இதை கிண்டலாக சொல்லும் போது, நம் நெறியை இழிவுபடுத்துகிறோம் என்று தெரியாமலே சொல்கிறோம்.
அப்படி என்ன தவறு இந்த சொற்களில்.?
"பூ நாளும் தலை சுமப்ப"
-என்று திருஞானசம்பந்தர் பாடுகிறார்.
1/
நீ நாளும் நன்நெஞ்சே நினைகண்டாய் ஆர் அறிவார்
சாநாளும் வாழ்நாளும்? சாய்க்காட்டு எம்பெருமாற்கே
பூ நாளும் தலை சுமப்ப புகழ் நாமம் செவி கேட்ப
நா நாளும் நவின்று ஏத்த பெறலாமே, நல்வினையே.!
என திருஞானசம்பந்தர் சுவாமிகள், திருச்சாய்க்காட்டு திருப்பதிகத்தில் பாடியுள்ளார்.
2/
எம்பெருமானுக்கு நாளும் பூக்களைத் தலையில் சுமந்து சென்று
அருச்சிப்பதை கூறுவதாக பொதுப் பொருளாக விளக்கம் எடுத்துக் கொள்ளக்கூடாது.
"எட்டுருவ மூர்த்தியாம் எண்தோளானாம், என் உச்சிமேலானாம் எம்பிரானாம்" என்று அப்பர் சுவாமிகள் அருளியுள்ளார்.
உச்சிமேலான் என்பது,
3/
தலைக்குமேல் 12 அங்குல அளவை "துவாதசாந்தம்" என்பர். அங்குதான் இறைவன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.
அங்குள்ள பெருமானை பூஜித்து, தியானிக்கும் பாங்கில், வைக்கப்படும் மலர் தான் தலை உச்சியில் வைக்கப்படும் மலர்.
4/
"பூ நாளும் தலை சுமப்ப" என்றால், தினமும் தலை மீது பூ இருந்தால் பெருமானை பூஜித்திருக்கிறோம் என்று பொருள்.
பூஜை முறைகள் தெரியாதவர்கள், நாளும் அவரது திருப்பாதங்களில் இருந்து மலரை எடுத்து, "துரியம்" என்று சொல்லக் கூடிய தலை உச்சியில் சூடலாம்.
5/
பூ இல்லாத நாள், பெருமானை பூஜிக்காத நாள். அவரை பாடாத நாள்.
"பேசாத நாளெல்லாம் பிறவா நாள்" இல்லையா.?!
தலையில் சூடிய பூ விழாமல் இருக்க அதை எடுத்து காதில் வைத்தார்கள் நம் முன்னோர்கள்.
பெருமானுக்கான தொடர் பூஜைகளினால் அவர்கள் பக்குவம் அடைந்திருப்பார்கள்.
6/
சாந்தமே வடிவாக இருப்பார்கள். அனைத்தும் பெருமான் செயல் என்று ஏற்றுக் கொள்வார்கள்.
அவர்கள் தான் "காதில் பூ வைத்தவர்கள்".
இது போன்ற வழிபாட்டு முறைகளை கேலி செய்து, அழிக்கும் நோக்கில் வந்த தொடர் தான் "காதுல எவனாவது பூ வெச்சிருப்பான், அவன்கிட்ட சொல்லு, அவன ஏமாத்து".
7/
நமக்கே தெரியாமல் நம் வழிபாட்டை எப்படி கேலி செய்கிறோம்.
பட்டையும் கொட்டையும் போட்டு வந்துட்டான், காதுல பூ வெச்சுட்டு வரவன் கிட்ட சொல்லு, காவடி தூக்க வேண்டியது தான், பட்டைய சாத்திட்டான், நாமம் போட்டுட்டான், கோவிந்தா தான்.
இது போன்ற எவ்வளவோ பயன்பாட்டு பேச்சுக்கள்.
8/
நம் கலாச்சாரத்தை இழித்து பேசுபவர்கள் இது போன்று சொல்லும் போது கோபம் வருகிறது.
தேவார கோயில்கள் - 127
திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்:
திருமால் சக்கரம் வேண்டி இறைவனைப் பூசை செய்யும் போது ஒரு நாள் ஒருமலர் குறையத் தம் கண்ணையே இடந்து சாத்தி சக்கரத்தைப் பெற்ற தலம்.
