா பரிணாம வளர்ச்சியா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்.

எல்லா உயிரினங்களிலும் பெண் இனம் கிட்டத்தட்ட மரணம் வரையிலுமே இனப்பெருக்கம் செய்யும் தன்மையுடன் இருக்கும். ஆனால் மனித இனப்பெண்களுக்கு ஆயுட்காலத்தின் முக்கால்பகுதிக்கு உள்ளாகவே மாதவிடாய்

1/12
நிற்றலின் மூலம் இனப்பெருக்கம் செய்யும் தன்மை நின்றுவிடுகிறது. இதன் காரணம் என்ன? இதற்கான பதில் பரிணாம வளர்ச்சியில் உள்ளதா?

தெளிவான அறிவியல் பூர்வ முடிவுகள் இன்னும் எட்டப்படலை என்றாலும் menopause ஏன் நடக்குதுனு சிலhypothesisகள் இருக்கு.

2/12
1. Grandmother hypothesis:
2. Reproductive-conflict hypothesis
3. Good-quality egg production

மனித பெண்கள் தவிர பரிணாம வளர்ச்சியில மரபணு ரீதியா நமக்கு மிகவும் நெருக்கமா இருக்குற ங்கோகோ சிம்பன்சி இனங்களில் உள்ள பெண் சிம்பன்சிகளும் மாதவிடாய் நிற்றலை அனுபவிக்கின்றன.

3/12
Read 12 tweets
Feb 27, 2023
Parentsக்கு பெண் குழந்தைங்கள எப்படி பாத்துக்கணும்னு awareness கொடுக்குறேன்னு சொல்றீங்களே

1. நீங்க parental counselling course ஏதாவது முடிச்சிருக்கீங்களா?
2. Women oppression, gender inequality போன்ற சமூக பிரச்னைக்கு voice out பண்ற தன்னார்வலரா?
3. பெண்களுக்கு எதிரா sexual harassment, forced marriage, child marriage, eve teasing, dowry போன்ற கேடுகள் நடந்தா சட்ட ரீதியான நடவடிக்கைகள் என்னென்ன தெரியுமா?

4. Atleast பெண்களுக்கு உடல் ரீதியா வர்ற பிரச்சனைகள்/சங்கடங்கள் பற்றிய அறிவியல் பார்வை இருக்கா?
5. Reservation, women representation in different professions பற்றிய knowledge gather பண்ணிருக்கீங்களா?

6. சமீபத்துல ஹிஜாப் போட்டா கல்வி மறுக்கப்படும்னு right wing youngsters கர்நாடகால மிருகத்தனமா ஆடுனாங்களே அதுக்கு சிறு வருத்தமாவது பட்டீங்களா?
Read 6 tweets
Jan 8, 2023
பம்பை நதியில் E.coli

கேரளா அரசு பம்பை நதியின் மாதிரிகளை சோதிச்சு பாத்தது பாராட்டுக்குரியது.

பக்தர்கள் கூட்டம் அதிகமா இருக்கும் இந்த seasonல E. coli மற்றும் மனிதக்கழிவுகள் மூலமா பரவுற இன்னும் சில பாக்டீரியாக்கள் நதி நீரை அசுத்தப்படுத்தி இருக்கலாம்.
1/4
சரி E. coli பாக்டீரியாவால எதும் மனித ஆரோக்கியத்திற்கு பாதிப்பு வருமா?

மனிதர்களின் குடலில் வசிக்கும் இந்த பாக்டீரியா பெரும்பாலான நேரங்களில் நோய் உண்டாக்குவதில்லை.

2/4
ஆனால் இதுல சில strainகள் (கொரோனா வைரஸ்ல ஒமிகிரான், டெல்டான்னு நெறய திருபுகள் இருக்குற மாதிரி, பாக்டீரியாவிலும் நெறய திரிபுகள் உண்டு) வயிற்றுப்போக்கு/ ரத்தத்துடன் கூடிய வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற அசௌகரியங்களை கொடுக்கும்.

