மனிதர்களுக்கு புற்றுநோய்கள் வருவது நாம் அனைவரும் அறிந்ததே. பலசெல்உயிரிகள் அனைத்திற்குமே புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமெனில் யானை போன்ற மிகப்பெரிய, எண்ணிக்கையில் அதிக செல்களை கொண்டவிலங்கிற்கு அதிகமாக cancer வருமா?
(1/12)
Surprisingly, வருவதற்கான வாய்ப்பு மிக மிகக்குறைவு.
அது எப்படி சாத்தியம்? வாங்க பாக்கலாம்.
Thread கொஞ்சம் technicalஆ போகும்போது adjust பண்ணிக்கோங்க. (2/12)
பலசெல்உயிரிகளின் உடலில் இருக்கும் ஒவ்வொரு செல்லுக்குமே குறிப்பிட்ட ஆயுட்காலம் உண்டு. தன் ஆயுட்காலம் முடிந்த செல் நிர்ணயிக்கப்பட்ட மரணப்பாதையை (apoptosis) தேர்ந்தெடுத்து தன்னை மாய்த்துக்கொள்ளும். மேலும் ஒரு செல் இரண்டு செல்லாக பிரிந்து செல்களின் பெருக்கம் நிகழும் போதும் கூட (3/12)
குறிப்பிட்ட எண்ணிக்கையிலேயே அந்த செல்களின் பெருக்கம் இருக்கும். அந்த எண்ணிக்கையை தொட்டவுடன் செல்கள் முதுமை அடைந்து பின் மரணமடையும்.
எனவே மனிதர்கள், நாய், பூனை முதலான அத்தனை பலசெல்உயிரிகளின் செல்களுமே வளரும், பெருகும், பின் மரணமடையும். (4/12)
இந்த பெருக்கத்திற்கும் மரணத்திற்குமான சுழற்சியில் மாறுபாடு ஏற்படும் போதும், செல்களின் மரபணுத்தொகுப்பு (genome) கூட்டமைப்பு (integrity) சிதறும் போதும் செல்கள் கட்டுப்பாடு இழந்து புற்றுநோய் கட்டியாய் உருவெடுக்கின்றன. (5/12)
கட்டுப்பாடை இழந்த நிலையே புற்றுநோயை உருவாக்கும் என்றால் அந்த கட்டுப்பாடை நம் உடலுக்குள் கையாள்வது யார்?
அந்தக்கட்டுப்பாடு பல மரபணுக்களின் கூட்டுமுயற்சியால் சாத்தியப்படுகின்றது. அவற்றில் மிக முக்கியமானது tumor suppressor மரபணுக்கள். (6/12)
செல்களின் வளர்ச்சியை கட்டுக்குள்ளும், செல் தன்னிலை மாறும்போது அதனை மரணத்திற்க்கான பாதைக்கு இட்டு செல்வத்திலும் அரும்பங்காற்றுவது இந்த tumor suppressorகள் தான். (7/12)
பல tumor suppressorகள் நமக்கு இருந்தாலும் p53 எனப்படும் மரபணு தான் நம் செல்களின் மரபணுத்தொகுப்பின் நிலை பிறழாமல் இருப்பதற்கும், ஏதேனும் செல் கட்டுப்பாடு இழந்தால் அதனை மரணத்திற்கு இட்டுச்செல்வதற்குமான பணியைச் செய்கின்றது. (8/12)
சுருக்கமா சொல்லணும்னா இந்த p53 தான் நம்ம உடம்போட காவல் தெய்வம் (guardian of the genome).
புற்றுநோயில் இருந்து காப்பாத்திக்க மனிதனுக்கு இந்த p53 மரபணு 2 நகல்கள் இருக்கின்றன. ஆனா இதுவே யானைக்கு எத்தனை இருக்குன்னு தெரியுமா? Guess பண்ணுங்க. (9/12) #அறிவோம்_மரபியல்
யானைக்கு மொத்தம் 40 நகல்கள் p53 மரபணுக்கள் (20 ஜோடிகள்) உள்ளன. இத்தனை p53 மரபணுக்களும் LIF6 எனப்படும் யானையின் பரிணாமவளர்ச்சியில் உயிர்பெற்ற இன்னொரு மரபணுவும் சேர்ந்து யானையை புற்று நோயில் இருந்து காக்கின்றன. (10/12)
இந்த மரபணுக்களுடன் சேர்ந்து யானையின் மிக நிதானமான வளர்சிதை மாற்றமும் (metabolism) புற்றுநோய் தடுப்பில் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். (11/12)
Thanks to Parveen Kaswan, IFS for the first elephant image.