ஞானசம்பந்தருக்கும், அப்பருக்கும் இறைவன் படிக்காசு தந்தருளி அவர்கள் மூலமாகச் சிவனடியார்க்கு அமுதூட்டிய தலம். அவ்வாறு படிக்காசு வைத்தருளிய பலிபீடங்கள் கோயிலின் கிழக்கிலும், மேற்கிலும் உள்ளன.
திருஞானசம்பந்தர், அப்பர் பெருமானோரின் மடங்களை வடக்கு வீதியில் தரிசிக்கலாம்.
இறைவன், ஞானசம்பந்தருக்குத் தாம் சீகாழியில் இருக்கும் திருக்கோலத்தை இங்குள்ள விண்ணிழி விமானத்தில் காட்டியருளினார்.
சுவாமி உள்ள இடம் விண்ணிழி விமானம் என்று சொல்லப்படுகிறது. பதினாறு சிங்கங்கள் தாங்கும் சிறப்புடைய இவ்விமானம் திருமால் கொணர்ந்தது, என்பதனை சம்பந்தரின் வாக்கு.
ஊர்: உறையூர், திருச்சி
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
இத்தலத்தில் வழிபடுபவர்களுக்கு மறுபிறப்பில்லை என்பதால் "திருமூக்கீச்சுரம்" என்று பெயர் ஏற்பட்டது.
புகழ்ச்சோழ நாயனார் அவதரித்து ஆட்சி செய்தபதி.
இறைவன் சுயம்புவாக, 5 நிறங்களை பிரம்மனுக்கு காட்டினார்.
ஒவ்வொரு கால பூஜைக்கும் இறைவன் ஒவ்வொரு நிறமாக மாறுவதை இப்போதும் நாம் காணலாம்.
பொன்மை நிறம் - மண் (காஞ்சிபுரம்)
வெண்மை நிறம் - நீர் (திருவானைக்காவல்)
செம்மை நிறம் - தீ (திருவண்ணாமலை)
கருமை நிறம் - காற்று (காளஹஸ்தி)
புகை நிறம் - ஆகாயம் (சிதம்பரம்)
தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்கள்: (58) திருமழபாடி வைத்தியநாதசுவாமி கோயில்:
மூலவர்: வைத்தியநாதசுவாமி
அம்மன்: சுந்தராம்பிகை, பாலாம்பிகை
தல விருட்சம்: பனை மரம்
தீர்த்தம்: கொள்ளிடம், லட்சுமி, சிவகங்கை தீர்த்தம்
புராண பெயர்: மழுவாடி
ஊர்: திருமழபாடி, அரியலூர்
தேவாரம் பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
மார்க்கண்டேய முனிவருக்காக இங்குள்ள சிவபெருமான் மழு ஏந்தி நடனம் ஆடியதால் மழுவாடி என்று பெயர்.
திருத்தலத்தில் தான் நந்தி தேவர் சிவகணங்களின் தலைமைப் பதவியையும், திருக் கயிலையின்
தலை வாயிலைக் காக்கும் உரிமையையும் பெற்றார்.
‘நந்திக் கல்யாணம் பார்த்தால் முந்திக் கல்யாணம்’ என்று சிறப்பித்துச் சொல்லப்படும் நந்தி தேவரின் திருக்கல்யாணம் நடைபெற்ற தலமும் திருமழபாடி திருத்தலம்தான்.
சுந்தரர் சோழ நாட்டுசிவஸ்தலங்களுக்கு யாத்திரை மேற்கொண்டபோது ஒரு நதியைக் கடந்து
சப்தஸ்தானத்தில் இத்தலம் ஏழாவது தலம். திருவிழா காலத்தில் ஏழூர் பல்லக்குகளையும் ஒரே இடத்தில் கண்டு களிக்கும் சிறப்புடைய தலம், சுந்தரர் வைப்புத்தலமாக பாடியுள்ளார்.
ஆண்டிற்கு 3 முறை திருவையாறிலிருந்து ஐயாறப்பர் இங்கு வருகிறார்.
காமதேனுவே பசுவாக வந்து பால் சொரிந்து சொரிந்து நெய் ஆன இடத்தை தோண்டி பார்த்த போது, சிவலிங்கம் இருந்தது. சிவபக்தனான மன்னன் இவ்விசயம் அறிந்து, கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினமும் நெய்யினால் அபிஷேகம் செய்ய ஏற்பாடு செய்தான்.