3/4
Read 5 tweets
Jan 7, 2023
கோழிக்கு மாதவிடாய் வருமா?
கோழிமுட்டை மாதவிடாயின் எச்சமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்

1/9
Menstruationன்னதும் உங்களுக்கு இவங்க ஞாபகம் வந்தா அப்படியே அத கடந்து subjectகுள்ள வாங்க

2/9
மனித பெண்களின் கர்ப்பப்பை ஒவ்வொரு மாதமும் கரு உருவாகலாம் என்கிற எதிர்பார்ப்புடன் தனக்குள் epithelial செல்களை கொண்டு பல அடுக்குகளால் தடிமனான படுக்கை போல் தனது endometriumஐ உருவாக்கிக்கொள்ளும்.

3/9
Read 9 tweets
Nov 24, 2022
இந்திய ஆண்கள் மற்றும் இந்திய பெற்றோர்கள் எல்லாருக்கும் "ஆண் பெண் உறவு" பற்றிய ஒரு விதமான ignorant + இறுக்கமான மனநிலை இருக்கு.

<ஒன்னு அந்த உறவு கல்யாணத்துல முடியணும் இல்ல அந்த உறவு கல்யாணத்துல தான் ஆரம்பிக்கணும்>
1/8
இதுக்கிடையில trust, understanding, compatability, comfort, ரெண்டு பேராலயும் peacefulஆ life எடுத்துட்டு போக முடியுமான்ற விஷயங்களுக்கெல்லாம் இடமேஇல்ல.

Toxicனு தெரிஞ்சும், toxicஆ இல்லையானு கூட தெரியாமலும் ஒருபொண்ணோ பையனோ கல்யாணத்த நோக்கிதான் போகணும்ன்ற மனப்பான்மைதான் இங்க இருக்கு.2
இது ரொம்பவும் ஆபத்தானது. பல வகை உறவுச்சிக்கல் மற்றும் மனநல சிக்கலை உருவாக்கக்கூடியது.
இதுக்கிடையில தாலி தான் வேலி, ஆண் தான் protectorன்ற style வசனங்கள் வேற.

காதலோ கல்யாணமோ நட்போ கூடிப்பிரியும் அனுபவம் ஒருத்தர் ஒருத்தருக்கான தனிப்பட்ட வாழ்க்கையின் பக்குவத்தோட
3/8
Read 8 tweets
Nov 10, 2022
Genetics in #Crime_investigation

தன் 4 குழந்தைகளையும் கொலை செய்த குற்றத்தில் 40 ஆண்டு கால சிறை தண்டனை அனுபவிக்கும் “ஆஸ்திரேலியாவின் மிகக்கொடூரமான serial killer” என்று அழைக்கப்பட்ட காத்லீனுக்கு மரபியல் திருப்புமுனையாக அமையுமா?

வாங்க #அறிவியல்_பேசுவோம்
#அறிவோம்_மரபியல்

1/16
1999இல் தனது 18 மாத குழந்தை லாரா படுக்கையில் அசைவற்று இருப்பதைப் பார்த்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கிறார் காத்லீன். குழந்தை காரணம் கண்டறியமுடியாத Sudden Infant Death Syndrome(SIDS) ஆல் மரணமடைந்திருக்கலாம் என்று யூகிக்கும் போதே தனது முந்தைய மூன்று குழந்தைகளும் SIDSஆல்

2/16
ஏற்கனவே மரணமடைந்தனர் என்றும், கடந்த 10 ஆண்டுகளில் தனது 4 குழந்தைகளை இழந்ததாகவும் கூறிய காத்லீனின் வாக்குமூலம் அவரின் மீதான முதல் சந்தேகத்தை ஏற்படுத்தியது.

3/16
Read 16 tweets

Did Thread Reader help you today?

Support us! We are indie developers!


This site is made by just two indie developers on a laptop doing marketing, support and development! Read more about the story.

Become a Premium Member ($3/month or $30/year) and get exclusive features!

Become Premium

Don't want to be a Premium member but still want to support us?

Make a small donation by buying us coffee ($5) or help with server cost ($10)

Donate via Paypal

Or Donate anonymously using crypto!

Ethereum

0xfe58350B80634f60Fa6Dc149a72b4DFbc17D341E copy

Bitcoin

3ATGMxNzCUFzxpMCHL5sWSt4DVtS8UqXpi copy

Thank you for your support!

Follow Us!

:(