தயிருக்கும் குளிர்காலத்துல இதே நிலைமை தான். அப்போ இட்லி புளிக்கிறதுக்கும் குளிருக்கும் என்ன சம்பந்தம். வாங்க பாப்போம். 1. இட்லி எப்படி புளிக்குது:
மனிதர்கள் ஆதிகாலத்துல இருந்து பல உணவுப்பொருட்கள நொதிக்க வச்சி (fermentation) சாப்ட்டுகிட்டு இருக்கோம். Fermentationனா ஒரு 2/18
உணவுப்பொருள நுண்ணுயிரிகளின் துணைக்கொண்டு அதில் உள்ள glucoseஐ வளர்சிதை மாற்றம் (metabolize) செய்து carbondioxideஅயும் lactic acidஅயும் உற்பத்தி செய்வது. carbondioxide உணவுக்கு பஞ்சு போன்ற softnessஅயும் lactic acid புளிப்பு சுவையையும் குடுக்குது. இட்லிய நொதிக்க வைக்கறதுக்கு 3/18
ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை 2/8
கண்டறிகிறார். நோயின் தீவிரமும் பாக்டீரியாவின் எண்ணிக்கையும் நேர்மறைத் தொடர்பில் இருப்பதையும் (postive correlation) காண்கிறார். முதலில் அந்த பாக்டீரியாவின் தன்மைகுறித்து ஆராய அதை ஆய்வகத்தில் வளர்ப்பது சிரமமாய் இருந்தாலும் பின் இரு மருத்துவர்களும் அதில் வெற்றி பெறுகின்றனர். (3/8)
பள்ளிக்காலங்களில் எங்கள் classல ஒரு பொண்ணு.
அவ தான் எப்பவுமே first rank. Perfection, Home work complete பண்றது, exams எல்லாத்திலயுமே அவ தான் top. Teachers எல்லாருக்கும் favorite. எங்களுக்குள்ள second இல்லனா third rankக்குத் தான் போட்டி இருக்கும்.
(1/6)
யாராலையுமே அவள beat பண்ணமுடியலன்றது classகுள்ள எப்படி மாறுச்சுனா "அவ teachers' favoriteன்றதால அவளுக்கு question papers கெடைச்சிடுது அதனால தான் அவ I rank எடுக்குறா அவளுக்கு தெறமைல்லாம் இல்லன்னு" ஒரு group conspiracy உருவாக்கிட்டு இருந்தாங்க.
(2/6)
அப்போ தான் நானும் என் friendஉம் கொஞ்சம் extra hard-work போட்டு மாறி மாறி first rank எடுக்க ஆரம்பிச்சோம். அதுக்கப்புறம் ஒரு student மட்டும் தான் இந்த classல படிப்பாளின்ற concept மாதிரி அந்த classல நெறய நல்லா படிக்கிற students உண்டுன்ற பேரு கிடைச்சது.
(3/6)
A must watch video!
கீழே உள்ள வீடியோவில் பேராசிரியர் எரிக் க்ரீன் NHGRI ஆய்வகத்தில் நமது மரபணுத்தொகுப்பின் (genome) 1000இல் ஒரு பகுதியை சுவர்களில் அச்சிட்டுள்ளதை விளக்குகின்றார். நமது மரபணுவின் 1000இல் ஒரு பகுதி ஆக்கிரமித்துள்ள இடம் ~80 அடி.
எனில், மனிதனின் மொத்த மரபணுத்தொகுப்பு (~320 கோடி A, T, C மற்றும் G nucleotide மூலக்கூறுகள்) ஆக்கிரமிக்கத் தேவைப்படும் இடம் கிட்டத்தட்ட 15.5 மைல்கள்.
ஆச்சர்யம் என்னவெனில் இந்த மொத்த மரபணுத்தொகுப்பும் நமது செல்களுக்குள் கிட்டத்தட்ட ஒரு மில்லிமீட்டரை 100ஆல் வகுத்தால் எவ்ளவு சிறிய இடம் இருக்குமோ (10micrometer) அவ்வளவு சிறிய கருவிற்குள் (nucleus) அமையப்பெற்றுள்ளது.
நாம் ஏன் நெருங்கிய சொந்தத்தில் மணமுடிக்க கூடாது?
Fruit salad bowl நமக்குச் சொல்லும் மரபியல் தத்துவம் என்ன? #அறிவோம்_மரபியல்
நீங்கள் ஒரு விருந்திற்கு செல்கிறீர்கள்! (1/8)
அங்கே ஒரு கிண்ணத்தில் fruit salad வைக்கப்பட்டுள்ளது! அதில் ஒரு கைப்பிடி எடுத்து உங்கள் கிண்ணத்தில் போட்டுக்கொள்கிறீர்கள். அதில் பல கலவையான பழங்கள் இருக்குவே பலதரப்பட்ட இனிய ருசியையும், உங்களுக்கு தேவையான பல்வேறு சத்துக்களையும் ஒருங்கே பெறுவீர்கள்!
(2/8)
அதே சமயத்தில் இன்னொரு நபர் அங்கே வருகிறார். அவர் வாழைப்பழம் மட்டுமே உயரிய பழம் என்றும் இதுவே அனைத்து சத்துக்களையும் தனக்கு அளிக்கும் என்றும் நம்புகிறார்! அந்த கிண்ணத்தில் உள்ள வாழைப்பழத் துண்டுகளை மட்டும் உண்டுவிட்டு போகிறார்!
(3/8)