ஆணுக்கான இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து ஆணாகவே உணர்பவர்கள் ஆண், அதே போல பெண்ணின் இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து தன்னை பெண்ணாகவே உணர்பவர் பெண்,
ஆனால் இது மட்டுமே பால் என சமூகம் அடையாளப்படுத்துவது தவறு. காரணம், பால் மாற்றம் உள்ளவர்களும் நம்முடன் வாழ்கிறார்கள்,
(2)
அதுவும் இயற்கையான ஒன்றே ஆகும். இதற்கான அறிவியல் காரணங்கள் பல உள்ளது ஆனாலும் இது தான் காரணம் என எதையும் குறிப்பிட்டு சொல்ல இயலாது.
ஆணுக்கான இனப்பெருக்க உறுப்புடன் பிறந்து பெண்ணாக உணர்பவர்கள் "திருநங்கை",
(3)
அதே போல, பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகளுடன் பிறந்து தன்னை ஆணாக உணர்பவர் "திருநம்பி".
ஒரு சிலர் ஆண் மற்றும் பெண்ணுக்கான இனப்பெருக்க உறுப்புகளுடன் பிறக்கிறார்கள் அவர்கள் "Intersex".
(4)
இது மட்டும் தான் பிரிவுகளா என கேட்டால் இல்லை, ஒருவர் உடலில் எந்த இனப்பெருக்க உறுப்பு உள்ளது என்பதை கடந்து ஒருவர் தன்னை ஆணாகவும் பெண்ணாகவும் ஒருங்கே உணருவார்களேயானால் அவர்கள் "இருபாலர்"(bisex).
(5)
சில ஒரு நேரம் தன்னை ஆணாகவும் சில நேரம் தன்னை பெண்ணாகவும் உணர்ந்தால் அவர்கள் "Gender fluid" அதாவது பால் மாற்றமுடையவர்கள்.
ஒருவர் தனக்கு எந்த பாலும் இல்லை, தான் ஆணும் அல்ல பெண்ணும் அல்ல என உணர்ந்தால் அவர்கள் "Asexual" அதாவது பால் இல்லாதவர்கள்.
(6)
இப்போது நாம் பார்த்த அனைத்தும் ஒருவர் தன்னை எப்படி உணர்கிறார் என்பதை பொறுத்த பிரிவுகள், முன்பே சொன்னது போல பால் என்பது இருவகை மட்டுமல்ல அது ஒரு ஸ்பெக்ட்ரம், அந்த ஸ்பெக்ட்ரத்தில் ஒருவர் தன்னை இங்கு வேண்டுமானாலும் பொருத்திக்கொள்ள இயற்கை வழிவகை செய்துள்ளது.
(7)
இவ்வளவு தான் பால் அடையாளங்களா என கேட்டால் இல்லை, இன்னும் பட்டியல் படுத்தப்படாத பல பால் வகைகள் உள்ளன என்பது தான் உண்மை.
கலாச்சாரம் பண்பாடு என ஒரு வட்டம் போட்டு அதற்குள் அனைவரையும் அடக்க நினைப்பது இயற்கைக்கு முரணானது, அப்படி அடக்க நினைத்தால்
இயற்கை be like ~
மீறப்படும்.
(8)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொலஸ்டிரால் எப்பவுமே கெட்ட விஷயம், அது தான் இதய நோய்களுக்கு காரணம், அது இருந்தா நம்ம உடல் கெட்டு போயிரும்னு எப்பவும் கொலஸ்டிரால் மேல எதிர்மறையான கருத்தை மட்டுமே நாம கேள்விப்பட்டிருக்கோம்.
உண்மையிலேயே கொலஸ்டிரால் கேட்டதை மட்டும் தான் செய்யுதான்னு கேட்டா இல்ல,
(2)
கொலஸ்ட்ராலை பற்றி முழுமையாக விரிவாக அறிந்துகொள்ளும் முன், அது நம் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
இரத்தத்தில் தான் கொலஸ்ட்ராலின் அளவை அளக்கிறோம், ஆனாலும் அது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது.
(3)
டொரட் சின்ட்ரோமுக்கும் #பட்டாம்பூச்சி படத்திற்கும் என்ன சம்பந்தம் ?
யாராவது தன்னை அறியாமல் கெட்ட வார்த்தை பேசுவார்களா!?
ஒருவரின் கட்டுப்பாட்டை மீறி அவருடைய வாய் அவர் நினைக்காத ஒன்றை பேச முடியுமா!?
ஒருவருடைய உடல் அவர் கட்டுப்பாட்டை மீறி அசைய முடியுமா!?
(1/n)
இவை அனைத்திற்குமான பதில் ""ஆம் முடியும்""
அதெப்படி முடியும்னு கேட்டா "டொரட் சின்ட்ரோம்" உள்ள ஒருவருக்கு இவையெல்லாம் நடக்கும்.
சமீபத்தில் வெளியான ஜெய் மற்றும் சுந்தர். C நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு.
(2/n)
அதில் சைக்கோ கில்லரான ஜெய் கதாபாத்திரத்திற்கு இந்த "டொரட் சின்ட்ரோம்" நோய் இருக்கும்.
உடனே ஐய்யோ அப்போ இந்த நோய் இருந்தா கொலை செய்வார்களான்னு கேட்க வேண்டாம், அந்த படத்தில் இருந்து இந்த "டொரட் சின்ட்ரோம்" என்ற நோயை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்,