காலையில் எழுந்து அடுப்பு மூட்டி புகையில் வாடும் பெண்களுக்கு விடிவு வந்தது, அரசாங்கம் கொடுத்த இலவச கேஸ் அடுப்பால்,
கை வலிக்க அம்மியிலும் உரலிலும் ஆட்டி சமையல் செய்வதிலிருந்து விடுதலை அளித்தது அரசாங்கம் இலவசமாக கொடுத்த மிக்ஸி கிரண்டர்,
(1)
கொஞ்சம் தொலைவில் உள்ள பள்ளிக்குச் செல்ல பஸ்ஸுக்கு பணம் இல்லாமல் பலரின் படிப்பு நின்று போகும் நிலையில் அதை தடுத்தது, அரசாங்கம் அளித்த இலவச பஸ் பாஸ்,
பள்ளிக்குச் சென்றாலும் சரியான நோட்டு புத்தகமும் உடையும் காலனியும் இல்லாமல் மற்றவர் முன் கூனி குறுகி நின்ற குழந்தைகளின்
(2)
துயரைப் போக்கியது அரசாங்கம் இலவசமாக கொடுத்த சீருடை நோட்டு புத்தகம், மற்றும் செருப்பு,
பண்ணையார்களின் வீட்டில் ஒரு படி அரிசிக்காக கையேந்தாமல் சாதாரண மக்களை காப்பாற்றியது அரசாங்கம் கொடுத்த இலவச அரிசி
(3)
அடுத்தவர் வீட்டில் அவர்கள் அனுமதிக்கும் போது மட்டும் டிவி பார்ப்பது, அவர்கள் போக சொல்லும் போது தலை குனிந்து எழுந்து போவதை தடுத்தது அரசாங்கம் கொடுத்த இலவச டிவி,
இப்படி அன்றாடம் பல கோடி மக்களின் துயர் துடைத்தது அவர்களின் சுயமரியாதையை காத்தது அரசாங்கம் கொடுத்த இலவசங்கள் தான்
(4)
இவை மட்டுமல்ல இன்னும் பல இலவசங்கள் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியது.
இதை பண்ணையார் மனநிலையில் இருந்து புரிந்து கொள்வது கடினம்.
பி. கு :- இலவசங்களுக்கு எதிராக பிரச்சாரம் செய்பவர்கள் கூட அன்றாடம் அரசாங்கம் கொடுத்த ஏதோ ஒரு இலவசத்தால் பயனடைபவர்கள் என்பது தான் நிதர்சனம்.
(5)
• • •
Missing some Tweet in this thread? You can try to
force a refresh
கொலஸ்டிரால் எப்பவுமே கெட்ட விஷயம், அது தான் இதய நோய்களுக்கு காரணம், அது இருந்தா நம்ம உடல் கெட்டு போயிரும்னு எப்பவும் கொலஸ்டிரால் மேல எதிர்மறையான கருத்தை மட்டுமே நாம கேள்விப்பட்டிருக்கோம்.
உண்மையிலேயே கொலஸ்டிரால் கேட்டதை மட்டும் தான் செய்யுதான்னு கேட்டா இல்ல,
(2)
கொலஸ்ட்ராலை பற்றி முழுமையாக விரிவாக அறிந்துகொள்ளும் முன், அது நம் ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் இன்றியமையாதது என்பதை முதலில் நாம் உணர வேண்டும்.
இரத்தத்தில் தான் கொலஸ்ட்ராலின் அளவை அளக்கிறோம், ஆனாலும் அது நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லிலும் காணப்படுகிறது.
(3)
டொரட் சின்ட்ரோமுக்கும் #பட்டாம்பூச்சி படத்திற்கும் என்ன சம்பந்தம் ?
யாராவது தன்னை அறியாமல் கெட்ட வார்த்தை பேசுவார்களா!?
ஒருவரின் கட்டுப்பாட்டை மீறி அவருடைய வாய் அவர் நினைக்காத ஒன்றை பேச முடியுமா!?
ஒருவருடைய உடல் அவர் கட்டுப்பாட்டை மீறி அசைய முடியுமா!?
(1/n)
இவை அனைத்திற்குமான பதில் ""ஆம் முடியும்""
அதெப்படி முடியும்னு கேட்டா "டொரட் சின்ட்ரோம்" உள்ள ஒருவருக்கு இவையெல்லாம் நடக்கும்.
சமீபத்தில் வெளியான ஜெய் மற்றும் சுந்தர். C நடித்த பட்டாம்பூச்சி திரைப்படம் பலரும் பார்த்திருக்க வாய்ப்பிருக்கு.
(2/n)
அதில் சைக்கோ கில்லரான ஜெய் கதாபாத்திரத்திற்கு இந்த "டொரட் சின்ட்ரோம்" நோய் இருக்கும்.
உடனே ஐய்யோ அப்போ இந்த நோய் இருந்தா கொலை செய்வார்களான்னு கேட்க வேண்டாம், அந்த படத்தில் இருந்து இந்த "டொரட் சின்ட்ரோம்" என்ற நோயை மட்டும் நாம் எடுத்துக் கொள்வோம்,